Showing posts with label சப்பாணி. Show all posts
Showing posts with label சப்பாணி. Show all posts

Sunday, October 30, 2016

​அலெக்ஸாண்டர் மாவீரனா?

தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கிரையாக்கி, அந்த நாட்டு மக்கள் பலரைக் கொன்று, சரணடைந்தவர்களை கொத்தடிமைகளாக்கி, கொடுமைபடுத்திய கொடுங்கோலன் தான் மாவீரன் என்று சொல்லப்படும் #அலெக்ஸாண்டர்!

அத்தகைய அலெக்ஸ்சாண்டர், தன்னிடம் தோற்றும் சரணடையாத ராஜா புருஷோத்தமனை எதுவும் செய்யாமல், "உன் நாட்டை நீயே ஆண்டு கொள்" என்று பெருந்தன்மையாக விட்டிருப்பானா?அதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய மனைவி மக்களை விட அலெக்சாண்டர் அதிகம் நேசித்தது தான் வளர்த்த Bucephalas என்னும் குதிரையை. 10 வயதில் அந்தக் குதிரையை அலெக்ஸாண்டர் அடக்கியது முதல் மிக அதிக அன்பையும், பாசத்தையும் அந்த குதிரையின் மீது கொட்டி கொட்டி வளர்த்தான். அத்தகைய குதிரையை ஈட்டி எரிந்து கொன்றதே ராஜா #புருஷோத்தமன் தான்!!

தன்னுடைய செல்லக்குதிரையை கொன்ற ராஜா புருஷோத்தமனுக்கு அலெக்ஸாண்டர் உயிர்பிச்சை கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. உண்மையில் தோற்றது புருஷோத்தமனல்ல. அலெக்ஸாண்டர். ராஜா புருஷோத்தமன் தான் அலெக்ஸான்டருக்கு உயிர்பிச்சை கொடுத்தார். அதனால் தான் அலெக்ஸாண்டர் பாதியிலேயே இந்தியாவை விட்டு ஓடினான். 👊💪

அலெக்ஸ்சாண்டரின் படை வீரர்கள் போரில் மிகவும் களைத்து போய் விட்டார்களாம். இனியும் போர் செய்ய முடியாது என்று சொன்னார்களாம். அதனால், வேறு வழியின்றி இந்தியாவில் இருந்து திரும்பி போனானாம். ஆஸ்கர் விருது பெற வேண்டிய திரைக்கதை. 😛😜😝😂

அலெக்ஸாண்டர் காலத்தில் இந்தியாவை 56 மன்னர்கள் ஆண்டார்கள். அக்காலத்தில் இந்தியா கல்வி, செல்வம், வீரம் என அனைத்திலும் சிறந்து விளங்கியது. அன்று இந்தியாவில் இருந்ததைப் போல் செல்வம் உலகின் வேறு எந்த பகுதியிலும் இல்லை. இந்தியாவை முழுமையாக வெற்றிக் கொண்டால் இந்திய செல்வங்களை கொள்ளையடிக்கலாம் என்னும் ஆசையில் தான் அலெக்ஸாண்டரும், அவனது படை வீரர்களும் இருந்திருப்பார்கள்.

ஏற்கனவே பல நாட்டு செல்வங்களை கொள்ளையடித்த அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் ருசி கண்ட பூனைகள். அவ்வாறு இருக்க, அன்று உலகிலேயே செல்வ செழிப்பில் சிறந்த நாடான நமது பாரத தேசம் வந்தார்களாம். புருஷோத்தமனை வென்றார்களாம். திருப்தியடைந்தார்களாம். களைத்தும் போனார்களாம். "ஊருக்கு போவணும். ஆத்தா வையும்" என்று #சப்பாணி ஸ்டைலில் மூக்கில் அழுதார்களாம். அலெக்ஸாண்டரும் ஒத்துக்கொண்டானாம். இதை நாம் நம்பவேண்டுமாம். 👊😝😂

களைத்துப் போய் ஊர் திரும்பும் கூட்டம் ஏன் பாபிலோனைக் கைப்பற்றச் சென்றது? ஒரு வேளை, #பரட்டை பட்டென்று அலெக்ஸாண்டரின் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டி, பாபிலோனைப் பற்றி ஞாபகபடுத்தியிருப்பானோ? 👊👊😝😝😂😂

"கேக்கிறவன் கேனப்பயலா இருந்தா சோனியா காந்தி கொண்டையில் சோனி டிவி தெரிகிறது" என்றும் சொல்வார்கள். 😉

புருஷோத்தமனிடம்  அலெக்ஸ்சாண்டர்  மண்ணைக் கவ்வியது அலெக்ஸ்சாண்டரின் பிரதான தளபதி #செலூகஸ் #நிக்கேடர் மனதில் ஒரு பெரிய காயத்தை ஏற்படுத்தியது. அலெக்ஸ்சாண்டர் பாபிலோனில் விஷ காய்ச்சலால் இறக்க, அதன் பின் ராஜா புருஷோத்தமன் அவர்களும் வயோதிகத்தால் காலமடைய, இது இந்தியாவை பழி வாங்க வேண்டிய தருணம் என்று செலூகஸ் நிக்கேடர் சுமார் 5 லட்சம் கிரேக்க வீரர்களோடு இந்தியா மீது படை எடுத்து வர, அவனின் அந்தப்படையை தோற்கடித்தவர் தான் மாமன்னர் #சந்திர #குப்த #மௌரியர். பின்னர், சந்திர குப்த மௌரியர் செலூகஸ் நிக்கேடரின் மகளையும் தனது வெற்றியின் பரிசாக பெற்றார்.

சந்திர குப்த மௌரியரின் அரசவையில் #சாணக்கியர் என்கிற அறிவாளி இருந்ததால், வீரம் மிகு பீகாரிகள் செலூகஸ் நிக்கேடரின் கிரேக்கப் படையை வெற்றி கொண்ட வரலாறு பதிவு செய்யப்பட்டது. ஆனால், சாணக்கியர் போன்ற ஒரு அறிவாளி, ராஜா புருஷோத்தமன் அவர்களின் அரசவையில் இல்லாததாலோ என்னவோ, ராஜா புருஷோத்தமன் அலெக்ஸ்சாண்டரை வென்று, அலெக்ஸ்சாண்டருக்கு உயிர் பிச்சை கொடுத்த வரலாறு நமது நாட்டில் பதிவு செய்யப்படவில்லை. அல்லது, 300 வருட ஆட்சியில் பரங்கி தாசிமகன்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டிருக்கலாம். ஹெமிஸ் புத்த மடாலயத்திலிருந்த ஞானி யேசுவின் 13 வயது முதல் 30 வயது வரையிலான வரலாற்றை அழித்தது போல் அழித்துவிட்டிருக்கலாம்.

நாம் நமது சுயத்தை இழக்க வேண்டும்,  மனதளவில் பலவீனம் அடைந்து, அதன் விளைவாக உடலளவிலும் நாம் பலவீனம் அடைய வேண்டும் என்பதற்காகவே, பரங்கி தாசிமகன்கள்  திட்டமிட்டு நம் வரலாறுகளை இருட்டடிப்பு செய்து விட்டார்கள். நமது கருங்காலித் தந்தைகளும், மாமாக்களும், கபோதிகளும் மற்றும் பல ஜந்துக்களும் உதவியும், உதவிக்கொண்டும் இருக்கின்றன. 😠😤😡

சொந்த வரலாற்றை இழந்த ஒரு சமுதாயம் புதிய வரலாறை படைக்க முடியாது. வீரமும், தீரமும், ஞானமும் நமது மரபணுவில் ஊறிப்போன விஷயங்கள். ஆனால், நமது மரபணுத்திறனை, சூரியனை மறைக்கும் மேகம் போல, "#மெக்காலே கல்வி" என்னும் மேகம் மறைத்துக் கொண்டிருக்கிறது.

இழந்த நமது மரபணுத்திறனை வெளியே கொண்டு வர வேண்டியது, இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இந்தியனின் கடமை. தயவு செய்து பகிருங்கள்.

வாழ்க பாரதம்! 🔯
வெல்க பேருண்மைகள்!! 👍

வாய்மையே வெல்லும்!
தாய்மண்ணே வணக்கம்!! 🙏

(மூலம்: வாட்ஸ் அப்)