Monday, August 9, 2021

புற்றுக்கு பால் வார்த்தல் என்றால் என்ன?

ஆடி மாதம் பிறந்தவுடனே அம்மன் கோயில்கள் களைக்கட்டத் தொடங்கிவிடும். அதுவும் செவ்வாய் & வெள்ளிக் கிழமைகள் என்றால் இன்னொரு மடங்கு களைக்கட்டும். அதிலும், இயற்கையாகவே பாம்பு புற்று இருக்கும் அம்மன் கோயில்கள் எனில் கொண்டாட்டம்தான்! அப்புற்றுகளுக்குள் பாம்புகள் இருப்பின் அவற்றின் பாடு திண்டாட்டம்தான்!!


"கிடா வெட்டு" திருவிழா எவ்வாறு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டதோ அவ்வாறே இந்த "புற்றிலிருக்கும் பாம்புக்கு பால் வார்த்தல்" என்பதும் வெகு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது!!

☀️ புற்று என்பது நமதுடலைக் குறிக்கும்

நமது அருளாளர்களில் பலர் நமதுடலை மண்பாண்டம், கோணிப்பை, காற்றடைத்தப்பை, சந்தைக் கூட்டம், புற்று, காடு என பலவாறு புகழ்ந்திருப்பதிலிருந்து (☺️) இதை உணரலாம்.

☀️ பாம்பு என்பது நமது மனதைக் குறிக்கும்

இதற்கு விளக்கமே தேவையில்லை. நமது சமயக்குறியீடுகளில் இதற்கான சான்றுகள் பல உள்ளன. நமது இறையுருவங்களில் பாம்பு இல்லாத உருவங்கள் மிகக்குறைவாகும்.

☀️ பால் வார்த்தல் என்பது மனதைத் தூய்மையாக்குதலைக் குறிக்கும்

நமது திருத்தலங்களில் உள்ள இறை திருமேனிகளுக்கு நடைபெறும் திருமுழுக்கில் இடம் பெறும் பால் மற்றும் திரவியப் பொடி அந்த திருமேனிகளை தூய்மைப்படுத்துவதற்காகத்தான் என்பதிலிருந்து இதை உணரலாம்.

🔹கிடா வெட்டுதல் - மனதை அழித்தல்
🔹புற்றுக்கு பால் வார்த்தல் - மனதை தூய்மையாக்குதல்
🔹பொங்கல் வைத்தல் - மனமழிந்த பிறகு, பொங்கும் மகிழ்ச்சியை, கிடைக்கும் மெய்யறிவை எல்லோருடன் பகிர்ந்துகொள்ளுதல்.

எல்லாம் பெரும் பொருள் பொதிந்த சொற்றொடர்களாகும். ஆனால், இன்று, இவை பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டு வெற்றுச் சடங்குகளாகிவிட்டன!! 😔

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment