Showing posts with label இராஜேந்திர சோழர். Show all posts
Showing posts with label இராஜேந்திர சோழர். Show all posts

Saturday, November 19, 2022

அலெக்சாண்டர் மாவீரன் அல்ல!! 👊🏽


சர்தார் திரைப்படத்தின் தொடக்கத்தில், உளவாளிகள் பற்றிய முன்னுரையில், பரங்கி கொடூரனான அலெக்சாண்டரை காண்பிக்கிறார்கள். ஒரு தமிழ் படத்தில் தமிழ் மன்னரை சிறப்பிக்காமல் ஏன் ஒரு பரங்கி மன்னனை சிறப்பிக்கவேண்டும்? 

நமது பேரரசரும், உண்மையான மாவீரனுமான முதலாம் இராஜேந்திர சோழர் நம்மிடமிருக்கையில், மன்னர் புருசோத்தமனிடம் தோற்று, நுரையீரலில் பொத்தல் பெற்ற அலெக்சாண்டர் நமக்கெதற்கு? இதற்கும் அலெக்சாண்டர் ஒரு பேட்டை தாதா போன்றவன்தான். 

"தன் தலை மீது ஆப்பிள் விழுந்ததும் ஒரு பரங்கி புவியீர்ப்பு விசையை உணர்ந்தது" என்ற புனைவுக்கு சமமானதுதான் "அலெக்சாண்டர் உலகை வென்றான்" என்ற புனைவு. இவன் "வென்றதாக" (😉) கூறப்படும் பரப்பளவோடு, நம் பேரரசர்கள் ஆண்ட பரப்பளவுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும் இவன் எந்த உலகை வென்றானென்று!

இன்று காகிதத்தால் துடைத்துக் கொண்டும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலால் துடைத்துக் கொண்டுமிருந்த 🤢-பரங்கியர்களை உயர்த்திக் காட்டவும், நம் மனதில் அடிமை மனப்பான்மையை விதைக்கவும், விதைத்தவற்றை பேணிக் காக்கவும் உருவாக்கப்பட்ட பொறிகளில் ஒன்றுதான் அலெக்சாண்டர்!

இது போன்ற விதைகளை விதைக்கச் சொன்ன நரித்துவ பரங்கியரை விட, முதலில், விதைக்க துணைப்போன நம்மூர் புறம்போக்குகளை தலைகீழாகக் கட்டி விளாசவேண்டும்!! 👊🏽