Tuesday, December 20, 2016

செல்லக்காசு அறிவிப்பால் உண்மையில் யாருக்கு லாபம்?

இவ்விடுகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் செய்திகளை முதலில் படியுங்கள் (நேற்றைய தினமலர், முகநூல் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்). பின்னர், கீழ் காணும் வாட்ஸ்அப் இடுகையை படியுங்கள்:

ஒரு லாட்ஜ் ஓனர் இருந்தாரு. அவரு லாட்ஜுக்கு ஒருத்தர் வந்தாரு. ரூம் புக் பண்றதுக்கு முன்னாடி ரூம் எப்பிடியிருக்குதுன்னு பார்க்கணும்னு சொன்னாரு. உடனே லாட்ஜ் ஓனர் அப்பிடின்னா 500 ரூவா டெபாஸிட் குடுக்கணும்னு சொன்னாரு. உடனே அந்த ஆள் ஒரு புது 500 ரூவாவை எடுத்து டேபிள் மேல வச்சிட்டு படியேறி ரூம் பார்க்க போனாரு.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவாவை எடுத்து லாட்ஜ்ல ரூம் தொடைக்கிற அம்மாகிட்ட குடுத்து போன மாசம் சம்பளத்துல பாக்கி வச்ச 500 ரூவா இந்தான்னாரு. அந்தம்மா அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பக்கத்துல இருந்த டீக்கடையில குடுத்து போன மாச டீ பாக்கி இந்தா வச்சிக்கோன்னு குடுத்தாங்க.

அந்த டீக்கடைக்காரரு அந்த 500 ரூவாவ எடுத்துக்கிட்டுப் போய் பால் பண்ணையில முதலாளிக்கிட்ட குடுத்து போன மாச பால் பாக்கி இந்தாங்கன்னு சொன்னாரு. பால் பண்ணை முதலாளி அந்தப் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய் கால்நடை மருத்துவர்கிட்ட கொடுத்து, இந்தாங்க சார், கடந்தமாதம் மாடுகளுக்கு வைத்தியம் பார்த்தபோது,  சில்லறை இல்லைன்னு 2000 ரூவா நோட்டு வாங்கிக்க மாட்டேன்னு சொன்னீங்கல்ல,  இந்தாங்கன்னு கொடுத்தார். அந்த நோட்டை எடுத்துக்கிட்டு லாட்ஜுக்கு வந்த மருத்துவர், கடந்தமாதம் தங்கி இருந்த  ரூம் வாடகை பாக்கி இந்தாங்கன்னு 500 ரூவாவை குடுத்தார்.

லாட்ஜ் ஓனர் அந்த 500 ரூவா நோட்டை மறுபடி டேபிள் மேல வச்சாரு. ரூம் பார்க்க வந்தவரு, எனக்கு எந்த ரூமும் பிடிக்கலை. நான் போறேன்னு 500 ரூவாவ எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு.

இப்ப 500 ரூவா வந்த இடத்துக்கே போயிடுச்சி. ஆனா போற வழியில சம்பள பாக்கி, டீக்கடை பாக்கி, பால் பாக்கி, மருத்துவர் பாக்கி, லாட்ஜ் வாடகை பாக்கின்னு எல்லாத்தையும் சரி பண்ணிட்டுப் போயிடுச்சி. யாருக்கும் இழப்பில்லாம.

இப்ப நம்ம புதிய இந்தியால இந்தக் கதை என்னவாகும்?

வேலைக்கார அம்மாவோட பேடிஎம் ஆப்ல 1%, டீக்கடையில ஆபல 1%, பால் பண்ணையில ஆப்ல 1%, கால்நடை மருத்துவர் பேடிஎம் ஆப்ல 1%, லாட்ஜ் ஓனரோட பேடிஎம் ஆப்ல 1% இப்பிடி பேடிஎம் பாக்கெட்ல 14.5 + 14.08 + 13.67 + 13.27 + 12.89 = 68.41 போயிடும். 500 ரூவாவ ஆரம்பிச்ச ட்ரான்ஸாக்‌ஷன் லாட்ஜ் ஓனர் கைக்கு திரும்ப வரும்போது 431.59 ஆகிடும்.

பேடிஎம்-முக்கு கிடைக்கும் 68.41-ல் அரசாங்கத்துக்கு சேவை வரியா 10.26 கிடைச்சிடும். பேடிஎம்-மின் லாபம் 10%ன்னு வைச்சுகிட்டா, அதுல வருமான வரியா 1.75 அரசாங்கத்துக்கு கெடச்சிடும். ஆக, நம்ம பணத்த வச்சு ஒண்ணுமே பண்ணாம சில லட்சம் கோடிகள இந்தக் கூட்டு களவாணிங்க சம்பாதிக்கப் போறாங்க.

எடுத்துக் காட்றதுக்குத் தாங்க தொடைக்கிறம்மா, பால்பண்ணைன்னு சொன்னேன். ஆன, நெசத்துல சிறு குறு சம்சாரிங்க எல்லாம் அழிஞ்சு போய்டுவாங்க. பெரும் முதலாளிகளும், பன்னாட்டு கம்பெனிங்க மட்டும் தான் நெலச்சு நிப்பாங்க. அவுங்களும் பேடிஎம்-முக்கு கொடுக்கற 2.9% பணத்த வெலயில ஏத்திருவாங்க. வெலவாசி ஏறுமுங்க. அது சங்கிலி தொடரா சம்பளம், வாடக, வண்டி சத்தமுன்னு அத்தனையையும் ஏத்திடுங்க.

தூய்மை இந்தியான்னு 0.5% வரி ஏத்துனாங்க. இன்னி வரைக்கும் இந்தியா நாறிகிட்டுதாங்க இருக்கு. விவசாயிய காப்பாத்துறேன்னு இன்னோரு 0.5% வரி ஏத்துனாங்க. இன்னி வரைக்கும் விவசாயி தற்கொலை தொடருதுங்க. இப்ப கள்ள பணம் ஒழிக்கறேன்னு நம்மல நாயா பேயா அலையவுடறதும் அதே கதிக்கு தாங்க போயி முடியும். இந்த பகல் கொள்ளைக்கு துணை வேணும்முன்னு தான் 7வது பே கமிஷன கொண்டுவந்தாங்க. இப்ப பார்லிமென்ட்டு நடக்கலேன்னுட்டு அரசியல் கட்சிகளுக்கு சத்தமில்லாம சலுக கொடுத்திருக்காங்க. எல்லாம் நம்ம தலயெழுத்துங்க. இன்னிக்கு சோறு கெடச்சுதா, படுக்க எடம் கெடச்சுதான்னு பிச்சக்கரனாவே வாழ வேண்டியிருக்குங்க.

😒🙁😔😞😤😡

No comments:

Post a Comment