Tuesday, February 6, 2024

இராமக்கிருஷ்ண புருடம்!!


பின்வரும் படக்கதை இராமக்கிருஷ்ண விஜயத்தின் மாசி 2024 இதழில் வெளிவந்துள்ளது:


💥 சோழர்களின் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது 1,279ல். பாண்டியர்கள் வலுவாக இருந்தது 1,311 வரை. கிருஷ்ணதேவராயர் ஆட்சி தொடங்கியது 1,509ல். எனில், இல்லாத சோழர்கள் எப்படி பாண்டியர்களின் அரியணையை கவர்ந்திருக்கமுடியும்?

(ஒரு வேளை, தற்போது, இராமனின் சிலைக்கு அசுரர்கள் "உயிரூட்டியது" போல, அன்று, பிழைத்திருந்த சோழ வாரிசுகளிடம் "வெயிட்டான" தட்சிணை பெற்றுக்கொண்டு, பெரிய வேள்வித்தீ வளர்த்து, வாயில் போட வேண்டியவற்றை நெருப்பில் போட்டு, "ஓட்டைப் பானைக்குள் நுழைந்த ஈ" எழுப்பும் ஒலியை எழுப்பி, சோழர்களின் சிலைகளுக்கும், வரைபடங்களுக்கும் "உயிரூட்டினார்களா"? 😜)

💥 ஆட்சியிலிருப்பவனை போட்டுத் தள்ளிவிட்டு அரியணை ஏறுவதென்பது குறிமதத்திலும், தேவலோகத்திலும் (வடக்கில்) இருந்த எழுதப்படாத நடைமுறை. அந்தளவுக்கு இல்லையென்றாலும், விஜயநகர மன்னர்களும் அவ்வழியை பல முறை பின்பற்றியவர்கள்தாம். இப்படிப்பட்டவர்களின் ஆட்சியில், நீதியை நிலைநாட்டுவதற்காக மகனே தந்தையை கைது செய்தானாம்! நீதிக்காக கைது செய்தானா? அவன் மேலே வருவதற்காக கைது செய்தானா?

💥 அண்மையில், "பாண்டியர்களை அழித்தொழித்ததே விஜயநகரத்தின் பிரதிநிதிகளான தெலுங்கு நாயக்கர்கள்தாம்" என்ற செய்தி இணையத்தில் சுற்றிவந்தது. இது உண்மையெனில், எப்படி அவர்கள் பாண்டியர்களுக்கு உதவ முன்வந்திருப்பார்கள்? (எனக்கென்னவோ, இப்படக்கதையே அச்செய்திக்கான "டேமேஜ் கண்ட்ரோல்" என்று தோன்றுகிறது!)

💥 சோழர்களின் மீது சேற்றை வாரி வீசும் ஈனர்களுக்கு விஜயம் இடம் கொடுக்கலாமா? அப்படிப்பட்ட பிழைப்பு விஜயத்திற்கு தேவையா?

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment