Tuesday, July 19, 2016

யார் பரங்கியர்களை முதலில் எதிர்த்தது?


(தினமலர் - பட்டம் - சென்னை - 19/07/2016)

பரங்கிகள் தான் உலக வரலாற்றை மறைத்து, மாற்றி, அழித்து & இழித்து என அனைத்து திள்ளுமுள்ளு வேலைகளை செய்து வருகின்றனர் என்றால், வடநாட்டவர்களும் அதே வேலையை இந்திய அளவில் செய்கின்றனர்!

💥 1780-களிலேயே பரங்கிகளை எதிர்த்துப் போராடிய ராணி வேலு நாச்சியார் என்னவானார்?

💥 1790-களில் எதிர்த்துப் போரிட்ட கட்டபொம்மன் என்னவானார்?

💥 1800-களில் எதிர்த்துப் போரிட்ட மருது சகோதரர்கள் என்னவாயினர்?

💥 1806-ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் என்னவாயிற்று?

இதெல்லாம் சுதந்திர போராட்டம் என்ற கணக்கில் வராது போலிருக்கிறது. 1857-ல் வடநாட்டில் நடந்தது தான் முதல் சுதந்திர போராட்டம் போலிருக்கிறது. ஒரு வேளை, 1780-ஐ விட 1857 பெரிய எண் என்று நினைத்து விட்டனரோ!? 😂😂😂

சும்மாவா சொன்னார்கள், ஒரு இனத்தை அந்த இனமே தான் ஆளவேண்டுமென்று!! 😑

பி.கு.: மங்கள் பாண்டேவையோ, அவர் ஆரம்பித்த சுதந்திரப் போராட்டத்தையோ குறைத்துக் கூறுவது என் நோக்கமல்ல. நம் முன்னோர்களின் தியாகம் இரட்டடிப்பு செய்யப்படக்கூடாது மற்றும் நமக்குரிய முக்கியத்துவத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதே எனது இந்த இடுகையின் நோக்கம்.

posted from Bloggeroid

No comments:

Post a Comment