Monday, August 26, 2019

பேரரசரை தூற்றி செருப்படி வாங்கியவருக்கு ஒரு வேண்டுகோள்!!



அண்ணே, கிடைக்கிற பொரைய நாலு பேருக்குப் பிரிச்சுக் கொடுத்தாத்தான் பாயிண்ட்ஸ் கிடைக்கும். மாட்டிக்காம பேசலாம். இல்லன்னா இதுக்கு முன்னாடி பேரரசர் இராஜராஜ சோழரைப் பத்தி பேசி செருப்படி வாங்குன கதையாகிடும்ண்ணே!


மெக்காலேன்னு ஒரு பரங்கிப் படுபாவி, ஆங்கிலேயப் பாராளுமன்றத்துல பேசுன ஒன்னு போதும்ண்ணே, உங்க சோலிய முடிக்கிறதுக்கு. பரங்கி ஓநாய்ங்க கொண்டு வந்தது ஆட்டு மந்தை சிஸ்டம்ண்ணே. அது கல்வியே கிடையாது. முதல்ல சில செய்திகள தெரிஞ்சுக்கோங்கண்ணே.


இன்னிக்குத் தான் சேவைத் தொழில்கள்ன்னு ஊர ஏமாத்துறானுங்க. அன்னிக்கு உணவு, உடை, வியாபாரம், போர், மருத்துவம்ன்னு ஒரு 12 அத்தியாவசிய தொழில் வகைகள் தான்ணே இருந்துச்சு. பெரியவங்க செஞ்ச வேலைய வழிவழியா செஞ்சுகிட்டு வந்தோம்ண்ணே. அப்பா, அண்ணந்தான் நம்ம மொதல் வாத்தியாருங்க. புறவு, நம்ம சாதிசனத்துல இருந்த பெரியவங்க கிட்ட படிச்சோம்ண்ணே. இதுக்கப்புறமும் படிப்பு தாகம் இருக்குற பசங்கள, பொது பள்ளிக்கூடங்கள்ல படிக்க வெச்சோம்ண்ணே. பாரதம் முழுக்க சில இலட்சம் பள்ளிக்கூடங்கள் இருந்திருக்குண்ணே. அவைகள்ல படிச்ச பசங்கள்ல 50%க்கும் மேல நம்ம பசங்கதாண்ணே. இந்தப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் உள்ளூர் கோயில்கள சார்ந்து இருந்துச்சுண்ணே.  இந்தக் கோயில்கள் எல்லாம் மக்களும் மன்னரும் கொடுத்த நிதியுதவில நடந்துச்சுண்ணே. (ஒர் அழகிய மரம், தரம்பால், அதர் இந்தியா பதிப்பகம்)


அப்புறண்ணே, கல்வின்ற வார்த்தைய பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கண்ணே. கலின்னா நிலையில்லன்னு பொருள்ண்ணே. கலிகாலம் = நிலையில்லாக் காலம். கல்லுன்னா நிலையானதுன்னு பொருள்ண்ணே. கல்+வி-ன்னு பிரிச்சா, நிலையானத் தன்மையிலிருந்து (மீண்டும்) வெளிப்படாத மாதிரி நம்மள எது காப்பாத்துதோ அது தான் கல்விண்ணே. "கைய கால வெச்சுகிட்டு செத்த நேரம் சிவனேன்னு கெடக்க வேண்டியது தானேன்னு", நம்மள திட்டுனது மெக்காலே படிப்பு படிக்காத நம்ம பெரியவங்கண்ணே. இந்த ஒத்த வரியில பரம்பொருள்ன்னா என்ன, அத எப்படி அடையறதுன்னு சாதாரணமா, போற போக்குல சொல்லிப் போனாங்க நம்ம பெரியவங்க. தமிழனோடது சமயம்ண்ணே. இதிலேர்ந்து வந்தது தான் மத்ததெல்லாம். மொட்டை, நாமம், பாவாடை, குல்லா... எல்லாம் மதம்ன்ற கணக்குல வரும்ண்ணே.


ஆரம்பத்தில் வேலை, திறமை, அறிவுன்னு எந்த அடிப்படையில் சாதிப் பிரிவு இருந்ததோ சரியாத் தெரியலைன்னாலும், பிறவி அடிப்படையில் மாறுனது, வடபாரதத்திலேர்ந்து மொட்டைங்க வந்த போது, "மச்சான், டிரெஸ்ஸே போட வேணாமாம். ஒரே ஜாலி தான்னு" கூவி கிட்டு, அவிங்களோட போய் நாம ஒட்டிகிட்டு மேலே வந்தோமே, அந்த 4ஆம் நூற்றாண்டு தான்னு மரபணு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்குதுன்னு, இன்னிக்கு நம்மாளுங்க கிட்ட மாட்டிகிட்டு முழிச்சுகிட்டு இருக்குற இந்து நாளிதழ் சுமார் 20 வருசங்களுக்கு முன்னாடியே செய்தி வெளியிட்டிருந்ததுண்ணே. அதாவது, பிறவி அடிப்படையில சாதிய மாத்துனது நாமதான்ணே. (நாம யாருண்ணே? நம்ம ஏரியாவுலேயும் நமக்கு தான் மத்தவங்க வழி கொடுக்கணும். மத்தவங்க ஏரியாவுலேயும், மத்தவங்க தான் நமக்கு வழி கொடுக்கணும். நியாயமான இனமாச்சே நாம்ப!! 😜)


நம்ம தெருவுல இருந்துகிட்டு, நாம போடறத சாப்பிட்டுட்டு, பக்கத்து தெருக்காரன பாத்தா வாலாட்றதும், அவன் கைகாட்டுறத பாத்து குலைக்கிறதும்ன்னு இருக்குற நாய், ஒரு நாள் சரியான கல்லடி வாங்கும்ண்ணே. மொட்டைங்க காலத்துக்கு அப்புறம் இப்பதாண்ணே நமக்கு பொற்காலம். வெறும் 35 மார்க்கு எடுத்தா போதும், கொள்ளை சம்பளம்ண்ணே. அத இத பேசி இருக்குறத கெடுத்துடாதீங்கண்ணே. புறவு, திரும்பவும் திருட்டு, வழிப்பறி, கொள்ளைன்னு பழைய நெலமை வந்துடும்ண்ணே. வணக்கம்ண்ணே.

No comments:

Post a Comment