Saturday, August 14, 2021

ஆடி விளக்கு (சுவாதி) திருநாள்: திரு சுந்தரமூர்த்தி நாயனார் & திரு சேரமான் பெருமாள் நாயனார் திருநாள்




இன்று (14/08/2021) ஆடி மாத விளக்கு (சுவாதி) விண்மீன் திருநாள். தம்பிரான் தோழரான திரு சுந்திரமூர்த்தி நாயனார் மற்றும் கழறிற்றறியும் பேறு பெற்ற திரு சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரின் திருநாள்.

🌺🌺🙏🏽🙏🏽🙇🏽‍♂️🙇🏽‍♂️

சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🌷 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்
🌷 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)
🌷 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்
🌷 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்
🌷 பெரும் கொடை வள்ளல்
🌷 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் - கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் - மெய்யறிவு பெற்றவர்!!

நாயனார்களின் இறுதிக்காலம்:

🔹மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருத்தலத்திலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார்.

🔹இதன் பொருள்:

🌷 இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் சமாதியடைந்துள்ளனர்
🌷 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை - மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை மூச்சைக் குறிக்கும்) நிலைபேறு அடைந்துள்ளனர்

oOOo

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்!! 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment