Saturday, July 22, 2023

திருப்பனந்தாள் திருக்கோயிலின் புனைவுக்கதையும் (தலவரலாறு) அதன் உட்பொருளும்!


🔸 புனைவுக் கதை

மகப்பேறு வேண்டி, வழிபாடு செய்து, தனக்கு மாலையணிவிக்க முயன்ற தாடகை என்ற பெண்ணுக்காக, இத்திருக்கோயிலின் உடையவரான திரு செஞ்சடையப்பர் சற்றே சாய்ந்தார். பின்னர், சாய்ந்த நிலையிலேயே இருந்தவரை, மன்னர் மணிமுடி சோழன் (திரு மங்கையர்கரசியாரின் தந்தை) தனது படை கொண்டு நிமிர்த்த முயற்சித்து தோல்வியடைந்தார். இதை கேள்விபட்டு அங்கு வந்த திரு குங்கிலியக்கலய நாயனார், உடையவரின் மீது கட்டப்பட்டிருந்த கயிற்றையெடுத்து தனது கழுத்தில் கட்டிக்கொண்டு, "ஒன்று உடையவர் நிமிரவேண்டும். இல்லையேல், தான் மடியவேண்டும்." என்று உறுதி பூண்டு இழுக்க, அவரது அன்புக்கு கட்டுப்பட்டு உடையவரும் நிமிர்ந்தார்.

🔸 உட்பொருள்

🌷 தாடகை

அன்னை மாயை (ஆணாகயிருப்பின், மாயோன்). மனதை குறிக்கும்.

🌷 தாடகை வேண்டும் மகப்பேறு

எண்ணங்கள் -> செயல்கள் -> விளைவுகள் -> எதிர் விளைவுகள்...

சிவ நிலையிலிருப்போர் விட்டுக் கொடுத்தால் மட்டுமே மேற்சொன்னவை நடக்கும். அப்படி விட்டுக் கொடுத்தால் பிறவி ஏற்பட்டுவிடும். இதுவே "திரு செஞ்சடையப்பர் சற்றே சாய்ந்தார்" என்பதின் பொருளாகும்.

🌷 மன்னர் மணிமுடி சோழன்

"நான்", "எனது" தொடங்கி, பல வகையான பற்றுகளை (செல்வங்களை) சேர்த்து வைத்திருக்கும் நபர்.

🌷 மன்னரது முயற்சிகள்

புறமுக முயற்சிகள். எத்தனை நூல்கள் படித்தாலும் இறைநிலை கிட்டாது. அவை வழிகாட்டும். இறைநிலையை கொடுத்துவிடாது. பெரும் பொருள் செலவு செய்து, பல திருக்கோயில்களுக்கு சென்றாலும், பல திருப்பணிகளை செய்தாலும் இறைநிலை கிட்டாது. அவை நல்வினைப் பயன்களை கொடுக்கும். இறைநிலையை கொடுக்காது.

🌷 குங்கிலியக்கலய நாயனார்

எல்லாப் பற்றுகளையும் விட்டொழித்தவர். இறைசிந்தனையை தவிர வேறு சிந்தனையில்லாதவர். குடும்ப வாழ்விலும் இருப்பவர்.

🌷 நாயனார் உடையவரை தன் கழுத்தால் கட்டியிழுத்து நிமிர்த்தியது

> வையகம் என்பதென்ன? சுவை, ஒளி, ஊறு, ஓசை & நாற்றம் (திருக்குறள் #27). இவற்றில் ஊறு என்ற புலன் மட்டும் உடல் முழுவதும் பரவியுள்ளது. மீதமனைத்தும் கழுத்துக்கு மேலேயுள்ளன. கழுத்தில் கயிறு கட்டுவதென்பது இப்புலன்களின் வழியே பெறப்படும் வையகக் காட்சியை நமக்குள் செல்லவிடக்கூடாது என்பதாகும்.

> நாம் அழியும் பொருளல்ல. அசையும் பொருளுமல்ல. நாமே உள்ளபொருள். இவ்வுண்மைகளை உணர்ந்து, நம்மை நாமே நிமிர்த்திக் கொள்ளவேண்டும். நம்மில் (நமது தன்மையுணர்வில்) நாமே உறுதியாக நிற்றல்வேண்டும். இதுவே உடையவரை நாயனார் நிமிர்த்தினார் என்பதின் பொருளாகும்.

oOo

மேற்கண்டவற்றை சுருக்கினால்:

- மனதை சலிக்கவிடக்கூடாது
- சலிக்கவிட்டால் நம் நிலை தாழ்ந்துபோகும்
- இறைநிலையை புறமுகத்தில் தேடக்கூடாது
- அகமுகமாக தேடவேண்டும்
- வையகக் காட்சிகளால் பாதிப்படையக் கூடாது
- நமதுண்மையை உணர்ந்து அதில் நிலைபெறவேண்டும்

இக்கருத்துகள் மக்களிடையே எளிதில் பரவுவதற்கும், என்றும் நிலைத்து நிற்பதற்கும் யாரை வேண்டுமானாலும் வைத்து கதையை புனைந்திருக்க முடியும். ஏன் சோழ மன்னரையும், நாயனாரையும் தேர்ந்தெடுத்து சிறப்பித்தார்கள்? ஏனெனில், அத்திருக்கோயிலுக்கு / அப்பகுதிக்கு அவர்களது பங்களிப்பு அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். இதை வையகம் மறவாதிருப்பதற்காக அவர்களை வைத்து கதையை புனைந்துள்ளனர்.

கதைகள், உவமைகள், எடுத்துக்காட்டுகள் என யாவும் இப்படி எழுதப்படவேண்டும். அந்தந்த பகுதிகளின் அடையாளங்களை, அருமை பெருமைகளை பேசவேண்டும். ஆனால், நம் தலையெழுத்து நமக்கு மூன்று 🤬-கூட்டங்கள் வாய்த்துள்ளன:

👊🏽 ஒரு கூட்டம், ரிஷிவர்ஷா ஐட்டங்களின் பின்னால் சென்றவனை வைத்து படங்காட்டும்
👊🏽 இன்னொரு கூட்டம், அரேபியாவில் ஒட்டகச்சாணி அள்ளிக் கொண்டிருந்தவனை வைத்து புருடா விடும்
👊🏽 மற்றுமொரு கூட்டம், ஐரோப்பாவில் பிளேடு போட்டுக் கொண்டிருந்தவனை வைத்து பீலா தள்ளும்

ஓர் இனத்தை அவ்வினமேதான் ஆளவேண்டும். நம்மை நம்மில் பண்பட்டோரே தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால், பராமரித்திருந்தால்... 😍😍!!

என்றாவதொரு நாள் மீண்டும் நல்லது நடக்கும்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment