Thursday, July 28, 2022

பெருமாளே பயந்துபோய் எங்க பின்னாடி ஒளிஞ்சிண்டிருக்கார்!!


படத்தைப் பார்த்ததும் "அடப்பாவிகளா!" என்ற உணர்வுதான் எனக்கு உடனடியாகத் தோன்றியது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது, பெருமாளையே கடித்திருக்கிறார்கள்! 😡

இவர்களது (நாமப்பேர்வழிகள்) கணக்கின் படி, நிலையற்ற பொருளை குறிக்கும் பெருமாள்தான் அனைத்திற்கும் மூலப் பொருளாகிறார். எனில், மூலப்பொருளால் இவர்களா? அல்லது, இவர்களால் மூலப்பொருளா? இவர்களால்தான் மூலப்பொருள் காக்கப்படுகிறதெனில், அப்படிப்பட்ட இரண்டாந்தர பொருளை நாம் ஏன் வணங்கவேண்டும்? நாமப்பேர்வழிகளையே வணங்கிவிட்டுப் போகலாமே!

பெருமாள் என்பது ஒரு கற்சிற்பம் மட்டுந்தானா? அதன் கீழ் திருநீற்று (சமாதி) நிலையிலிருக்கும் திரு கொங்கணவ சித்தரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்கும் அடையாளமல்லவா!

அடுத்தது, திரு கொங்கணவ சித்தரென்பவர் யார்? நம்மைப் போல் அழியும் உடல் தாங்கியவரா? "நான் இன்னார்" என்ற எண்ணம் கொண்டவரையா நம் முன்னோர்கள் வணங்கச் சொன்னார்கள்? கொங்கணவர் தனது உடலைத் தாண்டியவர். தான் ஓர் அழியும் உடலல்ல என்ற மெய்யறிவைப் பெற்றவர். அவ்வறிவிலே நிலைபெற்றவர். மாசிலாமணி.

காட்டுமிராண்டிகளும், நரித்துவ கொடூர வாஸ்கோடகாமாவும் செய்ததுபோல் பெருமாள் சிலையை உடைத்தெறிந்தாலும், காட்டுமிராண்டி மாலிக்காபூர் செய்ததுபோல் கருவறையை அப்படியே பெயர்த்தெடுத்தாலும், வெட்கங்கெட்ட சமணர்களும், பேராசைப்பிடித்த பௌத்தர்களும் செய்ததுபோல் பெருமாள் சிலையை எடுத்துவிட்டு, அவர்களது சிலைகளை வைத்தாலும், உள்ளபொருளாய் சமைந்துள்ள கொங்கணவருக்கு ஏதுமாகிவிடாது!

பெருமாள் எனும் கற்சிலையை வணங்குவதென்பது கொங்கணவரை வணங்குவதாகும். கொங்கணவரை வணங்குவதென்பது அவர் காட்டிய வழியில் பயணித்து, அவரைப் போன்று மெய்யறிவில் நிலைபெறுவதாகும்.

oOOo

மால்தீர்ந்த கொங்கணவர் தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌸🌼🌸

No comments:

Post a Comment