Thursday, December 6, 2018

பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாள் - டிசம்பர் 6

ஒருசமயம் #அம்பேத்கர் தாம் ஏன் #இஸ்லாம் தழுவவில்லை என்பதை விளக்கினார்:

“நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால், கோடான கோடிப் பணம் எங்கள் காலடியில் கொட்டப் பட்டிருக்கும். ஆனால், ஐந்தாண்டுகளில் நாடே சீரழிந்து போயிருக்கும். ஆகையால், 'மாபெரும் அழிவு வேலையைச் செய்தவன்' என்று வரலாற்றில் இடம் பெற நான் விரும்பவில்லை’’ என்று கூறினார்

(Ambethkar – A Critical Study)

💥💥💥

அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் நாடு என்ன ஆகியிருக்கும் என்பதைப் பற்றி #பாலாசாகிப் #தேசாய் கூறுகிறார்:

‘‘இந்த நாட்டுக்கு மிகப் பெரிய சேவை செய்துள்ளார் பாபாசாகிப் அம்பேத்கர். பாரதத்தின் மீதும், அதன் பண்பாட்டின் மீதும் அவருக்கு அன்பு இருந்ததால்தான் அவர் #புத்தநெறி தழுவினார். அதை விடுத்து இஸ்லாம் மதம் போயிருப்பாரேயானால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். நாடே சின்னாபின்னப்பட்டல்லவா போயிருக்கும்!’’

(Kamble, J.R. Rise and Awakening of the Depressed Classes in India, National Publishing House, New Delhi, 1979, P.211)

அதாவது இஸ்லாம் மதத்திற்கு மாறினால் நாடே சீரழியும் என்பது அம்பேத்கருக்கு தெரிந்திருந்த காரணத்தால்தான் அவர் இஸ்லாத்தை தேர்ந்தெடுக்கவில்லை.



💥💥💥

14-10-1956 அன்று அம்பேத்கர் புத்தமத தீக்‌ஷை பெற்ற போது பேசியதாவது :

….புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின்போது புத்தர் பிரானின் உருவச்சிலைகளை அழித்துச் சிதைத்தனர். இதுவே புத்தமதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்புகளுககு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத்துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர்.’’ என்று கூறினார்.

ஆகவே அம்பேத்கர் இஸ்லாம் மதம் மாறாததற்கு, புத்தமதத்தை அழித்தது இஸ்லாம் என்று தெளிவாக அறிந்திருந்தது தான் காரணம்.


__(மூலம்: http://www.tamilhindu.com/2011/08/why_ambedkar_converted_to_buddhism-14/)__

posted from Bloggeroid

No comments:

Post a Comment