Tuesday, July 25, 2023

திருக்கழுக்குன்றக் கழுகுகள் பற்றிய புகழ்பெற்ற புனைவும், அதன் உட்பொருளும்


திருக்கழுக்குன்றக் கழுகுகள் பற்றிய புகழ்பெற்ற புனைவு:

கழுகுகள் இராமேசுவரத்தில் குளித்து, கழுக்குன்றத்தில் உணவு உண்டு, காசியில் அடைக்கலம் ஆவதாக தொன்நம்பிக்கை.

இப்புனைவின் உட்பொருள்:

🌷 இராமேசுவரம்

> இராமேசுவரம் - கடல்.
> கடல் - உடல்.
> இராமேசுவரத்தில் குளித்து - கடலில் குளித்து - உடலில் வாழ்ந்து.

🌷 கழுக்குன்றம்

> கழுக்குன்றம் - தலை / முகம். விழிப்பு நிலையில் நமது கருத்து பெரும்பாலும் தலையில் / முகத்திலிருக்கும். மனம் அங்கிருந்து இயங்குவதாக கணக்கு. மனதில் எண்ணங்கள் ஓயாமல் தோன்றிக் கொண்டேயிருக்கும்.

> கழுக்குன்றத்தில் உணவு உண்டு - மனதில் தோன்றும் எண்ணங்களின்படி அலை கழிந்து.

🌷 காசி

> காசி - ஒளிபொருந்திய / இருளற்ற இடம். 
> இருள் - உடல், வையம் ஆகியவற்றை உண்மையென்று நம்பும் அறியாமை.
> ஒளி - நாமே உள்ளபொருளென்ற மெய்யறிவு. நமது தன்மையுணர்வு.
> காசியில் அடைக்கலம் ஆவது - நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக (சிவமாக) - மட்டுமிருப்பது.

இப்போது, எல்லாவற்றையும் இணைத்துப் பார்ப்போம்:

பிறவியெடுக்கும் உயிர்கள் (கழுகுகள்) உடலின் வழியே வையத்தை நுகர்ந்துகொண்டு, மனதில் தோன்றும் எண்ணங்களின் படி அலைகழிக்கப்பட்டு, இறுதியில், நிலைபேற்றினை அடையும்.

oOo

🌷 கழுக்குன்றம் என்ற சொல்லிற்கு வேறொரு பொருளும் காணலாம்:

> கழு - கூர்மையான
> குன்றம் - மலை - நெடிய - உயர்ந்த
> கழு + குன்றம் - கூர்மையான அறிவு கொண்ட உயர்ந்த மனிதர் - மெய்யறிவாளர்!!

இப்போது மீண்டும் பொருள் காண்போம்:

உடலெனும் [இராமேசுவர] கடலில் மூழ்கியிருக்கும் உயிர்கள், தக்க சமயம் வந்தபின், [கழுக்குன்றமாகிய] மெய்யறிவாளரின் தொடர்பு பெற்று, அவர் கூறும் அறிவுரைகளை கேட்டு [உணவு உண்டு], இறுதியில், [காசியாகிய] நிலைபேற்றினை அடையும்.

(இணைப்புப்படம்: திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் உடையவர் 🌺🙏🏽🙇🏽‍♂️)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

4 comments:

  1. Thanks for your contribution towards Aadhi saivam in one of your posts. Appreciate your work. Very effective content. Is there any possibility to publish also in english. A humble request.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your appreciation! 🙏🏽

      My English isn't as good as my Thamizh. My thought process is also completely in Thamizh. In addition, it's taken me years to come to a certain level in Thamizh. To reach the same level in English i may need several more years which i don't have.

      I hope you can understand my situation.

      I am sorry. Again, thanks for asking.

      Delete
    2. thanks for your response. I totally understand your limitations with respective to time availability. Just a second thought why not you convert the content as Audio/Video (AV). which will spread the content WW. Sincerely appreciate your work on collaborating the content. I am not against to the tamil script, but I being overseas convent educated, I have limited reading speed in tamil. I am very much into tamil siddhar practice of Saivam. Again thanks for your response.

      Delete
    3. Thank you for your suggestion. As i told you earlier, my work is already cutout for me. Let me see if anyone in my circle is interested.

      Delete