Showing posts with label பிறை கண்டீரா?. Show all posts
Showing posts with label பிறை கண்டீரா?. Show all posts

Monday, May 9, 2022

பிறை கண்டீரா?

இவ்விடுகையின் முன் பகுதியை யார் வேண்டுமானாலும் படிக்காலும். ஆனால், மதச்சின்னங்கள் & குறியீடுகளைப் பற்றிய அடிப்படைகளை ஒரளவேனும் தெரிந்தவர்களே பின் பகுதியை படிக்கவேண்டும். இல்லையெனில், அதிர்ச்சி, கோபம், அருவருப்பு போன்ற உணர்வுகளே மிஞ்சும்; உண்டதும் வெளிப்படக்கூடும்!!

oOo

ஒரு வெப்பமான, வறண்ட பகுதியில் வாழ்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். கோடைகாலம் வருகிறது. அதிலும், சுட்டெரிக்கும் காலம் வருகிறது. என்ன செய்வோம்? முடிந்தவரை பகலில் வெளியே செல்வதை தவிர்ப்போம்.

இன்னும் சற்று கடினமான சூழ்நிலையை கற்பனை செய்வோம். மின்சாரம் & கருவிகள் ஏதுமில்லாத காலம். பகலில் நீர் பருகினால் கூட வியர்வை வழியுமளவிற்கு வாட்டும் வெயில். என்ன செய்வோம்? பகலில் உட்கொள்வதை தவிர்ப்போம். மாலையில் பகலவனின் மறைவிற்கு பின்னரும், காலையில் பகலவன் தோன்றுவதற்கு முன்னரும், உணவு சமைத்து உண்போம்.

இத்தகைய சூழ்நிலை ஒரு மாத காலம் நீடிக்கும் என்று வைத்துக் கொள்வோம். இன்றிருப்பது போன்று வங்கி அமைப்புகளுமில்லை என்று வைத்துக் கொள்வோம். எத்தனை பேரால் தாக்குப்பிடிக்கமுடியும்? வசதி, வாய்ப்புள்ளவர்கள் தாக்கும் பிடிப்பார்கள்; இதை வாய்ப்பாக பயன்படுத்தி மற்றவர்களது வேலைகளை, தொழில்களை, வணிகத்தை மடை திருப்பவும் செய்வார்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு சீர்குலையும்; பொருளாதார ஏற்றதாழ்வுகள் மிகும். இதையெப்படி அப்பகுதி ஆட்சியாளார் சமாளிப்பார்? பகலில் எல்லோரும் வீட்டிலேயே இருக்கும்படி ஆணை பிறப்பிப்பார்.

எல்லோராலும் ஒரு மாத காலம் வீட்டில் சும்மாவிருக்கமுடியுமா? அன்றாடம் பொருளீட்டுவோர் என்ன செய்வார்கள்? வீட்டில் சண்டை, சச்சரவு பெருகும். இனப்பெருக்கம் நடக்கும். மக்கள் தொகை பெருகும். இவற்றையெல்லாம் ஆட்சியாளர் எவ்வாறு சமாளிப்பார்? இவற்றிற்கான தீர்வு: இறைசிந்தனை & பகிர்ந்துண்ணல். (சாமிகுத்தம் என்ற சொல்லுக்கிருக்கும் ஆற்றல் வேறெதற்கும் கிடையாது!)

இவைதாம் நோன்பின் அடிப்படை பின்னணியாகும்.

ஆனால், மேற்கண்ட ஏதுக்கள் எதுவும் இன்றில்லை. மேலும், அவர்கள் வாழும் பகுதிகள் யாவற்றிலும் அவர்களது தாயகப் பகுதியின் தட்பவெப்பம் நிலவவில்லை. அப்பகுதிக்கு அருகிலிருக்கும் நம் நாட்டில்கூட கோடையின் கொடுமையான பகுதி தற்போதுதான் தொடங்குகிறது. ஆனால், நோன்புகாலம் ஏற்கனவே முடிந்துவிட்டது! ஆண்டின் 9வது மாதம் என்று கணக்கிடுவதைவிட, நோன்புப் பெயரின் வேர்ப்பொருளான "வெப்பத்தைக்" கொண்டு அவர்கள் கணக்கிட்டிருந்தால், கொண்டாடும் காலம் அந்தந்த பகுதியில் நிலவும் பருவநிலைக்கேற்ப இருந்திருக்கும்.

oOo

அடுத்து, ஒரு சிறு கதை.

பாலைவனப் பகுதி. இரவு சூழத்தொடங்கிய நேரம். மேகங்களற்ற வானில் பிறைநிலவு வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

"நான் இவ்வுடலல்ல" என்ற நூலறிவு மட்டுமுள்ள, திருமணமான, எதையும் சற்று மாற்றிக்காணும் கண்ணோக்கமுள்ள நபரொருவர் ஒரு மலைக்குகையில் வடக்கிருக்கிறார்.

அவரது முன்வினைப்பயன்களின் விளைவாக, ஒரு சமயத்தில், உடலின் கீழ் பகுதியிலிருந்து ஓர் உணர்வு திரண்டு, மேல் நோக்கி, வெகு விரைவாக வந்தது. அதை அவர் தெளிவாக உணர்கிறார். உடன், உடல்-உலக காட்சிகள் மறைவதைக் காண்கிறார். இது நாள்வரை தான் தேடிய தன்னை இப்போது தெளிவாக உணர்கிறார். சில விநாடிகள் கழிந்தன. அன்னை மாயை தனது வேலையைத் தொடங்குகிறார். அந்நிலையிலிருந்து அவரை வெளியே தள்ள முயற்சிக்கிறார். இவரும் வெளிப்பட்டுவிடுகிறார். மீண்டும் உடல்-உலக காட்சிகள் தோன்றின.

இப்போது, அவருக்கு கிடைத்த துய்ப்பைப் பற்றி ஆழமாக சிந்திக்கிறார். குறிப்பாக, உடலின் கீழிருந்து திரண்டு வந்த உணர்வைப் பற்றி வெகுவாக சிந்திக்கிறார். பொறி தட்டுகிறது!

உடலுறவின் இறுதியில் விந்து வெளியேறும்போது இதுபோன்ற உணர்வு தனக்கு கிடைத்தது நினைவுக்கு வந்தது. இப்போது தோன்றிய உணர்வு உடலின் கீழிருந்து மேலாக பயணித்தது. விந்து வெளியேறும்போது தோன்றிய உணர்வு குறிப்பகுதியில் தோன்றியது. ஆனால், அதன் பிறகு தனக்கு கிடைத்த துய்ப்பு, இப்போது கிடைத்திருக்கும் துய்ப்போடு ஒத்துப்போவதைக் கண்டார். "விந்து வெளியேறும்போது கிடைத்தது ஒரிரு விநாடி துய்ப்பு. இப்போது கிடைத்தது பல விநாடி துய்ப்பு. வேறுபாடு நேரத்தில்தான். மற்றபடி துய்ப்பு ஒன்றுதான்." என்ற உண்மையை உணர்ந்துகொண்டார்.

தனது முடிவு சரிதானா என்றொரு ஐயம் அவருள் எழுந்தது. வானைப் பார்த்தார். கருவானில் பிறைநிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தது. எதையும் மாற்றிக்காணும் கண்ணோக்கமுள்ள அவருக்கு, அந்த பிறைநிலவு ஓர் ஆண்குறித் திறப்புபோன்று தோன்றியது. ஏற்கனவே தனக்கு கிடைத்த துய்ப்பை விந்து வெளியேறுதலோடு ஒப்பிட்டுப்பார்த்தவருக்கு அக்காட்சி, "இறைவன் தனது கூற்றை ஆதரிக்கிறார்" எனத் தோன்றியது.

காட்சிகளை விலக்கி, அன்னை மாயை அவருக்கு உணர்த்திய அவரது உண்மையைப் பற்றி மேன்மேலும் சிந்தித்திருந்தால் விளைவுகள் வேறு வகையாக இருந்திருக்கும். ஆனால், அன்னையிடமிருந்து தப்புவது அவ்வளவு எளிதல்லவே! விந்து வெளியேற்றமே அவரை ஆட்கொண்டது. விளைவு...

ஆண்-பெண் குறிகளையும், கலவியையும் உணர்த்தும் வடிவில் கட்டிடங்களைக் கட்டினார். தன்னை பின்பற்றும் ஆண்களை ஆண்குறிகள் போன்றும், பெண்களை பெண்குறிகள் போன்றும் தோற்றமளிக்கச் செய்தார். ஒரு காட்சிக்கு தீர்வாக இன்னொரு காட்சியைப் பரிந்துரைத்தார்!

உலகில் இதுவரை தோன்றிய வேறெந்த மாமுனிவரின், மெய்யறிவாளரின், அருளாளரின், இறைதூதரின் மறைவு ஏற்படுத்தாத விளைவை இவரது மறைவு ஏற்படுத்தியது: ஆங்காங்கே பலர் தங்களை அடுத்த இறைதூதர்களாக அறிவித்துக் கொண்டனர்!!!

இறைவன் மிகப் பெரியவன்!!

oOo

"பிறை கண்டீரா?" எனில் "மெய்யறிவு பெற்றீரா?" என்று பொருள்.

கலவி -> பிறை போன்ற திறப்பிலிருந்து விந்து வெளியேற்றம் & உடன், உடலுணர்வு மறைதல் -> தன்னையுணர்தல் (மெய்யறிவு).

மிகச்சிறப்பான கலவியாக அமைந்தால், பெண்ணும் தன் உடல் உணர்வையிழந்து, தன்னை முழுமையாக உணரமுடியும்.

oOo

நம்மை நாமுணர செய்யவேண்டியதெல்லாம் எதுவும் செய்யாதிருத்தலே!! காலகாலமாக இருக்கும் இது போன்ற எளிய நுட்பங்களை விட்டுவிட்டு புணருதல், எங்கும் எதிலும் குறிகளை, விந்து வெளியேற்றத்தைக் காணுதல் என்பது...

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