Thursday, September 20, 2018

சுவாமியை நன்றாகப் பார்த்தீரா? 👎 நன்றாக தரிசனம் ஆயிற்றா? 👎 இறையுணர்வு பெற்றீரா? 👍

சென்ற இடுகையில், "சுவாமியை நன்றாகப் பார்த்தீரா?", "நன்றாக தரிசனம் ஆயிற்றா?" போன்ற கேள்விகளின் சரியான உட்பொருள், "இறையுணர்வு பெற்றீரா?" என்பது தான் என்று எழுதியிருந்தேன். அதன் விரிவே இந்த இடுகை.

🌸🌻🌷🌺🌼

உடையாரை வணங்கும் போது தானாகவே நமது கண்கள் மூடும். இது இயற்கையானதே. பலர் இன்று செயற்கையாக கண்களை திறந்து வைத்திருக்க முயலுகின்றனர். சில ஆன்மிகவாதிகளும் கண்களைத் திறந்து வைக்கச் சொல்லி அறிவுருத்துகின்றனர். இது தவறு. இத்தவறு இறைவன், ஆன்மா, வணங்குதல் பற்றிய சரியான புரிதல் இல்லாமையால் ஏற்படுகிறது. இந்தச் சூழ்நிலைக்கென்றே ஒரு ஆன்மிக கதையை நம் பெரியவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அக்கதை...

கம்சனின் அழிவுக்குப் பின்னர், கண்ணபிரான் மதுரா செல்லத் தயாராகிறார். பிரிவுத் துயரம் தாங்காமல் அவரது வளர்ப்பு அன்னை யசோதை கேட்கிறார், "இவ்வளவு காலமும் உன்னோடு வாழ்ந்து விட்டு இனி உன்னை விட்டுப் பிரிந்து வாழ்வது எங்ஙனம் சாத்தியம்?". அன்னையின் நிலையைப் புரிந்து கொண்ட கண்ணபிரான் பதிலளிக்கிறார், "அம்மா, நீ என்னை விட்டுப் பிரிவதென்பது இயலாத காரியம். உங்களது கண்களை மூடிக் கொண்டுப் பாருங்கள். நான் காட்சியளிப்பேன்.". யசோதையும் கண்களை மூடிப் பார்த்து விட்டு, "ஆம் கண்ணா. நீ காட்சியளிக்கிறாய். நீ என்னை விட்டுப் பிரியவில்லை. நான் தான் தவறாக எண்ணிவிட்டேன்.", என்று பதிலளித்தார்.

யசோதை கண்களை மூடியவுடன் கண்ணபிரான் அவரது மனக்கண்ணில் தெரிந்தார் என்று எண்ணிக் கொள்வோம். 😁 சிலர், கண்களை மூடியவுடன் தோன்றும் கருமை நிறமே கண்ணபிரான் என்று நினைத்துக் கொள்வர். இதுவும் தவறே. தோன்றி மறைவது இறையாகாது.

காட்சிகள் மறையும் போது காணும் நாம், நம்மை நாமாக உணர முடியும் என்பதையே இக்கதை காட்டுகிறது. பகவான் ஸ்ரீரமணரும், "காணும் காட்சிகள் யாவும் பொய்யே. காண்பவனே மெய்." என்கிறார். இத்தனை காலமும் காட்சிகளுடன் (மனதில் தோன்றும் எண்ணம் முதல் வெளிப்புறத்தில் காணும் காட்சிகள் வரை அனைத்துமே காட்சிகள் தான்) நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டதால், அவையில்லாமல் இருப்பது கடினம். அவற்றிலிருந்து நம்மை பிரித்தறிவது இன்னும் கடினம். இதற்காகத் தான் வெவ்வேறு தலங்களில் வாழ்ந்த மகான்கள், தங்களை நாடி வந்தவர்கள் ஒரு கணமாவது தங்களை தாங்களாக உணரவேண்டும் (நிலைபேறு, ஞானம், மெய்யறிவு என்பதெல்லாமும் இதுவே) என்பதற்காக சில உத்திகளை உருவாக்கினார்கள். அந்த ஒரு சில கண உணர்வு அவர்களது கண்ணோட்டத்தை மாற்றிவிடும் என்பதால். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

🔥 கங்கையில் மூழ்குவது

மிக எளிமையான மற்றும் சுலபமான உத்தியிது. பாமரர் முதல் படித்தோர் வரை அனைவருக்கும் ஏற்றது. இதனை பயன்படுத்தி எண்ணில்லா மனிதர்கள் நிலைபேறு பெற்றுள்ளனர். ஆகையால் தான், இத்தலமும் இந்த உத்தியினை வழங்கியருளிய திருநந்திதேவரும் 🌸🙏(காசி ஸ்ரீவிஸ்வநாதர் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியில் இருப்பவர்) நமது சமயத்தில் இன்று வரை பெரிதும் புகழப்படுகின்றனர்.

புறஅறிவியல் அடிப்படையில் பார்த்தோமானால், கங்கை நீரில் கரைந்துள்ள அபரிமிதமான உயிர்வளியும், வசிக்கும் கோடான கோடி பாக்டீரியா உண்ணிகளும், அந்நீரில் மூழ்கும் போது உடலுக்கு அளவிலா நன்மையைத் தருகிறது. #அகஅறிவியல் (ஆன்மிகம்) அடிப்படையில் பார்த்தோமானால், கங்கையில் மூழ்கும் போது, அந்நீரின் குளிர்ச்சி ஏற்படுத்தும் அதிர்ச்சியின் விளைவால், மூழ்கிய முதல் சில கணங்களுக்கு நாம் நம்முடலில் இருந்து (நாம் உடல் என்னும் எண்ணத்திலிருந்து) தனிப்படுவோம்.  எவ்வளவு படித்தாலும், எவ்வளவு கேட்டாலும் அவ்வளவு எளிதில் உணர முடியாத மெய்பொருளை (நம்மை), மணிவாசகப் பெருமான் பிடித்தது போல், சிக்கெனப் பிடித்துக் கொள்ளலாம். (1) "ஒரு முறை உணர்ந்தால் கூட போதும். பின்னர், அந்நிலையின் மீது அதீத ஈர்ப்பு உண்டாகி மீண்டும் மீண்டும் அந்நிலைக்குத் திரும்பச் செல்வோம்.", என்று அருளியுள்ளார் பகவான் ஸ்ரீரமணர். 🌸🙏

🔥 சிதம்பர மறைபொருளைக் (ரகசியத்தைக்) காணுதல்

இந்த உத்தியும் மிகவும் புகழ் பெற்றது. இதை உலகுக்கு வழங்கியது திருமூலர். 🌸🙏 இவர் மற்றும் இவரது வழி வந்த சில மகான்களின் சமாதித் தொகுப்பே தில்லை திருச்சிற்றம்பலம். பாரதத்தில் உருவாக்கப்பட்ட இறையுருவங்களில் மிகச்சிறந்ததான ஸ்ரீநடராஜப் பெருமான் இத்தொகுப்பைக் குறிக்கும் அடையாளமாவார். கற்றுத் தெளிய திருமந்திரம் தந்து, சிந்தித்து பெருமகிழ்ச்சி கொள ஆடல்வல்லானை அடையாளமாகக் கொண்ட திருமூலர், சிதம்பர மறைபொருள் வழியாக எவ்வாறு நமக்கு நிலைபேறு அளிக்கிறார் என்று பார்ப்போம்.

சிதம்பர மறைபொருள் என்பது ஆடல்வல்லானின் வலப்புறமுள்ள சுவற்றில், கருமை நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பகுதி. இப்பகுதிக்கு தங்க வில்வயிலை மாலை அணிவித்திருப்பர். பட்டுத்துணியால் மூடியிருப்பர். ஒவ்வொரு நாளும் நடக்கும் ஆறுகால வழிபாட்டின் போது, இப்பகுதியின் திரை சடாரென விலக்கப்பட்டு, அகல்ஒளி காட்டுவர். பின், திரையை மீண்டும் மூடுவர். உருவங்களைக் கண்டே பழக்கப்பட்ட நம் மனதிற்கு, உருவமற்ற இக்காட்சி தடுமாற்றத்தை / குழப்பத்தை / அதிர்ச்சியை ஏற்படுத்தும். இதன் விளைவாக நம் மனம் (நாம் இவ்வுடல் என்னும் தனியிருப்பு) நிலை குலைந்து தனது மூலத்தில் (தான் என்னும் இறையில்) ஒடுங்கும் (நிலை பெறும் - நிலைபேறு). இவ்வாறு ஒடுங்குதலே சிதம்பர மறைபொருளைக் காணுதல் எனப்படும். இவ்வனைத்தும் சில கணங்களுக்குள் நடந்தேறும். கூர்மையான அறிவு மற்றும் சரியான பயிற்சி இல்லையெனில், நமது தனியிருப்பு - மனம் - மீண்டும் வெளிப்பட்டு விடும்.

மேற்சொன்ன பட்டறிவும் (அனுபவமும்) புதிதாக வருபவர்களுக்குத்தான் கிடைக்கும். அடுத்தடுத்து வருபவர்களுக்கு அதிர்ச்சி / தடுமாற்றம் / குழப்பம் என எதுவும் ஏற்படாது. ஏனெனில், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்து விடுவதால். இது போன்ற சூழ்நிலையில், முதல் முறை நமக்கு கிடைத்தப் பட்டறிவை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து மன ஒடுக்கத்தைப் பெற முயற்சிக்கலாம். இல்லையெனில், திருமூல நாயனாரின் திருமந்திரம், கூத்தப் பெருமானின் திருவுருவம், மேற்சொன்ன சிதம்பர மறைபொருள் விளக்கம் என நமக்குப் பிடித்த / ஏற்ற ஒன்றைப் பற்றி சிந்திக்கலாம்.

🔥 அண்ணாமலையாரை நினைக்க விடுதலை (முக்தி)

இந்தச் சொற்றொடர் "அண்ணாமலையில் சமாதியான #இடைக்காட்டுச் #சித்தர் 🌸🙏 அருளிய உத்தியை நினைக்க விடுதலை" என்று விரியும். சித்தப் பெருமான் வழங்கிய இந்த உத்தி நிலைபேறு வழங்கவல்ல உத்திகளுள் மிகமிக எளிதும் & மிகமிக உயர்ந்ததும் ஆகும். கங்கையில் மூழ்க கங்கை வேண்டும். சிதம்பர மறைபொருளைக் காண தில்லைக்குச் செல்லவேண்டும். ஆனால், எங்கும் செல்லாமல், யார் உதவியும் இல்லாமல் நம் சொந்த முயற்சியால், இருந்த இடத்திலிருந்து, இருக்கும் நிலையிலேயே நிலைபேறு பெற்றுத் தரவல்லது இந்த உத்தி!! 👌🙏

உடல், உலகம் என வெளிமுகமாகச் செல்லும் போது, மனமானது பெருகும்; மற்றும், தன்னையும் மற்றவற்றையும் தனித்தனியாக உணரும். அதே மனம், தான் எனும் தனது மூலத்தை நோக்கி உள்முகமாக திரும்பும் போது (தான் என்ற தன்மையுணர்வை நாடும் போது) அதில் ஒடுங்கிவிடும். "மூலத்தை நோக்கி திரும்புதல்", "தன்மையுணர்வை நாடுதல்" என்பதெல்லாம் என்னவெனில் மூலத்தை / தன்மையுணர்வை / சிவத்தை நினைத்தலாகும். ஏனெனில், மனதின் அடிப்படைத் தொழில் நினைத்தலாகும். (2) மனம் தனித்து நிற்காது. எதையாவது பற்றிக் கொண்டுத்தான் நிற்கும். எதைப் பற்றுகின்றதோ அதுவாகிவிடும். தனது மூலத்தை தொடர்ந்து பற்றுமானால் அடங்கி, ஒடுங்கி இறுதியில் அழிந்தே போகும். தன்மையுணர்வு மட்டுமே மீதமிருக்கும். (சிவத்தைப் பற்றிய மனம் சிவமாகியது என்றும் வேடிக்கையாக கூறலாம்.)

ஆக, "அண்ணாமலையாரை நினைக்க விடுதலை" என்னும் சொற்றொடரில் அண்ணாமலையார் என்னும் சொல்லுக்கு பரம்பொருள் என்று பொருள் கொண்டால், பரம்பொருளை (தன்மையுணர்வை) நினைத்தாலே போதும் நான் இவ்வுடல் என்கிற நரகாசுரனிடமிருந்து விடுதலை கிட்டிவிடும். 👏👏👏👌 எவ்வளவு எளிமையான உத்தி!!! இதைவிட எளிமையான சுலபமான உத்தி இருக்காது என்பது என் கருத்து. 🙏

அண்ணாமலையார் கவர்ந்திழுத்து அணைத்துக் கொண்ட செல்வங்களுள் ஒருவரான பகவான் ஸ்ரீரமணரும், "உன் சுயஉருவை நினைவில் கொள்" என்று பல முறை அறுவுருத்தியிருக்கிறார். பகவானது "நான் யார்?" என்ற தன்னாட்ட உத்தியும், அவரது அருட்தந்தை அண்ணாமலையாரின் உத்தியும் ஒன்று தான். தன்னாட்டம் எனில் தன்னை நாடுதல். நாடுதல் எனில் நினைத்தல். தன்னை நினைத்தல். 👏👏👌

"தொழிலற்ற பரம்பொருளை நினைப்பது என்பது எவ்வாறு அப்பரம்பொருளாக ஆவதாகும்?", என்ற கேள்வி எழலாம்.  மனம் எதைப் பற்றுகின்றதோ அதுவாக ஆகிவிடும் என்று ஏற்கனவே பார்த்தோம். பகவான் ஸ்ரீரமணரின் விளக்கம்: உள்ளதை (உள் - பரம்பொருள்) உணர உணர்வு வேறு இல்லையாதலால், உள்ளதை உணரும் (நினைக்கும்) உணர்வே (நினைவே) உள்ளதுமாகும்.

கைலாயத்தில் உறையும் மகானால் 🌸🙏 "அம்மையே" என்று அழைக்கப் பெற்ற பேரு பெற்ற காரைக்கால் அம்மையாரும் 🌸🙏 இறைவனிடம் வேண்டுவது, "மீண்டும் பிறக்கின், உன்னை என்றும் மறவாமை வேண்டும்". பேயார் வேண்டும் மறவாமை என்னவெனில் எக்கணமும் தன்மையுணர்வை (சிவத்தை) நினைவில் கொள்வதாகும்!

🔥 மலை / நதி வலம் வருதல்

தன்னாட்ட உத்திக்கு அடுத்ததாக பகவான் ஸ்ரீரமணர் அறிவுருத்தியது அண்ணாமலையை வலம் வருதல். இன்று அண்ணாமலை வலத்தின் பெருமை பற்றி எழுதுபவர்கள் மூலிகைக் காற்று, சித்தர்கள், அடிக்கொரு லிங்கம் போன்ற இரண்டாம் தர தகவல்களைத் தான் பெரிதுபடுத்திக் காட்டுகிறார்களே அன்றி மலைவலம் வருதலின் அடிப்படை நோக்கமாகிய உடல் மரத்தல் என்பதைப் பற்றி எழுதுவதேயில்லை. "ஒரு நிறைமாத பேரரசி நடை பயில்வதைப் போல மலைவலம் வர வேண்டும்", என்று மலை / நதி வலம் வரும் உத்தியை விளக்குகிறார் பகவான் ஸ்ரீரமணர். வெட்டிக் கதைகள் பேசாமல், கவன ஆற்றலைக் கண்டபடி சிதறவிடாமல், பகவான் சொல்வது போல் நடந்து வந்தால், அடி அண்ணாமலை திருக்கோயில் வருவதற்குள் உடல் மரத்திருப்பதை உணரலாம். "உடல் மரத்திருக்கிறது" என்று உணர்வது யார் / எது? நாமே. "நாம் வேறு. நம் உடல் வேறு." என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும். இந்த பட்டறிவை இனி மறக்காமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நினைவில் நிறுத்தினால் போதும். ஆரம்பத்தில் முயற்சியுடன் அடையப் பெறும் இந்நிலை, ஒரு சமயத்தில் முயலுதல் இல்லாமலேயே அடையப்படும். இதுவே நம் இயல்பு நிலை என்பதை உணருவோம். இத்தனைப் பிறவிகளும், இத்தனைப் பாடுகளும் மறந்த நம் இயல்பை மீண்டும் அடையவே என்பதையும் உணருவோம். பிறகென்ன? தன் மேல் களி நடனம் புரியும் கூத்தப் பெருமானை திரும்பி வணங்கும் முயலகனைப் போல் நாமும், உயிர்களின் மறதியைக் கொண்டே அண்டம் என்ற தனது கூத்தினை நடத்தும் இறைவனின் திறத்தைக் கண்டு வியந்து, அவரது கூத்தைக் (நமது வாழ்வை) கண்டு களித்துக் கொண்டிருக்க வேண்டியது தான்!! 🌸🙏😍

பகவான் அறிவுருத்திய இந்த அண்ணாமலை வலம் வரும் உத்தி மலைகள், நதிகள், மானசரோவர் போன்ற நீர் நிலைகள், பெரும் சுற்றுப் பாதைகளைக் கொண்ட திருத்தலங்கள் என அனைத்து ஆன்மிக மையங்களுக்கும் பொருந்தும் - திருக்கயிலாய வலம் நீங்கலாக (குறைவான உயிர்வளி & ஆபத்தான பாதை என்பதால்). இந்த உத்தியை சரியாக பயிற்சி செய்து கொண்டு வந்தால், காலப்போக்கில் எல்லா வேலைகளும் மலைவலம் வருவதற்கு சமமாகிவிடும். இறையுணர்வைப் பெற - நமது இயல்பை உணர - தனியாக ஓர் இடமோ, பயிற்சியோ தேவைப்படாது.

🔥 பால்குடம் சுமத்தல்

மேற்சொன்ன மலைவலம் வருதல் நடக்கத் தெரிந்த குழந்தைகளுக்கு எனில், இந்த உத்தி நடை பழகும் குழந்தைகளுக்கானது. ☺ "நிறைமாத பேரரசி போன்று நட", என்று பகவான் அரிச்சுவடிப் பாடம் நடத்தினாலும், சிலர் ஏவுகணை கணக்காக சுற்றி வருவார்கள். 😁 "கவன ஆற்றலை சிதறவிடாமல் உன் மீதே திருப்பு", என்றாலும், அஷ்டாவதானிகள் தசாவதானிகள் தோற்கும் அளவிற்கு எல்லா கதைகளும் பேசிக்கொண்டு வருவர். 😂 இது போன்றவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் பால்குடம் சுமத்தல். தலையில் எடை ஏறியவுடன், தானாகவே வேகம் குறைந்துவிடும். கவனமும் சிதறாது. போதாதற்கு மஞ்சள் உடை, மேளதாளம், இவைகளால் ஏற்படும் கவனஈர்ப்பு என அனைத்தும் சேர்ந்து பொறுப்பும் சிரத்தையும் கூடிவிடும். உடலுணர்வு உறுதியாக இழக்கப்படும். ஆனால், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே ஈடுபடுவதால், தன்மையுணர்வு என்னும் அரியபொருள் கிடைத்தும், அதை சிக்கென பிடிக்கத் தெரியாததால், பெருமிதம், ஆணவம் என எதிர் விளைவுகளில் முடிந்துவிடுகிறது. இதுவே செய்வதைத் தெரிந்து செய்தால், நீர்குடம் சுமந்தாலே போதும்! அதாவது, தினப்படி செய்யும் தொழிலே தெய்வமாகி விடும்!!

🔥 தீ மிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல், காவடி தூக்குதல், தலையில் தேங்காய் உடைத்தல், தலையில் அரைத்த மிளகாய் பூசுதல், கொதிக்கும் எண்ணெய்யில் அப்பம் சுடுதல் மற்றும் சில உத்திகள்

இவையெல்லாம் தமிழரோடு மட்டுமே, அதிலும் பெரும்பாலும் சிறுதெய்வங்களை (முருகப் பெருமான் சிறுதெய்வமல்ல) வழிபடுவோரோடு மட்டுமே, அடையாளப்படுத்தப்படும் உத்திகளாகும் (3). இந்த உத்திகள் பயம், வலி, அதிர்ச்சி, சூடு, எரிச்சல் போன்றவற்றால் சிதறிக் கிடக்கும் நமது கவன ஆற்றலை குவித்து, நம் மீதே திருப்பி, நம்மை நம் உடலிலிருந்து சில மணித்துளிகள் (தீ மிதித்தல், தேங்காய், மிளகாய், எண்ணெய்) முதல் சில மணி நேரம் (தீச்சட்டி, அலகு, காவடி) வரை விடுபடச் செய்யவல்லவை. ஆனால், பால்குட உத்தியில் பார்த்தது போல் இங்கும், எதற்கு செய்கிறோம் என்று தெரியாமலே ஈடுபடுவதால் எதிர் விளைவுகள் தான் மிஞ்சுகின்றன. சில சமயம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று வள்ளுவம் கூறுவது போல மேற்சொன்ன எளிதான வழிகள் இருக்க இந்தக் கடினமான மற்றும் கொடிய (தேங்காய், மிளகாய் & எண்ணெய்) வழிகள் தேவையற்றது.

இது போன்று இன்னும் பல உத்திகள் இருந்திருக்கக் கூடும் (எ.கா.: கபாலிகம்). காலப்போக்கில் அவை வழக்கொழிந்து போயிருக்கலாம். அல்லது, வேரறுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒன்று மட்டும் உறுதி: அவையும் நமது இயல்பை - தன்மையுணர்வை / சிவ தத்துவத்தை - நாம் உணரச் செய்யக் கூடியதாகத் தான் இருந்திருக்கும். இவ்வாறு வழக்கிலுள்ள மற்றும் வழக்கறுந்த உத்திகளை வைத்தே தமிழரின் சமயம் என்னவென்று உறுதியாகச் சொல்லலாம்: உடலுணர்வை ஒழித்து மீண்டும் சிவமாவதே தமிழரது சமயமாகும்!! 👏👏 இதிலிருந்து தோன்றியவை தாம் இன்று உலகிலுள்ள அனைத்து மதங்களும். "எல்லா வழிகளும் சம்மதம்",  "எல்லா வழிகளும் ஓர் இறையையே அடைய உதவுகின்றன" போன்ற நம் பெரியோர்களின் சொற்கள் குறிப்பிடும் வழிகள் (மதங்கள்) மேற்சொன்ன கங்கை முதலான வழிகளைத் தாம். வட பாரத மொட்டை (சமண & பெளத்த), பரங்கி, மிலேச்ச, நாம வழிகளை அல்ல!! ✊👊👊👊💪

🔥 ஓர்தல்

கனவு காண்பவனிலிருந்து கனவு வேறில்லை. இது போன்றே காணும் உலக காட்சிகளிலிருந்து நாம் வேறல்ல. வேறு போன்று தோன்றுவதற்கு காரணம் நமது தன்மறதியே. நமது சுயத்தை நாம் மறந்துவிடுவதால், நாம் வேறாகவும் காணும் உலகை வேறாகவும் உணர்கிறோம். இறைவனின் இத்திருவிளையாடலை அநேகத்துவம் என்று எடுத்துக் கொண்டால், அனைத்தையும் ஒன்றாக, நாமாக, உணர்வதை ஏகத்துவம் என்று அழைக்கலாம். இந்த ஏகத்துவத்தை அடையும் முயற்சியை ஒர்தல் என்றும் அழைத்திருக்கிறார்கள் நமது மூதாதையர். ஓர்தல் = ஒருவனாகுதல். (சென்னைப் பல்கலையின் தமிழ் அகராதியில் ஓர்தல் என்ற சொல் இல்லை. இணையத்தில் தேடினால், உணர்தல், தெளிதல், அறிதல் என்று பொருள் வருகிறது.)

ஓர் என்பது உரிச்சொல். உயிரெழுத்துக்களைக் கொண்டு தொடங்கும் ஒருமைப் பெயர்களுக்கு முன்னர் வரும் (எ.கா.: ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி...). ஓர் என்பது உயிரையும், ஒரு என்பது உயிர்மெய்யையும் குறிக்கும். இவ்வுலகு உயிர் + மெய்யால் ஆன கலவை. இக்கலவை தோற்ற மாத்திரமே. இதுவும் உயிரிலிருந்தே வெளிப்படுகிறது. எனவே அனைத்திற்கும் மூலமான உயிர் நிலைக்கு திரும்புதலை ஓர்-தல் என்று அழைத்திருக்கிறார்கள்!! (ஏன் அன்னைத்தமிழ் நிறைமொழி என்றழைக்கப்பட்டது என்பதை உணர இவையெல்லாம் சிறு சான்றுகள். தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. சமய படையெடுப்புக்களுக்கு முன்னர் அதுவே உலகின் இறைமொழியும் ஆகும்!! 👏👌👍💪)

மேலே நாம் பார்த்த அனைத்து உத்திகளையும் ஓர்தல் என்ற கணக்கில் சேர்க்கலாம். ஆனாலும், இங்கே பேசப்படும் உத்தியை மட்டுமே ஓர்தல் என அழைத்துள்ளனர். உத்தியை பார்க்கும் முன் இச்சொல் இன்று எவ்வாறு மருவியுள்ளது என்று பார்ப்போம்.  பேச்சு வழக்கில் ர் & ற் ஆகியவை த்-ஆக மாறும். காற்று = காத்து, நேற்று = நேத்து. எனில், ஓர்தல்...? 😯

உயரிய ஆன்ம அறிவை வழங்கக் கூடியதாகக் கருதப்பட்ட ஒரு செயல், இன்று எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்த செயலாகிவிட்டது. அதைக் குறிக்கும் சொல்லும் இன்று உச்சரிக்க முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது. 😑 இச்சொல்லும் இன்று கீழ்தட்டு மக்களிடம் மட்டுமே வழக்கில் உள்ளது (கீழ்தட்டு, மேல்தட்டு என்பதற்கு பணம், மெக்காலே / பெண்டிங்க் கல்வி, ஆங்கிலம், உயர் பதவி போன்றவை அளவு கோள்கள் அல்ல).

இந்த உத்தி அன்றிருந்த அனைத்து கலாச்சாரங்களிலும் இடம் பெற்றிருந்தது. எகிப்தில் இந்த சேவையை வழங்குவதற்கென ஆலயங்களில் பெண்கள் இருந்துள்ளனர்! இந்த உத்தியில் பல ஆராய்ச்சிகள் (ஆண்களுக்கு, பெண்களுக்கு எந்த நிலையில் என்ன நடக்கிறது என்பது போன்ற) நடந்துள்ளன. பல உச்சங்களையும் தொட்டுள்ளனர். இவர்களில் எனக்குத் தெரிந்து 2 தமிழ்நாட்டு மகான்களும் உள்ளனர். 🌸🌸🙏🙏 இவர்களது சமாதித் தலங்கள் இன்றும் பெரும் புகழ் பெற்று விளங்குகின்றன (ஊர் பெயர்களை வெளியிட விரும்பவில்லை). வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் வாழ்ந்த ஒரு பெளத்த மகானும் இவ்வுத்தியைக் கையாண்டிருக்கிறார். அப்ரகாமிய மதங்களில் ஒன்றில் அதன் நிறுவனர் காலத்திலேயே இந்த உத்தி முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எதற்கும் ஒரு எதிர் விளைவு உறுதியாக உண்டு. அதிலும் இது போன்ற உடலுறவு உத்திகளில் சொல்லவேத் தேவையில்லை. அப்படி ஏற்பட்ட ஒரு தவறான எதிர்விளைவு தான் வைணவர்களின் நாமச்சின்னம். (இது பற்றி பின்னொரு இடுகையில் பார்க்கலாம்).

இப்பொழுது உத்தியை பார்ப்போம். உடலுறவு முடியும் தருவாயில் ஆணிடமிருந்து விந்துநீர் வெளியேறுகிறது. இந்நீர் வெளியேறும் சில வினாடிகளுக்கும், வெளியேறியவுடன் சில வினாடிகளுக்கும் ஆண் தனது உடலுணர்வை இழக்கிறான். உடலுணர்வு நீங்கியதால், "தான்" எனும் இறை (சிவ) தத்துவமாக ஒளிர்கிறான். ஒரு சில வினாடிகளே கிடைக்கும் இவ்வரிய மெய்யறிவை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மீண்டும் பேயோடு சேர்ந்து ஆட வேண்டியது தான்!! (பேய் - காளி - எண்ணங்கள், உலகம், ...) 😂😂

இந்த பட்டறிவெல்லாம் (அனுபவமெல்லாம்) ஆணுக்குத் தான் என்பது பெரும்பாலான மகான்களின் கருத்தாகும். மத்வம் மட்டும் மாறுபடுகிறது என்பது என் கருத்து (அவர்களுக்குள்ளும், உடலுணர்வை பெண் எப்போது இழக்கிறாள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்கிறது).

இவ்வாறு அன்றாடம் இல்லற வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வைக் கொண்டே மெய்யறிவு பெற முயற்சித்த பண்டைய உலகம் எங்கே? வெறும் உணர்ச்சி எழுச்சிக்காக இனணயத்தில் அதைப் பற்றி அதிகம் தேடும் இன்றைய உலகம் எங்கே? மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. அதாவது, முன்நடத்திச் செல்பவர்கள் எவ்வாறோ, அவ்வாறே பின் செல்பவர்களும். அன்று உலகின் முன்னே நடந்தது நமது மூதாதையர்கள்! 👏👍💪🙏 இன்று நடப்பது பரங்கியர்கள்!! 👿👹☠✊👊👎

மேலே நாம் பார்த்த உத்திகளில் "நினைக்க விடுதலை தரும் அண்ணாமலை" என்ற உத்தியைத் தவிர மீதமனைத்தும் விருந்து சாப்பாடு போன்றது. நினைக்க... என்ற உத்தியையும் பழக ஒரு பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும். எனில், எல்லோருக்கும், எல்லா காலங்களுக்கும், எல்லா இடங்களுக்கும் ஏற்றது... உடையாரை வணங்கும் போது தன்னிச்சையாக மூடும் கண்களை மூட விடுவது தான்!

🏵 கண்களை மூட விடுங்கள்
🌼 அன்னை யசோதை கண்டவாறு கண்ணபிரானைக் காணுங்கள்
🌺 கண்ணபிரானைக் காணுவது என்பது கண்ணபிரானாக ஆவதே
🌻 நாம் நாமாக இருப்பதே

🌸 கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌸🔥🙏

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

குறிப்புகள்:

1. மூழ்கிய முதல் சில கணங்களுத் தான் இவ்விளக்கம் பொருந்தும். பின்னர், உடல் அக்குளிர்ச்சிக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்ளும். அதன் பின்னர், "கங்கையில் வாழும் உயிரினங்களுக்கும் விடுதலை (முக்தி) கிடைக்குமா?", என்ற "அந்நிய சக்திகள் வீசியெறியும் பொரைகளுக்காக தம் மூதாதையரின் அரிய செல்வங்களின் மேலே சாணி வீசும் கருங்காலி போலி திராவிடவியாதிகளின்" கேள்விக்குப் பதில் தான் கிடைக்கும்!! 😁

"குளிர்ந்த நீர் தான் அடிப்படைத் தேவையெனில், குளியல் தொட்டியில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் மூழ்கினால் போதாதா? கங்கைக்குத் தான் செல்லவேண்டுமா?", என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். அவர்களுக்கு எனது பதில் கேள்வி, "எங்கு அமர்ந்து உண்டாலும் உணவு செரிக்கும் என்பதற்காக, கழிவறையில் அமர்ந்து உண்பீர்களா?" 😲😰😎👊

ஒரு வேளை இந்த உத்தி பரங்கியர்களுக்குத் தெரியவந்தால்... ஆத்மா ஆதம் ஆனது போல், ஜீவன் ஏவாள் ஆனது போல் இந்த உத்தி என்னவாகியிருக்கும் என்று சிந்தித்ததன் விளைவே இந்த இடுகை ... https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/4VUC7xTdgWv 😛😜😝

2. நமது கைபேசி, கணினி போன்றவற்றைக் கொண்டு பலத் தகவல்களைப் பெறுகிறோம். நமக்கு வேண்டுமானால் அவை பலவித தகவல்கள். ஆனால், அந்தக் கருவிகளின் இயக்ககங்களுக்கு அவை 0 & 1 என்னும் இரண்டே எண்கள் தாம். இவ்வாறே நம் மனதும் இயங்குகிறது. பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல், உணருதல், சிந்தித்தல் என பல தொழில்களை நாம் புரிந்தாலும், நம் மனதின் அடிப்படைத் தரவு நினைவு / எண்ணம் தான்.

3. நமது தீ மிதித்தல் உத்தியை வைத்து சில பரங்கி அமெரிக்கர்கள் பல கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர். 🤑🤑🤑 ( https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/QXVH2DvPLJa )

இந்தப் பரங்கி இனத்திற்கு சில இயல்புகள் உண்டு. தனித்து வாழ முடியாது. 😛 மற்றவர்களின், குறிப்பாக கருப்பு மற்றும் மஞ்சள் இனத்தவரின், உழைப்பில் வாழும். 😜 ஒட்டுண்ணியாக வாழ்ந்தாலும், கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும். 😝 எதையும் அரைகுறையாக புரிந்து கொள்ளும்.🙃  அதுவே சரி என்று உலகின் தலையில் கட்டிப் பணம் பார்க்கும். இவ்வினம் புகுந்த நாடு, தொழில், துறை என அனைத்தும் நாறிப்போகும். 💩 சுருங்கச் சொன்னால், பரங்கிகள் இவ்வுலகை அழிக்க வந்த பீடைகளாகும் 😠😡 (பீடை - ஒட்டுண்ணி). இந்த விளக்கம் பரங்கி மனிதர்களுக்கு மட்டுமல்ல. அவை வாழுமிடத்தில் உள்ள மாடு, புழு, தேனீ போன்ற உயிர்களுக்கும் பொருந்தும். அங்கிருந்து நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மாடுகள், புழுக்கள், தேனீக்களால் என்ன விளைவுகள் இங்கு ஏற்பட்டுள்ளன என்பது, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு, அனைவரும் அறிந்ததே.

Thursday, August 16, 2018

திருவரங்கம் மூலவர் அணியும் சாலக்கிராம மாலை அகற்றப்பட்டு விட்டதாம்! 😁



#திருவரங்கம் மூலவர் அணியும் சாலக்கிராம மாலை அகற்றப்பட்டு விட்டதாம்! மூலவரின் தோற்றத்தில் மாற்றங்கள் தெரிகிறதாம்!! உற்சவர் நம்பெருமாளும் மாறிவிட்டதாம்!!! புருஷோத்தம பெருமாள் காணவில்லையாம்!!!! இந்தப் புகார்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய நிலையில் ஐயர்கள் (1). இந்த நிலைக்கு காரணமென்ன?

இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிலைகள் தான் கடவுள் என்ற மாயப் போர்வையை பல நூற்றாண்டுகளாக தூக்கிப் பிடித்ததும், ஒவ்வொரு சீவனும் இறைவனை அடைய அதனதன் சொந்த முயற்சி ஒன்று தான் வழி என்ற உண்மையை மறைத்து தாங்கள் நடத்தும் வழிபாடு தான் வழி என்று கோயிலை பொருளாதாரத்தோடு இணைத்ததும் தான் காரணங்கள். (2)

உண்மையை உணர்ந்த அன்பர்களுக்கு சாலக்கிராம மாலை, மூலவரின் தோற்றம் ... என எவையும் ஒரு பொருட்டல்ல. அவை இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் வணங்க வருவது மூலவரின் கீழ் சமாதியாகியிருக்கும் #சட்டைமுனி #சித்தர் பெருமானைத்தான். 🌸🔥🙏 சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளத்தின் (#ஸ்ரீரங்கநாதர்) ஒப்பனை, அமைப்பு சற்று மாறுபட்டதால் சமாதியில் இருக்கும் பெருமானின் நிலை மாறப்போவதில்லை. அடையாளத்திற்கு செய்யப்படும் எதுவும் பெருமானைப் போய் சேரப்போவதுமில்லை. எதுவுமே செய்யாவிட்டாலும் அவர் குறைந்து விடப்போவதில்லை.

🌺🌺🌺

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி...

அது ஒரு குக்கிராமத்திற்கு அடுத்த நிலையிலுள்ள கிராமம். அங்கு ஒரு பலசரக்கு கடையில் நான் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 40 வயது தக்க கிராமத்தவர் வந்தார். அம்ருதாஞ்சன் வேண்டுமென்று கேட்டார். கடைக்காரர் அம்ருதாஞ்சன் ஸ்ட்ராங் என்ற பொருளைக் கொடுத்தார். கிராமத்தவர் அதை நான்கு பக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு, திறந்தும் பார்த்துவிட்டு, "இது மஞ்சளா இல்ல. வேணாம்.", என்று திருப்பிக் கொடுத்தார். கடைக்காரர், "எல்லாம் என் தலையெமுத்து" என்ற பார்வையோடு, கிராமத்தவரிடமிருந்து ஸ்ட்ராங்-ஐ திரும்ப பெற்றுக் கொண்டு, வெறும் அம்ருதாஞ்சனைக் கொடுத்தார். கிராமத்தவரும் ஏதோ பெரிய மோசடியிலிருந்து தப்பியது போல பெருமிதத்துடன் சென்றார். கடைக்காரர் சங்கடத்துடன் என்னைப் பார்த்து புன்னகைக்க, நானோ "மஸ்தானின் டிஜிட்டல் இந்தியா வித்தைகளால் பாதிக்கப்படாத மனிதர் ஒருவர் உண்டெனில் அவர் இவரே" என்ற பேருண்மை விளங்கப் பெற்ற பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தேன்!! 😁

இந்த நிகழ்வில் வரும் கிராமத்தவர் போன்று தான் நம்மில் பலர் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை இருக்கின்றோம். இறைவன், கோயில், வணங்குதல், வழிபாடு போன்றவற்றின் உண்மை பொருள் தெரியாமல், இறை உருவத்திற்கு ஒப்பனை நன்றாக செய்யப்பட்டிருக்கிறதா? ஐயர் பலமாக, தெளிவாக, நீண்ட நேரம் மந்திரம் சொன்னாரா? இறை உருவத்திற்கு அருகில் செல்ல தனக்கு (சிலருக்கு: தனக்கு மட்டுமே) வாய்ப்பு கிடைத்ததா? இன்று அக்கார அடிசில் கிடைக்குமா? என்று கண்காணிப்பாளராக, நீதிபதியாக, உளவாளியாக, சாப்பாட்டு ராமனாக... சென்று வருகிறோமே தவிர, கோயிலுக்குச் சென்று வருவதன் உண்மையான குறிக்கோள் இறையுணர்வைப் பெறுதல் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத கேவல நிலையில் (3) தாம் நாம் உள்ளோம். யாரும் எடுத்துச் சொன்னாலும் நாம் கேட்கப்போவதில்லை. அம்ருதாஞ்சன் என்றால் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும்! 😂

🌷🌷🌷

68 வருடங்களுக்கு முன் சமாதியான #பகவான் #ஸ்ரீரமண மகரிஷிகளின் சமாதித் தலத்திற்குச் செல்வோம். 🌸🔥🙏 பகவானைப் பற்றி அறிந்த அன்பர்கள் எப்படி வணங்குகிறார்கள் என்று கவனிப்போம். பகவானின் சமாதி அடையாளத்திற்கு (ஸ்ரீரமணேஸ்வர லிங்கம்) எப்படிப்பட்ட ஒப்பனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. தலம் அசுத்தமாக இருந்தால் மட்டுமே அவர்களது முகத்தில் வருத்தம் தெரியும். மற்றபடி, ஒப்பனை, ஓதுதல் என எதற்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை வணங்குதல் என்பது மரியாதை செலுத்துதல். உரிய மரியாதை செலுத்தி விட்டு, கிடைத்த இடத்தில் அமர்ந்து பகவான் உணர்ந்து உலகுக்குத் தெரிவித்த தன்னாட்டப் பயிற்சியை மேற்கொள்வர். அல்லது, ஏதாவது படித்துக் கொண்டிருப்பர். அல்லது, மூத்த அன்பர் யாரேனும் பகவானது அறிவுரைகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால், அதைக் கேட்டுக் கொண்டிருப்பர். பகவானைப் பற்றி சற்றும் தெரியாத வெளியூர்/வெளிமாநில அன்பர் எவரேனும் வந்து வணங்கும் போது, அது பகவானின் சமாதி என்ற அறிவு இருப்பதால், அவரும் பாரம்பரிய முறையில் வணங்கி விட்டுச் செல்வார். வணங்கும் போது பகவானை வணங்குகிறோம் என்ற உணர்வு அவரிடம் இருக்கும்.

இனி, திருவண்ணாமலையின் பெரிய கோயிலான #திருஅண்ணாமலையார் கோயிலுக்குச் செல்வோம். இதுவும் ஒரு மகானின் சமாதியே. மூல அடையாளமான ஸ்ரீஅருணாச்சலேஸ்வர லிங்கத்தின் கீழ் சமாதியாகி இருப்பது #இடைக்காட்டு #சித்தர் ஆவார். 🌸🔥🙏 ஆனால், பெரும்பாலானோர்க்கு இவ்வறிவு இல்லை. ஆகையால், ஜடாமுடி, கங்கை, பிறைச் சந்திரன், புலித்தோல், திரிசூலம் ஏந்திய சிவபெருமான் என்று எண்ணிக் கொண்டு, வணங்குதல் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டு செல்வர். 😀 இதுவே சமாதியில் இருப்பது இடைக்காட்டு சித்தர் என்ற உண்மைத் தெரிந்திருப்பின், குறைந்தது வணங்கும் தொழிலாவது சரியாக நடக்கும்.

அடுத்தது, சென்னை #திருவொற்றியூரில் உள்ள #பட்டினத்தாரின் திருக்கோயிலுக்குச் செல்வோம். 🌸🔥🙏 இது அவரின் சமாதித்தலம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இங்கு வரும் அன்பர்கள் வணங்கும் போது பட்டினத்தாரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்குவர். அடுத்தது, அருகிலுள்ள பழம்பெரும் திருத்தலமான #திருஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வோம். இதுவும் ஒரு பெரும் ஞானியின் (சிவனின்) சமாதித்தலமே. 🌸🔥🙏  பன்னெடுங்காலத்திற்கு முன்னர் சமாதியானவர் என்பதனால் தான் ஆதி (பழமை, முதல்) என்ற அடைமொழி சேர்ந்துள்ளது. இவர் சமாதியான பின், இவரது உடலைச் சுற்றி புற்று வளர்ந்திருக்கும். புற்று வளர்ந்த பின்னரே இச்சமாதி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். இவரைப் பற்றிய விபரம் ஏதும் கிடைக்காமல் போயிருக்கும். ஆகையால், பொதுவாக புற்றை இடமாகக் கொண்ட ஞானி / சிவன் என்ற பொருளில் #புற்றிடங்கொண்டார் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எண்ணற்ற அன்பர்கள் தவமியற்றி நிலைபேறு பெற்ற தலம். பல அருளாளர்கள் வந்து சென்ற தலம்.  🙏🙏🙏

அருகிலுள்ள பட்டினத்தாரின் சமாதியை வணங்கும் போது மட்டும் பட்டினத்தாரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்கும் அன்பர்கள், இங்கு வந்து வணங்கும் போது மட்டும் ஜடாமுடி, கங்கை, பிறைச் சந்திரன்... என்று தங்களை ஏமாற்றிக் கொள்வர். ஏனெனில், இது ஒரு ஞானியின் (சிவனின்) சமாதி என்ற உண்மை தெரியாததால்!!

இனி, திருவரங்கத்திற்குச் செல்வோம். திருக்கோயில் வளாகத்தினுள்ளேயே #ஸ்ரீராமானுஜர் எரியூட்டப்பட்ட தலமுள்ளது. இங்கு வந்து வணங்கும் அன்பர்கள் ஸ்ரீராமானுஜரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்குவார்கள். இறுதியாக, திருவரங்க மூலவரைக் காண்போம். ஸ்ரீரங்கநாதர் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பது சட்டைமுனி சித்தர் ஆவார். இவ்வுண்மைத் தெரியாததால் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் என்று யாரையோ கற்பனை செய்து கொண்டு, உடையவரை நன்றாக பார்ப்பது (சிறு வயதிலிருந்து "சாமிய நல்லா பாரு" என்று தானே வளர்த்தார்கள்! 😁) (4), வேண்டுவது, ஒப்பந்தம் செய்வது போன்ற தொழில்களில் சிலவற்றை செய்து விட்டுக் கிளம்புவர். இதுவே உண்மைத் தெரிந்திருந்தால், சித்தரை வணங்குவர். அவரது பாடல்களில் உள்ள கருத்துக்களைப் பற்றி சிந்திப்பர். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (இவ்வெண்ணமே #நரகாசுரன்; இதன் அழிவே #தீபாவளி) விட்டொளிக்க முயற்சிப்பர். இத்தவறான எண்ணம் அழிய, என்றும் அழியாத மாறாத சுயஒளி கொண்ட உள்ளிருக்கும் உண்மை உணரப்படும். இவ்வுண்மைக்கே இறை(வன்) என்று பெயர். இவ்வுணர்வே இறையுணர்வு எனப்படும். இவ்வுணர்வு நிலைபெறும் போது நிலைபேறு எனப்படும். இந்நிலையின் வேறு பெயர்கள் ஞானம், முக்தி, சிவப்பதம் மற்றும் பல. இவ்வுணர்வை தற்காலிகமாகவாவது பெறுவதே திருத்தலங்களுக்குச் சென்று வருவதன் அடிப்படை நோக்கம்.

புகழ் பெற்ற மகிமை வாய்ந்த சில உடையவர்களின் பெயர்களைப் பார்ப்போம். ஆலங்காட்டு அப்பர், காளத்தி அப்பர், நெல்லையப்பர், முல்லைவன நாதர், வைத்தீஸ்வரர், கபாலீஸ்வரர், ஏகாம்பரநாதர் மற்றும் வீரட்டானேஸ்வரர். 🙏🙏🙏 உடையவர் பெயரிலேயே சமாதியான ஞானியைப் பற்றிய குறிப்பு இருக்கும். இன்ன பகுதியில் இருப்பவர், இன்ன இனத்தால் வணங்கப்படுபவர், இன்ன திருச்செயல் புரிந்தவர் என தேவையான தகவல்களை மட்டும் பதிவு செய்திருப்பார்கள். ஆனால், எல்லா ஞானிகளையும் ஒருவராக -  சிவனாக - சிவமாக - சிவம் எனும் தத்துவமாக - நம்மை வணங்க வைத்திருப்பர்! ஏன்?

மீண்டும் பகவான் ஸ்ரீரமணரிடம் வருவோம். ஒரு அன்பர் பகவான் மீது அதீத அன்பு, மரியாதை வைத்து சதா தொழுது கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதன் விளைவாக அவருக்கு நிலைபேறு (ஞானம்) கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு விளைவு உறுதியாக ஏற்படும்: பகவானது உருவத்தை, குணங்களைப் பெறுவார்!! இதற்கு ஆரியத்தில் #சாரூபம் என்று பெயர். பகவானைப் போன்ற உருவத்தைப் பெறுவதற்காகவா அந்த அன்பர் இவ்வளவு பாடுபட்டிருப்பார்? யாரை வணங்குகிறோம் என்று தெரியாமல் வணங்கினால் முட்டாள்தனத்தில் முடிகிறது. தெரிந்துகொண்டு ஆழ்ந்து வணங்கினால் சாரூபத்தில் முடிகிறது. .. இதற்கு விடையாகத் தான் நம் முன்னோர் ஞானியைப் பற்றிய குறிப்புகளை குறைவாகவும் (முட்டாள்தனம் விளையாத அளவிற்கு), வணங்குவதற்குப் பொதுவான தத்துவங்களையும் (சாரூபத்தில் முடியாமல், சாயுச்சியத்தில் முடியும் வண்ணம்) விட்டுச் சென்றுள்ளனர்! 👏👌👍😍

எடுத்துக் காட்டாக திருவரங்கநாதப் பெருமானைக் காண்போம். இவ்வடையாளத்தின் கீழ் சமாதியாகி இருப்பது சட்டைமுனி சித்தர் என்று பார்த்தோம். முதலில் நாம் மரியாதை செலுத்த வேண்டியது இந்த சித்தருக்கே. அடுத்து, நாம் சிந்திக்க வேண்டியது சித்தர் காட்டிய வழியை & வெளிப்படுத்திய உண்மைகளை (5). இவைப் பற்றி தெரியாவிட்டால், சிந்தனைப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டியது மூலவர் திருவரங்கநாதரின்  திருஉருவத்தை. இது பற்றியும் ஏதும் தெரியாவிட்டால், இத்தலத்திற்கு வந்து சென்ற அருளாளர்கள், அவர்கள் காட்டிய வழிகளைப் பற்றி சிந்திக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு ஏற்கனவே ஞானாசிரியர் அமைந்திருப்பின், அவர் காட்டிய வழியைப் பற்றி சிந்திக்கலாம்; பயிற்சி மேற்கொள்ளலாம். இவையெல்லாம் ஆரம்ப நிலைகள் தாம். ஒரு நிலைக்கு மேல் எங்கு சென்றாலும் ஒரு இறையையே வணங்குவோம். இறுதியில் அவ்வோர் இறையும் நாமே என்று உணர்ந்து, இவ்வண்ட காட்சிகள் அரங்கேறும் அரங்கமாக - அரங்கம் எனும் நாதனாக - அரங்கநாதனாக அறிதுயிலில் கிடப்போம்! 😍

🌹🌹🌹

இதுவரை நாம் பார்த்தது திருத்தலத்திற்கு வரும் அன்பர்களைப் பற்றி. இனி ஐயர்களின் பங்கைப் பார்ப்போம்.

இவர்களது முக்கிய பணி, தங்களது செயல்பாடுகளால் (இறையுருவை சுத்தம் செய்து, ஒப்பனை செய்து, சிந்தனையைத் தூண்டும் செய்யுள்களை ஓதுதல் (மந்திரம் ஓதுதல்; மந்திரம் - சிந்தனையைத் தூண்டும் கருவி)) வரும் அன்பர்களின் மெய் மறக்கச் செய்தல் (அ) பரவசமடையச் செய்தல். (6) இது நடக்க வேண்டுமெனில் அன்பர்களாகிய நமக்கு, ஐயர்களின் செயல்பாடுகளின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். நமக்கு அம்ருதாஞ்சன் மஞ்சள் நிறத்தில் தான் இருக்குமென்று தெரியும். அவர்களுக்கு, வருபவர்கள் மஞ்சள் நிற அம்ருதாஞ்சன் தான் கேட்பார்கள் என்று தெரியும். 😛😜😂

ஐயர்கள் செய்யும் 16 படி வழிபாடு என்பது இறையுருவை ஒரு மாமன்னராக பாவித்து, அனைத்து மரியாதைகளையும் செய்விப்பது. அதிக பொருளும் உழைப்பும் தேவைப்படும் இம்முறை மன்னர்கள், சமூகப் பெரியோர்கள் போன்றோருக்காக உருவாக்கப்பட்டது. பின்னாளில் பொருளாதாரத்தோடு இணைந்துவிட்டது. பல பேருக்கு வாழ்வு அளித்திருக்கிறது. இன்றும் அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று பொருளாதாரம் கோயில்களை நம்பி இல்லை. இன்னும் சொல்லப் போனால், பொருளாதாரத்திலிருந்து நமது திருத்தலங்களைப் பிரிக்கவேண்டும். இதற்குத் தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அன்பர்கள் தவமியற்றவும், தமது சொந்த முயற்சியால் இறையுணர்வைப் பெறவேண்டும் என்ற நோக்கங்களோடு வரவேண்டும். பணிபுரியும் ஐயர்கள் திருத்தலங்களை தூய்மையாகவும், எளிமையாகவும் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அன்பர்களது ஐயங்களை தீர்த்து உதவிடவேண்டும். இவை நடந்தால் பல ஒட்டுண்ணிகள், நச்சுப்பிறப்புக்கள் விலகிச் சென்றுவிடும். "பெருமாளின் சாலக்கிராம மாலை சற்று விலகிவிட்டது" போன்ற தேவையற்ற புகார்கள் எழாது. உண்மையான அன்பர்களிடம் திருத்தலங்கள் சென்று சேரும். "இந்துக்கள் சிலைகளை வணங்குபவர்கள்" என்று கேலி செய்து பிழைப்பு நடத்தும் உலகப் பெருபான்மை மதத்தினருக்கும் (7), சீனாவின் கைகூலிகளான பான்பராக் சட்டைகளுக்கும், வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுத் தருவதின் மூலம் கமிஷன் பார்க்கும் தொழிலை பின்புறமாகவும், "இந்துக் கடவுள்கள் மட்டும் இல்லை" என்று முன்புறமாகவும் தொழில் நடத்தும் சாக்கடை பிறப்புகளுக்கும் பிழைப்பு அறுந்துபோகும். எந்த நோக்கங்களோடு நம் முன்னோர்கள் கோயில் என்னும் அமைப்பை ஏற்படுத்தினரோ அவை நிறைவேறும்.

🌼🌼🌼

இவ்விடுகையில் சைவமும் இல்லை, வைணவமும் இல்லை என்போருக்கு...

வைணவம் என்பது திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடி தாங்காமல், உயிர் பிழைப்பதற்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் அன்றிருந்த பெண்தெய்வ வழிபாட்டு கூடாரத்திற்குள் புகுந்து கொண்ட பெளத்தர்களின் தொழிலாகும். வைணவம் உருபெற ஆரம்பித்தது 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தான். அவர்களது சின்னமான நாமம் உருவானது 12ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் தான். அதற்கு முன்னர் திருப்பதி பெருமாள் முதற்கொண்டு அனைத்து இறையுருவங்களுக்கும் பூசப்பட்டது விபூதி தான். அனைத்து மதங்களுக்கும் முன்னோடியான சைவ சமயத்திற்கு சாத்திரங்கள் ஏன் அனைத்திற்கும் பின்னர் உருவானது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அன்று (சமண பெளத்த வைணவ வைதீக வருகைகளுக்கு முன்பு) நடைமுறையில் இருந்த தமிழரின் சமயமே வேறு என்ற விடை கிடைக்கும். ஒவ்வொரு மகானும் தத்தம் சொந்த அனுபவத்திலிருந்து இறையுணர்வு பெறும் வழிகளை உருவாக்கியிருப்பார்கள். சில மகான்களின் வழிகள் சமூக நடைமுறைக்கு சிறிதும் ஏற்றதாக இல்லாமல் கூடவிருக்கும். அவர்கள் காட்டிய வழிகள் எத்தகையதாக இருப்பினும், அனைவரது குறிக்கோள்களும் ஒன்றேயாகும்: அவர்களை நாடி வருவோர் இறையுணர்வு பெறவேண்டும் (அ) தனியிருப்பை இழக்கவேண்டும். இரண்டும் ஒன்றேயாகும். இவ்வடிப்படையில் தான் இவ்விடுகையை எழுதியுள்ளேன்.

சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீசட்டைமுனி பெருமானே!

("அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற" என்று வருவது இவரது வரலாற்றில் வரும் ஒரு நிகழ்வை குறிப்பதல்ல. இவ்வண்டம், இதில் வாழும் உயிர்கள், அவ்வுயிர்கள் வாழும் வாழ்க்கை என அனைத்தையும் இறையின் அணிகலன்களாக காணவேண்டும் என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தியவர் என்பதையே குறிக்கும். "சிவன் அபிஷேகப் பிரியர். பெருமாள் அலங்காரப் பிரியர்." என்பதில் வரும் "பெருமாள் அலங்காரப் பிரியர்" என்னும் சொற்றொடரின் பொருளும் இதுவே.)

🌸🌸🌸
🔥🔥🔥
🙏🙏🙏
󽐼󽐼󽐊
*குறிப்புக்கள்:*

1. #ஐயர் - படித்தவர் / கற்றவர் / அறிந்தவர். இதைவிட, இன்றைய நிலையில், #பூசாரி - பூ சார்த்துபவர் - என்ற சொல்தான் இவர்களது பணியைச் சரியாக விளக்குகிறது என்று நினைக்கிறேன்.

#பூஜை என்ற சமற்கிருத சொல் பூசு மற்றும் பூ + வை ஆகிய தமிழ் சொற்களில் இருந்து வருகிறது. ஆக, இறை உருவங்களை குளிப்பாட்டி, சுத்தம் செய்து, பூக்கள், துணிகள், நகைகள் முதலியவற்றால் ஒப்பனை செய்து வழிபாடு நடத்தி வைக்கும் முறை தமிழருடையது!

2. இப்பொருளாதார இணைப்பினால் இன்று பெரும் பயனடைவோர் பெரும்பாலும் அந்நிய சக்திகள் வீசி எறியும் பொரைகளுக்காக நம் சமயத்தின் மீது கல்லெறியும் கூட்டத்தைச் சேர்ந்தோர் தான். கருவறைத் தவிர மீதமுள்ள இடங்கள் அனைத்தையும் கடைகளாக்கிவிட்டனர். காலணி பாதுகாப்பதிலிருந்து அனைத்து இடங்களையும் ஏலம் விடுவதில் கமிஷன் பார்ப்பது, மாதம் தோறும் கப்பம் பெறுவது என அனைத்திலும் காசு பார்ப்பது இந்தக் கூட்டமே.

3. ஒரு பொருள் உள்ளது; மேலும், அது பற்றி நமக்குத் தெரியும். இது தெரியும் என்கிற நிலை.

ஒரு பொருள் உள்ளது. அது பற்றி நமக்குத் தெரியாது. இது தெரியாது என்கிற நிலை.

ஒரு பொருள் உள்ளது. அதைப் பற்றி இன்று வரை நாம் கேள்விப்பட்டது கூடக் கிடையாது என்பதே கேவல நிலை.

"#இறையுணர்வு பெறுவதற்காகத் தான் கோயில்களா?" என்பது ஒரு கேவல நிலையெனில், "இறையுணர்வு என்றால் என்ன?" என்று கேட்கும் கேவலத்திலும் கேவல நிலையில் தாம் இன்று நம்மில் பலர் உள்ளர்!! 😔

4. "சுவாமியை நன்றாக பார்த்தீர்களா?", "நல்லா தரிசனம் ஆச்சா?" போன்ற கேள்விகளின் சரியான உட்பொருள் "இறையுணர்வு பெற்றீரா?" என்பதே. இதைப் பற்றி விரிவாக இன்னொரு இடுகையில் எழுதவுள்ளேன்.

5. சட்டைமுனி சித்தர் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மைகளில் ஒன்றே வைணவத்தின் சின்னங்களுள் ஒன்றான திருசக்கிரம்! 🙏

(உடனே சக்கிரம், #சக்கிரத்தாழ்வார் போன்றவற்றை இவர் உருவாக்கினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சித்தர் வெளிப்படுத்திய உண்மைக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட வடிவங்கள் இவை.)

நம்முள் தோன்றும் எண்ணங்கள் முதல், வெளிப்புறத்தில் நாம் காணும் காட்சிகள் வரை அனைத்தும் திரையில் தோன்றும் படக்காட்சிகள் போன்றவை. நாமோ அக்காட்சிகள் தோன்றுவதற்கு இடம் கொடுக்கும் திரை போன்றவர். அனைத்தும் தொடர்ந்து அசைந்த வண்ணம் இருந்தாலும், நாம் அசைவதில்லை. நாம் சாட்சி மட்டுமே. இதுவே #ஸ்ரீசக்கிரத்தாழ்வார் உணர்த்தும் உண்மை. #திருவரங்கநாதர் என்ற பெயரின் விளக்கமும் இதுவே (அரங்கத்திற்கு நாதன் என்று விரிக்காமல், அரங்கம் என்னும் நாதன் என்று விரித்தால் சரியான பொருள் விளங்கும்).

பின்னர் ஏன் மூலவராக திருசக்கிரத்தாழ்வாரை வைக்காமல் அரங்கநாதப் பெருமானை வைத்தார்கள்?

ஏனெனில், ஆழ்வார் வைணவ தத்துவங்களுக்கு ஏற்றவாறு பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவர். அரங்கநாதப் பெருமானோ, வைணவம் முழுமை பெறுவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டவராக இருக்கும். அரங்கநாதர், நடராஜப் பெருமானின் பிரதிபலிப்பு மற்றும் அரவ ஆபரணம் சூட்டப்பட்ட சிவலிங்க வடிவத்தின் விரிவாக்கமுமாவார். நடராஜப் பெருமானின் மேற்கைகளில் உள்ள தீ (ஒளி) மற்றும் உடுக்கையே (ஒலி) அரங்கநாதரின் மேற்கைகளில் உள்ள சக்கிரம் (ஒளி) மற்றும் சங்கு (ஒலி) ஆகும். அதாவது, அண்டம் என்பது ஒளி & ஒலியின் கலவையே! பிரதிபலிப்பு என்பதால் ஒளியும் ஒலியும் இடமாறியிருக்கும். அரவ ஆபரணம் சூட்டப்பட்ட சிவலிங்கத்தில், அரவம் ஐம்பூதங்களையும், லிங்கம் இன்னதென்று வடிவம் கொடுக்கமுடியாத இறையையும் (பிரம்மம்) குறிக்கும். அரங்கநாதரின் பாம்பனண ஐம்பூதங்களையும், அரங்கநாதர் லிங்கத்தையும் குறிக்கிறார்கள். அதாவது, அண்டம் ஐம்பூதங்களால் ஆன கலவை. இக்கலவையின் தோற்ற இயக்க மறைவுக்கு ஆதாரனமான இறைசக்தி சாட்சிமாத்திரமாக, எவ்வித சலனமுமில்லாமல், அனைத்தையும் அறிந்தவண்ணம் உள்ளது.

மீண்டும் ஸ்ரீசக்கிரத்தாழ்வாருக்கு திரும்புவோம். ஒரு கணக்கில் இது அண்டத்தையும், இன்னொரு கணக்கில் நம் உடலையும் குறிக்கும். உடல் என்று வரும் போது, சக்கிரம் உடலின் இயக்கத்தையும், பின்னிருக்கும் யோக நரசிம்மர் நம்முள்ளிருக்கும் இறை சக்தியையும் குறிக்கும். ஆன்மிகத்தின் இறுதி நிலையை எட்டிய பின், சீவன் தனது இயலாமையை உணர்ந்து பணியும் போது (சரணாகதி), உள்ளிருந்து இறை சக்தி வெளிப்பட்டு சீவனை - நமது தனித்தன்மையை - அழித்துவிடும். இவ்வாறு வெளிப்பட்டு அழிக்கும் சக்தியை (நரசிம்மரை), அது வெளிப்படும் முன்னர் உள்ள நிலையில்  (#யோக #நரசிம்மர்) வடிவமைத்திருக்கிறார்கள். 🌸🔥🙏

6. இவ்விரண்டு சொற்றொடர்களும் ஆழ்ந்த பொருள் பொதிந்தவை:

▶ *மெய் (உடல் / உயிரற்றது) மறத்தல் - மெய்யை மறப்பது யார் / எது? மெய் மறந்தபின் அவர் / அதன் நிலையென்ன?*

▶ *பரவசம் அடைதல் - பர - பரம் - பரம்பொருள் - பரம்பொருள் என்றால் என்ன? எங்குள்ளது? பரம்பொருளிடம் யார் / எது வசமானது?*

இக்கேள்விகளுக்கு விடை தெரியாமல், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும், எத்தனை வழிபாட்டில் கலந்து கொண்டாலும் ஆன்மிகத்தில் சிறிதும் முன்னேற முடியாது.

7. உலகப் பெருபான்மை மதத்தினரும் சிலைகளை, உருவங்களை, கட்டிடங்களை வணங்குபவர் தாம். இன்னும் சொல்லப்போனால், கெட் அவுட் (Get Out) என்ற ஹாலிவுட் படத்தில் மணி சப்தம் கேட்டவுடன், கேட்பவர் மதி மயங்குவது போல, இவர்களும் சில உருவங்களைப் பார்த்தவுடன், சில வார்த்தைகளை கேட்டவுடன் மதி மயங்குவார்கள். அவ்வாறு பழக்கியிருக்கிறார்கள்.

▶ சிலுவையில் அறையப்பட்ட ஞானி யேசுவின் சிலை - இச்சிலை பெரும்பாலான பரங்கி மதத்தினரின் வீடுகளில் தவறாமல் இருக்கும். இதற்கு பகவான் #ஸ்ரீரமணர் கொடுக்கும் விளக்கம்: உடல் என்னும் சிலுவையில், மனம் என்னும் யேசுவை அறைந்தால் (அதாவது நாம் உடல் என்னும் தனியிருப்பை ஒழித்தால்) எஞ்சியிருப்பது "தான்" மட்டுமே. இதுவே உயிர்த்தெழுதல் எனப்படும். ஆக, இச்சிலையைக் கண்டவுடன் அவர்களுக்குத் தோன்ற வேண்டிய எண்ணம் "மனதை அழி". ஆனால், அவர்களுக்குத் தோன்றுவது? தோன்ற வைத்திருப்பது? 😁

▶ வெற்றுச் சுவற்றை நோக்கி வழிபாடு நடத்தும் முகம்மதியர் - அது வெற்றுச் சுவரல்ல; மெக்காவிலுள்ள காபாவைக் குறிக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். இன்று காபா ஒரு வெற்றுக் கட்டிடம். ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறல்ல. 360 சிலைகள் இருந்த கோயில் அது. (அது பெரும் சிவாலயம் என்றும், #சமண முனிவர் #பகுபாலி சமாதியான தலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.) அதிலிருந்த அனைத்துச் சிலைகளை உடைத்து எறிந்தவர் கூட ஒரு சிலையை ஆரத்தழுவி முத்தமிட்டுள்ளார். இன்றும் அச்சிலை கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ளது. இடம் வரும் போது அதை நோக்கித் திரும்பிப் பார்ப்பர் (தொட்டு வணங்குவதற்கு சமம்). மேலும், ஹஜ் பயணத்தின் போது சிலர் அவர்களது இறைத்தூதரின் சமாதி தலத்திற்கும் சென்று வருகின்றனர். இறைத்தூதர் இறைக்கு சமமல்ல. காபா, பதிக்கப்பட்ட கல், ஜம்ஜம் கிணறு, இறைதூதரின் சமாதி, குர்ஆன்...  இவற்றை வணங்குவதும், இவைகளைப் பார்த்தவுடன் அல்லது இவைகளைப் பற்றிக் கேட்டவுடன் மனதில் மரியாதை, பாசம் பொங்குவதும் உருவ வழிபாடு தாம்.

முகம்மதியம் உருவாவதற்கு முன்னரே ஹஜ் பயணம் இருந்தது. மெக்கா நகர மக்கள் சரணடையும் முன்னர் போட்ட ஒப்பந்த விதிகளில் ஒன்று, ஹஜ் பயணம் நிறுத்தப்படக் கூடாது என்பதாகும். அன்று அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்பதால் இந்த விதி போடப்பட்டது.

posted from Bloggeroid