Sunday, April 14, 2019

அனைவருக்கும் இனிய #எழில்மாறல் #புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

நன்னாளாம் இந்நாளில்

முன்னவர்கள் சொன்னது!
கண்ணாடி  ஒன்று வைத்து அதன்
முன்னால் பல கனி படைத்து
எண்ணெய் விளக்கேற்றி உள்
எரிசுடரின் ஒளிதன்னால்
உன்னை அக்கண்ணாடியில்
உற்றுப்"பார்" என்பதாகும்!

புனிதநாளில் கனிகாணல்
இனிது! இனிது! ஆயினும்
தனையார் எனக்"காணல்"
நனியினிது! காணினுடன்
வினையேக விதிமாறப்பின்
விளையும் பேரின்பம்!ஓ!
இணையதற்கு ஈடில்லை!
  இருப்பே"பார்"! இனிப்பு!

(கோவை, குமரி மற்றும் கேரளத்தில் புத்தாண்டு அன்று கனி காணல் என்ற தொன்மை பழக்கம் உள்ளது. அதன் ஆன்மிக பின்னணியை ஒரு அருமையான பாடலாக்கியுள்ளனர். வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. எழுதியவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு எனது பணிவான 🙏🏼)

🌸🏵️🥭🍐🍌🌻🌼

#60 #ஆண்டுகளின் #தமிழ் #பெயர்கள்:

1. பிரபவ — நற்றோன்றல்
2. விபவ — உயர்தோன்றல்
3. சுக்ல — வெள்ளொளி
4. பிரமோதூத — பேருவகை
5. பிரசோற்பத்தி — மக்கட்செல்வம்
6. ஆங்கீரச — அயல்முனி
7. ஶ்ரீமுக — திருமுகம்
8. பவ — தோற்றம்
9. யுவ — இளமை
10. தாது — மாழை
11. ஈஸ்வர — ஈச்சுரம்
12. வெகுதானிய — கூலவளம்
13. பிரமாதி — முன்மை
14. விக்கிரம — நேர்நிரல்
15. விஷு — விளைபயன்
16. சித்திரபானு — ஓவியக்கதிர்
17. சுபானு — நற்கதிர்
18. தாரண — தாங்கெழில்
19. பார்த்திப — நிலவரையன்
20. விய — விரிமாண்பு
21. சர்வசித்து — முற்றறிவு
22. சர்வதாரி — முழுநிறைவு
23. விரோதி — தீர்பகை
24. விக்ருதி — வளமாற்றம்
25. கர — செய்நேர்த்தி
26. நந்தன — நற்குழவி
27. விஜய — உயர்வாகை (பழைய வேதாங்க முறைப்படி இது முதல் ஆண்டு)
28. ஜய — வாகை
29. மன்மத — காதன்மை
30. துன்முகி — வெம்முகம்
31. ஹேவிளம்பி — பொற்றடை
32. விளம்பி — அட்டி
33. விகாரி — எழில்மாறல் (2019-20)
34. சார்வரி — வீறியெழல்
35. பிலவ — கீழறை
36. சுபகிருது — நற்செய்கை
37. சோபகிருது — மங்கலம்
38. குரோதி — பகைக்கேடு
39. விசுவாசுவ — உலகநிறைவு
40. பரபாவ — அருட்டோற்றம்
41. பிலவங்க — நச்சுப்புழை
42. கீலக — பிணைவிரகு
43. சௌமிய — அழகு
44. சாதாரண — பொதுநிலை
45. விரோதகிருது — இகல்வீறு
46. பரிதாபி — கழிவிரக்கம்
47. பிரமாதீச — நற்றலைமை
48. ஆனந்த — பெருமகிழ்ச்சி
49. ராட்சச — பெருமறம்
50. நள — தாமரை
51. பிங்கள — பொன்மை
52. காளயுக்தி — கருமைவீச்சு
53. சித்தார்த்தி — முன்னியமுடிதல்
54. ரௌத்திரி — அழலி
55. துன்மதி — கொடுமதி
56. துந்துபி — பேரிகை
57. ருத்ரோத்காரி — ஒடுங்கி
58. ரக்தாட்சி — செம்மை
59. குரோதன — எதிரேற்றம்
60. அட்சய — வளங்கலன்

🌸🏵️🥭🍐🍌🌻🌼

ஆண்டு எனில் அது தமிழ் புத்தாண்டு தான். ஏனைய ஆண்டு பிறப்புகள் எல்லாம் நம்மிடமிருந்து தோன்றியவையே. அதிலும், பரங்கி ஆண்டு பிறப்பு அறிவியல், வரலாறு என எவ்வடிப்படையிலும் ஆண்டு பிறப்பேயல்ல. நம்மிடம் அடிமை மனப்பான்மை தொடருவும், நமது கலாச்சாரம், சமயங்கள் & ஏனைய பெருமை மிகு அடையாளங்கள் அழிவதற்காகவும், பணத்திற்காகவும் நம் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது.

🌸🏵️🥭🍐🍌🌻🌼

நூறு கோடி பிரமகர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்கனே
ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
ஈறி லாவன் ஈசன் ஒருவனே

-- அப்பர் 🌺🙏🏼 தேவாரம் 5.100.3

நூறுகோடி பிரம்மாக்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய சிவபெருமான் மட்டுமே.

(காலம், வருடம், ஆண்டு சம்பந்தபட்ட தேவாரப் பாடலை தேடிய போது கிடைத்தது)

No comments:

Post a Comment