Monday, July 29, 2024

பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் நல்-"இறப்பு" நல்லதே!!


"உயிரோடிருக்கும்போதே ஒரு மனிதர் தனது இறப்பை பற்றி பேசுவது நல்லதல்ல. இறப்பு என்பதே கெட்ட சொல்லாகும்." என்று ஒரு நண்பர் சொல்ல, அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களை தொகுத்து பின்வரும் இடுகையாக மாற்றியிருக்கிறேன் 🙏🏽:

🌷 பழந்தமிழரைப் பொறுத்தவரை இறப்பென்பது நல்ல நிகழ்வாகும்! இன்றும், திருநெல்வேலிப் பக்கத்தை சேர்ந்த சிலர், ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால், "என்னலே, நீ இன்னும் சாவலையா?" என்று கேட்டுக் கொள்வார்களாம்!! 😃 "நீ இன்னும் மெய்யறிவு பெறவில்லையா?" என்பது உட்பொருளாகும்.

🌷 "இவ்வையகத்தில் பிறப்பதே இறப்பாகும். தன்மையுணர்வில் நிலைபெறுவதே (வீடுபேறு) உண்மையான பிறப்பாகும்." என்று அருளியிருக்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர். எனில், இங்கு இறந்தால்தான் அங்கு பிறக்கமுடியும். இதனடிப்படையில் கேட்கப்படும் கேள்விதான், "நீ இன்னும் சாவலையா?"!

🌷 இறந்து பிறப்பதற்காகவே, அதாவது, தன்மையுணர்வில் நிலைபெறுவதற்காகவே, அதாவது, வடக்கிருப்பதற்காகவே, ஒவ்வொரு ஊருக்கும் வெளியே ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தனர் நம் முன்னோர்கள். மன்னர் முதல் குடியானவன் வரை அங்கு வடக்கிருந்து, உடல் துறந்தனர் (உயிர் துறக்க அல்ல! உடல் துறக்க!!). அப்படி வடக்கிருந்தோர், தம்முள்ளிருந்து வெளிக்கொணர்ந்த அரிய முத்துகளே திருமறைகளின் ஆரண்யப் பகுதியாகும். (திருமறைகள் முழுவதும் அசுர இனத்தின் உழைப்பல்ல. ஒன்று அசுரத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாலேயே, அது அசுரர்களின் சொத்தாகிவிடாது.)

🌷 வடக்கிருக்கும் நற்செயலை நம்மிடமிருந்து கற்றுக்கொண்ட வடவர்களில் ஒரு பிரிவினரான சமணர்கள், இன்றுவரை, "சல்லேகனை" என்ற பெயரில் அதை கடைபிடித்து வருகின்றனர். (நம்மிடம் உளுத்தறிவு வளர்ந்துவிட்டதாலும், கல், செம்பு, பித்தளை, மரம் என கண்டதையும் வணங்கி, 'மம' மட்டும் சொல்லும் மேலான மடையர்களாகிவிட்டதாலும், அவ்வழக்கத்தை நாம் விட்டுவிட்டோம். 😏)


🌷 இறப்பு ஊர்வலத்தின்போது, தாரைத் தப்பட்டையுடன் ஆடிப்பாடி, வெடிவைத்து, கொண்டாடி மகிழும் ஒரேயினம், வையகத்தில், தமிழினமாகத்தான் இருக்கும்! இது, "பிறவி / வையகம் எனும் சிறையிலிருந்து எங்கள் ஆள் விடுபட்டுவிட்டார்" என்ற பெருமகிழ்ச்சியின் வெளிப்பாடாகும்!

🌷 இறத்தல், இறைவன் ஆகிய இரண்டு சொற்களுமே "இற" என்ற வேரிலிருந்து பிறக்கின்றன. "புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்" என்ற சொற்றொடர் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது (புலவரையும் கடந்த புகழ்...). அதாவது, இற என்ற சொல்லின் அடிப்படை பொருள்: கட.

இறத்தல் - கடத்தல். பிறவிப் பெருங்கடலை கடத்தல்.

🌷 ஓர் இறப்பு நிகழ்வுதான், வேங்கடராமன் என்ற எளிய சிறுவனை, பகவான் திரு இரமண மாமுனிவராக மாற்றியது.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, July 26, 2024

🐘 யானைக்கும் அடி சறுக்கும் - உட்பொருள்


பொதுவான பொருள்: வலுவான விலங்கான யானையும், அடியெடுத்து வைக்கும்போது, எச்சரிக்கையாக இல்லாவிடில், சறுக்கிக் கொள்ளும். இது போன்று, எவ்வளவு வலுவான / திறமையான / உறுதியான / உயர்ந்த நிலையிலிருப்போரும், எச்சரிக்கையாக இல்லாவிடில், தங்களது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக்கூடும்.

இனி, உட்பொருளை பார்ப்போம்.

🔸 யானை - பிள்ளையார் - மெய்யறிவாளர். "விநாயகர் அகவல்" எனும் அருமையான நூலில் 👌🏽, பிள்ளையாரை புகழ்வது போன்று, தனது மெய்யாசிரியரை புகழ்ந்து பாடியிருப்பார் திரு ஒளவைப் பாட்டி 🌺🙏🏽🙇🏽‍♂️.

🔸 அடி - இறைவனடி - நமது தன்மையுணர்வு. எப்போதும் இறை சிந்தனையில் இருப்போரை "அடியார்கள்" என்றழைப்பது வழக்கம்.

🔸 சறுக்குதல் - வழுவுதல் / விலகுதல் / தவறுதல்.

தன்மையுணர்வில் நிலைபெற்று வீடுபேறு அடைந்திருந்தாலும், எச்சரிக்கையாக இல்லாவிடில், மெய்யறிவாளரும் தனது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக்கூடும்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு: திருமறைக்காட்டில் (அசுரத்தில், வேதாரண்யம்) குடிகொண்டருளும் திரு மறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) 🌺🙏🏽🙇🏽‍♂️.

மெய்யறிவு பெற்றிருந்தும், பெண்ணாசையால் வீழ்ந்தவர்! (பிறகு, மீண்டெழுந்து, "மெய்யறிவாளர்களின் மன்னர்" என்ற பட்டம் பெறுமளவிற்கு உயர்ந்தவர்.)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, July 22, 2024

கற்சங்கிலியை வைத்து பணம் பார்ப்பது எப்படி? 😀


எனக்குத் தெரிந்த நபரொருவர், மேலுள்ள படத்தை அனுப்பிவிட்டு, உடன், அதை செதுக்கிய நமது முன்னோர்களின் திறனைப் பற்றி வியந்துப் போற்றியிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய பதில்...

😜 உளுத்தறிவினன்: சங்கிலியை செய்தவன் காட்டுமிராண்டி. சங்கிலியை பார்த்து மகிழ்கிறவன் முட்டாள். இப்படி ஒரு சங்கிலியை செய்ய முடியுமா என்று வியப்பவன் அயோக்கியன். (இப்படி கூவுனோம்னு சொல்லி, துரைகிட்டயும், ஊழியக்காரன்கிட்டயும், பாய்கிட்டயும் துட்டு வாங்கிட்டு வாடா, போ!)

😁 அசுரன்: கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டி ஹோமம், தன்வந்திரி ஹோமம் செஞ்சு, ஒரு கோடி ருத்ர ஜெபம் செஞ்சு, பிராமணாளுக்கு ஈசிஆர்-ல பிளாட்டுகள தானமா கொடுத்தா, சாட்சாத் பகவானே காட்சி கொடுத்து, 108 வளையங்கள் இருக்குற சங்கிலிய பிரசாதமா கொடுத்துடுவார். துட்டு சமஸ்தா டப்பு பவந்து!

😆 சைத்தான்: அரே அல்லா! குண்டு வைக்கச் சொல்லு, நெருப்பு வைக்கச் சொல்லு, நஞ்சு கலக்கச் சொல்லு, பால் கொடுக்குற மார அறுக்கச் சொல்லு, கலைச்செல்வங்களை சிதைக்கச் சொல்லு, லவ் ஜிகாத் செய்யச் சொல்லு. செய்யுறான். சங்கிலி செய்யச் சொல்லாதே. இறைவன் மிகப்பெரியவன்!

😝 சாத்தான்: மண்டியிட்டு அமாவாசை முழு இரவு ஜெபம் செஞ்சு, "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யான்னு" ஒப்பாரி வெச்சு, எச்சில் பிஸ்கோத்த நக்குனா, வாடிகன் தேவாலயத்துல இருக்குற வேலைப்பாடுகளோட கூடின சங்கிலிய தேவனின் மைந்தனே ப்ளூடார்டுல அனுப்பி வெப்பாரு. ஆண்டவருக்கு தோத்திரம்.

🤣 அம்மையார்: சங்கிலி செய்வதற்காக ஜிஎஸ்டி 1%ம், ஃபாஸ் கொள்ளை 10%ம், எரிபொருட்களின் விலை 5%ம் ஏற்றப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஆதானிக்கு வழங்கப்படுகிறது. வரும் தேர்தலுக்கு முன், நமது தெய்வப்பிறவி திறந்து வைப்பார். திறப்பு விழாவிற்கு பிறகு, X தளத்தில், தெய்வப்பிறவியை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 10% கூடுமென்று எதிர்பார்க்கிறோம். அப்படி கூடினால், நாட்டில் பணப்புழக்கம் கூடுமென்றும், வேலையில்லா திண்டாட்டம் குறையுமென்றும் நம்புகிறோம்.

🤣 திராவிடியாள்: இச்சங்கிலியை பாதுகாக்கவும், பராமரிக்கவும் சிலை திருட்டுத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு செயல் அலுவலரும், அவருக்கு தேவையான உதவியாளர்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சமூக நீதி காக்கப்படும். அவர்கள் பணி செய்வதற்கு தேவையான ஒரு டின் கட்டடம், ரூ 100 கோடி செலவில் கட்டப்படும். அதற்கு தேவையான பணம் வையக வங்கியிலிருந்து கடனாக பெறப்படும். அக்கடனையும், அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்காக மக்களிடமிருந்து காலனி பாதுகாப்புக் கட்டணம், வண்டி நிறுத்தக் கட்டணம் மற்றும் சங்கிலியை பார்ப்பதற்காகவும், வழிபடுவதற்காகவும் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும். கிடைக்கும் வருமானத்திலிருந்து 4% பராமரிப்பு செலவுகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும். மீதப்பணம் கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், வையகத்தின் பெரும்பான்மை மதத்தினருக்காகவும் செலவழிக்கப்பட்டு மதச்சார்பின்மை போற்றப்படும். சாதிகள் வேண்டுமடி பாப்பா. குலத் தாழ்ச்சி உயர்ச்சி கொள்ளல் நல்லதடி பாப்பா. தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் நாமம் வாழ்க!

✊🏽👊🏽👊🏽🤜🏽👊🏽👊🏽🤛🏽👊🏽👊🏽😌😇

Wednesday, July 17, 2024

இறைவடிவத்திற்கு நன்னீராட்டு & இறைவடிவத்தை கட்டிப்பிடித்தல் - உட்பொருள்


சிறு அகவையிலிருந்து கண்ட கண்ட புருடாக்களை கேட்டும், மெய்யியல் என்ற பெயரில் வகை வகையாக காட்டப்படும் படங்களை பார்த்தும் வளர்ந்ததின் விளைவு... இறை சின்னத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, தனக்கும் நன்னீராட்டு நடக்கும் படி செய்துள்ளார் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜ்! 🤦🏽


எளிமையாக சிந்தித்தால்:


🌷 இறைச்சின்னம் - நாம்


🌷 நன்னீராட்டு - அன்றாட வாழ்வின் வழியாக நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகள் (அசுரத்தில், அனுபவங்கள்)


இறைச்சின்னத்திற்கு நடக்கும் நன்னீராட்டினால், அதன் மேல் படிந்திருக்கும் அழுக்கு நீங்கும். இது போன்று, நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகளால், நம் மனதில் மண்டியிருக்கும் பற்றுகள் (அழுக்கு) நீங்கும்.


பல பிறவிகளாக, பன்நெடுங்காலமாக பற்றுகளை சேர்த்துக்கொண்டே வருவது போல் தோன்றினாலும், இறுதியில், "போதுமடா, சாமி!" என்ற எண்ணம் தோன்றி, வீடுபேற்றில் முடிந்துவிடும். (இன்று, பிறவி முடிவதற்குள், இவ்வெண்ணம் தோன்றாத மனிதர் இருக்கமுடியுமா? 😀)


மேற்கண்ட விளக்கத்தோடு ஒரு நன்னீராட்டை பார்க்க நேர்ந்தால், நமக்கு தோன்ற வேண்டியது:


- வாழ்க்கை வாழ்வதற்கே

- எல்லாம் நல்லதற்கே

- யாவும் நலமாக முடியும்

- நம்பிக்கையுடன் இரு

...


oOo


அடுத்து, நன்னீராட்டின் போது இறை சின்னத்தை கட்டிப்பிடித்துக் கொள்ளுதலை பற்றி பார்ப்போம்.



இப்படத்தில் அன்னை செம்பொருளை கட்டிப்பிடிப்பது போல, தேஜ் கட்டிப்பிடித்துள்ளார்.


🌷 இறை சின்னம் - செம்பொருள் - நமது தன்மையுணர்வு


🌷 கட்டிப்பிடிப்பவர் - அறியாமையிலிருக்கும் நாம்


🌷 நன்னீராட்டு - அன்றாட வாழ்வின் வழியாக நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகள்


எந்தவொரு நுகர்ச்சியின் (அ) போதும் (அசுரத்தில், அனுபவத்தின் போதும்), நமதுண்மையை (ஆ) நாம் இறுகப்பற்றிக் கொண்டிருக்கவேண்டும் (இ).


அ. நுகர்ச்சி - நன்னீராட்டு


ஆ. நமதுண்மை - நாம் உடலல்ல. உணர்வே நாம். இதுவே செம்பொருள். தென்னாடுடையவனின் சின்னம் (அசுரத்தில், சிவலிங்கம்) குறிப்பிடுவது இதையே.


இ. நமதுண்மையை இறுகப்பற்றுதல் - நமது தன்மையுணர்வை மறவாதிருத்தல் - இறை சின்னத்தை கட்டிப்பிடித்தல்.


oOo


🌷 நன்னீராட்டு - அன்றாட வாழ்க்கையில் நமக்கு கிடைக்கும் நுகர்ச்சிகள்

🌷 கட்டிப்பிடித்தல் - அவற்றால் பாதிப்படையாமல் இருப்பதற்கான வழி


oOo


வகுப்பறையில், சில சமயங்களில், பாடத்தை புரிய வைக்க, ஆயர் (#) கதை சொல்லி, நடித்துக் காட்டுவார். அச்செயல்களை அப்படியே எடுத்துக் கொள்ளமாட்டோம். அவர் சொல்லவந்ததை புரிந்துகொள்ள முயற்சிப்போம். அவ்வாறே மெய்யியலையும் அணுகவேண்டும். அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது.


(# - ஆசிரியர் என்பது ஆச்சாரியார் என்ற அசுரச்சொல்லின் தமிழாக்கமாகும். எனவே, ஆயர் என்ற தென்தமிழ் சொல்லை பயன்படுத்தியுள்ளேன்.)


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, July 13, 2024

திருவண்ணாமலை திரு நிலவறைப் பெருமான் திருக்கோயில் 🌺🙏🏽🙇🏽‍♂️


திருவண்ணாமலை திருக்கோயில் வளாகத்திலுள்ள திரு நிலவறைப் பெருமான் திருக்கோயில் (அசுரத்தில், பாதாள இலிங்கம்). இங்கிருந்தே பகவான் திரு இரமண மாமனிவர் நமக்கு கிடைத்தார்.

