Saturday, December 1, 2018

அனுமாரையும் குடும்பி ஆக்கிவிட்டார்கள்!! 😀


மனதைக் குறிக்க வைணவர்கள் உருவாக்கிய உருவம் தான் #ஆஞ்சநேயர் / #அனுமார்.

அலைபாயுதல் என்பது மனதின் இயல்பு. இதனால் தான் குரங்கைக் குறியீடாக எடுத்துக்கொண்டனர். இப்போது இந்த இயல்பை தனியாகப் பிரித்து, #சுவர்ச்சலா தேவி என்ற பெண்ணாக்கி, அப்பெண்ணிற்கு மனித முகத்தை வேறு கொடுத்துள்ளனர். அலைபாயும் தன்மை இல்லையெனில் மனம் மனமாகாது. அது "திரு" என்றாகும் வாய்ப்புள்ளது (திரு - நிலைத்த; நிலைபேறு - மெய்யறிவு - இறை)!!

"ஒரு நீர் நிலையில் உள்ள நீர் அசையாமலும் தெளிவாகவும் இருந்தால் நீர் தெரியாது. உள்புறம் மட்டுமே தெரியும்." என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர் (பகவத் வசனாம்ருதம், எண் # 146; இதே விளக்கத்தை குங்ஃபூ பாண்டா - பாகம் 1 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர் (ஆசான் ஊக்வே ஆசான் ஷிஃபூவிற்கு மெய்யறிவு பற்றி விளக்கமளிக்கும் காட்சி)). இது போன்றே மனதின் அலைபாயும் தன்மையை விளக்கிவிட்டால் அங்கே மனம் இருக்காது; இறை வெளிப்படவே வாய்ப்புள்ளது. அப்படி வெளிப்படுங்கால், இணைப்பு படத்தின் பொருள் பெருந்தவறாகிவிடும் - பெருமாளும் சுவர்ச்சலா தேவியும் அமர்ந்திருப்பது போலாகிவிடும்!! 😀

இறையுருவம் என்பது ஒரு காலத்தில் ஒரு மெய்யறிவாளரின் (ஞானியின்) சமாதியைக் குறிப்பதற்காக (அடையாளத்திற்காக) பயன்படுத்தப்பட்டது. இன்று, அழிக்கப்பட வேண்டிய மனதிற்கு துணைவியைத் தரும் அளவிற்கு தரம் தாழ்ந்துள்ளது. பெரும்பாலான மதங்களும், நம் சமயத்தின் சில பிரிவுகளும் "மனதை அழி" என்று அறிவுறுத்தும் போது, நம் சமயத்தின் மீத பிரிவுகள் மட்டும் மனதைக் கொண்டாட 3 முக்கிய காரணங்கள்:

▶ மனதின் வழியாகத்தான் இறையை அடைய முடியும்
▶ உலகம் செவ்வனே இயங்க மனம் இன்றியமையாதது
▶ மனமும் இறைவனின் படைப்பே

வாழ்க்கை வண்டி ஓட வேண்டும் என்பதற்காக, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து வைக்கிறார்கள். பின்னர், அது நம் சமயத்திற்கே பெரும் கேடாக வந்து நிற்கின்றது!! 😔

மனதின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற
மார்க்கம் நேர் யாவர்க்கும் இது உந்தீபற

-- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்


🌸🙏🌸🙏🌸


__(ஸ்ரீஆஞ்சநேயரைப் மேலும் அறிந்து கொள்ள: https://m.facebook.com/story.php?story_fbid=10156330139391052&id=698176051)__

posted from Bloggeroid

No comments:

Post a Comment