Thursday, June 8, 2017

மாட்டரசியலில் ம‌றைந்திருக்கும் உண்மை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின்படி  யாரும் இனி மாடு, காளை, ஒட்ட‌க‌ம் போன்ற‌ கால்நடைகளை உண‌வுக்கு விற்பதற்காக சந்தைக்கு கொண்டு வரக்கூடாது. 

அப்ப‌டி கொண்டுவ‌ருவ‌தானால்...
கால்நடைகளை விற்பவர் கால்நடை சம்பந்தமான ஆவணங்களில் 5 நகல்கள் வைத்திருக்க வேண்டும். முதல் நகல் வாங்குபவரிடமும், 2வது நகல் விற்பவரிடமும், 3வது நகல் வாங்குபவர் குடியிருக்கும் பகுதியின் தாசில்தாரிடமும், 4வது நகல் தலைமை கால்நடை அதிகாரியிடமும், 5வது நகல் கால்நடை விற்பனை கமிட்டியிடம் இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிகளாக்கி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இவ்வளவு "ந‌டைமுறை சாத்திய‌ம‌ற்ற‌" விதிகளும் எதற்காக? *மாடுகளைக் காப்பாற்றுவதற்காகவா?*

இல்லை..! ஒருவரும் நாட்டு மாடுகளை வளர்க்காமல் போகட்டும் என்பதற்காகவே..!

இவ்வளவுக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்த பின்னர், இனி எந்த விவசாயியாவது மாடுகளைத் தங்கள் வீடுகளில் வளர்க்கப் பிரியப்படுவார்களா?  த‌ன‌க்கும் த‌ன் குடும்ப‌த்துக்குமே உண‌வுக்கு ப‌ற்றாக்குறை இருக்கையில், வ‌ய‌தான‌, உழ‌வுக்கு ப‌ய‌ன‌ற்றை மாட்டுக்கு அவ‌ன் எப்ப‌டி உண‌வ‌ளிப்பான்?

சரி, அப்ப‌டி இந்த‌ அரசுக்கு இவன் மீது என்ன கோபம்? 

இங்குதான் #ச‌ர்வ‌தேச‌_பொருளாதார‌_அர‌சிய‌ல் விளையாடுகிற‌து!! (இது இப்போது ஆட்சியிலிருக்கும் குஜ்ஜு கழுதைப்புலிகள் இல்லாமல் இத்தாலியப் பன்றிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுவே நடக்கும். இந்த கழுதைப்புலிகளும் பன்றிகளும் மோசமான தொழிலாளர் சங்கத் தலைவர்களைப் போன்றவர்கள். ஒரு மோசமான சங்கத் தலைவன், தான் ஆதாயம் பார்ப்பதற்காக, கூட்டம் சேர்த்துக் கொண்டு, பலத்தைக் காட்டி, நிர்வாகத்தை மிரட்டி, ஒன்றுக்கும் உதவாத சில கோரிக்கைகளைப் பெற்றுக் கொடுத்து விட்டு, பணம் புட்டி குட்டி வெளிநாடு சுற்றுலா என வலம் வருவான். இது போன்று தான் நாம் தேர்ந்தெடுக்கும் கழுதைப்புலிகளும் பன்றிகளும். ஊரை சுத்தம் செய்கிறேன், கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று படம் காட்டி மக்களை ஏமாற்றி பணம் பறித்துக் கொண்டு, ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடையை அணிந்து கொண்டு, மார்க் ஜூகர்பெர்க்கை பின் தள்ளி விட்டு முன் வந்து கையசைத்து விட்டு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு சிவிங்கத்தை மென்று முட்டை விட்டுக் கொண்டிருக்கும் நில உலகக் கடவுளான அமெரிக்க அதிபருக்கு டீ தயாரித்துக் கொடுத்து பிறவிப்பயனை அடைய முயலும் பகல் கொள்ளையர்கள்!!)

*நாட்டுப் பசுக்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்!* அவ்வளவே!! இதற்காகத்தான் இவ்வளவு கட்டுப்பாடுகள்!!!

நாளடைவில் நாட்டுப் பசுக்கள் எல்லாம் ஒழிந்து போய், பாலுக்காக வெளிநாட்டுப் இனப் பசுக்களையே நாம் சார்ந்திருக்க வேண்டும்.

1.4 பில்லிய‌ன் ம‌க்க‌ள்தொகை கொண்ட‌ இந்த தேசத்தில் (உணவு, தேநீர், இனிப்பு வகைகள், வெண்ணெய், நெய், தயிர் போன்றவைகளுக்காக) தினம் 100 கோடி லிட்டர் பால் தேவை என்று குறைந்த‌ப‌ட்ச‌ம் கணக்கிடுங்கள். மாதத்திற்கு 3,000 கோடி லிட்டர் பால் தேவைப்ப‌டும். ஒரு லிட்டர் பால் 40 ரூபாய் என்றால்கூட‌, மாதத்திற்கு 1,20,000 கோடி ரூபாய் பால் வணிகம்!!

அப்படியானால் *வருடத்திற்கு 14,40,000 கோடி ரூபாய்* வணிகம்!! (சுமார் 230 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) - இதுதான் பரங்கியரின் குறிக்கோள்.

இதைக் குறி வைத்துதான் அந்நிய சக்திகள் களம் இறங்கியுள்ளன. பீட்டா போன்ற அவர்களது கைகூலிகள் பல வருடங்களாக அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் கழுதைப்புலிகளும் பன்றிகளும் வாலாட்டிக் கொண்டு அவர்களிடம் பொரைகளைப் பெற்றுக் கொண்டு நமக்கு பட்டை நாமம் சாற்றுகின்றன.

ஜெர்சி இன ப‌சுவின்  விந்துக்களுக்குக்கூட அவர்கள் காப்புரிமை வைத்திருக்கிறார்கள். நம் விருப்பம் போல் அந்த மாடுகளை நாம் இனவிருத்தி செய்து வளர்த்துவிட முடியாது. காசு கொடுத்துதான் அதன் விந்துவைக்கூட வாங்க முடியும்.

பல ஆண்டுகள் கழித்து இந்த நாடுஅதை உணர்ந்து, திருந்தி வரப் பார்க்கும் போது....

குஜ்ஜு கழுதைப் புலிகளும் இருக்காது.
இத்தாலியப் பன்றிகளும் இருக்காது.
நம் நாட்டு மாடுகளும் இருக்காது.

அதன் பிறகு பரங்கியன் வைத்தது தான் இங்கு சட்டம். விவ‌சாய‌த்தோடு சேர்ந்து ஒரு தேச‌மே அழிந்துவிடும்.

(மூலம்: வாட்ஸ்அப் - நேசம் செய்திகள் குழுமம்)

No comments:

Post a Comment