மெய்கண்ட சிவம் 🌺🙏🏽
சிவஞானபோதம் எனும் ஒப்பற்ற சாத்திர நூலைப் படைத்தவர். நம் சமயத்தின் புற சந்தான குரவர்களில் முதன்மையானவர். 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திரு சுந்தரமூர்த்தி நாயனார் 🌺🙏🏽 தடுத்தாட்கொள்ளப்பட்ட திருத்தலமான திருவெண்ணெய்நல்லூரில் (திருஅருட்துறை) சமாதியடைந்தார் (மேலுள்ள படம் பெருமானின் சமாதியாகும்).
இப்பெருமான் பிறந்த காலத்தில் வேற்று இனத்தவர் நம் தமிழகத்தில் கோலோச்சத் தொடங்கிவிட்டனர். "அதெப்படி மிகச்சிறந்த சாத்திர நூலைப் படைத்த பெருமை ஒரு தமிழனுக்கு கிடைக்கலாம்?" என்று உயரிய எண்ணம் கொண்டு, அந்நூல் ஒரு ஆரிய நூலைத் தழுவி எழுதப்பட்டது என்று கதை கட்டிவிட்டு மெய்கண்ட பெருமானின் புகழுக்கு களங்கம் விளைவித்தனர். 😠😡🤬 அதன் பின், நம்மவர்கள் ஆராய்வுகள் வழியாக "சிவஞானபோதம் தான் மூல நூல்" என்ற உண்மையை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று.
நல்லவேளை, 63 நாயன்மார்களும் 🌺🙏🏽 அவ்வினம் வந்து சேரும் முன்னரே சிவபதம் அடைந்துவிட்டனர். வந்த இனம் நிலைபெற்று கோலோச்சும் முன்னரே சேக்கிழார் பெருமானும் 🌺🙏🏽 பெரியபுராணம் பாடிவிட்டார். இல்லையெனில், நாயன்மார்களுக்கும், பெரியபுராணத்திற்கும் கைங்கர்யம் நடந்திருக்கும்!
ஆனாலும், கைங்கர்யம் வேறு விதத்தில் நடந்தது. நாயன்மார்களின் வரலாற்றை அவர்களது மொழியில் எழுதும் போது புகழ் பெற்ற சில நாயன்மார்கள் அவர்களது முற்பிறவியில் அவ்வினத்தவராக அல்லது அவ்வினத் தொடர்பில் பிறந்தவர்களாக புனைந்துள்ளனர். அந்த கைங்கர்யங்கள் சொற்பொழிவுகள், கட்டுரைகள் என பல வழிகளில் தமிழகத்திற்குள் நுழைந்துவிட்டன. நாயன்மார்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர் பெரியபுராணத்தை மட்டுமே படிக்கவேண்டும்.
பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 நம்மவராகப் பிறந்து, அவரது புகழும் வெள்ளையர்களால் உலகெங்கும் பரவாமல் போயிருந்தால் அவருக்கும் மெய்கண்டாருக்கு நடந்த கைங்கர்யம் நடந்திருக்கும்! 😏
இன்றும் பகவானை ஒதுக்கும் "பாரம்பரிய" சிந்தனை கொண்டோர் அவ்வினத்தில் உள்ளனர். காரணம் உள்ளபொருள் (பரம்பொருள்), மெய்யறிவு (ஞானம்), விடுதலை (முக்தி / மோட்சம்) என எல்லாவற்றைப் பற்றிய உண்மைகளையும் பகவான் வெளிவிட்டுவிட்டார். பகவானே இதைப் பற்றி பாடியிருக்கிறார்:
வெளிவிட்டேன் உன் செயல் வெறுத்திடாது உன் அருள்
வெளிவிட்டு எனைக்கா அருணாசலா!!
இதற்கும், சமயவியலில் உள்ள பொருள்கள் முழுவதும் நம்முடையதே. இவர்கள் எதையும் அவர்களது பிறப்பிடத்திலிருந்து கொண்டுவரவில்லை. இங்கு வந்துதான் நம்மிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்; பண்பட்டார்கள். கற்றதை அவர்களது பூமிக்கும் எடுத்துச் சென்றார்கள்.
🔸 நாம் எவ்வளவு தூரம் பண்பட்டிருந்தோம் என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:
மேல்தட்டு முதல் அடித்தட்டு வரை நம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் அனைவரும் அறிந்திருந்த ஒரு சொல் தான் சிவம். "சிவம் என்றால் என்ன?", "சிவமாயிருத்தல் எவ்வாறு?" ஆகிய கேள்விகளுக்கு பதில்கள் அறிந்திருந்ததால் தான், "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே" என்று நம் பெரியவர்களால் திட்டமுடிந்தது! திட்டுவதில் கூட சமயவியலை நுழைத்த இனம் உலகில் நம்முடைய இனமாகத்தான் இருக்கும்!! 😊
🔸 நமது மொழி எவ்வளவு தூரம் சமயவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு:
திட்டு என்ற சொல்லை சற்று பார்ப்போம்.
பொதுவாக, திட்டு எனில் சமதளத்திலிருந்து சற்று உயர்ந்த சிறு பகுதி. திட்டுத்திட்டாக எனில் ஆங்காங்கே உயர்ந்து கிடக்கும் பகுதிகள்.
சமதளத்தை திட்டுகள் இல்லாத பகுதி, ஏற்றஇறக்கங்கள் இல்லாத பகுதி, வேறுபாடுகள் இல்லாத பகுதி, சீரான பகுதி என்றும் விளக்கலாம்.
சமதளம் - சீரான பகுதி
திட்டு - சீரற்ற பகுதி
நமது உள்ளநிலை சீராக இருப்பின் சிவநிலை. திட்டும்போது சீரற்று போவதால் சிவநிலையின் எதிர் நிலையான சீவநிலை.
"என்னை திட்ட வைக்காதே" எனில் "என்னை சிவநிலையில் இருந்து இறங்க/மாற வைக்காதே" என்று பொருள்!! 💪🏽😍😎
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