Wednesday, October 19, 2022

வடக்கத்தியரை பந்தாடிய நம் மூவேந்தர்கள்!! 😍


மூவேந்தர்களான சேர, சோழ & பாண்டியர்கள் எப்போதும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டேயிருந்த மாதிரி ஒரு கற்பிதம் இருக்கிறது.

சரி! அப்படியே முறைப்பு இருந்ததாக வைத்துக்கொண்டாலும், மூவேந்தர்களும் தங்களுக்குள் முறை வைத்து ஒரு வேலை செய்திருக்கிறார்கள்: வடக்கத்தியர்களுக்கு எதிரான போர்!!

சங்ககாலச் சோழ மன்னரான கரிகால் சோழர், தனது முறை வந்தவுடன், வடக்கத்தியர்களை மொத்தியெடுத்துவிட்டு, பந்தை பாண்டியர்களின் பக்கம் தள்ளிவிடுகிறார்.

இப்போது, பாண்டியர்களின் முறை.

கரிகாலர் காலத்துக்கு சற்று பிற்பட்ட பாண்டிய மன்னரான "ஆரியப்படை கடந்த" நெடுஞ்செழியன், வடவர்களுக்கு எதிராக ஒரு பரபரப்பான பந்தாட்டத்தை நடத்திக்காட்டுகிறார்.

அடுத்து, சேரர்களின் முறை. 

இம்முறை "வாளும் குடையும் வடதிசை பெயர" வைத்த பெருமைக்குரிய சேர மன்னர் கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆட்டத்தை முன்னிருந்து நடத்துகிறார்.

"என்ன? இப்படியொரு சேர மன்னரா? இப்பெயரை இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே!" என்று சிலர் முணுமுணுக்கலாம். 
"கடற்பிறகோட்டிய வேல்கெழு குட்டுவன்" என்றால் புரியாது. "சேரன் செங்குட்டுவன்" என்றால் சட்டென புரியும்! 😊

இமயத்தில் கல்லெடுத்து, கனக விசயர்களின் தலையிலேற்றிக் கொண்டுவந்து, கண்ணகித்தாய்க்கு ஓர் கோயில் கட்டி, மூவேந்தர்களின் எழுதப்படாத ஒப்பந்தத்தை இனிதே நிறைவேற்றி, ஒரு வட்டத்தை முழுமையாக்கியவர் சேரன் செங்குட்டுவன்.

சேரன் செங்குட்டுவனின் தந்தையான "இமயவரம்பன்" நெடுஞ்சேரலாதனின் பட்டப்பெயர் கூட இமயத்தை அவர் வரம்பாக (எல்லையாக) வைத்திருந்ததை சுட்டிக்காட்டுகிறது!

அன்று, இமயமலை தமிழர்களுக்கு பழக்கமான, நெருக்கமான ஒரு மலையாகவே இருந்திருக்கிறது என்பதை

- பொதியிலாயினும் இமயமாயினும்
- வில் எழுதிய இமயத்தோடு கொல்லியாண்ட குடவர் கோவே

போன்ற சிலப்பதிகார சொற்றொடர்கள் வாயிலாக உணரலாம்.

(மேற்கண்ட முகநூல் இடுகையின்: வேர் பதிவு - மோகன ரூபன், 06/10/2022. மறுபதிவு - லீலா வாணியர்)

oOo

இவ்வாறு பல காலம் நம்முடன் சண்டையிட்டு ஓய்ந்து போனபின், இனி கத்தியால் தென்னகத்தை வெல்லமுடியாது என்பதையுணர்ந்த வடக்கத்தியர்கள், அடுத்து கையிலெடுத்த போர்க்கருவிகள்: மொட்டை & அம்மணம்!

அதாவது, பெளத்தம் & சமணம்!!

ஒருவனை மதமாற்றிவிட்டால் போதும். தாய்மொழி, சமயம், வாழ்க்கை முறை என அனைத்து அடையாளங்களையும் இழந்துவிடுவான். இழப்பது மட்டுமில்லாமல் அவற்றிற்கு எதிராகவும் திரும்புவான். பிறந்த மண்ணின் எதிரியாவான். மாறிய மதத்தின் அடிமையாவான். மாற்றியவனின் கைகூலியாவான். (இன்றைய மதமாற்றத் தொழில்களை பார்த்தாலே இவையாவும் கண்கூடாக விளங்கும்.)

மதமாற்றம், ஆரியத் திணிப்பு (*), வளங்கொழிக்கும் தொழில்கள் பறிப்பு, வரிக் கொள்ளை... (அன்றும் இன்றும் ஒரே காட்சிதான்!) என சில நூற்றாண்டுகள் வசதியாக வாழ்ந்த வடக்கத்தான்களின் வாழ்வு திருஞானசம்பந்தப் பெருமானால் 🌺🙏🏽🙇🏽‍♂️ முடிவுக்கு வந்தது. அன்னைத் தமிழும், தமிழரது திருநெறியான சைவமும் மறுமலர்ச்சி கண்டது.

ஆனால், தீநுண்மிகள் என்றுமே முழுவதுமாக மடிவதில்லை. விரைவில் உருமாற்றம் கொள்கின்றன. அம்மணம் கோவிந்தாவானாலும், மொட்டை நாமமாக மாறியது. சமூக & சமய சீரழிவு தொடர்ந்தது.

oOo

* ஆரியத் திணிப்பு என்றதும் பலருக்கு இன்னமும் ஆரியப் பூசாரிகள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். இது தவறாகும். ஆரியத் திணிப்பை தொடங்கியது சமண-பெளத்தர்கள். பின்னர், பிழைப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் தெற்கு நோக்கி வந்த பூசாரிகள், ஏற்கனவேயிருந்த கட்டமைப்பை பயன்படுத்தி முன்னேறி, நிலைபெற்றுக் கொண்டனர். இவர்கள் வந்த பிறகு நடந்த நிகழ்வு: கருவறையிலிருந்து அன்னைத்தமிழ் வெளியேற்றப்பட்டது!

ஒரு வகையில் சமண, பௌத்த & பூசாரிக் கூட்டங்கள் ஒன்றுபடுகின்றன: எல்லோரும் வடக்கத்தியர்கள் / ஆரியர்கள்.

oOOo

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே 🌹🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment