Saturday, July 13, 2024

திருவண்ணாமலை திரு நிலவறைப் பெருமான் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️


திருவண்ணாமலை திருக்கோயில் வளாகத்திலுள்ள திரு நிலவறைப் பெருமான் திருக்கோயில் (அசுரத்தில், பாதாள இலிங்கம்). இங்கிருந்தே பகவான் திரு இரமண மாமனிவர் நமக்கு கிடைத்தார்.

ஆயிரங்கால் கூடத்திலிருந்தபோது (அசுரத்தில், மண்டபம்), தனக்கு துன்பம் விளைவித்த சில பண்படாத சிறார்களிடமிருந்து விலகி, அப்போது பாழடைந்திருந்த இக்கருவறையில், உடையவரின் (அசுரத்தில், மூலவர்) பின்னே அமர்ந்துகொண்டார். அசுர (ஆரிய) புருடாக்களிலிருந்து 👊🏽👊🏽 வையகம் மீள வேண்டுமென்பது திருவருளின் நோக்கமாக இருந்ததால், திரு சேஷாத்ரி பெருமானால் பகவான் வெளியே கொண்டுவரப்பட்டார். இல்லையெனில், இக்கருவறையில் இன்னொரு திருமேனி சேர்ந்து போயிருக்கும். அதை வைத்து, பின்வரும் தொழிலும் நடந்து கொண்டிருக்கும்:

சுவாமியோட ஒடம்புலே பாதி தனக்கு வேணும்னு, அம்பாள் காஞ்சிவரத்துல தவமிருந்தா. அவளுக்கு காட்சி கொடுத்த பகவான், அருணாஜலத்துக்கு வரச்சொல்லிட்டார். காஞ்சிவரத்துலேர்ந்து இங்கே வர்றதுக்குள்ள அம்பாளுடைய ஒடம்புல அழுக்கேறி, பச்சையா ஆயிடுத்து. அப்படியே அம்பாள் கோயிலுக்குள்ள போறச்சே, பகவான் ஒரு பள்ளத்திலிருந்து எட்டிப்பார்த்து, நம்ம பொம்மணாட்டியோட நெலம இப்படியாயிடுத்தேன்னு வருத்தப்பட்டார். இத புரிஞ்சிண்ட அம்பாள் திரும்பி பார்த்தா. பகவான், இங்க, முன்னாடியிருக்கிற சிவலிங்கத்துக்குள்ள ஒளிஞ்சிண்டார். அம்பாள் விடல. மறஞ்சிருந்து, எப்படி தன்ன வாஞ்சையோட பார்த்தாரோ, அதே மாதிரி இன்னொரு தடவை தன்ன பார்க்கணும்னு அங்கேயே தவமிருந்தா. பகவானும் மனசு இறங்கி, இன்னொரு தடவை காட்சி கொடுத்து, வாஞ்சையோட பார்த்துட்டு, பின்னாடியிருக்கிற சிவலிங்கத்துக்குள்ள மறைஞ்சுட்டார். இந்த அடிப்படையிலதான் இங்க 2 சிவலிங்கம் இருக்கு. ஒரே கர்ப்பகிரகத்துல 2 சிவலிங்கம் இருக்குறது விசேஷம். நன்னா தரிசனம் பண்ணிக்கோங்கோ. ஓம்...

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

-- திருக்குறள் #423 (அறிவுடைமை)

oOo

உண்மைகள் எவ்வளவு தொலைவு திரிக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இவ்விடுகையை எழுதினேன்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும்: 

அசுரக்கூட்டத்திடமிருக்கும் யாவும் அவர்களுடையதல்ல. எல்லாம் நம்மிடமிருந்து சென்றவை. மேலே பூசப்பட்டிருக்கும் அசுரப்பூச்சு மட்டும்தான் அவர்களுடையது. நம் சமயத்தை எதிர்ப்பதென்பது நம் முன்னோர்களை எதிர்ப்பதாகும். வெகுவாக பாடுபட்டு அவர்கள் வெளிக்கொணர்ந்த முத்துகளை இகழ்வதாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment