உலகக் கொள்ளையர்களான வெள்ளையர்களால் விளைந்த இன்னொரு நல் விளைவு! 😛
ரிஷி வர்ஷாவிலிருந்து (இன்றைய ரஷ்யா) வந்த ஆரியக் காட்டுமிராண்டிகள், வடக்கிலிருந்து வந்த சமண பெளத்த மொட்டைகள், முகம்மதியக் காட்டுமிராண்டிகள் என இத்தனை படையெடுப்புகளுக்குப் பின்னரும், பரங்கியர்கள் வரும் போது கல்வி இவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது. இதற்கும், இதே பரங்கியர்களே பதிவும் செய்திருக்கிறார்கள், "எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி, பிணியாளர்கள், பிச்சைக்காரர்கள்" என்று! 😑 அன்பு மார்க்கத்தினரின் அன்பானத் தொல்லைகளால் ஏற்பட்டிருந்த விளைவுகள் அவை. 😝 அந்நிலையிலும் நமது கல்வி கட்டமைப்பு பாராட்டத்தக்கதெனில் மேற்சொன்ன படையெடுப்புகளுக்கு முன்னர் அது எவ்வாறு இருந்திருக்கும்? 🤔
இணைப்புக் கட்டுரையின் இறுதியில் கோடிட்டுக் காட்டப்பட்டதைப் போல் இருந்திருக்கும்: "உலகின் எந்தக் கலாச்சாரத்திடமும் எதையும் பெற்றுக் கொள்ளாமல், உலகிற்கு, குறிப்பாக ஆசியாவுக்கு, தன் வளமான சிந்தனைகளை பாரதம் வழங்கிய காலகட்டமே அது."!! 👏👌💪
எனக்கென்னவோ, "கல்வி எனும் அழகிய மரத்தை பரங்கியர்கள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்" என்ற தரம்பாலின் வாக்கியத்தைத் தான் வரலாறு படைத்த அவதார் திரைப்படத்தில் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூண் உருவகப்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. 😎
(இணைப்புகள்: #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், புரட்டாசி - செப்டம்பர் 2017)
No comments:
Post a Comment