Monday, February 5, 2024

திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான் (திருப்புவனம், தஞ்சை) 🌺🙏🏽🙇🏽‍♂️ - பெயர் விளக்கம்



🌺🙏🏽🙇🏽‍♂️

கடந்த 02/02/24 அன்று குடமுழுக்கு கண்ட திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான், திருப்புவனம், தஞ்சை மாவட்டம் (அப்பர் பாடல் வைப்புக் கோயில்).

🌷 நடுக்கம் தீர்த்த - அச்சம் போக்கிய.

"மெய்யறிவு கிடைத்தவுடன் என்ன நடந்தது?" என்று கேட்ட ஓர் அன்பருக்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் கொடுத்த பதில்: அத்தோடு இறப்பை பற்றிய அச்சம் என்னை விட்டு நீங்கியது!!

இதே செய்தியைத்தான் திருக்கடவூர் திருக்கோயிலின் புனைவுக்கதையும் தெரிவிக்கிறது.

கதை: திரு மார்க்கண்டேயரை பற்ற வந்த காலனை, இறைவன் எட்டி உதைத்தார்.

🌷 பற்ற வந்த காலன் - இறப்பை பற்றிய அச்சம்.
🌷 உடையவரிலிருந்து வெளிப்பட்ட இறைவன் - நமக்குள்ளிருந்து வெளிப்படும் மெய்யறிவு.
🌷 காலன் உதை வாங்குதல் - இறப்பை பற்றிய அச்சம் நீங்குதல்.

🔥 இறப்பை பற்றிய அச்சம் / நடுக்கம் நீங்குதல் = மெய்யறிவு பெறுதல்!

🙏🏽 நடுக்கந்தீர்த்தப் பெருமான் = மெய்யறிவு வழங்கிய பெருமான்!

தன்னாட்டம் ("நான் யார்?") என்ற எளிமையான வழியை மீட்டுக் கொடுத்த பகவானும், தம்மை தஞ்சமடைந்த அன்பர்கள் உய்வடைய வழிகாட்டிய அனைத்து பெருமான்களும் நடுக்கந்தீர்த்தப் பெருமான்களாவர்!!

இவ்வாறு, நம் பெருமான்களின் திருநெறியத்தமிழ் பெயர்களை சிந்தித்துக் கொண்டிருந்தாலே பிறவிப்பெருங்கடலை நீந்திவிடலாம். 😍

ஆனால், இப்படி எளிதாக நாம் விளங்கிக்கொண்டு, உய்வடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அசுரத்தை உயர்த்திக் காட்டுவதற்காகவும், நமக்கு தாழ்வு மனப்பான்மை தோன்றவேண்டும் என்பதற்காகவும் அசுரக்கூட்டம் அசுரப்பெயர்களை திணித்துள்ளது! சில பழமையான திருக்கோயில்களில், பெயரளவிற்கு மட்டும், தென்தமிழ் பெயர்கள் உள்ளன. "அண்ணாமலையார்" போன்ற ஒரு சில திருப்பெயர்களே, அசுரப்பெயர்களை காட்டிலும் பெரும் புகழ் பெற்று, அன்னைத்தமிழின் மேன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

நடுக்கந்தீர்த்தப் பெருமானின் அசுரப்பெயர் - கம்பகரேசுவரர்.

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment