Friday, April 17, 2020

ஹைட்ராக்சி #குளோரோக்வின் என்ற மருந்து உருவான விதம்!!

இன்று உலக நாடுகள் நம்மிடம் வரிசை கட்டி நிற்பதற்கு காரணமான #ஹைட்ராக்சி #குளோரோக்வின் என்ற மருந்து உருவான விதம்:

... ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் ஆட்சிக்கு வந்தபோது, திப்பு சுல்தான் படைகளோடு ஸ்ரீரங்கபட்டிணத்தில் மோதினர். சதுப்புநிலக் காடுகளில், கொசுத் தொல்லையில் மலேரியா நோய் வந்து பலர் மடிந்தனர். அங்கிருந்த சின்கோனா மரக்காடுகளில் இருந்து, மரப்பட்டையில் தயாரித்த ஒரு கஷாயத்தை ஆதிவாசிகள் மூலம் அவர்கள் உட்கொண்டு உயிர் பிழைத்தனர். மிகவும் கசப்பாக மருந்து இருந்ததால், அதை விஸ்கி, ஜின் மது பானங்களில் கலந்து உண்டனர். பின்னாளில் இந்த மரப்பட்டையில் இருந்து க்வினின் என்ற வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, அதிலிருந்து குளோரோக்வின் என்ற மருந்து பிறந்தது. நம் நாட்டிலிருந்து மலேரியாவை வேரறுப்பதற்கு, இந்த குளோரோக்வின் மருந்துதான் இன்றளவும் காரணமாக அமைந்தது. குளோரோக்வின் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மருந்துதான், ஹைட்ராக்சி குளோரோக்வின். மலேரியா தவிர, மூட்டுவாதம் எஸ்.எல்.இ., போன்ற நோய்களுக்கும் இது அற்புத மருந்து. உலகில், 70 சதவீதம் மருந்து, நம் நாட்டில்தான் உற்பத்தியாகிறது...

(மூலம்: https://m.dinamalar.com/detail.php?id=2522148&device=whatsapp)

💮🌷🌼🌻🏵️🌹🌸

இணைப்புகள்:

1. நேற்றைய தினமலரில் வெளியான இந்த செய்தியின் முழுக்கட்டுரை



2. அந்த கட்டுரையில் இந்த செய்தியிருந்த பகுதி



No comments:

Post a Comment