Tuesday, October 9, 2018

மகரிஷி வாய்மொழி: உண்மையான கடவுள் வணக்கமும், சுகாசனமும்



தன் கடமையைப் புரிவதே உண்மையான கடவுள் வணக்கம். கடவுளிடம் நிற்பதொன்றே ஆசனம்.

- பகவான் ஸ்ரீரமணர், மகரிஷி வாய்மொழி 🌸🙏

"உலக வாழ்க்கையை விட்டொதுங்க முடியவில்லை. ஆன்மிகத்திலும் நிலைபேற்றை அடைய முடியவில்லை." என்று திண்டாடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது. இரண்டே வரிகளில், புறத்தே எவ்வாறு வாழவேண்டும் என்பதையும், அகத்தே என்ன செய்யவேண்டும் என்பதையும் அவரது பாணியில் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்!! 👌

🌼🏵🌹🌻🌷🌺🌼

நமக்குத் தெரிந்த ஒரு நபரை சந்திக்க நேர்ந்தால், அவர் மீதிருக்கும் மதிப்பு, மரியாதை, அன்பு மற்றும் கலாச்சாரம் போன்ற காரணங்களால் அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறோம். எனில், அனைத்திற்கும் ஆதாரமான கடவுளைக் கண்டால்?

🌿🍁🍀

▶ இந்த அண்டம் சுழல்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ விண்மீன் கூட்டம் சுழல்கிறது. நகரவும் செய்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ நமது விண்மீனமான ஞாயிறு சுழல்கிறது. தனது குடும்பத்துடன் நகரவும் செய்கிறது. நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ நமது பூமித்தாய் சுழலவும், நகரவும் செய்கிறார். நம்மால் அல்ல. ஏற்றுக் கொள்வோம். 👍
▶ மேற்சொன்னவற்றை இயக்கும் அதே ஆற்றல் தான் இந்த இடுகையை எழுதியது. தங்களைப் படிக்கவும் வைக்கிறது. 🤔🤔🤔 இதை மட்டும் ஏற்றுக் கொள்வது கடினம். 😁

நம் வயிற்றில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அங்கே இருக்கும் பொருட்களிலிருந்து பிறந்து, வந்து விழுவதை உண்டு, வாழ்ந்து, மடிந்து போகின்றன. அதனிடம் சென்று, "நீ இப்படிப்பட்ட ஒரு உடம்பில் வாழ்கிறாய்" என்றால் ஏற்றுக் கொள்ளுமா? அவ்வுயிரி போலத் தான் நாமும். இறைவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலின் வடிவாகிய இவ்வுலகில் வாழ்ந்தாலும், இவ்வுண்மையை உணர்வதில்லை.

நம்மை பிறவியெடுக்க வைத்து, தினந்தோறும் காலையில் எழுப்பி, பலவித எண்ணங்களை தோன்ற வைத்து, பல காட்சிகளை காண வைத்து, பல செயல்களை செய்ய வைத்து, மீண்டும் உறங்க வைப்பது வரை, பிறவிகளின் இறுதியில் நிலைபேறு வழங்குவது வரை அனைத்தையும் நடத்துவது அந்த இறையாற்றலேயாகும். இவ்வாற்றலும் இறைவனும் வேறுவேறல்லர். (1)

இந்த இறைவனை எவ்வாறு வணங்குவது? நம்மிடம் வரும் பணிகளை, பலன் கருதாமல், செவ்வனே செய்து முடிப்பது தான் அவரை வணங்குவதற்குச் சமம். (2) இதைத் தான், அப்பர் பெருமான், "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று அழகாகப் பாடினார். கடமை என்ற சொல்லிற்கு கடன் என்ற பொருளும் உண்டு. எனில், "என் கடமை பணி செய்து கிடப்பதே" என்று மாற்றிக் கொண்டால், பெருமானும், பகவானும் அறிவுருத்துவது ஒன்றையே!! 👏👌

("செய்து முடிப்பது தான் ..." என்று ஏதோ நம் கையில் இருப்பதைப் போல் எழுதியுள்ளேன். இந்தக் குழப்பமெல்லாம் தெளிவு கிடைக்கும் வரை தொடரும். "ஒரேயொரு முறையேனும் மெய்யறிவை துய்த்தால் மட்டுமே மனமடங்கும்", என்கிறார் பகவான். அதுவரை செய்வினை & செயப்பாட்டு வினை என்று மாறி மாறி பயணிக்க வேண்டியது தான். 😀)

🌿🍁🍀

இறுதியாக, கடவுளிடம் நிற்பது எனில் நமது தனியிருப்புக்கு காரணமான நம் மனதை (கவன ஆற்றலை), நான் எனும் நமது தன்மையுணர்வில் (இறை, சிவம், கடவுள் எல்லாம் இதுவே) கொண்டு போய் திரும்ப திரும்ப நிறுத்தவேண்டும். எதுவரை எனில், நமது தனியிருப்பு அழியும் வரை. நாம் வேறு இறைவன் வேறு அல்ல என்ற தெளிவு ஏற்படும் வரை. இவ்வாறு நிறுத்தி நிலைபெறுவது தான் ஆசனம் - அமருதல் - இளைப்பாருதல் - ஒய்வு - அமைதி - #நிலைபேறு என எல்லாம்.

