Wednesday, September 28, 2016

இந்தப் பாரத பூமி மட்டுமா நமக்கு சொந்தம்?

சமயம், மொழி, குடும்ப அமைப்பு, வாழ்க்கை முறை, உணவு, மருத்துவம், கட்டிடம், இசை, கடல், வானம் என அணு முதல் அண்டம் வரை அனைத்து அறிவின் பிறப்பிம் நாமே!!

பதிவு செய்யப்பட்ட வேத காலம் முதல் ராமாயண காலம் வரை பெரும்பாலான மகரிஷிகளும், மகாபாரதத்தில் வரும் சில மகரிஷிகளும் அன்றைய திராவிட தேசத்திற்குள்ளேயே சமாதியாகிருப்பது இதற்குச் தக்கச்சான்று. நாம் அனைத்திலும் சிறந்து விளங்க இந்த மகரிஷிகளே காரணம். 🙏

"பழுத்த மரம் கல்லடி படும்" என்பது போல, நமது சிறப்புகளே நமது அழிவுக்கும் காரணம். அன்று நாம் அனைத்திலும் சிறந்து விளங்கியதால் ஆரியர், முகம்மதியர், பரங்கியர் என அத்தனை படையெடுப்புகள் நிகழ்ந்துள்ளன. 😢

"புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது" என்று பழமொழி கண்ட நாம், இன்று இலவசங்களைத் தேடி ஓடும் பிச்சைக்காரர்களாகவும், அந்நிய சக்திகளின் கைகூலிகளாக, சொந்த மண்ணின் அடையாளங்களை அறிவுச் செல்வங்களை எள்ளி நகையாடும் அழிக்கத்துடிக்கும் கருங்காலிகளாக மாறியுள்ளோம். 😠

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

#அம்பேத்கர் #ஜோதிபாசு

No comments:

Post a Comment