Friday, January 13, 2017

ЁЯМ╝ роЕройைро╡ро░ுроХ்роХுроо் роОроЩ்роХро│родு роЗройிроп рокொроЩ்роХро▓், роЙро┤ро╡ро░் родிро░ுроиாро│் рооро▒்ро▒ுроо் роПро░ு родро┤ுро╡ுродро▓் ро╡ிро┤ா ро╡ாро┤்род்родுроХ்роХро│் ЁЯМ╝

🍚👳🐂🌾
🙏🙏🙏🙏

உழவின் முக்கியத்துவத்தைப் பற்றியும், உழவனின் இலக்கணத்தையும், அக்கால மக்களைப் பற்றியும் எடுத்துரைக்கும் பொய்யாப் புலவரின் குறள்கள் சில...

🐂 *சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்*
*உழந்தும் உழவே தலை* (உழவு #1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

🐂 *உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்*
*தொழுதுண்டு பின்செல் பவர்* (உழவு #1033)

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

🐂 *இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது*
*கைசெய்தூண் மாலை யவர்* (உழவு #1035)

தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

🐂 *உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்*
*விட்டேம்என் பார்க்கும் நிலை* (உழவு #1036)

உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

🐂 *செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து*
*இல்லாளின் ஊடி விடும்* (உழவு #1039)

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும். (இக்குறள் எக்கால மக்களுக்கும் பொருந்தும் 😉)

🌸🏵🌹💮🌺🌷🌼

*நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. தமிழரது பண்பாடு.*

*-- தேவநேயப் பாவாணர்* 👌👍

🌸🏵🌹💮🌺🌷🌼

*பொங்கலோ பொங்கல்!*
*பொங்கலோ பொங்கல்!!*
*பொங்கலோ பொங்கல்!!!*

No comments:

Post a Comment