Friday, July 2, 2021

திருவானைக்கா திருத்தலத்தின் தலவரலாறு உணர்த்தும் உண்மைகள்


🌺🙏🏽🙇🏽‍♂️

(இந்த சுதைக் காட்சியை, திருக்கோயிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் காணலாம். உள்ளேயும் ஒரு கல்தூணில் இதே காட்சியை மிக அழகாக வடித்திருக்கிறார்கள்.)

தலவரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர், தயவு செய்து, இணையத்தில் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளவும். அது உணர்த்தும் கருத்துகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🌷 உலக வாழ்வு என்பது அறிவுக்கும் (யானை) மனதிற்கும் (சிலந்தி) நடக்கும் போராட்டமாகும்.

🌷 இவற்றால் பரம்பொருள் (சிவலிங்கம்) பாதிப்படைவதில்லை. பரம்பொருளுக்கு பிறப்பில்லை, இறப்பில்லை, மாற்றமில்லை & செயலும் இல்லை. சாட்சி மாத்திரம்தான்.

🌷பரம்பொருள் சாட்சி மாத்திரம்தான் எனில், உலகை இயக்குவது இறைவனின் ஆற்றலாகிய அன்னை/பெருமாள். உலக இயக்கத்தை, அதில் நிகழும் நிகழ்வுகளை, "அன்னை இறைவனுக்கு நடத்தும் பூசனை" என்று சித்தரித்துள்ளனர். இதையே, காசியம்பதியில், "அன்னை இறைவனுக்கு அளிக்கும் அமுது" என்று சித்தரித்திருப்பர்.

🌷 நாம் காணும் உலகம் நம்முள்ளிருந்து வெளிப்படுகிறது என்ற பேருண்மையைக் கண்டுணர்ந்து உலகுக்கு தெரிவித்தவர் ஜம்பு முனிவர். இத்திருத்தலத்தின் மூலவர். 🌺🙏🏽🙇🏽‍♂️ (தலவரலாற்றில், இவரது வயிற்றிலிருந்து வாய் வழியாக நாவல் மரம் வெளிவருவதாக எழுதியிருப்பர். இங்கு சித்தரிப்பில், இவரது தலைவழியாக வெளிவருவது போன்று காட்டியுள்ளனர்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment