Saturday, March 4, 2017

மீத்தேனசுரனை பெற்றெடுத்த கான்-கிரஸ், திருட்டு-முக & பான்பராக் சட்டைகள்

பின் வரும் இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. இது எழுப்பும் கேள்விகள் நியாயமாகப் படுவதாலும், அதன் வழியாக வெளிப்படும் உண்மைகள் பலருக்கும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தாலும் இங்கு பகிர்கிறேன்.

"யார் இந்தத் திட்டத்திற்கு அடிக்கோல் இட்டனர்?", "இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது பொங்குவதன் பின்னணி என்ன?" என்பது போன்ற அலசல்கள் ஒரு புறம் இருக்கட்டும். இயற்கையை அழித்து மனிதன் வாழ நினைப்பது, நுனி கிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டுவதற்கு சமம்!

இத்திட்டத்தால் 30 வருடத்தில் 5 மில்லியன் டன் மீத்தேன் வாயு எடுக்க முடியும் என்று கணித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

▶ அதாவது, 500,00,00,000 கிலோ மீத்தேன் 30 வருடத்தில்.
▶ வருட உற்பத்தி 16,66,66,667 கிலோக்கள்.
▶ மாத உற்பத்தி 1,38,88,889 கிலோக்கள்.
▶ தின உற்பத்தி 4,62,963 கிலோக்கள்.

*சாணம், காய்கறி & பழக் கழிவு, உணவு மீதம் ஆகியவற்றிலிருந்து எளிதாக மீத்தேன் எடுக்கலாம். 1 கிலோ உணவு மீதத்திலிருந்து 750 கிராம் முதல் 1 கிலோ மீத்தேன் உற்பத்தி செய்யலாம். உடன் சுமார் 12 லிட்டர் தழைச்சத்து (நைட்ரஜன்) நிறைந்த கழிவும் கிடைக்கும்.*

இக்கணக்கின்படி, *மேற்சொன்ன தின உற்பத்தி இலக்கை அடைய* சுமார் 5,00,000 கிலோ உணவுக்கழிவுத் தேவை. இதற்கு *சென்னையின் கோயம்பேடு பகுதி மட்டுமே போதும்!* மொத்த சென்னையின் உணவுக்கழிவு நாளொன்றுக்கு சுமார் 50-70,00,000 கிலோக்கள். அதாவது, நெடுவாசலில் உற்பத்தி செய்யப்படப்போகும் அளவை விட 10 மடங்கு அதிகமாக தயாரிக்கலாம்!! 👏 மேலும், பல்லாயிரம் டன் தழைச்சத்தையும் உற்பத்தி செய்யலாம்!! 👏👏 விவசாயிகளுக்கு அதை மிகக் குறைந்த விலையில் விற்கலாம். உர மானியத்தை அடியோடு நிறுத்தலாம். எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவைக் கூட அடையலாம்.

இத்திட்டத்தை பெரிய அளவில் தான் செயல்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. சிறு குடும்பங்களையும் பங்கேற்க வைக்கலாம். *இணைப்புப் படத்திலுள்ள கலன்* அப்படி உருவாக்கப்பட்டது தான். இதை *உருவாக்கியது கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தா கேந்திரம்.* 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் கொஞ்சம் மெனக்கெட்டால் வருடத்திற்கு 56 கிலோ மீத்தேனும், சுமார் 700 லிட்டர் தழைச்சத்து நிறைந்த கழிவையும் உற்பத்தி செய்யமுடியும்.

"ஏற்கனவே கோயம்பேடு சந்தை வளாகத்தில் ஒரு மீத்தேன் உற்பத்தி நிலையம் இயங்காமல் வீணாக உள்ளதே?" என்று கேள்வி கேட்போருக்கு... "வீணாக வேண்டும்" என்று எண்ணம் கொண்ட தொழிலாளர்கள், ஊழல் அதிகாரிகள், அரசியல்(வி)யாதிகள் தான் காரணம் என்பதே என் பதில். நெடுவாசலில் வெற்றி காண முடியுமானால் கோயம்பேடிலும் வெற்றி காண முடியும்!!

இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்குமா? இல்லை, நெடுவாசலை சுடுகாடாக்குவதும், இத்திட்டத்தின் மூலம் பல தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதும்
தான் எங்கள் திட்டம் என்று வரிந்து கட்டிக் கொண்டு இறங்கப் போகின்றனவா? 🤔🤓

🌸🏵🌹💮🌺🌷🌼

▶ இணைப்புகள்:

1. வி.கே.-யின் சுரபி கலன்,
2. அபாயகரமான மீத்தேன் கிணறுகள் பற்றிய வரை & புகைப்படங்கள்

🌸🏵🌹💮🌺🌷🌼

*மீத்தேனசுரனை பெற்றெடுத்த கான்-கிரஸ், திருட்டு-முக & பான்பராக் சட்டைகள்*

சில கேள்விகளுக்கு பதில் சொல்லுமா, எதிர்க்கட்சிகள் ?

குறிப்பாக மாவோயிச கம்யூனிஸ்டுகள்,
இத்தாலி காங்கிரஸ் மற்றும் தி மு க. சமூக ஆர்வலர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இத்தனை வருடம் கழித்து இப்போது திடீரென பொங்குவதேன்?

8 வருடங்களாக என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

இந்த மாதிரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் எல்லாவற்றிலும் சுப. உதயகுமார் இருப்பது எப்படி இவர்களுக்கு பின்னால் இருக்கும் சக்தி எது?
இந்த போராட்டங்களில் NGOகளின் பங்கு என்ன?

ஊடகங்கள் உண்மையை மறைத்து இத்திட்டம் BJP ஆட்சியில் தொடங்கப்பட்டது போல் பொய்பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஏன்?

நெடுவாசலில் பத்து வருடங்களாக எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தின் பணி நடந்து கொண்டிருந்தாலும், இது நாள் வரை அந்த பகுதியில் உள்ள தமிழ் (?) ஆர்வலர்களுக்கு, முற்போக்குகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு கண்கள் தெரியவில்லையே?

வாய் பேசாது இருந்த மர்மம் என்ன? ஊடகங்கள் திடீரென்று விழித்து கொண்டதன் (?) ரகசியம் என்ன?

நெடுவாசலில் 2009ம் ஆண்டே 4000 அடி தோண்டி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டது.

அப்போதைய அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்.

அப்போது வேடிக்கை பார்த்து விட்டு இப்போது அதே கம்யூனிஸ்ட் கட்சியினர் பொங்கியெழுவது ஏன்?

2009 ல் ஆய்வு செய்த போது, நெடுவாசல் கிராமம் இருக்கும் ஆலங்குடி சட்டமன்ற சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை (CPI) சார்ந்த ராஜசேகரன் என்பதையும்,

அப்போது அந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் என்பதையும் ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் மறைக்கின்றன.

இந்த திட்டத்தை இதுநாள் வரை எதிர்க்காது இருந்த கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தி மு க , அ தி மு க போன்ற கட்சிகள், தற்போது இதை எதிர்ப்பதற்கு காரணம் பாஜக ஆட்சியில் வளர்ச்சி வந்து விடக்கூடாது என்ற அச்சமே என்பதை மக்கள் விரைவில் உணர்வார்கள்.

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதை கைவிட வேண்டும் என்று சொல்லும் ஸ்டாலின் அவர்களே, இந்த திட்டத்திற்கான சுற்றுப்புற சூழல் அனுமதியை 2006ல் கொடுத்ததே உங்கள் கட்சியின் அன்றைய அமைச்சர் ஆ.ராசா தான் என்பதை மறந்தது அல்லது மறைத்தது ஏன்?

1. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் 2009 ம் ஆண்டு, அப்போதைய மத்திய அரசு நெடுவாசல் கிராமத்தில் (புதுக்கோட்டை மாவட்டம்) இத்திட்டத்தைப்பற்றி ஆராய கேட்டுள்ளது.நெடுவாசல் போல், இந்தியாவில்.வெவ்வேறு மாநிலங்களில் கிட்டத்தட்ட 68 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2. அதன் தொடர்ச்சியாக ,2011ல் , சுமார் 327 பக்க ஆணையை கொடுத்து, சுற்று சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை (environmental impact assessment report ) தயார் செய்துள்ளது.

3. பிறகு, 31.1.2014 அன்று, ONGC க்கு, அப்போதைய காங். (திமுக அங்கம் வகித்த) அரசு ஆணை கொடுத்துள்ளது .

4. ஏதோ, இன்று இந்த மத்திய அரசுதான் திடீரென்று இத்திட்டத்தை செய்துவிட்டதாக கூறுவது பச்சை பொய் மக்களை குழப்பி ஏமாற்றும் செயல் இப்பணியில் தொடர்ச்சியாக 14.10.2015 ல் அரசாணை அனுப்புகின்றனர்.
அதில், எந்த ஒரு வழக்கும் இருந்திருக்க வில்லை.

எனவே, ஆரம்ப கட்டத்தில், அந்த ஊர் பஞ்சாயத் தலைவர் ஒப்புதலும் பெற்றிருப்பார்கள். மேலே குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதிகள் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை/நிறுத்தவில்லை. யாரும், எந்த ஒரு புகாரும் கொடுக்க வில்லை. மாநில அரசு எதிர்க்கவில்லை. இன்றைய திடீர் எதிர்ப்பு ஏன்? 😉

No comments:

Post a Comment