பெரும் புகழ் பெற்றதும், மிகவும் பழமையானதுமான இத்திருக்கோயிலைப் பற்றிய பலரும் அறிந்திராத ஒரு தகவல்:
இன்று, வெள்ளை ஓநாய்களின் நகரமான கிரீன்விச் வழியாக பாயும் 0° நெடுவரை (தீர்க்கரேகை, Longitude), இதற்கு முன்னர், காலகாலமாக இத்திருக்கோயிலின் வழியாக பாய்ந்து சென்றது! இத்திருக்கோயில் உடையவரான திரு மகாகாலேசுவரர்தான் புவி சுழற்சியின் தொடக்கமாக (0°) அறியப்பட்டார்.
🌷 ஏன் இப்படிப்பட்ட சிறப்பு அந்த உடையவருக்கு கொடுக்கப்பட்டது?
அந்த உடையவரின் கீழே, திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானின் பங்களிப்பு வானவியலுக்கு இன்றியமையாததாக இருந்திருக்கும். எனவே, அந்த பங்களிப்பை, அதை வழங்கிய அப்பெருமானை மக்கள் என்றும் நினைவு கூறவே, இந்த ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள்.
(மகாகாலேசுவரர் என்ற திருப்பெயரில் வரும் "கால்" என்ற ஆரியச்சொல் நேரத்தையும், வானவியலின் அடிப்படையான கணிதத்தையும் குறிக்கும்.)
💥 பின்னக் கணக்கையே (Fraction) அறிந்திராத கிரேக்க-உரோமானிய பண்பாடுகளிலிருந்து வரும் உலகக்கொல்லிகளான வெள்ளையர்களால், உஜ்ஜயினியிலிருந்து கிரீன்விச்சிற்கு தொடக்க நெடுவரையை, ஒருவரும் அறியாமல் எப்படி மாற்றியிருக்க முடியும்?
முடியாது. சோதிடத்தை சொந்தம் கொண்டாடிய / சோதிடர்களை கட்டுப்படுத்தியப் பிரிவினருக்கு தெரியாமல் இப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது. காலகாலமாக தங்களது மொழி, தொன்மை மற்றும் இதர அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் தெரிந்த அப்பிரிவினர் நினைத்திருந்தால், மேற்கண்ட உண்மையை இன்று வரை காப்பாற்றி, மக்களின் மனதில் பசுமரத்தாணியாக்கி இருக்கமுடியும்.
இன்று உண்மை வெளிவந்தும் பரவலாகவில்லை. அதற்கு என்று திருவுளமோ? 😔
oOOo
உஞ்சேனை மாகாளப் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment