ஒரு கணக்கில், திரு பச்சையம்மன் இயற்கையைக் குறிக்கிறார். இன்னொரு கணக்கில், எல்லாப் பற்றுகளும் நீங்கி, உடல்-உலக காட்சிகளும் நீங்கிய பின்னர், மீதமிருக்கும் "நான் நானே" என்ற அறிவைக் குறிக்கிறார்.
இந்த அறிவு உள்ளபொருளிலிருந்து வேறானதல்ல என்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️. வெள்ளை நிற பெருமானும், பச்சை நிற அன்னையும் அமர்ந்திருக்கும் உருவகத்திலுள்ள பெருமான் உள்ளபொருளையும் (நான் / இருப்பு), அன்னை உள்ளபொருளைப் பற்றிய அறிவையும் (இருக்கிறேன்) குறிக்கிறார்.
பெருமான் + அன்னை
வெள்ளை (ஒளி) + பச்சை
இருப்பு + அறிவு / உணர்வு
நான் + இருக்கிறேன்
இவ்விரண்டும் வேறு வேறல்ல. அல்லது, இவ்விரண்டையும் பிரிக்கவியலாது. இந்த இருப்புணர்வே மெய்யறிவு எனப்படும். இவ்வுணர்வில் நிலைத்து நிற்பதே விடுதலையெனப்படும். நாம் இருக்கிறோமா என்பதில் நமக்கு ஐயமில்லை. இதையுணர இன்னொருவர் உதவியும் தேவையில்லை. இவ்வகையில், நாம் அனைவரும் பச்சையம்மன்களே!
oOo
திரு பச்சையம்மன் திருவுருவில் 3 கருவிகளைக் காணலாம். அம்மனை தனியொரு நபராக, வேறெங்கோ இருப்பவராக காணும் போது:
🌷 திரிசூலம் - கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளிலிருந்து நம்மை விடுவிப்பவர்
🌷 பாசம் - உடல்-உலக சிறைக்குள் நம்மை தள்ளுபவர்
🌷 அங்குசம் - உடல்-உலக சிறையிலிருந்து நம்மை மீட்பவர்.
அம்மனை "நான் நானே" என்ற நிலையிலிருப்பவராக காணும் போது:
🌷 திரிசூலம் - கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளையும் கடந்தவர். மற்றும், மெய்யறிவு உடையவர்.
🌷 பாசம் - மெய்யறிவாளர் விரும்பினால், உடல்-உலக சிறைக்குள் மீண்டும் சிக்கிக் கொள்ளவும் முடியும்
🌷 அங்குசம் - அவர் முயற்சித்தால், உடல்-உலக சிறையிலிருந்து மீளவும் முடியும்
பாசம் & அங்குசத்தை பிள்ளையாரிடமும் காணமுடியும். அங்கும் இதே பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment