அண்மையில், ஒரு வயதான சோதிடரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் நம் பாரத நேரத்தைப் பற்றி பேசும் போது, பிரயாக்ராஜ் என்று குறிப்பிடாமல் உஜ்ஜயினி என்று குறிப்பிட்டார்! இது அவரையும் அறியாமல் நடந்தது. ஏனெனில், நமது பழைய சோதிட நூல்கள் உஜ்ஜயினியைத்தான் குறிப்பிடுகின்றன! அந்நூல்களைப் படித்த அவரும் அவ்வாறே குறிப்பிட்டார்.
இன்று வேண்டுமானால் நமது நாட்டின் நேரம், கங்கையும் யமுனையும் கூடும் பிரயாக்ராஜை வைத்துக் கணக்கிடப்படலாம். ஆனால், 1860 (அல்லது, 1886)-க்கு முன்னர்வரை நம் நாட்டின் நேரம் மட்டுமல்ல, உலகின் நேரமும் உஜ்ஜயினியை வைத்துத்தான் கணக்கிடப்பட்டது. அதாவது, 0° நெடுவரை (தீர்க்கரேகை) பாய்ந்தோடியது உஜ்ஜயினியில்தான்!! அதிலும், அங்குள்ள ஜோதிர்லிங்கமான திரு மகாகாலேசுவரர் மேல்தான் அந்த நெடுவரை பாய்ந்தது. ஏன்?
அந்த உடையவரின் கீழே சமாதியிலிருக்கும் பெருமானின் 🙏🏽 பங்களிப்பு வானியலுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கிறது. எனவே, அவரை சிறப்பிக்க, அவரது பங்களிப்பை உலகம் மறவாதிருக்க, அவரது சமாதி அடையாளத்தை நெடுவரைகளின் தொடக்கமாக கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள். 👏🏽👏🏽😍
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, வையகம் தட்டையானதென்று நினைத்துக்கொண்டிருந்த முட்டாள் வெள்ளையினத்தால் எவ்வாறு காலக்கணிதத்ததை புரிந்துகொண்டு, 0° நெடுவரையை கிரீன்விச்சிற்கு மாற்றிக்கொள்ளமுடிந்தது? இந்த அறிவுத் திருட்டிற்கு யார் உதவியிருப்பார்கள்? மாற்றியதை மறைக்க யார் உதவியிருப்பார்கள்? 🤬😡
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌼🌼🌼🌼🌼
No comments:
Post a Comment