Tuesday, July 19, 2022

திரு கண்ணப்ப நாயனார் வரலாற்றின் உட்பொருள்



செய்தியை படித்ததும், "ஓ! இந்த சிவலிங்கத்திலிருந்துதான் அன்று இரத்தம் வழிந்திருக்கிறது" என்று முடிவு செய்துவிடுவோம். 😊

உண்மை இதுவல்ல.

கல்லாலான ஒரு சிவலிங்க வடிவத்திருக்கு பூசை செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, ஒரு சிவத்தொண்டர் காட்டிற்குள் சென்றுவந்திருக்கமாட்டார்.

லிங்கம் என்ற ஆரியச் சொல்லிற்கு பல பொருள்களுண்டு. அதிலொன்று, உடலாகும்.

> லிங்கம் = உடல்
> சிவன் = மெய்யறிவில் நிலை பெற்றவர்
> சிவலிங்கம் = மெய்யறிவாளரின் உடல்

திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற சித்து வேலைகளை செய்யும் ஒரு மெய்யறிவாளர் 🌺🙏🏽🙇🏽‍♂️ அக்காட்டிற்குள் வாழ்ந்திருக்கிறார். இதை தெரிந்துகொண்ட சிவத்தொண்டர், நாள்தோறும் அங்கு சென்று, அப்பெருமானுக்கு தேவையான தொண்டாற்றிவிட்டு வந்திருக்கிறார். திரு கண்ணப்ப நாயனாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெருமையை அந்த சிவத்தொண்டரும், உலகமும் அறிவதற்காக, தன் கண்களில் இரத்தத்தை வெளிவர செய்து, திருவிளையாடல் புரிந்திருக்கிறார். அவர் திருநீற்று நிலை (சமாதி) அடைந்த பின்னர், அவரது உடலை புதைத்துவிட்டு, அதற்கு மேல் அடையாளமாக ஒரு சிவலிங்கத்தை வைத்துள்ளனர். அந்த சிவலிங்கத்தையே படத்தில் காண்கிறோம்.

திருவிளையாடல் புரிந்து நாயனாரையும், சிவத்தொண்டரையும் உய்வித்ததுபோல் நம்மையும் அப்பெருமான் உய்விக்கட்டும்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌼🌸🌸

No comments:

Post a Comment