🌼🏵🌹🌻🌷🌺🌼

எண்ணுரு யாவும் இறையுருவாம் என
எண்ணி வழிபடல் உந்தீபற
ஈச நற் பூசனை இது உந்தீபற

- பகவான் ஸ்ரீரமணர், உபதேச உந்தியார்

(எண்ணுரு - எண் + உரு - மனதில் தோன்றும் எண்ணங்கள் அல்லது புற உலகில் காணும் உருவங்கள் (ஐம்பூதங்கள், பகலவன், திங்கள் மற்றும் உயிர் ஆகிய 8 பொருட்களின் கலவை))

🌸 அருணமாமலை ஈர்த்தணைத்துக் கொண்ட குகேசனடி போற்றி 🌸🙏

(இணைப்புப் படம்: அண்ணாமலையாரின் மேலுள்ள சிவன்காளை போன்ற பாறையமைப்பு)

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்புகள்:

1. இவ்விடுகையை நான் எழுதினேன் என்று சொல்லலாம். அல்லது, நான் உண்ட உணவு ஆற்றலாக மாறி, மூளையை செயல்பட வைத்து, உருவான சிந்தனையை, கை எழுத்துருவாக்கியது என்றும் சொல்லலாம். 😀 இது போன்றே, "இவ்வண்டமே இறைவன்" என்பதும், "இறைவனிடமிருந்து வெளிப்படும் ஆற்றலால் உருவாகி, இயங்கி வரும் அண்டம்" என்பதும் ஒன்று தான்.

2. "பலன் கருதாமல் செய்தல்", "வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்" - இவற்றை மிகச் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில், பெரும் இன்னல்களை, அழிவுகளை சந்திக்க நேரிடும்!

தன்னை வைணவத்திற்கு இழுக்க முயன்ற கூட்டத்தை பகவான் திருப்பி அனுப்பியதையும், ஏமாற்ற முயன்ற வேறொருவரை, "உன் கனவில் வந்த அதே கடவுளை எனது கனவிலும் வந்து சொல்லச் சொல். ஏற்றுக் கொள்கிறேன்." என்று முகத்தில் அடித்தாற் போல் பதிலளித்து ஓடவிட்டதையும் நினைவில் கொள்ளவேண்டும். வருவதனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஏற்றுக்கொள்ளச் சொல்லி நமது உள்ளுணர்வு சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில், தவிர்க்கலாம். சாப்பாடும் இறைவனின் படைப்புத்தான். சாக்கடையும் இறைவனின் படைப்புத்தான். இரண்டையும் வேறுபடுத்தி அறியும் அறிவும் இறைவனின் படைப்புத்தான். அறிவை பயன்படுத்தி, ஒதுக்க வேண்டியதை ஒதுக்கி, ஏற்க வேண்டியதை ஏற்றுக் கொள்ளலாம். கடமை என்ற பெயரில் வருவதையெல்லாம் ஒருவன் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தால், பின்னர் எல்லாவற்றையும் கடமை என்ற பெயரில் அவனது தலையில் சுமத்தி விடும் இவ்வுலகம். 😰 எவையெல்லாம் நமது அடிப்படை கடமைகள் என்று உணருகிறோமோ, அவற்றை மட்டும், "நான் செய்கிறேன்" என்ற உணர்வு தோன்றாமல் செய்து கொண்டிருந்தால் போதும்.

நம் சமயத்தின் மிக முக்கியமான தனித்துவமாகிய சகிப்புத்தன்மையும் இங்கிருந்து தான் பிறக்கிறது. இதை வைத்துத் தான் இதுவரையும் நம்மை முட்டாள்களாக்கி வந்துள்ளனர். விடுதலைக்குப் (!?) பின்னர் இந்து-முஸ்லீம் சண்டை உச்சமடைந்திருந்தது. மலபாரில் மாப்ளா என்ற முகம்மதிய காட்டுமிராண்டிப் பிரிவினர், இந்து ஆண்களைக் கொன்று குவித்து விட்டு, இந்துப் பெண்களை ஆடையில்லாமல் ஊர்வலம் போகவைத்தனர்!! 😡😡😡 இதைக் கேள்விப்பட்டு பாரதம் கொதித்த போது, ஒரு நயவஞ்சகன் சொன்னான், "அவர்கள் அவர்களுடைய மத நம்பிக்கையின் பேரில் இதை செய்திருக்கிறார்கள். நாம் நம்முடைய மதம் போதிக்கும் சகிப்புத்தன்மையை கடைபிடிக்க வேண்டும்." (இந்த ரீதியில் இன்னும் மூளைச்சலவை செய்து, காட்டுமிராண்டிகளைக் காப்பாற்றியிருக்கிறான்). 😠 இந்த நயவஞ்சகன் தனது பேத்தி வயதொத்த பெண்பிள்ளைகளுடன் ஆடையில்லாமல் படுத்துக் கொண்டவன். இச்செய்தி வெளிவந்த போது, "தன்னால் தனது ஆண்மையைக் கட்டுப்படுத்த முடிகிறதா என்று தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டதாக" கதை விட்டான்! 😛😜😝

சகிப்புத்தன்மை, (இந்து) மதச்சார்பின்மை போன்றவற்றை நமக்கெதிரான ஆயுதங்களாக உபயோகப் படுத்தப்படுவதை உணர்ந்து கொள்வோம்! நம் சமயம் காப்போம்!! திருவருள் நமக்கு துணைபுரியட்டும்!!! 🙏 (சமயம் என்ற சொல்லிலேயே நமது அடையாளங்கள், திருத்தலங்கள், வாழ்க்கைமுறை என அனைத்தும் அடங்கும்)

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

No comments:

Post a Comment