ஆயிரங்கால் கூடத்திலிருந்தபோது (அசுரத்தில், மண்டபம்), தனக்கு துன்பம் விளைவித்த சில பண்படாத சிறார்களிடமிருந்து விலகி, அப்போது பாழடைந்திருந்த இக்கருவறையில், உடையவரின் (அசுரத்தில், மூலவர்) பின்னே அமர்ந்துகொண்டார். அசுர (ஆரிய) புருடாக்களிலிருந்து 👊🏽👊🏽 வையகம் மீள வேண்டுமென்பது திருவருளின் நோக்கமாக இருந்ததால், திரு சேஷாத்ரி பெருமானால் பகவான் வெளியே கொண்டுவரப்பட்டார். இல்லையெனில், இக்கருவறையில் இன்னொரு திருமேனி சேர்ந்து போயிருக்கும். அதை வைத்து, பின்வரும் தொழிலும் நடந்து கொண்டிருக்கும்:

சுவாமியோட ஒடம்புலே பாதி தனக்கு வேணும்னு, அம்பாள் காஞ்சிவரத்துல தவமிருந்தா. அவளுக்கு காட்சி கொடுத்த பகவான், அருணாஜலத்துக்கு வரச்சொல்லிட்டார். காஞ்சிவரத்துலேர்ந்து இங்கே வர்றதுக்குள்ள அம்பாளுடைய ஒடம்புல அழுக்கேறி, பச்சையா ஆயிடுத்து. அப்படியே அம்பாள் கோயிலுக்குள்ள போறச்சே, பகவான் ஒரு பள்ளத்திலிருந்து எட்டிப்பார்த்து, நம்ம பொம்மணாட்டியோட நெலம இப்படியாயிடுத்தேன்னு வருத்தப்பட்டார். இத புரிஞ்சிண்ட அம்பாள் திரும்பி பார்த்தா. பகவான், இங்க, முன்னாடியிருக்கிற சிவலிங்கத்துக்குள்ள ஒளிஞ்சிண்டார். அம்பாள் விடல. மறஞ்சிருந்து, எப்படி தன்ன வாஞ்சையோட பார்த்தாரோ, அதே மாதிரி இன்னொரு தடவை தன்ன பார்க்கணும்னு அங்கேயே தவமிருந்தா. பகவானும் மனசு இறங்கி, இன்னொரு தடவை காட்சி கொடுத்து, வாஞ்சையோட பார்த்துட்டு, பின்னாடியிருக்கிற சிவலிங்கத்துக்குள்ள மறைஞ்சுட்டார். இந்த அடிப்படையிலதான் இங்க 2 சிவலிங்கம் இருக்கு. ஒரே கர்ப்பகிரகத்துல 2 சிவலிங்கம் இருக்குறது விசேஷம். நன்னா தரிசனம் பண்ணிக்கோங்கோ. ஓம்...

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

-- திருக்குறள் #423 (அறிவுடைமை)

oOo

உண்மைகள் எவ்வளவு தொலைவு திரிக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இவ்விடுகையை எழுதினேன்.

இன்னொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும்: 

அசுரக்கூட்டத்திடமிருக்கும் யாவும் அவர்களுடையதல்ல. எல்லாம் நம்மிடமிருந்து சென்றவை. மேலே பூசப்பட்டிருக்கும் அசுரப்பூச்சு மட்டும்தான் அவர்களுடையது. நம் சமயத்தை எதிர்ப்பதென்பது நம் முன்னோர்களை எதிர்ப்பதாகும். வெகுவாக பாடுபட்டு அவர்கள் வெளிக்கொணர்ந்த முத்துகளை இகழ்வதாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, July 12, 2024

திருவாதவூரடிகளது திருவிடத்தின் தற்போதைய நிலை! 😞

🌺🙏🏽🙇🏽‍♂️

(தில்லையிலுள்ள திருவாதவூரடிகளின் (திரு மணிவாசகப் பெருமான்) திருவிடம்)

எப்படி போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய வளாகம், இப்படி எல்லைமீறல்களால் நிறைந்துள்ளது! விட்டால், கருவறைக்குள்ளும் புகுந்துவிடுவர்! 😡 இப்படியொரு கூட்டமெனில், இன்னொரு கூட்டம்...

