Saturday, May 29, 2021
ஆச்சாரம் பார்க்கிறவன் காசிக்கு போன கதை - கதையும், உட்பொருளும்!
Thursday, May 27, 2021
திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽♂️ திருநாள்!!
Monday, May 24, 2021
ஒண்டர் வுமன் 1984, ப்ளேட் ரன்னர் 2049 & ஃபோர்ட் x ஃபெர்ராரி
Friday, May 14, 2021
நந்தி எனும் சிவன்காளை என்பது நமது மனம்!!
நம் முன்னோர் வடித்த மிகச்சிறப்பான வடிவங்களில் ஒன்று. இவ்வுலகில் நாம் எப்படி வாழ வேண்டுமென்பதை உணர்த்துவது. அன்றைய பெருந்தொழிலான உழவை அடிப்படையாகக் கொண்டது.
காளையின் தலைவன் அதன் முதலாளி. அவன் இட்ட பணிகளை பலன் எதிர்பார்க்காமல் செவ்வனே செய்யும். விளைந்த நெல்லை தலைவன் எடுத்துக் கொள்ள, அவன் கழித்து விட்டுச்சென்ற தட்டையை உண்டு உயிர் வாழும். காளையின் கழிவுகளால் நிலம் மேம்படும். எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், தலைவன் மீது கவனம் வைத்திருக்கும்.
இவ்வாறே, நாமும் இவ்வுலகில் வாழவேண்டும். இறைவன் நம் தலைவன். பிரதிபலன் எதிர்பார்க்காமல், வாழ்வை சேவையாகக் கருதி வாழவேண்டும். நமது கழிவுகளால் உலகம் மேம்படவேண்டும் (#பகவான் திரு #ரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽♂️ கழிவு: நான் யார்?). எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், நமது தன்மையுணர்வின் மீது கவனம் இருக்கவேண்டும். ("ஒருவன் உழைக்க வேண்டியிருக்கும் வரையில் தன்னையறியும் முயற்சியையும் கைவிடக்கூடாது" என்பது பகவானது வாக்கு.)
oOOo
8ம் நூற்றாண்டில், பௌத்தத்திலிருந்து தோன்றிய வைணவத்திலுள்ள பசுமாட்டுச் சடங்கிற்கும் சைவத்தின் சிவன்காளைதான் அடிப்படை!
நமது பெரியவர்கள், காளையை இறைவன் முன் அமரவைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் என்பதால் வைணவர்கள், திருப்பள்ளியெழுச்சி சடங்கின் போது, பெருமாளின் முன் பசுமாட்டை திருப்பி நிற்க வைத்து உழவிற்கு பெருமை சேர்த்தனர் (சைவத்தில் உள்ளவை யாவும் வைணவத்தில் இன்னும் சிறப்பாக, பெரிதாக இடம் பெற்றிருக்கவேண்டுமே!! ☺️).
பசுவின் பின்புறத்தின் வழியாக சிறுநீரும், சாணமும் வெளியேறும். இவற்றை நிலத்தில் சேர்த்தால், நிலம் வளம் பெரும். வளமடைந்தால், விளைச்சல் பெருகும். விளைச்சல் பெருகினால் வருமானம் (செல்வம்) பெருகும். ஆக, வருமானம்=செல்வம்=லட்சுமி இருக்குமிடம் பசுவின் பின்புறம்!!
மற்ற உயிரிகளின் சாணத்தை விட, நம் நாட்டுப்பசுவின் சாணத்தில் பலமடங்கு நல்லது செய்யும் நுண்ணுயிரிகள் உள்ளன.
திருப்பள்ளியெழுச்சியின் போது, பெருமாளின் முன்புறம் பசுமாட்டை திருப்பி நிற்கவைப்பார்கள். இதற்கு, "பெருமாள் தனது மனைவியை பார்த்துக்கொண்டே எழுகிறார்" என்பார்கள். சிலர், பசுமாட்டைக் கண்டவுடன் அதன் பின்பகுதியைத் தொட்டு வணங்குவார்கள். இவ்விரண்டிற்கும் உட்பொருள் மேற்கண்ட விளக்கம் தான்.
