Tuesday, November 9, 2021

டியூன் (Dune) திரைப்படத்தில் இடம் பெறும் மெய்யியல் காட்சிகள்



பின்வரும் உரைகள் அண்மையில் வெளிவந்த டியூன் (Dune) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம் பெறுகின்றன.

1. படத்தின் தொடக்கத்திலும், 3/4 பங்கு முடியும் போதும் பின்வரும் உரை இடம் பெறுகிறது:

நான் அச்சமடையக் கூடாது. அச்சமடையக் கூடாது.
அச்சத்தைக் கொண்டு மனதைக் கொல்லலாம்.
அச்சமென்னும் சிறிய இறப்பு பிறவியெனும் பெரிய இறப்பிற்குள் தள்ளிவிடும்.
அச்சத்தை எதிர்கொள்வேன். அது என்னை கடந்து போகும்.
அச்சம் என்னை கடந்து சென்ற பின்னர் என்ன மிச்சமிருக்கும்?
நான் மட்டும் இருப்பேன். நானாக இருப்பேன்.

தமிழுக்கேற்றவாறு சற்று மாற்றியிருக்கிறேன். இதன் மூல ஆங்கில உரை பின்வருமாறு:

I must not fear. I must not fear.
Fear is the mind-killer.
Fear is the little death that brings obliteration.
I will face my fear and I will permit it to pass over me and through me.
And when it has gone past…
I will turn the inner eye to see its path.
Where the fear has gone there will be nothing.
Only I will remain.

இந்த அருமையான உரையை "மனனஞ் செய்ததை ஒப்பித்தல்" போன்று காட்சிப்படுத்தியுள்ளனர்! இதை விட, 2013ல் வெளிவந்த After Earth என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். சாவைப் பற்றிய அச்சத்தை Ursa என்ற விலங்காக சித்தரித்து, அதை வென்று மெய்யறிவு பெறுவதை Ghosting என்ற உத்தியாக சித்தரித்திருப்பார்கள்.

இவ்விரு திரைப்படங்களின் உரைகளை எழுதியவர்களை நன்கு ஆராய்ந்தால் பின்னணியில் பகவான் திரு ரமண மாமுனிவர்தான் 🌺🙏🏽🙇🏽‍♂️ இருப்பார். குறிப்பாக, மதுரையில் 1896-ல் அவருக்கு ஏற்பட்ட முதல் இறப்புத் துய்ப்புதான் அடிப்படையாகவிருக்கும். பின்னொரு நாளில், அந்த துய்ப்பை பற்றி அன்பரொருவர், "மெய்யறிவு கிடைத்தவுடன் தங்களுக்குள் என்ன நடந்தது?" என்று கேட்டதற்கு பகவான், "அத்தோடு எனது சாவச்சம் நீங்கிற்று" என்று பதிலளித்தார்.

திரு மார்க்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித் தலமான திருக்கடவூர் தலவரலாறும் சாவச்சத்தைப் பற்றியதுதான். இந்த தலவரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் மடங்கல் பெருமாள் திருவிறக்க கதை (நரசிம்ம அவதாரம்).

2. திரைப்படத்தின் இறுதி கால் பங்கில் பின்வரும் உரை இடம் பெறுகிறது:

கண் முன்னே விரியும் காட்சி என்பது விடுவிக்கப்படவேண்டிய புதிரன்று.
துய்க்கப்படவேண்டிய ஒன்று.
விரியும் காட்சியை நிறுத்தமுடியாது. விட்டு விலகவும் முடியாது.
கடல் அலைகளை எதிர்க்காமல், அவற்றோடு சருக்கி விளையாடுபவர்கள் போன்று காட்சிகளை கண்டுகளித்திருக்கவேண்டும்.

இதையும் தமிழுக்கேற்றவாறு நிறையவே மாற்றியிருக்கிறேன். இதன் மூல ஆங்கில உரை பின்வருமாறு:

The mystery of life isn't a problem to solve.
But a reality to experience.
A process that cannot be understood by stopping it.
We must move with the flow of the process.
We must join it. We must float with it.

இந்த உரையை விட, இது திரையில் பேசப்படும் போது பின்புறம் ஓடும் காட்சி அருமையாகவிருக்கும். மணல் துகள்கள் நிலையற்று, வேகமாக, ஒரு வடிவமைப்பில் இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பது போன்ற காட்சி பின்புறத்தில் ஓடிக் கொண்டிருக்கும். அணு நிலையில் உலகிலுள்ள யாவும் நிலையில்லாமல், ஓர் ஒழுங்கில் அசைந்து கொண்டிருப்பதை இப்படி சித்தரித்திருக்கிறார்கள்.

மேற்கண்ட உரை மற்றும் பின்புறக் காட்சியை ஓவியமாக்கினால்... அம்மையப்பரின் திருநடனம் கிடைக்கும்!! 😍

oOOo

இந்த டியூன் படம் போன்று பல ஹாலிவுட் திரைப்படங்களில் உள்ளபொருளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

ஆனால், நமது திரைப்படங்களில்...

பிணக்குறியீடுகள், தசமபாகம் பெறும் தொழில் நிறுவனக் கட்டிடங்கள், காட்டுமிராண்டிப் பெயருடைய நல்லவர்கள், திருநீறு பூசிய அல்லது இந்துப் பெயருடைய கொடூரர்கள், "திருமணத்திற்கு முன் கலப்பதில் தவறென்ன இருக்கிறது?" என்ற பகுத்தறிவு கேள்விகள் ... 😔😡

இந்த அவல நிலை ஒரு நாள் முடிவுக்கு வரும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment