"பாலியல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் #சாத்தான்கள் உள்ளன. பிஷப்களின் நற்பெயரை கெடுக்க அவர்களுக்குள் இருக்கும் சாத்தான்கள் இப்படி செய்கிறது", என்றார் போப் பிரான்சிஸ்!! (http://m.dinamalar.com/detail.php?id=2102337) 😀
இது போன்றொரு கருத்தை நம் ஆதீனங்கள், ஆச்சார்யார்கள், ஈஷா / ஸ்ரீஸ்ரீ போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியிருந்தால் இந்நேரம் பாரத ஊடகத்துறை, குறிப்பாக சமூக வலைத்தளங்கள், ஓவர்டைம் பார்த்துக் கொண்டிருக்கும். தமிழ்நாட்டில் பகுத்தறிவு பகலவன் (1), டார்ச்லைட், தீப்பந்தம், தீக்குச்சி போன்ற உயிரினங்கள் கண்டனம் தெரிவித்திருக்கும். என்ன செய்வது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! 😛
🌸🏵🌺🌻🌷🌹🌼
நம் சமயத்தில் #மாயை எனப்படுவது தான் ஆப்ரகாமிய மதங்களில் #சாத்தான், #சைத்தான் என்றழைக்கப்படுகிறது. ஆத்மா ஆதாம் ஆனக் கதை போல் தான் இதுவும். "மாயை என்பது இறைவனிடமிருந்து தோன்றும் ஒரு அழகான அருமையான ஆற்றல்" என்று பெண் தத்துவமாக நமது மகான்களால் விளக்கப்பட்டது, மத்திய கிழக்கு ஆசிய பாலைவனப் பகுதியைச் சென்றடைந்த போது "கோரமான, கொடூரமான, இறைவனுக்குச் சமமான ஒரு ஆண் தத்துவமாக" மாறிவிட்டது. 😁 இதற்குக் காரணம் அன்று அங்கிருந்த மக்கள் கூட்டம். ஒரு கூட்டம் தலைமுறை தலைமுறையாக கல்வி அறிவு மறுக்கப்பட்டு அடிமையாக வாழ்ந்து கொண்டிருந்த கூட்டம். இன்னொரு கூட்டம் கலாச்சாரமற்ற காட்டுமிராண்டிக் கூட்டம். இதனால் தான் சாத்தான் என்று பயமுறுத்தியிருக்கிறார்கள். மதுபான ஆறு, மேலாடையற்ற 72 அழகிகள் என்றெல்லாமும் பூ சுற்றி ஆள் சேர்த்திருக்கிறார்கள் (சற்று யோசிக்கத் தெரிந்த காட்டுமிராண்டி கேட்கிறான், "72 அழகிகளை ஒரு ஆண் எப்படி அனுபவிப்பது?". 😀 பதில் சொல்ல வேண்டியவரின் நிலை எப்படி இருந்திருக்கும்? 😲 "எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். எல்லாம் என் போதாதக்காலம்" என்று மனதிற்குள் நொந்து கொண்டிருப்பார். 😂 "ஒவ்வொருவருக்கும் 100 ஆண்களின் பலம் கொடுக்கப்படும்" என்று பதிலளித்திருக்கிறார்.) உடல் தேவைகளுக்கு மேல் சிந்திக்க இயலாதக் கூட்டம். இன்றும் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆகையால் தான் இன்னமும் சாத்தான் scene-ல் இருக்கிறார்.
மேலும், இம்மதங்களின் தோற்றத்திற்கு முன்னர் அப்பகுதியில் மறுபிறவியில் நம்பிக்கை இருந்திருக்கவேண்டும். உடல் தேவைகளை தீர்த்துக் கொள்வதே பெரும் பாடாயிருந்த கூட்டத்திடம், "மனம் திரும்புங்கள்..." என்று சொன்னால் எதிர்விளைவு எப்படி இருந்திருக்கும்? 🤐 இப்படியே விட்டால் ஒரு பயல் தேறமாட்டான் என்று மறுபிறவியை மறுத்து, சாத்தான், சொர்க்கம், நரகம் என்று பயமுறுத்தி இப்பிறவியிலேயே அவர்களைத் தேற்ற முயற்சித்திருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இங்குள்ள நம் மக்களிடம் இப்பிறவியிலேயே நிலைபேறு பெற்றிடவேண்டும் என்ற வேட்கை வெகுவாக இருந்துள்ளது. 👏 இதன் காரணமாக பலவாறு தங்களை வருத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைத் தேற்றவே நம் மகான்கள் முருக தத்துவத்தை முன்வைத்து, "#யாமிருக்க #பயமேன்" என்று அவர்களைத் தேற்றியிருக்கிறார்கள். (#முருகப் #பெருமான் 🌼🙏 மிக உயர்ந்த மெய்யறிவையும் குறிப்பவர். அடுத்த பிறவியின் ஆரம்பத்தையும் குறிப்பவர். "அடுத்தப் பிறவியிருக்கையில், ஏன் பயப்படுகிறாய்? நம்பிக்கையுடன் முயற்சி செய். இப்போது விட்டதிலிருந்து அடுத்தப் பிறவியில் தொடரலாம்." 👏👏👏👌👍 -- இதில் மன ஆறுதல் மட்டுமில்லை. பிறவிகள் பற்றிய மறைபொருளும் உள்ளது.)
(இது எப்படியுள்ளது எனில்... ஒரு வீட்டில் சிறிதும் படிக்கமாட்டேன் என்கிற குழந்தை. அதைச் சற்றேனும் படிக்கவைக்க அதன் பெற்றோர், "இப்போ படிக்கலன்னா இராத்திரிக்கு சாப்பாடு கிடையாது" என்று பயமுறுத்துகின்றனர். இன்னொரு வீட்டில் அனைத்தையும் இன்றே படித்து முடித்துவிட வேண்டும் என்று உணவு, உறக்கமின்றி தன்னை வருத்திக் கொள்ளும் குழந்தை. இதனைக் காப்பாற்ற இதன் பெற்றோர், "போதும் கண்ணு. ஒடம்பு கெட்டுடும். மீதியை நாளைக்கு பாத்துக்கலாம்" என்று அறிவுருத்துகின்றனர். 💪😍)
கல்வியறிவற்ற மக்களும், காட்டுமிராண்டிகளும் அந்தப் பாலைவனப் பகுதியில் மட்டுமில்லை. நம்மிடமும் இருந்தனர். ஆனால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பெரியோர்கள் இங்கிருந்தனர். எல்லோரையும் ஆட்டுமந்தை போல் ஒரே வழியில் அழைத்துச் செல்ல இயலாது என்பதையும், எல்லோரையும் ஒரே ஆசிரியர் வழிநடத்திச் செல்லவியலாது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
இமயச்சாரல் முழுவதையும் தன் தலையால் கடந்து கைலாய மலை (2) வந்தடைந்த #பேயாரை "அன்னையே" என்றழைத்து மரியாதை செய்த மகானும் (சிவனும்) 🌸🙏, பேயாருக்கு உகந்த ஆசிரியன் தானல்ல என்பதை உணர்ந்து, திருவாலங்காட்டில் இருந்த மகானிடம் (சிவனிடம்) 🌸🙏 அனுப்பி வைத்தார்.
🔯 நுண்ணிய அறிவாற்றலும், நல்ல மனப்பக்குவமும் கொண்டவரை #சும்மா #இரு என்றனர். சும்மா என்பதற்கு "தன்னைக் கொல்லுதல்" என்று விளக்கம் கொடுக்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர். 🌸🙏 எனில், தான் இவ்வுடல் என்னும் தவறான எண்ணத்தைக் கைவிடுதலாகும்.
🔯 எல்லாம் தெரிந்திருந்தும் கருப்பியிடம் சிக்கிக் கொள்பவரை (#கருப்பி - #காளி - எண்ணம், உடல், உலகம்... உணர்வற்ற அனைத்தும்), சித்த நேரம் சிவனேன்னு கெடக்க வேண்டியது தானே என்று கடிந்து கொண்டு வழிக்குக் கொண்டுவந்தனர். 😀 சிவநிலையைப் பற்றியும், அதில் நிலைபெறுவது பற்றியும் தெரிந்திருந்தால் மட்டுமே இவ்வாறு கடிந்து கொண்டிருக்க முடியும். இவ்வழக்கம் அனைத்துக் குடி மக்களிடமும் இருந்த ஒன்று. எனில், தமிழ் சமுதாயம் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டும். 😍 ஆன்மிகமும் அன்றாட வாழ்க்கையும் எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும். "தமிழும் சைவமும் ஒன்று", "சைவமே தமிழரின் சமயம்" ஆகிய கூற்றுகளுக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. 👏👌💪 (3)
🔯 எதுவமே வேண்டாமென்று அனைத்தையும் துறந்தவர்கள் கூட அவரவர் சுற்றுபுறச் சூழலில் சிக்கிக் கொள்வதுண்டு. இவர்களால் வேலை செய்யாமல் இருக்க முடியாது. அதே நேரம் தங்களைத் தவிர வேறு அந்நிய உயிர்களோடு பழக முடியாது. அப்படிப் பழகினால் அது துன்பத்தில், பற்றில் போய் முடியும். இது போன்றவரை ஓரிடத்தில் தங்காமல், பொருள் சேர்க்காமல், எதிலும் பற்று வைக்காமல் கோயில் கோயிலாக சென்று கொண்டே இருக்கச் சொன்னார்கள். அதாவது பரதேசிகளாய் வாழச் சொன்னார்கள்.
அப்படி நடைபயணம் செல்லும் போது, வேறெதிலும் கவனத்தைச் செலுத்தாமல் தன் மீதே (#தன்மையுணர்வு, #இறையுணர்வின், #சிவ #உணர்வு என்பதெல்லாம் இதுவே) கவனத்தை வைத்திருக்கச் சொன்னார்கள். இதை #பயண #நிலைபேறு (#சஞ்சார #சமாதி) என்று அழைத்தார்கள் (#எனது #நினைவுகள், #குஞ்சு #சுவாமிகள், ஸ்ரீரமணாச்ரம வெளியீடு). (நடை பயணமாக திருத்தல உலா செல்லும் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உத்தி இது. இதோடு சென்ற இடுகையில் எழுதப்பட்டிருந்த மலை / நதி வலம் உத்தியையும் படித்துப் பார்க்கவும்.)
🔯 சிலரால் ஊரை விட்டுப் பிரிந்து செல்லவும் முடியாது. சேர்ந்து வாழவும் முடியாது. வேலை செய்யாமலும் இருக்க முடியாது. இப்படிப்பட்டவர்களை குளம் வெட்டச் சொன்னார்கள், ஏரி கட்டச் சொன்னார்கள், மரங்களை வெட்டிப் பாதையைச் சீர் செய்யச் சொன்னார்கள் (இதிலிருந்து தோன்றியது தான் "அவன் அப்படி என்ன #வெட்டி #முறிச்சான்?" என்று கேட்கும் வழக்கம் - காஞ்சி ஆச்சார்யர் #ஸ்ரீசந்திரசேகரேந்திர #சரசுவதி #சுவாமிகள், #தெய்வத்தின் #குரல் - பாகம் 1). இவற்றையெல்லாம் தவமாய்ச் செய்யச் சொன்னார்கள். ("வேலை செய்வது எவ்வாறு தவமியற்றுதலாகும்?" என்ற ஐயம் எழலாம். "வேலைத் தடையல்ல. அதைச் செய்கின்றவன் நான் என்ற எண்ணமே தடை" என்று விளக்கியிருக்கிறார் பகவான் ஸ்ரீரமணர். 👌) சமணர்களும், பெளத்தர்களும் குடைவரைக் கோயில்களை உருவாக்கியதும், சிற்பங்களை செதுக்கியதும், ஓவியங்களை வரைந்ததும் இந்த தவ அடிப்படையில் தான்.
🔯 இறுதியாக, உடல் தேவைகளைத் தாண்டி சிந்திக்கத் தெரியாத மக்களும் ஒரு சமயத்தில் கரையேற வேண்டும் என்ற நோக்கத்தில், உடலை வைத்தே ஒரு வழியைக் காட்டினார்கள்: #கிடா #வெட்டி #பொங்கல் #வை!! 😯 இவர்களிடம் போய், "மனதை அழி. வெளிப்படும் பெருமகிழ்ச்சியில் திளைத்திடு." என்று சொன்னால், "நம்ம சோலிய லவட்டிட்டு போக வந்துருக்கான் டோய்" என்று சொன்னவரை ஐயத்துடன் பார்ப்பார்கள். 😁 எனவே, #கிடா #வெட்டு என்றனர். கிடா முருகப் பெருமானின் வாகனங்களுள் ஒன்று. மனதைக் குறிக்கும். கிடா வெட்டு. மனதை அழி. பொங்கல் வை. வைத்து உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்ச்சியடை. மனம் அழிந்த பின் வெளிப்படும் மெய்யறிவைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி, நீயும் பெரு மகிழ்ச்சியில் திளைத்திரு.
#குங்ஃபு #பாண்டா என்ற ஹாலிவுட் படத்தில் வரும் பாண்டா கதாபாத்திரம் உணவுப்பிரியராக இருக்கும். இதை உணர்ந்த அதன் ஆசிரியர் ஷிஃபு, உணவைக் கொண்டே தற்காப்புக் கலையை பயில வைப்பார். (நம்மூரின் "ஆடுற மாட்ட... பாடுற மாட்ட..." என்ற பழமொழியின் காட்சிவடிவம் தானிது.) இது போன்றது தான் இந்தக் #கிடாவெட்டு வழியும். உடலளவே சிந்தனை உள்ளவர்களுக்கு உடலை வைத்தே மெய்யறிவு. என்றாவது ஒரு நாள் இவர்களில் யாராவது ஒருவரின் உள்ளுணர்வு விழித்தெழும். அவர் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுவார் என்ற நம்பிக்கையில் இப்படி அறிவுருத்தியிருக்கிறார்கள்.
இப்படி எல்லா வகை மனிதர்களும் கரையேற வழி வகுத்திருந்தனர். அவ்வழிகளில் பயணம் செய்வோருக்கு ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தனர். அவ்வளவும் கடந்த 300 வருடங்களில் அழிந்து போயிற்று. 1000 வருடங்களாக முகம்மதியக் காட்டுமிராண்டிகள் சூறையாடி, கொன்று குவித்து, சிதைத்தப் பின்னரும் அக்கட்டமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தேசக் கொள்ளிகள் (பரங்கியர்கள்) வந்திறங்கின. 😠அனைத்தும் அழியத் தொடங்கின. அவை மிச்சம் வைத்ததை அவைகளின் கால்நக்கிகள் (மாமா வேலை பார்த்தவன் முதல் நவீன மாலிக்காஃபூர் வரை) முடித்துவிட்டன. 😡 அப்படிப்பட்ட கட்டமைப்புக்கள் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. மெய்யறிவை பாட்டிலில் அடைத்து, FSSAI முத்திரைக் குத்தி, "நீலம் குட்டிச் சாத்தானுக்கு. சிவப்பு பெரிய சாத்தானுக்கு." என்று ஒரு 45 வயது வடபாரத 'இளங்கன்னி'யை வைத்து விளம்பரம் வெளியிடுவது தான் பாக்கி!! ✊👊👊👊👊
🌸🏵🌺🌻🌷🌹🌼
குறிப்புகள்:
1. சமீபத்தில் ப்ளக் பிடுங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. உயிர்த்தெழுந்தாலும் எழும். கொள்ளையடிப்பதில் இவனே என்றும் தலைசிறந்தவனாக இருக்க வேண்டும் என்பது இவனது ஆசை. ஆனால், இப்போதிருப்பவன் மிஞ்சிவிட்டான். ஆகையால், அதை முறியடிக்க, மீண்டும் இவனது கொடியை நாட்ட வந்தாலும் வருவான்.
2. #திருக்கைலாயம் 🌸🙏😍 - பல மகான்களின் சமாதித் தலம். எண்ணற்றவர்கள் வடக்கிருந்த (தவமிருந்த) தலம். சமணர்களின் ரிஷபதேவர் சமாதியானத் தலம். நம் சமயப் பேருண்மைகளில் சில உணரப்பட்டத் தலம். அப்பர் பெருமான் கனகத்திரளாய் கண்ட தலம். 🌸🙏
3. இந்த சொற்றொடரை மற்ற மதத்தினர் காப்பியடிக்கக் கூட வாய்ப்பில்லை. அப்படிக் காப்பியடித்தால்...
💥 "சித்த நேரம் பெருமாளேன்னு கெடக்க வேண்டியது தானே" - இப்படிக் கேட்டால் அன்றிருந்தவர்கள் பதில் கேள்வியாக, "எந்த version பெருமாளா கெடக்க சொல்லுற?" என்று திருப்பிக் கேட்டிருப்பர். 😁 எனெனில், பெண் தெய்வ வழிபாட்டை நாமப்பேர்வழிகள் takeover செய்தபோது பெருமாளின் பொருள் "உயிரற்றது". பின்னர், கேலி கிண்டல் கிளம்பியதற்கு ஏற்றவாறு பல versionகள் வெளிவந்தன. (பரங்கியர்கள் மதமும் இவ்வழியில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது) திருவனந்தபுரத்திலுள்ள அகத்திய மாமுனிவர் 🌸🙏 சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சின்னமான திருஅனந்தபத்மநாப உடையார் தான் கடைசி version. இந்த version வெளிவருவதற்குள் பெருமாள் உயிரற்றதிலிருந்து உயிர் என்று upgrade ஆகி, இங்கே "அதற்கும் மேலாகிவிட்டார்". 😛😜😝
💥 "சித்த நேரம் யேசுவேன்னு, பரிசுத்த ஆவியேன்னு, பரமபிதாவேன்னு..." - இந்த வரியை முடிப்பதற்குள்ளாகவே ஐரோப்பிய தலைமையகத்திலேயே சிவப்பு விளக்கு எரிய ஆரம்பித்துவிடும். 😂 ஒவ்வொரு சர்ச்சியனின் கடமை தசமபாகம் செலுத்துவது மட்டும் தான். 🤑 கிறித்துவனாக மாறுவதல்ல. அவனவன் கிறித்துவனாக (ஞானியாக / யேசுவாக) மாறிவிட்டால் 153 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் நிலை என்னாவது? 😱
நமது சமயத்திலும் இதே நிலைதான். நமது சமயம் இப்படிப்பட்டது, அப்படிப்பட்டது என்று பீற்றிக் கொள்வதற்கு மட்டுமே. ஒருவரும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்திகளின் உண்மைப் பொருளை உணர்ந்து சிவமாகி விடக்கூடாது. LICயின் விளம்பர வாசகமான "வாழும் போதும். வாழ்க்கைக்குப் பிறகும்." என்பதைப் போல் நாமிருக்கும் வரை சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், பாரம்பரியம், கடமை, வழக்கு, பொறுப்பு என பல பொருளாதார பூதங்களுக்கு தீனியிட்டுவிட்டு, நாம் சென்ற பிறகு நமது பரம்பரை தொடர்ந்து தீனியிடுகிறதா என்று வேறு மேலிருந்து கண்காணிக்க வேண்டும்!! 😔😠
💥 "சித்த நேரம் வெள்ளை சுவரேன்னு, அல்..." - இதற்குள்ளாகவே குண்டு வெடித்துவிடும்! 💥💥💥 மேட்டர் ஓவர்!! 😂😂😂
No comments:
Post a Comment