Thursday, August 26, 2021

நிருவாண பூசை என்றால் என்ன?

"நிருவாண பூசை நடத்தி இளம்பெண்ணை பலமுறை சீரழித்த சாமியார்! உடந்தையாக இருந்த கணவன்!!"

இந்நிகழ்வின் பின்னணியில் கணவனின் அறியாமை, இயலாமை & பொருளாசை மற்றும் சீரழித்தவனின் பெண்ணாசை & பொருளாசை ஆகிய காரணிகள் இருந்தாலும் இதற்கும் ஒரு மெய்யறிவியல் (ஆன்மிகம்) அடிப்படை உண்டு!

நிருவாணம் எனில் உடைகளைக் களைந்துவிட்டு பிறந்தமேனியாதல் அல்ல. "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரைக் களைதலாகும். நான் ஆண்/பெண், இன்ன படித்தவன், இன்ன நிறுவனத்தில் இன்ன பதவி வகிக்கிறேன், எனது மதிப்பு இவ்வளவு ... இவற்றையெல்லாம் களைய வேண்டும்.

🔹இவற்றைக் களைய முற்படும் பணி தான் நிருவாண பூசை.

🔹அனைத்தையும் களைந்த பின்னர், மீதமிருக்கும் நான் எனும் தன்மையுணர்வாய் மட்டும் இருப்பதுதான் நிருவாண நிலை.

🔹இந்நிலையை அடைவதற்கு முன் (மேற்சொன்ன பூசையின் போது) நமக்கு கிடைக்கும் பலவிதமான துய்ப்புகள்தாம் செல்வம் (லட்சுமி) எனப்படும். இறுதியாக கிடைக்கும் மெய்யறிவு பெருஞ்செல்வமாகும் (மகாலட்சுமி).

பற்றுகளை விட விட மெய்யறிவு பெருகும். பெண்தெய்வ வழிபாட்டைப் பொறுத்தவரை சீவர்கள் அனைவருமே பெண்கள்தாம். எனவே, பெண்கள் (சீவர்கள்) நிருவாண பூசை செய்தால் (பற்றுகளை விட்டால்) செல்வம் (மெய்யறிவு) பெருகும்!!

முழுவதும் மெய்யறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் உத்தியை எவ்வளவு தவறாக புரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அல்லது, எவ்வளவு தப்பாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தப்பாக பயன்படுத்துகின்றனர். என்ன செய்வது, ஈனவெங்காயங்கள் எல்லாத்துறைகளிலும் பிறக்கத்தானே செய்கின்றன! (ஈனவெங்காயம் - கோணல் புத்தியுடையவன்; சாக்கடை 👊🏽)

நாம் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும். இங்கு ஈனவெங்காயங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிறக்கின்றன. மறைந்து தொழில் செய்கின்றன. ஆனால், ஒரு மதமே இப்படியுள்ளது! அங்கு இந்த அநீதியை செய்பவர்கள் துணிவுடன், வெளிப்படையாக, நீதிமன்றங்களின் ஆதரவுடன் செய்கிறார்கள்!!

oOOo

ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டு, அவளது அழகுதான் தன்னை கற்பழிக்கத் தூண்டியது என அவள் மீதே பழியை போடுவான். புண்ணாக்கு நீதிபதியும் இந்த வாதத்தை ஏற்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையளிப்பான்!

இதற்கும் அடிப்படை மெய்யறிவியல்தான்!!

உலகில் நடக்கும் யாவற்றிற்கும் காரணம் மனம். மனதை பெண்ணாகக் கருதுவது மரபு (நம் சமயத்தில், அன்னை மாயை/காளி) (வைணவம் மாயக்கண்ணன் என்றழைத்தாலும் அடிப்படை பெண்தன்மைதான்.) அழகாகவிருக்கும் ஒரு பெண்ணைத் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பது மனம் (பெண்) என்பதால் தனது செயலுக்கு பெண்தான் காரணம் என்று வாதிடுவான். உண்மையில் இவனுக்குள்ளிருக்கும் பெண்தான் (இவனது மனம்) தண்டிக்கப்படவேண்டும். மனம் சொன்னால் அப்படியே கேட்டுவிடுவதா? சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வேண்டிய புத்தி எங்கே போயிற்று?

கேட்டால், பெண் என்ற படைப்பே புணருவதற்குத்தான் என்பான். பெண்ணைக் கண்டதும் புணரும் எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவளுக்கு கருப்பு ஆடை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பான் (அம்மதத்தில், கருப்பு ஆடை போர்த்திக்கொண்டிருக்கும் பெண் பெண்குறிக்கு சமம்).

கருப்பு ஆடை போர்த்தியிருக்கும் பெண்ணைக் கண்டால் புணரும் எண்ணம் தோன்றவேண்டுமென்று ஈனவெங்காயம் கூட சொல்லியிருக்காது. எனில், உண்மையான பொருள்தான் என்ன?

கருப்பு என்பது அன்னை மாயையைக் குறிக்கும் (கருப்பாயி - கருப்பு + ஆயி - காளி). நம் மனதில் தோன்றும் எண்ணம் முதல் நம் கண் முன்னே விரியும் உலகக்காட்சிகள் யாவற்றுக்கும் இவர் தான் காரணம். நம் மனதில் ஓர் எண்ணம் தோன்றிவிட்டால் அதன் பின்னே சென்றுவிடக்கூடாது. நம் கண் முன்னே தோன்றும் உலகக் காட்சிகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது. இவை நடந்தால், உடனடியாக, நமது கவனத்தை நம் மீதே திருப்பிக்கொள்ளவேண்டும். இதற்குத்தான் ஓர்தல் / [தன்னைத்தான்] புணருதல் என்று பெயர்.

கருப்பைக் கண்டால் (எண்ணம் தோன்றினால், உலகத்திற்குள் கவனம் சென்றால்) ஓர்ந்துவிடவேண்டும் (கவனத்தை நம் மீது திருப்பவேண்டும்)!!

எளிமையான இவ்வறிவுரை தாெடக்கத்தில் கண்ட நிருவாண பூசையை விட மிகவும் திரிந்துபோய் / திரிக்கப்பட்டு பெண்ணடிமைத்தனத்தில் முடிந்துள்ளது. 😔

oOOo

இருப்பது ஒரு பொருள்தான். அதுவே யாவுமாகியுள்ளது. நிலைத்த பொருளும் அதுவே. நிலையில்லாத பொருளும் அதுவே. எப்போது ஒன்றை ஆண் என்றும், மற்றொன்றைப் பெண் என்றும் அழைக்கத் தொடங்கினார்களோ அப்போதே ஈனவெங்காயங்களுக்கும், காட்டுமிராண்டிகளுக்கும் வித்திட்டுவிட்டனர்! 😔

oOOo

நம் மண்ணும், நம் மண்ணின் மைந்தர்களும் எவ்வளவு தூரம் பண்பட்டவர்கள் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

உலகக்காட்சி பற்றி பகவான் திரு ரமண மாமுனிவரிடம் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஓர் அன்பர் கேட்டார்: உலகக் காட்சி என்பது எதற்காக?

பகவானின் பதில்: [அதைக்] காண்பான் என்றொருவன் இருப்பதை உணருவதற்காக!!

👏🏽👏🏽👏🏽👌🏽🙏🏽😍

oOOo

தன்னை உபாதிவிட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- உபதேச உந்தியார் #25

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 22, 2021

உண்மைக்காகவும் தமிழுக்காகவும் போராடுபவன் அசுரனா?

"என்னுடைய மதம்தான் சிறந்தது என்பவன் அசுரன்"

"மற்ற மதத்தின் மேல் உனக்கு அன்பு தோன்றவில்லையென்றால் நீ சைவனல்ல"

சில நாட்களாக இப்படிப்பட்ட செய்திகளே எந்த சமூக வலைதளத்திற்குள் சென்றாலும் என் கண்ணில் படுகிறது. இவை யாருடைய திருப்பணி, கைங்கர்யம், சேவை, ஊழியம், இறைத்தொண்டு என்று தெரியவில்லை. அல்லது, எதேச்சையாக தோன்றுகின்றனவா என்றும் தெரியவில்லை.

எப்படியானாலும் எனது பதில் பின்வருமாறு:

🔹அசுரன் எனும் ஆரியச் சொல்லின் பொருள்: காணும் உலகை உண்மை என்று கருதுபவன்.

🔹சைவன் எனும் தமிழ்ச் சொல்லின் பொருள்: உள்ளும் புறமும் இணைந்தவன். அதாவது, தான் வேறு தான் காணும் உலகம் வேறு என்று காணாதவன். உலகம் என்பது திரை போன்ற தன்னில் தோன்றும் காட்சி போன்றது என்பதை உணர்ந்தவன்.

இந்த விளக்கங்களைக் கொண்டு பார்த்தால் மெய்யறிவு பெற்றோர் மட்டுமே சைவர்களாவர்! மீதமுள்ள அனைவரும் அசுரர்கள் ஆவர்!! ☺️

சைவம் = சிவம் = உள்ள பொருள் = உண்மை. இதை வைத்து தொடக்கத்தில் கண்ட செய்திகளை மாற்றியமைத்தால்...

> உண்மைதான் சிறந்தது என்பவன் அசுரன்!
> பொய்களின் மேல் உனக்கு அன்பு தோன்றவில்லையென்றால் நீ சைவனல்ல!!

😂

அடுத்து, திருஞானசம்பந்தப் பெருமானை 🌺🙏🏽🙇🏽‍♂️ எடுத்துக்கொள்ளவும். அன்று அவர் வடக்கிலிருந்து வந்த வெட்கங்கெட்ட சமணர்களையும், நம்மை மொட்டையடித்துக் கொழுத்துக் கிடந்த பெளத்த மொட்டைகளையும் விரட்டியடிக்காமல் போயிருந்தால் இன்று நம் தமிழ், சைவம், ஏனைய அடையாளங்கள் மற்றும் நமது வளங்களை என்றோ இழந்திருப்போம். நம்மைக் காப்பாற்றிய பெருமான் அசுரரா? அன்பில்லாதவரா?

(பெருமானோடு என்னை ஒப்பிட்டுக்கொள்ளவில்லை. அவரது கால் தூசியில் ஒரு இம்மியளவு பங்கிற்குக் கூட நான் சமமாகமாட்டேன். பொய்களை, பொய்யர்களை எதிர்ப்பது சரி என்பதை உணர்த்தவே பெருமானது திருப்பணியைப் பற்றிக் குறிப்பிட்டேன்.)

oOo

பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடல் தாங்கியிருந்த ஒரு சமயம், அவரது ஆச்சிரமத்தில் அமர்ந்திருந்த அன்பர்களிடையே, இவ்வுலகத்திற்கு பகவானது தேவையைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அங்கிருந்த திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️, "இன்னும் 300 ஆண்டுகள் கழித்து இவ்வுலகத்திற்கு பகவான் இன்றியமையாதவராகிவிடுவார்" என்று அருளினார்!

இந்நிகழ்வு என்று நடந்தது என்று எனக்கு நினைவில்லை. இறுதி காலத்தில் என்று வைத்துக்கொண்டால் கூட, பகவானது உடல் மறைந்து இன்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் 229 ஆண்டுகள் உள்ளன.

இன்னொரு சமயம், பகவான், "எதிர் காலத்தில், திருவண்ணாமலை பெருநகரமாக மாறிவிடும். வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும்." என்று அருளினார்.

திரு ராமச்சந்திர மகராஜ் என்ற மெய்யறிவாளர் 🌺🙏🏽🙇🏽‍♂️, "இன்னும் சில நூற்றாண்டுகளில் பாலைவன மதங்களில் ஒன்று முற்றிலுமாக வேரறுக்கப்பட்டு பூமியிலிருந்து தூக்கி எறியப்படும்." என்று அருளியிருக்கிறார். (அம்மதத்தின் பெயரை அவர் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். நான் இங்கு எழுதவில்லை.)

இந்நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இன்னும் மோசமான காலங்கள் வரும். பாலைவன மதங்களின் அட்டூழியம் பெருகும். பின்னர், ஒரு திருப்புமுனையும் வரும். ஒன்று அழிந்துபோகும். இன்னொன்று நம் சைவத்திற்குள் அடங்கிவிடும். இங்கு மண்டியிருக்கும் நச்சு முட்புதர்களும், பதர்களும் காணாமற்போகும். எல்லா மலங்களும் நீக்கப்பெற்ற தமிழும் (அன்னையும்) சைவமும் (அப்பனும்) நம் முன்னோரை வழிநடத்திக் காத்தது போன்று நம்மையும் காத்திடுவர்.

oOOo

என்றும் வாய்மையே வெல்லும்! 💪🏽

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, August 18, 2021

சைவத்தின் மீது தற்போது வீசப்பட்டுள்ள கல்: ஆப்கானிஸ்தான், சரியத் & முகம்மதியம் இவற்றிலிருந்து நமது கவனத்தை திசை திருப்புவதற்காக!!

உலகின் கவனம் தற்போது ஆப்கானிஸ்தான் மீதுள்ளது. அங்கு மீண்டும் அரங்கேறும் தாலிபானின் அட்டூழியங்களால் அன்பு மார்க்கத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் இறங்குமுகமாகிவிட்டது (ஏற்கனவே ஏதே உச்சத்தில் இருந்தது போல 😏). இதை தடுக்க, உலகின் கவனத்தை ஆப்கானிஸ்தானிலிருந்து மாற்ற, தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ள இறைத்தொண்டுதான் சைவம்-பௌத்தம்-நாகர்கள் பிட்டு!

எப்போதெல்லாம் நாசகார & நயவஞ்சக மதங்கள் அடி வாங்குகின்றனவோ அப்போதெல்லாம் இத்தகைய இறைத்தொண்டும் ஊழியமும் அரங்கேறும். அன்னை ஆண்டாள், திருமலைப் பெருமாள், கந்தசஷ்டி கவசம் வரிசையில் இப்போது சைவம்.

இவற்றிற்கெல்லாம் பெரும் பொரை கிடைப்பதால் தலைவர்களே நேரடியாக குலைக்கிறார்கள். "கீழடியில் பூசைப் பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால், தமிழர்கள் இறைநம்பிக்கை இல்லாதவர்கள்." போன்ற பிட்டுகளுக்கு பொரை குறைவு என்பதால் துண்டு, துக்கடாக்களிடம் தள்ளிவிடுகிறார்கள்.

oOOo

பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவருணை வந்துசேர்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்ற 1996ஆம் ஆண்டு திரு ரமணாச்சிரமம் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அண்ணாமலையாரின் மலைவலப் பாதையிலுள்ள எட்டு திசை லிங்கங்களைப் பற்றிய செய்தியொன்று இருந்தது:

விண்மீன்களை வைத்து நிறுவப்பட்ட திசை லிங்கங்கள் யாவும் அதனதன் திசையிலிருந்து 3° விலகியிருக்கின்றன. இதற்கு காரணம் நமது பகலவன் குடும்பத்தின் நகர்வு!! எவ்வாறு நமது பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், தனது தலைவனான பகலவனையும் சுற்றி வருகிறதோ, இவ்வாறே நமது பகலவன் குடும்பமும் பால்வெளியில் சுழன்றுகொண்டும், நகர்ந்துகொண்டும் இருக்கிறது. 1° நகர்வதற்கு சுமார் 10,000 ஆண்டுகள் ஆகிறது. இதன்படி 3° நகர்வதற்கு 30,000 ஆண்டுகள் ஆகியிருக்கும். எனில், திசை லிங்கங்களின் வயது குறைந்தது 30,000 ஆண்டுகளாகும்.

திசை லிங்கங்களின் வயதே 30,000 ஆண்டுகள் எனில் மூலவர் திரு அண்ணாமலையாரின் வயது எவ்வளவு இருக்கும்?

இவ்வளவு பழமையும், கணக்கிட முடியாத பெருமையும் கொண்ட இந்த மண்ணின் அருமைப்பெருமைகளை கிடைக்கும் சில பொரைகளுக்காக சிறுமைப்படுத்த முயற்சிக்கிறது ஒரு கேடுகெட்டக் கூட்டம்!!

oOOo

நம் சமயத்தின் மீது சாணி வீசும் ஊழியத்தின் ஒரு பகுதி: நமது இலக்கியங்களை வடக்கிலிருந்து வந்த வெட்கங்கெட்ட சமணத்தோடும், நம்மை மொட்டையடித்துக் கொழுத்துக் கிடந்த பெளத்தத்தோடும் அடையாளப்படுத்துவது!

- நாசகார மதத்தின் வயது 1,400 ஆண்டுகள்.
- நயவஞ்சக மதத்தின் வயது சுமார் 1,700 ஆண்டுகள். (2,000 ஆண்டுகளல்ல. ரோமாபுரி மன்னன் கான்ஸ்டன்டைன் காலத்தில்தான் இம்மதம் நிலைபெறுகிறது.)
- வடக்கத்திய அம்மண & மொட்டை மதங்களின் வயது சுமார் 2,500+ ஆண்டுகள்.

இவர்கள் வருவதற்கு முன் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்று, வளர்த்த மகளை மணந்து கொண்டு, என்றாவது ஒரு நாள் குளித்து, தாசிமகன்களை சுற்றி வைத்துக்கொண்டு, வீட்டில் மனைவி இருக்கும் போதே பரத்தையை அழைத்துவந்து கூத்தடித்துக் கொண்டிருந்தோமா? வடக்கத்தியர் வந்துதான் நம்மை பக்குவப்படுத்தினார்களா? யார் யாரால் பக்குவமானார்கள்? இன்றைய சைபீரியா-ரஷ்யா பகுதிகளிலிருந்து காட்டுமிராண்டிகளாக வந்த வடக்கத்தியர்தாம் நம்மால் பக்குவமானார்கள்.

நம்மை காட்டுமிராண்டிகள் என்று அழைத்தவன் பெளத்த அசோகன்! இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர்கள் பௌத்தர்கள்!! சயாம் தொடரிப்பாதையிலுள்ள ஒவ்வொரு குறுக்குக் கட்டைக்கும் ஒரு தமிழனை பலி கொடுத்தவர்கள் பெளத்தர்கள்!!!

இன்றும் வடக்கை வாழவைத்துக் கொண்டிருக்கும் சில மாநிலங்களில் ஒன்று நம் தமிழ்நாடு. ஒரு ரூபாயை வரியாக இழந்து, வெறும் 15 பைசாவை திரும்பப்பெற்றுக் கொண்டிருக்கிறோம்!!

oOOo

நமது முன்னோர்களிடம் இறை நம்பிக்கை இருந்தது என்பதற்கும், அந்நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதற்கும் சில சங்க கால இலக்கிய சான்றுகளைப் பார்ப்போம்.

🔹திருக்குறள்

பாயிரத்தில் இறைவனைக் குறிக்க வள்ளுவப்பெருந்தகை பயன்படுத்தியிருக்கும் சொற்களை / சொற்றொடர்களைக் கொண்டே நம் முன்னோர்களின் இறை நம்பிக்கையைப் பற்றிய பல செய்திகளை வெளிக் கொணரலாம்:

- வாலறிவன்
- மலர்மிசை ஏகினான்
- வேண்டுதல் வேண்டாமை இலான்
- இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
- பொறிவாயில் ஐந்தவித்தான்
- தனக்குவமை இல்லாதான்
- அறவாழி அந்தணன் (எவ்வுயிரையும் தம் உயிர்போல் கருதுபவர்)
- எண்குணத்தான்
- இறைவன்

🔹புறநானுறு

இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவப்பரம்பொருளை நேரடியாக, இன்று நாம் அறிந்திருக்கும் வண்ணம் புனைந்துரைக்கிறது (கொன்றை மலர், விடை ஊர்தி...).

("கண்ணி கார்நறுங் கொன்றை" என்று தொடங்கும் அப்பாடலை, தயவு செய்து, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🔹தொல்காப்பியம் (சங்க காலத்திற்கும் முற்பட்டது)

>> வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்

"செயலை நான் செய்கிறேன்" என்ற தவறான அறிவு நீங்கியவர் (மெய்யறிவு பெற்றவர்) எழுதும் நூலே முதல் நூல் எனப்படும். பகவான் ரமணரிடமிருந்து வெளிப்பட்ட "உள்ளது நாற்பது" ஒரு சிறந்த முதல் நூலாகும்.

