Tuesday, September 6, 2022

மாமுனி மயன் பற்றிய சில தகவல்கள்


🌷 இனத்தால் தமிழரான இவர் மயன், மயாசுரன், விசுவகர்மா, மாமுனி மயன் என பல பெயர்களால் அறியப்படுகிறார்.

🌷 இவர் பேரரசர் இராவணனின் மாமானாராவார் (மண்டோதரியின் தந்தை).

🌷 இவரை பற்றி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த விட்ருவியஸ் என்ற உரோமானிய கட்டிட வடிவமைப்பாளர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

🌷 இவர் எழுதிய ஸ்தாபத்ய வேதம் எனும் நூல் அனைத்து வேதங்களுக்கும் காலத்தால் முந்தையதாகும்.

🌷 இவரது ஐந்திரம் எனும் நூல் உலகின் முதல் அறிவியல் நூலாகும். இந்நூலை கற்றுத் தெளிந்த பின்னரே சைவ சிந்தாந்தம் மற்றும் ஏனைய சமய நூல்களை கற்றிருக்கிறார் வள்ளலார் 🌺🙏🏽🙇🏽‍♂️. இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள "தொலைதூர கோள்களுக்கான பயணம்" பற்றி மேலை நாடுகளில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.

(இத்தகவல்கள் யாவும் மறைந்த முனை. கணபதி ஸ்தபதி அவர்களின் பேச்சு & எழுத்துக்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ள இரு நூல்களையும் ஸ்தபதி அவர்கள் தனது இறுதி காலம் வரை ஆராய்ந்து கொண்டிருந்தார். மாயன்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று, ஆராய்ந்து, மாயன் நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றேயென்று அறுதியிட்டுக் கூறினார். இறப்பதற்கு முன், மாமுனி மயனுக்காக ஒரு பெரிய கோவிலை, மாமல்லைக்கு அருகிலுள்ள தனது சிற்பக்கூட வளாகத்தில் கட்டத்தொடங்கியிருந்தார்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment