
(தினமலர் - சென்னை - 02/07/2016)
*ஜனநாயகம் எங்கே மலர்ந்தது? பணநாயகம், சாக்கடைநாயகம் & ஒட்டுண்ணிநாயகம் தான் மலர்ந்துள்ளன!!* 😂
வானலியிலிருந்து அடுப்புக்குள் விழுந்தக் கதை தான் நடந்திருக்கிறது. "Animal Farm" கதையில் வரும் (மனிதர்களிடமிருந்து பன்றிகளிடம் மாட்டிக்கொள்ளும்) முட்டாள் மிருகங்களைப் போல் ஆகியிருக்கிறோம். 😣 தாய்மொழியை, தந்தையின் சமயத்தை, சொந்த கலாச்சாரத்தை எள்ளிநகையாடி அழிக்கத் துணிந்து அயல் நாட்டினருக்கு, அயல் மதத்துக்கு, அயல் கலாச்சாரத்துக்கு, அயல்மொழிக்கு கூஜா தூக்கும் கருங்காலிகள் ஆகியிருக்கிறோம். 😔
நம் இனமே நம்மை சுரண்டுகிறது. நம் நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறது. இலவசங்கள், நூறு நாள் திட்டம், இடஒதுக்கீடு என பல தேசக்கொல்லிகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நம்மை மரபணு மாற்றிய பயிர்களை பரிசோதிக்க உதவும் ஆய்வுக்கூட எலிகளாக்கியிருக்கிறது. 😡
"Animal Farm" கதையிலும் சரி, நம் வரலாற்றிலும் சரி மாற்றம் ஏற்பட்டது எண்ணிக்கையால் தான். இன்று அந்த எண்ணிக்கை நம்மிடமில்லை. ஆனால், நம்பிக்கை இருக்கிறது *மாற்றம் ஒன்றே மாறாதது* என்ற புத்த பிரானின் வார்த்தைகளின் மேல்!! அசைக்கமுடியாது, அழிக்கவியலாது என கருதப்பட்ட சாம்ராஜ்யங்களும், மன்னர்களும், இனங்களும், மதங்களும், கொள்கைகளும், கட்சிகளும், நிறுவனங்களும் ஒரு நாள் முடிவுற்றன. அது போல் இந்த ஒட்டுண்ணி-நாயகத்திற்கும் ஒரு நாள் முடிவு வரும். *அந்த நாள் உடன் வருமாறு எந்நாட்டவர்க்கும், எக்காலத்திற்கும் இறைவனான எம்பெருமானை வேண்டுவோம்!!!* 🙏
posted from Bloggeroid
No comments:
Post a Comment