(நாம் பயன்படுத்தும் முனைவர் என்ற சொல் இந்த செய்யுளில் இருந்துதான் எடுக்கப்பட்டது.)

>> மாயோன் மேய காடு உறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

இப்பாடல் நிலப்பரப்பின் வகைகளைப் பற்றிக் கூறுகிறது. இப்பாடலில் மாயோன் என்பது பெருமாளையும், சேயோன் என்பது முருகப்பெருமானையும் குறிக்கும்.

>> கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே

- கொடிநிலை - உலகம் உண்மை என்று கருதும் மனநிலை
- கந்தழி - தன்மையுணர்வை விடாது பிடித்துக் கொண்டு, மற்றனைத்தையும் ஒதுக்கிக் கொண்டிருத்தல். வடக்கிருத்தல்.
- வள்ளி - முழுமை

(இம்மூன்று சொற்கள்தாம் திருக்குறளின் பாயிரப் பகுதிக்கு அடிப்படை என்பது கற்றறிந்தோரின் கருத்தாகும்)

>> காமப்பகுதி கடவுளும், வரையார்,
ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்

இப்பாடலில் உள்ள "கடவுள்" என்ற ஒரு சொல் போதுமே நமது முன்னோர்களின் இறை நம்பிக்கை மற்றும் இறைவனைப் பற்றிய அவர்களது புரிதல் எப்படிப்பட்டதாய் இருந்தது என்பதை தெரிந்துகொள்ள!

கடவுள் - கட + உள் - எல்லாவற்றையும் கடந்து இருப்பவர். உள் - இரு.

🔹கலித்தொகை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என பல சங்க கால நூல்களில் சிவபெருமானை நேரடியாகவும், குறிப்பாலும் உணர்த்தும் பல பாடல்கள் உள்ளன.

oOOo

"நல்லதை விலக்கி, அல்லாததை உயர்த்தி" என்ற ஏமாற்று வேலையால் பல நாடுகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு தலைமுறைக்குள் இந்நிலை மாறும். "அல்லாததை விலக்கி, நல்லதை உயர்த்தி" என்ற நம் முன்னோர்களின் கொள்கைதான் என்றுமே நிலைத்து நிற்கும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Saturday, August 14, 2021

ஆடி விளக்கு (சுவாதி) திருநாள்: திரு சுந்தரமூர்த்தி நாயனார் & திரு சேரமான் பெருமாள் நாயனார் திருநாள்




இன்று (14/08/2021) ஆடி மாத விளக்கு (சுவாதி) விண்மீன் திருநாள். தம்பிரான் தோழரான திரு சுந்திரமூர்த்தி நாயனார் மற்றும் கழறிற்றறியும் பேறு பெற்ற திரு சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரின் திருநாள்.

🌺🌺🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️

சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🌷 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🌷 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🌷 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🌷 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🌷 பெரும் கொடை வள்ளல்
🌷 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!

நாயனார்களின் இறுதிக்காலம்:

🔹மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருத்தலத்திலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார்.

🔹இதன் பொருள்:

🌷 இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் சமாதியடைந்துள்ளனர்
🌷 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை மூச்சைக் குறிக்கும்) நிலைபேறு அடைந்துள்ளனர்

oOOo

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்!! 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, August 11, 2021

செஞ்சிக் கோட்டையை வைத்து விகடன் சுட்ட வட்லப்பம்!! 😠

செஞ்சிக்கோட்டையைப் பற்றி சொல்கிறேன் பேர்வழி என்று காட்டுமிராண்டி ஆற்காடு நவாபு சதத்துல்லாகான் பற்றி "வட்லப்பம்" சுட்டிருக்கிறது விகடன்! (https://www.vikatan.com/arts/literature/the-history-and-the-significance-of-gingee-fort-aka-senji-fort)

முதலில், வட்லப்பம்:

செஞ்சி என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர், ராஜா தேசிங்கு. செஞ்சியை அவன் ஆண்டது வெறும் 10 மாதங்கள் மட்டுமே! மொகலாயர்களின் ஆளுநராக செஞ்சியை நிர்வாகம் செய்தவர் சொரூப் சிங். அவரது மகன் தேஜ் சிங். அவரையே 'தேசிங்கு' என்றனர் மக்கள். தந்தை மறைந்ததும் ராஜா தேசிங்கு 22 வயதில் ஆட்சிக்கு வந்தான். இந்த ஆட்சி மாற்றத்தை மொகலாயப் பேரரசு அங்கீகரிக்கவில்லை. சமாதானத்துக்கும் தேசிங்கு வரவில்லை. அதனால் ஆற்காட்டு நவாப் படையெடுத்து வந்தார். 30 ஆயிரம் படைவீரர்களுடன் வந்த நவாப்பை வெறும் 350 குதிரைப்படையினர், 500 வீரர்களோடு எதிர்கொண்ட தேசிங்கு, சில மணி நேரங்களில் வீழ்ந்தான்.

இப்போது, நமது ஜிகாத்:

அதாவது, காட்டுமிராண்டி நவாபுக்கு செஞ்சியைக் கைப்பற்ற வேண்டும், அரசி ராணிபாயை துய்க்கவேண்டும் என்ற கீழான எண்ணங்கள் இல்லையாம். காட்டுமிராண்டி மொகலாயர்களின் அடிவருடும் மேலான எண்ணம் ஒன்று மட்டும்தான் இருந்ததாம். டில்லி காட்டுமிராண்டி கட்டளையிட்டதும் சிரமேற்கொண்டு தேசிங்கு மன்னரின் கதையை முடித்தானாம். அதுவும் சில மணிநேரத்திலாம்.

👊🏽 தனது திருமணத்தை நிறுத்திவிட்டு விரைந்து வந்து போரிட்ட தளபதி மோபத்கானை எப்படிக் கொன்றானாம் காட்டுமிராண்டி நவாபு?

👊🏽 தளபதி இறந்த செய்தி கேட்டு தானும் இறங்கி கடும்போர் புரிந்த மன்னர் தேசிங்கை எப்படிக் கொன்றானாம் காட்டுமிராண்டி நவாபு?

👊🏽 இவையெல்லாம் சில மணிநேரத்திலேயே நடந்து முடிந்துவிட்டனவா?

👊🏽 அக்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்ததும், செல்வ செழிப்பானதுமான ஒரு தலைநகரக் கோட்டையைக் காக்க வெறும் 350 வீரர்கள்தாம் இருந்தனரா?

👊🏽 350 வீரர்கள் காக்குமளவு இருந்த ஒரு கோட்டையைக் கைபற்றுவதற்குத்தான் ஆங்கிலேயரும், பிரெஞ்சுகாரர்களும் அத்தனை முறை மோதிக்கொண்டனரா?

👊🏽 ஒரு சிறப்புமில்லாத வீரமற்ற மன்னரைத்தான் நாட்டுப்புறப் பாடல்களாலும், கதைகளாலும் சிறப்பித்ததா வாளோடு பிறந்த முத்த குடி?

விகடன் பாய், எத்தனை வட்லப்பம் சுட்டாலும், வகைவகையாக சுட்டாலும் நடத்திய அட்டூழியங்களை மறைக்க முடியாது. இறைவன் மிகப் பெரியவன்!!

Monday, August 9, 2021

புற்றுக்கு பால் வார்த்தல் என்றால் என்ன?

ஆடி மாதம் பிறந்தவுடனே அம்மன் கோயில்கள் களைக்கட்டத் தொடங்கிவிடும். அதுவும் செவ்வாய் & வெள்ளிக் கிழமைகள் என்றால் இன்னொரு மடங்கு களைக்கட்டும். அதிலும், இயற்கையாகவே பாம்பு புற்று இருக்கும் அம்மன் கோயில்கள் எனில் கொண்டாட்டம்தான்! அப்புற்றுகளுக்குள் பாம்புகள் இருப்பின் அவற்றின் பாடு திண்டாட்டம்தான்!!


"கிடா வெட்டு" திருவிழா எவ்வாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ அவ்வாறே இந்த "புற்றிலிருக்கும் பாம்புக்கு பால் வார்த்தல்" என்பதும் வெகு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது!!

☀️ புற்று என்பது நமதுடலைக் குறிக்கும்

நமது அருளாளர்களில் பலர் நமதுடலை மண்பாண்டம், கோணிப்பை, காற்றடைத்தப்பை, சந்தைக் கூட்டம், புற்று, காடு என பலவாறு புகழ்ந்திருப்பதிலிருந்து (☺️) இதை உணரலாம்.

☀️ பாம்பு என்பது நமது மனதைக் குறிக்கும்

இதற்கு விளக்கமே தேவையில்லை. நமது சமயக்குறியீடுகளில் இதற்கான சான்றுகள் பல உள்ளன. நமது இறையுருவங்களில் பாம்பு இல்லாத உருவங்கள் மிகக்குறைவாகும்.

☀️ பால் வார்த்தல் என்பது மனதைத் தூய்மையாக்குதலைக் குறிக்கும்

நமது திருத்தலங்களில் உள்ள இறை திருமேனிகளுக்கு நடைபெறும் திருமுழுக்கில் இடம் பெறும் பால் மற்றும் திரவியப் பொடி அந்த திருமேனிகளை தூய்மைப்படுத்துவதற்காகத்தான் என்பதிலிருந்து இதை உணரலாம்.

🔹கிடா வெட்டுதல் - மனதை அழித்தல்
🔹புற்றுக்கு பால் வார்த்தல் - மனதை தூய்மையாக்குதல்
🔹பொங்கல் வைத்தல் - மனமழிந்த பிறகு, பொங்கும் மகிழ்ச்சியை, கிடைக்கும் மெய்யறிவை எல்லோருடன் பகிர்ந்துகொள்ளுதல்.

எல்லாம் பெரும் பொருள் பொதிந்த சொற்றொடர்களாகும். ஆனால், இன்று, இவை பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டு வெற்றுச் சடங்குகளாகிவிட்டன!! 😔

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, August 8, 2021

திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?

நேற்று (08/08/2021) ஆடி அமாவாசை.

அப்பர் பெருமானுக்கு திருவையாற்றில் திருக்கயிலாயக் காட்சியை இறைவன் காட்டியருளிய திருநாள்!!


🌺🙏🏽🙇🏽‍♂️

திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?

"நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.

☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு பற்றுக்கோடு நாம்தான் என்பதை நாம் உணர்வதில்லை. நம்முள்ளிருந்துதான் உலகம் வெளிப்படுகிறது என்பதையும் உணர முடிவதில்லை. உலகினுள் நாமிருப்பது போன்று காண்கிறோம்.

☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தமது தன்மையுணர்வில் இருப்பவர்கள். காணப்படும் யாவும் இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். உலகை "எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல்" போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.

☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி! காண்பானும் உண்டு (கல்). காணப்படும் காட்சியுமுண்டு (நாய்). காணப்படுவது காட்சி மாத்திரமே என்ற அறிவுமுண்டு! இவ்வறிவுக்கு காரணம் காட்சி தோன்றும் வகை. காட்சியின் பொய்த்தன்மை உணரப்பட்டதும் "நான் இன்னார்" என்ற மனம் (அடிப்பவன் - எல்லா வினைகளுக்கும் காரணமானது) மறைந்துவிடும்.

சில பழமையான சிவத்தலங்களில் மூலவருக்கு பின்னே அம்மையப்பரை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். "அகத்தியருக்கு சிவபெருமான் தனது திருமணக்காட்சியை இங்கே காட்டியருளினார்" என்று தலவரலாற்றில் பதிவு செய்திருப்பர். இதன் பொருள்: அத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில், மேற்கண்டவாறு திருக்கயிலாயக் காட்சியைக் காணும் பேறு பெற்றவர். (இங்கு அகத்தியர் எனில் மெய்யறிவாளர் என்று பொருள். நாமறிந்த குள்ள மாமுனிவரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்காது.)

oOOo

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