இப்படிப்பட்ட சடங்கு மற்றும் செயல்களின் மூலம் நாட்டுப்பசுவினுடைய கழிவுகளின் மேன்மையைப் பற்றிய அறிவை பதிவு செய்து காப்பாற்றியிருக்கிறார்கள்!!
oOOo
🔹திருபுன்கூரில் "நந்தனாருக்காக விலகிய நந்தி" எனில், அவ்விடத்தில், உலக காட்சிகள் நீங்க பெற்று, நந்தனார் நாயனார் 🌺🙏🏽🙇🏽♂️ சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார் என்று பொருள். இதேதான் "பட்டீச்சுரத்திலுள்ள திருஞானசம்பந்த பெருமானுக்காக 🌺🙏🏽🙇🏽♂️ விலகிய நந்தி" என்பதன் பொருளும். அவ்விடத்தில் பிள்ளையார் சமாதித் துய்ப்பு பெற்றுள்ளார்.
🔹திருவல்லத்தில் (முதலாம் ராஜராஜ சோழரின் மாமனும், படைத்தளபதியுமான வந்தியத்தேவனின் ஊர்) கஞ்சனுடன் போராடிய நந்தி: கஞ்சன் என்பது உலகக்காட்சி. கஞ்சனை வெல்வது என்பது உலகக் காட்சிகளின் பொய்த்தன்மையை உணர்வதாகும்!!
இங்குள்ள மூலவருக்கு முன்னுள்ள பலிபீடம் போன்ற அமைப்பின் கீழே தான் சனத்குமார மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ சமாதியடைந்துள்ளார் என்பது தொன்நம்பிக்கை.
🔹நந்தா - முடிவில்லாதது. உள்ளபொருள்.
நந்தி - முடிவுள்ளது. மனம்.
oOOo
எனது நண்பர் ஒருவர், நம் திருத்தலங்களில் மூலவர் முன் அமர்ந்திருக்கும் சிவன்காளைகளைப் பற்றிய ஒரு நீண்ட இடுகையை அனுப்பியிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய கருத்துகளின் தொகுப்பே இந்த இடுகையாகும். நன்றி. 🙏🏽
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
Saturday, May 8, 2021
திரு அண்ணாமலையாரும் தோகை விரித்தாடும் மயிலும்!
இது ஒரு அருமையான படம்!! 👌🏽
படமும் அழகு! அது உணர்த்தும் தத்துவமும் அழகு!!
🌷 நாம் காணும் உலகம், திரையில் காணும் காட்சிகளைப் போன்றது. திரை அசைவதில்லை. காட்சிகளால் மாற்றம் அடைவதில்லை. இதை உணர்த்துவது போல், பின்புறம் அசையா அண்ணாமலையார்! முன்புறம் அசைந்தாடும் மயில்!!
🌷 இன்னொரு வகையில், எத்தனை பிறவிகள் எடுத்தாலும், ஆன்மா மாறுவதில்லை; அழிவதில்லை. பிறவிகளே (உடல்களே) மாறுகின்றன; அழிகின்றன. இந்த பேருண்மையை, மயிலை அணைத்தபடி இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவம் உணர்த்தும். முருகப்பெருமான் உள்ளபொருளைக் குறிக்கிறார். அவரது வேல் மெய்யறிவைக் குறிக்கும். அவர் அணைத்திருக்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளைக் குறிக்கும். இது போன்று, அண்ணாமலையார் அழியாத, மாறாத உள்ளபொருளையும், முன்னர் நிற்கும் மயிலின் தோகையிலுள்ள கண்கள் பிறவிகளையும் குறிக்கும்.
🌷 இன்னுமொரு வகையில், எத்தனையோ கோடி உயிரிகள் உலகில் வாழ்வது போல் தோன்றினாலும், அனைத்துள்ளும் இருப்பது ஓர் ஆன்மாதான். ஆன்மாவை முருகப்பெருமானும் (இங்கு அண்ணாமலையாரும்), பிறவிகளை மயிலின் தோகையிலுள்ள கண்களும் குறிக்கின்றன.
🌷 இறுதியாக, திரை-காட்சிகள் உவமைக்கு திரும்புவோம். வைணவத்தின் திரு சக்கிரத்தாழ்வார் திருவுருவம் உணர்த்துவதும் இதுவே. முன்புறமுள்ள சக்கிரத்தாழ்வார் இயங்கும் உலகிற்கு (காட்சிகளுக்கு) சமம். பின்புறமுள்ள வடக்கிருக்கும் சிங்கப்பெருமாள் திரைக்கு சமம்.
(மதுரையம்பதியில் கால்மாறி ஆடிய கூத்தப்பெருமானின் திருவுருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டவர் சக்கிரத்தாழ்வார். பெருமானின் வலது காலும், ஆழ்வாரின் பாதங்களும் குறிப்பது இயங்கும் உலகத்தை!)
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