Sunday, May 8, 2016

தோண்டிக் கண்ட மேடு - அரிக்கமேடு


(தினமலர் - பட்டம் - சென்னை - 09/05/2016)

அரிக்கமேடு என்பது தமிழனின் நாகரிகம் மற்றும் பழமைக்கு ஒரு சிறு சான்று தான்!

✨ 7000 வருடங்களுக்கு முன்னரே சிரியாவின் அலெப்போ மற்றும் லெபனானின் பால்பெக் நகரங்களில் நம் முன்னோரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. பால்பெக் நகரின் மலையிலுள்ள ஒரு கோயிலின் அடித்தள கற்கள் மட்டும் சுமார் 300 டன் எடை கொண்டவை. அவற்றை கீழிருந்து மேலே கொண்டுசென்றது நம் தமிழர்களே (ஆதாரம்: ஈஷா வெளியீடான Bha-Ra-Taபுத்தகம்).

✨ மாயன் நாகரிகத்தினரின் திட்டமிட்ட நகரங்களும் பிரமிடுகளும் நமதே என்பார் மறைந்த திரு. வை கணபதி ஸ்தபதி.

✨ மகாபாரதத்தில் வரும் மயசபையைக் கட்டிய மயனும் தமிழனே. இவரே ஆரியர்களால் விஸ்வகர்மா என்றழைக்கப்பட்டார். எனில், கடல் கொண்ட ஸ்ரீகிருஷ்ணரின் துவாரகையும் இவர் நிர்மாணித்ததாகும்.

✨ உலகின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுமிராண்டிகள் வாழ்ந்தபோதே திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்களில் சுகாதார உட்கட்டமைப்புகளோடு வாழ்ந்தவன் தமிழன். உதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம்.

இவையெல்லாம் சரியான வரலாற்றுப் பதிவுகள் இல்லாத காலத்தியவையாகும். பதிவு செய்யப்பட்ட வரலாற்று காலத்திலிருந்து எண்ணிலடங்கா உதாரணங்களைத் தர முடியும்...

🔥 அடித்தளமே இல்லாமல் கட்டப்பட்ட திருச்சி மலைக்கோட்டை
🔥 சில அடிகளே அடித்தளம் கொண்ட தஞ்சை பெரிய கோயில்
🔥 ஓடும் நதியின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் முதல் அணையான கல்லணை
🔥 ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மாமல்லபுரம் ஐந்து ரதக் கோயில்கள் மற்றும் அது போன்றே உருவாக்கப்பட்ட எல்லோரா கோயில்கள்
🔥 கீழிருந்து மேலாக ஆற்றுநீரைக் கொண்டு செல்லும் ஈரோடு பகுதியிலுள்ள ஒற்றைக்கரை கால்வாய்

ரோமானியப் பேரரசின் வீழ்ச்சியால் முடங்கிய கடல் வாணிபம், தொடர்ந்த அரசியல் மற்றும் மத படையெடுப்புகள், 1000 வருடங்களுக்கும் மேலான தமிழரல்லாத ஆட்சி, கடந்த 50 ஆண்டு கால பீடைகளின் ஆட்சி, வெளியிலிருந்து பரங்கியர்கள் ஆட்சி புரிய உதவிய கருங்காலிகள் என பல காரணிகளால் தமிழனின் கலாச்சாரமும், மொழியும், சமயமும் கிட்டதட்ட அழியும் நிலைக்கு வந்துவிட்டன!! 😢

posted from Bloggeroid

No comments:

Post a Comment