Thursday, April 14, 2016

தமிழ் & தமிழரின் புத்தாண்டு பற்றிய அறிவியல்

💐💐 💐 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!! 🍏🍈🍌

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

ஆண்டு என்றாலே தமிழாண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!!

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையாக கட்டுரையை சுமார் 12-13 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:

🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.

🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை.

🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.

🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. கிரகோரியன் கணக்கிற்கு மாற்றியதாலும், யேசுநாதர் பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள் " என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).

சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.

🌾🌺🌻🌹🌷🌼🌸🌾

On this auspicious day, I am proud to present the following definition of the word தமிழ் by Thiru. Ganapathi Sthapathi, one of the very very few grand persons I have met so far in my life:

As per ‘Aintiram’ written by Mamuni Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).

First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).

Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).

posted from Bloggeroid

Tuesday, April 12, 2016

நியாயமான கேள்வி!! 😂😂


(தினமலர் - சென்னை - 12/04/2016)

இந்தக் கேள்வி இந்துக்களுக்கு மட்டும்தானா? உலக பெரும்பான்மை மதத்தினரிடமும் கேட்கப்படுமா? 😠

மெக்காலே / பரங்கி படிப்புகளால் வந்த விளைவு.

இதை படிக்கும் போது, புகழ் பெற்ற Asterix கதை ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது. அதையும் இணைத்துள்ளேன். படிக்கவும். புன்சிரிப்புக்கு தயாராகவும். 😉


(Asterix & The Secret Weapon)

posted from Bloggeroid

திரிகோணேஸ்வரத்தை அழித்த போர்ச்சுகீசியர்கள்!! 🌋🌋






(https://m.facebook.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-298312920267773/)

posted from Bloggeroid

Monday, April 11, 2016

🔯 மூன்று விளக்கங்கள் 🔯





பிரம்மம் / கடவுள் / இறைவன்/ பரமாத்மா / இயற்கை (நாத்திகம்) / Father (கிறித்துவம்) / அல்லா (முகம்மதியம்) பற்றிய அற்புதமானக் கட்டுரை இது. மார்கழி (டிசம்பர்) 2015 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளிவந்தது. இதை எழுதிய திரு. பிர. கிரிதர ஜெகதீஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். 👏

இன்னும் பல பக்கங்கள் நீளவேண்டியது. இடப்பற்றாக்குறையால் சுருக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

சமற்கிருத வார்த்தைகளுக்கு உரிய தமிழ் பொருள், கேள்வி கேட்டு, விளக்கி, பதிலளித்து பின்னர் விலக்கி அடுத்த நிலைக்குச் செல்லும் விதம்..... அருமை!! 👌

என்னைப் பொறுத்தவரை இப்படி ஆராய்ந்து அறியும் திறன் சமண - பௌத்த தாக்குதல் ஏற்படும் வரை சாமான்யர்களிடமும் இருந்தது என்றே நம்புகிறேன். கொங்கணவர் கதையைப் படித்தாலே இது விளங்கும்.

கொங்கணவ சித்தர் கதையில் வரும் வாசுகி அம்மையாராவது வள்ளுவப் பெருந்தகையின் மனைவி என்பதால் கற்றவர் என்ற கணக்கில் ஒதுக்கலாம். ஆனால், அதில் வரும் இறைச்சி வியாபாரி சாமான்ய மனிதரே. ஆனால், பிரம்மத்தைப் பற்றிய தெளிவு பெற்றவர். அவரிடமிருந்து தான் கொங்கணவர் தெளிவு (ஞானம்) பெறுகிறார். பின்னர், திருமலையில் சமாதி அடைகிறார். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே ஸ்ரீபாலாஜி பெருமாள் (மூலவர்)! இவரது சமாதிக் கோயிலே இன்று உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோயிலாகும்!!

இப்படி சாமான்யரிடமும் இருந்த ஆராய்ந்து அறியும் திறன் இருள் மதங்களின் (சமணம் & பெளத்தம்) வருகையாலும், தொடர்ந்த மத & அரசியல் படையெடுப்புகளாலும் ஒரு சாரரிடம் மட்டும் தங்கிவிட்டது. இப்படி நடக்காமல், அத்திறன் எல்லோரிடமும் பரவலாகவே இருந்திருந்தால், இன்று நம் நாட்டில் காணப்படும் பல அவலங்கள் தோன்றியே இருக்காது என்பது என் கருத்து.

posted from Bloggeroid

Sunday, April 10, 2016

முதல் நேரக் கொள்ளையர்கள்!!


(தினமலர் - சென்னை - 10/04/2016)

இந்த செய்தியை வெளியிடும் செய்திதாள்கள் எப்படிப்பட்டவர்களாம்? 😉

நவீன யுகத்தின் முதல் நேரக் கொள்ளையர்கள் இவர்களே. இது மட்டுமா? நம் அபிப்ராயங்களோடு "விளையாடி", நம் சொந்தக் காசில் நாமே சூன்யம் வைத்துக் கொள்ளும் வித்யையை உருவாக்கியது இவர்களே.