பெருமான் இங்கு குடிகொண்டுள்ளார் (அசுரத்தில், சமாதியடைந்துள்ளார்) என்று தெரிந்திருந்தும், தில்லையின் கருவறைக்கு முன்னே, இறைவனுடன் இரண்டறக் கலந்தாரென்று புருடா விட்டு, மக்களை மாக்களாக்கி, ஷேமமா, சௌக்கியமா, நன்னா பருப்பு சாதத்திற்கும், தயிர் சாதத்திற்கும் வழி வகுத்துக் கொண்டுள்ளது!! 😡😡

உண்மையை மறைக்காதிருந்திருந்தால், அவ்விடத்தின் மதிப்பை மக்கள் உணர்ந்திருப்பார்கள். எல்லை மீறி உள்ளே வந்திருக்கமாட்டார்கள்.

oOo

இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?

இம்மையே என்ற சொல்லினால் இறைவன் என்பது யாரென்று தெளிவாகக் காட்டுகிறார் பெருமான்!! 😍

🌷 இம்மை - இப்போது / தற்போது (பீட்டரில், Current).

🙏🏽🙏🏽🙏🏽

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, July 2, 2024

திரு பேயாரிடமிருந்து / தெய்வச் சேக்கிழாரிடமிருந்து சுட்ட நாமப்பேர்வழிகள்!!


"கூண்டில் பிறக்கும் பறவைகள் பறப்பதை நோயெனக் கருதுகின்றன"!! -- இச்சொற்றொடர் பலருக்கு / பல சூழ்நிலைகளுக்கு பொருந்தும்.

காண்பானை விட காணப்படும் காட்சியே மேலானது எனக் கருதிய மாயை & மாயோன் வழிபாட்டினர், மெய்யறிவுத் தேடலை பித்துப் பிடித்தல் எனவும், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களை பித்தர்கள் என்றும் அழைத்தனர். இங்கு,

🔸 மாயை & மாயோன் வழிபாட்டினர் - கூண்டில் பிறந்தவர்கள்

🔸 மெய்யறிவுத் தேடல் - நோய்

ஆனால், பின்னாளில், மெய்யறிவுத் தேடல்தான் சரியென்று உணர்ந்த பிறகு,

🔸 "மெய்யறிவை வழங்குவதே அன்னைதான்" என்றனர் மாயை வழிபாட்டினர்! 😏 எ.கா.: சிக்கலில் சிங்காரவேலருக்கு அன்னை வேல் வழங்குதல். வேல் - மெய்யறிவு.

🔸 நாமப்பேர்வழிகள்: நித்திய சூரிகள் (மெய்யறிவாளர்கள்) பரமபதத்தில் இருந்துகொண்டு, பெருமாளை நோக்கி பல்லாண்டு இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(இதை படித்ததும் 🙄/😵‍💫/🥴 என்ற உணர்வு தோன்றினால், இன்னும் உங்களுக்கு பட்டை நாமம் சாத்தப்படவில்லை என்பது பொருளாகும். 😁)

மேற்கண்ட அக்கார அடிசிலுக்கான பொருட்களை நாமப்பேர்வழிகள் சுட்டது... திரு பேயாரிடமிருந்து (காரைக்கால் அம்மையார்)!! பேயாரின், "நான் மகிழ்ந்து பாடி, அறவா, நீ ஆடும்போது உன் திருவடியின் கீழிருக்க" என்ற வேண்டுதலையே மேற்கண்ட அடிசிலாக கிண்டியுள்ளனர். பேயாரின் வேண்டுதலை, தெய்வச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பதிவு செய்துள்ளார். எனவே, சேக்கிழாரிடமிருந்து சுட்டிருக்கிறார்கள் என்றாலும் தகும்.

🌷 பேயார் (மெய்யறிவாளர்) - நித்திய சூரி
🌷 நிலைபேறு - பரமபதம்
🌷 மகிழ்ந்து பாடுதல் - பல்லாண்டு இசைத்தல்
🌷 அறவானின் ஆட்டம் - பெருமாளின் கனவு / லீலை

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