Showing posts with label இந்தி. Show all posts
Showing posts with label இந்தி. Show all posts

Saturday, June 24, 2017

வாந்தி திணிப்பு முயற்சி #10,008!!

http://www.thenewsminute.com/article/all-arab-countries-have-theirs-arabic-indian-passports-will-now-be-hindi-too-sushma-64125

"தினம் தினம் ஏதாவது செய்து குட்டையை குழப்பினால் தான் நிம்மதி" என்கிற கொள்கையை உடைய "தேசக் கொள்ளையன்" மஸ்தானின் அடிப்பொடிக்கு,

▶ அரேபியாவில் அரபி மட்டும் தான் தேசிய மொழி என்பது உங்களுக்குத் தெரியாதோ?

▶ இங்கு உங்கள் "காக்கைக் கூட்டம் அதிகம் என்பதால் காக்கையை தேசியப் பறவை ஆக்க முடியுமா?" என்று கும்மாங்குத்து வாங்கிய வாந்தி மொழி மட்டும் தேசிய மொழியல்ல என்பதும் உங்களுக்குத் தெரியாதோ?

▶ வாந்தி பேசுபவர்களால் ஆங்கிலத்தில் உள்ளதை படிக்க இயலாது என்ற உங்களின் ஆதங்கம் புரிகிறது. அதே போல், "மொழிகளின் தாயாகிய" தமிழில் இல்லையே என்கிற தமிழர்களின் ஆதங்கம் உங்களுக்குப் புரியாதோ? (அதெப்படி புரியும்? "வளம் கொழிக்கும் தமிழகம் வேண்டும். அது வாந்தியர்களின் கையில் இருக்கவேண்டும்." என்ற கொள்கையை உடைய ஆரிய இனத்தைச் சேர்ந்தவராயிற்றே நீங்கள்!)

இப்படியே தொடர்ந்து வாந்தியைத் திணிக்க முயற்சி செய்யுங்கள் என்று உங்களையும், "ADHDயால் பாதிக்கப்பட்டவரோ" என்று நினைக்கத் தோன்றும் உங்களது மஸ்தான் தலைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏 அப்போதாவது அறிதுயிலில் கிடக்கும் சொரணை கெட்ட எம்பெருமான்களான தமிழர்கள் விழித்தெழுகிறார்களா என்று பார்ப்போம்!! 😑

Wednesday, May 17, 2017

வா(இ)ந்தியைப் பற்றி திரு. காயிதே மில்லத்...

இந்தி மொழி பற்றி *காயிதே மில்லத்* அவர்கள்...

அன்று நாடாளுமன்றத்தில் கேள்விகளைக்
கணைகள் போல் தொடுத்தார்.

#காயிதே #மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: #இந்தி

காயிதே மில்லத்: ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக  வைத்தார்கள்?

பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.

காயிதே மில்லத்: இந்தியாவின் தேசியப் பறவை எது?

பதில்: #மயில்.

காயிதே மில்லத்: *மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை. ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?* 👌👏✊👊 😛😜😝

யாரும் வாய் திறக்கவில்லை. 😀

காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால்,  *இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?* 👊👊👊👊

இதற்கும் யாரும் வாய் திறக்கவில்லை. 😁

காயிதே மில்லத்: கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது! சவாலாகச் சொல்கிறேன்!! *தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.*

#ஜவஹர்லால் #காஜி (#நேரு): நீங்கள் முஸ்லீம். ஏன் தமிழ் மீது பற்று?

காயிதே மில்லத்: இசுலாம் எனது வழியாகும். *இன்பத் தமிழே எனது மொழியாகும்!!* 👏👏👏

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

இப்படி முகத்திலேயே கும்மாங்குத்து வாங்கியும் திருந்தவில்லை.

அது சரி. அன்று குத்து வாங்கியது, மோகன்தாஸின் இறப்பை வைத்து மேலே வந்த காஜிக்கள் காலம். இன்று, ஜெயலலிதாவின் இறப்பை வைத்து தமிழகத்தில் நுழைய முயலும் மஸ்தான்கள் காலம். செல்ஃபி, டீ ஆற்றுதல், நெல் வயலுக்கு நெருப்பு, பேஜார், ரூ. 10ல உடை என பல மாற்றங்கள், முன்னேற்றங்கள், மைல் கல்கள் கண்டவர்கள். 😛😜😝 மீண்டும் வாலை நுழைத்துப் பார்க்கிறார்கள். இழுத்து வைத்து ஒட்ட வெட்டுவோம்!!

(இணைப்பு: 1920களில் கூட பணத்தாளில் இடம் பெற வக்கில்லாத ஒரு குப்பை மொழி தான் வா(இ)ந்தி என்பதற்கு ஆதாரம். முகநூலில் கிடைத்தது.)

Wednesday, March 29, 2017

மீண்டும் வாலாட்டும் வா(இ)ந்தி!! 😡😡

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத 😋 ஹமாரா தேஷ் மே, ஜூன், ஜூலை பார்ட்டிகள் ஜிலேபியை தயிரில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டு, பல் இடுக்கில் சிக்கியவற்றை மோதிரம் போட்ட கை விரல்களாலேயே குத்தி குத்தி எடுத்துக் கொண்டு (ரொம்ப சுத்தம்), அம்பானிக்கு போன் போட்டு பேசின. 😛😜😝

விளைவு, ஜியோ மென்பொருளில் ஆரம்பத்தில் இடம் பெற்றிருந்த தமிழ் முதலான தரமான மொழிகள் நீங்கி, "மொழிகளில் விபச்சாரி" எனப்படும் ஆங்கிலமும், *"காக்கைக் கூட்டம் அதிகம் என்பதற்காக காக்கையை தேசியப் பறவையாக்க முடியுமா?" என்று முகத்திலேயே கும்மாங்குத்து வாங்கிய வாந்தியும்... மன்னிக்கவும்... இந்தியும்* இடம் பெற்றிருக்கின்றன. 😁😂😂

அடுத்ததாக, ஒரு வேளை, பைரவர்கள் ஆட்சியை பிடித்தால், "லொள் லொள்... ஹிர்ர்ர்... வவ்" இடம் பெறும். 🤓

(இணைப்புகள்: 1. இந்தியன் எக்ஸ்பிரஸ் - 29/03/2017, 2. ஜியோ மென்பொருளின் மொழிப் பட்டியல் பக்கம்)