எல்லா ஊடகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!

posted from Bloggeroid

தெய்வம் தந்த தமிழ்!!


posted from Bloggeroid

Saturday, April 9, 2016

😀 பரங்கியரின் திருட்டு திருவிளையாடல்: படலம் - "சித்த மருத்துவம்" 😁


(தி இந்து - நலம் வாழ - சென்னை - 09/04/2016)

சித்த மருத்துவத்தின் பழமையையும், அதன் பெருமையையும், அதிலிருந்து பரங்கியன் திருடுவதையும் வெளியிட்டிருந்தாலும், "தமிழ் இந்து" -வின் 'டச்' இல்லாமலாப் போய் விடும்! 😉

சித்த மருத்துவம் ஒரு மதம் சார்ந்த மருத்துவ முறையாகக் கற்பிதம் செய்யப்படுகிறதாம். இது முற்றிலும் தவறாம். சமணனின் பங்கு இருக்கிறதாம். முகம்மதியனின் பங்கு இருக்கிறதாம். கிறித்துவனின் பங்கு இருக்கிறதாம்.

இத்தனை "மதங்களைப்" பட்டியலிடுவார்களாம். தமிழனின் "சமயமாகிய", உலகின் அனைத்து மதங்களின் தாயாகிய, ஆதிசைவத்தின் பெயர் கூட சொல்லமாட்டார்களாம்.

கூகுள் உருவாக்கியது தான் லைனக்ஸை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம். இந்த ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை சாம்சங், ஹெச்.டி.சி., ஸியோமி, லெனோவோ போன்ற கைபேசிகளின் இயங்குதளங்கள். பின்னவர்களால் ஆண்ட்ராயுடுக்கு சில பங்களிப்புகள் நிகழ்ந்திருக்கும். இருந்தாலும், ஆண்ட்ராய்டை கூகுளின் உருவாக்கம் என்றே குறிக்கிறோம். இது சரியும் கூட.

அவ்வாறே அகத்தியர் (*) முதற்கொண்டு கருவூரார் வரை தமிழ் ஆதிசைவ இந்துக்களின் உழைப்பால் உருவான சித்த வைத்தியத்தை தமிழனுடையது ஆதி சைவத்தினுடையது இந்துவினுடையது என்று குறிப்பதே சரி.

(* - அகத்தியர் என்ற சொல் பொதுவாகக் குறிப்பது குள்ள முனிவரை. இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமியாவார். அதாவது, திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோயில் இவரது சமாதி கோயில். ஆனால், அகத்தியர் என்ற பெயர் எல்லா சமயத்திலும், எல்லா இடத்திலும் இவரை மட்டும் குறிப்பதில்லை. °ஜீவன் அகத்திலே அடங்கியவரை", அதாவது ஞானியரை/ ரிஷிகளை குறிக்கும். சகஜ சமாதி நிலையிலேயே வாழ்ந்த பகவான் ஸ்ரீரமணரும் ஒரு அகத்தியரே.)

இறுதியாக, "இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த யாக்கோப்பு" பற்றி சில வரிகள்.

இவரே நம் பதினெண் சித்தர்களில் ஒருவராகிய ஸ்ரீராமதேவர். இவரேதான் தேரையர் என்று கூறும் அறிஞரும் உண்டு. மருத்துவ ஞானமும், விஷயஞானமும் கைவரப் பெற்றவர். இவரது சமாதி கோயிலே மதுரை அழகர்கோயில். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே அழகர்கோயிலின் மூலவரான ஸ்ரீபரமஸ்வாமி பெருமாள். இவர் முஸ்லிம்களின் நபியான முகம்மதுவின் சமகாலத்தவர். அவருடன் சில காலம் யாக்கோப்பு என்ற பெயருடன் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் "ஸ்ரீராமதேவராக" தாயகம் திரும்பி அழகர்கோவிலில் சமாதியானார்.

என்னைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் பாரத பூமிக்கும், உலகிற்கும் நேரப்போகும் கொடுமைகளை உள்ளுணர்வால் உணர்ந்திருப்பார். தம்மால் முடிந்ததைத் தடுக்கலாம் என்று அங்கே சென்றிருப்பார். அங்கே நடந்தவற்றைப் பார்த்திருப்பார். "இது ஆகறதில்ல" என்று வெறுத்துப்போய் தாயகம் திரும்பி அழகர்கோயிலில் உடலை உகுத்திருப்பார். 😂😂

🌸🌹🍀🍁🌺🌻🌼

பி.கு.: இணைப்பு செய்தியின் தலைப்பே தவறு. "சித்த மருத்துவத்துக்கு நோபல் தகுதி உண்டா?" வெட்ககேடு!! கழுதைக்குத் தெரியுமா கற்பூரத்தின் வாசனை? உலக கொள்ளையனின் அங்கீகாரம் வேண்டுமா? உலக திருடனின் சான்றிதழ் வேண்டுமா? இப்படியே போனால், "எம்பிfரானை வணங்கலாமா?" என்று பரங்கியனிடம் கேட்டுச் சொன்னாலும் சொல்லுவார்கள். 😠

posted from Bloggeroid