Tuesday, December 21, 2021

கோளறு பதிகம் - பாடல் #6 - கோளரி உழுவை - சிறு விளக்கம்

(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை, 21/12/2021.)

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்

நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-- கோளறு பதிகம் - பாடல் #6

oOo

கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி ...

🔸 கோளரி - சிங்கம் - கோபம்

🔸 உழுவை - புலி - பற்றுகள் / தற்பெருமை

🔸 யானை - நினைவுகள், பழக்கவழக்கங்கள்

🔸 கேழல் - பன்றி - ஆராய்தல் / சிந்தித்தல்

🔸 நாகம் - மனம், மாயை

🔸 கரடி - கலக்கம்

🔸 ஆளரி - குரங்கு - அலைபாய்தல் / நிலையற்றத் தன்மை

பொருள்: ஏற்கனவே நான் நிலைபேற்றை அடைந்துவிட்டதால் (வந்தென் உளமே புகுந்த அதனால்), மேற்சொன்ன யாவும் என்னை ஏதும் செய்துவிடாது. அவற்றாலும் நன்மையே விளையும்.

நுட்பங்கள்:

> சிவமாய் சமைந்த பின்னரும் மேற்சொன்ன விலங்குகள் (குணங்கள், பழக்கவழக்கங்கள்...) நம்மை விட்டகலமால் இருக்க வாய்ப்புள்ளது
> அப்படி அகலாவிட்டாலும், அவற்றால் நிலைபேற்றை அடைந்தவருக்கு எந்த கேடும் விளையாது

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment