Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டுத் தடைக்கு காரணமானவர்கள்

https://youtu.be/P5QFhcd9IsA

ஜல்லிக்கட்டுத் தடைக்கு காரணமானவர்களை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள் திரு. கார்த்திகேயன் சிவசேனாபதியும் & அவரது குழுவும். தயவு செய்து இணைக்கப்பட்டிருக்கும் காணொலியைக் காணுங்கள். மற்றவர்களுடனும் பகிருங்கள்.

*பீட்டாவின் செயல் குழுத் தலைவரான பூர்வா ஜோசிபுரா ஒரு அமெரிக்கர்.* இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது சட்டங்களை உருவாக்க வல்ல ஒரு அமைப்பு. இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வாரியத்தில் இந்த அமெரிக்கர் இடம் பெற்றுள்ளார். *நம் நாட்டு சட்டதிட்டங்களை உருவாக்கும் ஒரு வாரியத்தில் இந்த அமெரிக்க தாசிக்கு என்ன வேலை?* எந்தக் கேடு கெட்டவன் இவளை அவ்விடத்தில் அமர்த்தியவன்?

உச்சா நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதைக் கேட்டாகவேண்டுமா? ஆதார் விஷயத்தில் நடுவன் அரசாங்கம் உச்சா நீதிமன்றம் சொன்னபடி நடந்து கொண்டதா? கேரளம், கர்நாடகம் உச்சா நீதிமன்றம் சொன்னபடி நடந்து கொண்டதா?

மக்களுக்காக தான் சட்டங்களும், நீதிமன்றங்களுமே!! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சட்டமும், நீதிமன்றமும் தேவையில்லை.

*தடை - அதை உடை*

PETAவின் உண்மை முகம்

முதலில் இணைப்பைச் செய்தியை (தினமலர் - சென்னை - 14/01/2017) படித்து உற்சாகமடையுங்கள். 👏👍👊💪😘

மக்கள் ஒன்றுபட்டால் எந்தக் கொம்பனாலும் ஒன்று செய்யமுடியாது. என்றும் உண்மையே வெல்லும்.

🌸🏵🌹💮🌺🌷🌼

PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது. (எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல)

சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் பீட்டாவிற்கு தெருநாய்களைப் பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்... 35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம்!!!

இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
கொம்பைப் பிடிக்கிறாய்!
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்! மாட்டை வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!

"சாத்தான் வேதம் ஓதுகிறது" என்பார்களே பீட்டா செய்வது அதுவே தான்!!

பீட்டா - மிருகவதை வியாபாரம்

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும், முயல்களையும் கொல்ல வேண்டும்?

அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய சந்தை.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.

"அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம்.

நிறைய இருக்கின்றன. ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளை சரியாக பராமரிக்காத தருணமாகப் பார்த்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. (நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான். உடன் நம் ஊரை அடித்து உலையில் போடும் அரசியல்(வி)யாதிகள் மற்றும் பல கருங்காலி சமூக(வி)யாதிகளின் உதவியுடன்.) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி, 30 வருடமாக பொய் சொல்லி பிழைப்பு நடத்தினவர்கள் தயவுடன், அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !

நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும்.

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதன்பாட்டுக்கு வந்து குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். "இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு?" என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

3,00,000 - 3,50,000 கோடிகள்! (கிட்டதட்ட 2 மடங்கு 2G ஊழல் பணம்! நம் மாநிலத்திலிருந்து மட்டும்!!)

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.

அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை. வறட்சியையும் தாங்கக் கூடியவை. வறட்சியின் போது, காங்கேயம் மாடுகள் பனை மட்டைகளைக் கூட தின்று உயிர் வாழும்!!

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையைத் தீர்த்துவிடும்.
ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்படாத மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும். வறட்சியைத் தாங்காது. நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு. பராமரிப்பு செலவு அதிகம்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்களது கண்களை தமிழகத்தின் 3,00,000 - 3,50,000 கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக் கொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது. அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள்!

ஊரை அடித்து உலையில் போடும் மிருகங்களின் கையில் நாடும் மாநிலமும் இருக்கும் வரையில், நம்மால் இயன்றது விழிப்புணர்வைப் பரப்புவதே. தயவு செய்து தங்களுடைய குழுக்களில் பகிருங்கள். இறையருள் நமக்குத் துணை நிற்கட்டும். 🙏

(மூலம்: வாட்ஸ்அப்)

Friday, January 13, 2017

🌼 அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல், உழவர் திருநாள் மற்றும் ஏரு தழுவுதல் விழா வாழ்த்துக்கள் 🌼

🍚👳🐂🌾
🙏🙏🙏🙏

உழவின் முக்கியத்துவத்தைப் பற்றியும், உழவனின் இலக்கணத்தையும், அக்கால மக்களைப் பற்றியும் எடுத்துரைக்கும் பொய்யாப் புலவரின் குறள்கள் சில...

🐂 *சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்*
*உழந்தும் உழவே தலை* (உழவு #1031)

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

🐂 *உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்*
*தொழுதுண்டு பின்செல் பவர்* (உழவு #1033)

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

🐂 *இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது*
*கைசெய்தூண் மாலை யவர்* (உழவு #1035)

தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

🐂 *உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்*
*விட்டேம்என் பார்க்கும் நிலை* (உழவு #1036)

உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

🐂 *செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து*
*இல்லாளின் ஊடி விடும்* (உழவு #1039)

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும். (இக்குறள் எக்கால மக்களுக்கும் பொருந்தும் 😉)

🌸🏵🌹💮🌺🌷🌼

*நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. தமிழரது பண்பாடு.*

*-- தேவநேயப் பாவாணர்* 👌👍

🌸🏵🌹💮🌺🌷🌼

*பொங்கலோ பொங்கல்!*
*பொங்கலோ பொங்கல்!!*
*பொங்கலோ பொங்கல்!!!*

Tuesday, January 10, 2017

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

தமிழின் தாயகமான தமிழ்நாட்டுத் தமிழை விட, இலங்கைத் தமிழ் தூய்மையானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். சுவைத்து மகிழுங்கள்!! 👍☺

🌸🏵🌹💮🌺🌷🌼

*யாழ்ப்பாணம் தெல்லிப்பளை சிவத்தமிழ்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி*

இவர் தமிழுக்கும், சைவசமயத்துக்கும் தன் வாழ்நாளில் அரும்பெரும் தொண்டாற்றி, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஒரு பெண் தனித்து நின்று சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்பதை தனது உலகளாவிய நற்பணிகள் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். யாழ்ப்பாண வரலாற்றில் பதிவான இவரைப் பற்றிய சில வரிகள் இங்கே:

அப்பாக்குட்டி - தையற்பிள்ளை தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாக தங்கம்மா 1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி அவதரித்தார்.

இவரது ஜாதகத்தினை ஜோதிடர்கள் இவரிடம் பொருட் செல்வத்திலும் பார்க்க அருட் செல்வமே அதிகம் இருப்பதாக கணிப்பிட்டுச் சொன்னார்கள். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் இவருக்கு ஏடு தொடக்கப்பட்டது.

இவர் மல்லாகம் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையில் 1929 ஆம் ஆண்டு ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார்.

"பெண் பிள்ளைதானே, கடிதம், தபால் தந்தி வாசிக்கக் கூடிய அறிவு இருந்தால் போதும்" என்று பெண்களின் உயர் கல்விக்கு தடை போடும் காலம் அது. அன்றைய காலகட்டத்தில் தங்கம்மாவின் அறிவுக் கூர்மையை நன்கு உணர்ந்த பெற்றோர் அவரை உயர் கல்வி கற்கவென, 1935 ஆம் ஆண்டு மல்லாகம் விசாலாட்சி வித்தியாலத்தில் சேர்த்தனர்.

படிப்பில் கெட்டித்தனமிக்க தங்கம்மா, போட்டிகள், பரீட்சைகள் என அனைத்திலும் முதலிடம் பெற்றார். இதே போல் ஆசிரியர் பயிற்சிப் புதுமுகத் தேர்வில் சித்தி பெற்று 1941 ஆம் ஆண்டு இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இணைந்து கொண்டார்.

ஆசிரியர் கலாசாலையில் பயிற்சியை முடித்துக் கொண்டு 1945 ஆம் ஆண்டு தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாசாலையில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர் மட்டக்களப்பு புனித சிசீலியா ஆங்கிலப்பாடசாலைக்கு நிரந்திர ஆசிரியராக நியமனம் பெற்றுச் சென்றார்.

1949 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை பாத்திமா பெண்கள் பாடசாலை அதிபரின் வேண்டு கோளுக்கிணங்க அங்கு சென்று 11 ஆண்டுகள் ஆசிரியப்பணியை மேற்கொண்டார்.

1941 ஆம் ஆண்டில் பிரவேச பண்டிதத் தேர்விலும் 1952 ஆம் ஆண்டில் பால பண்டிதத் தேர்விலும், 1953 ஆம் ஆண்டில் பண்டிதத் தேர்விலும் சித்தி அடைந்து தமிழ் புலமையை மேலும் வளர்த்துக் கொண்டார்.

கொழும்பில் பல இடங்களில் இவர் சமயச் சொற்பொழிவினை நிகழ்த்தினார். இதனால் இவரின் தனித்துவம் வாய்ந்த நாவன்மை கொழும்புத் தமிழ் மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

ஈழத்துத் தனிப் பெருமையில் நாட்டமுள்ள இவர் எழுதிய "ஈழத்துப் பிரபந்தங்கள்" என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை 1954 ஆம் ஆண்டு ஆரிய திராவிட பாசாவிருத்திச் சங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சென்னை சைவசித்தாந்த சங்கம் நடத்திய சைவப் புலவர் தேர்வில் சித்தியடைந்து 1958 ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது பெண் சைவப்புலவரானார். இலங்கையில் சைவப்புலவர் சங்கம் நிறுவுவதற்கும் காரணமாக இருந்தார்.

1958 இல் கொழும்பில் நடந்த இனக்கலவரத்தினால் யாழ்ப்பாணத்திற்கு வந்த தங்கம்மா அப்பாக்குட்டி அளவெட்டி சதானந்த வித்தியாலயத்திலும் 1964 இல் இருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் தனது கற்பித்தல் பணியைத் தொடர்ந்தார். இவர் இக்கல்லூரியிலிருந்தே ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

தாய்தந்தையின் பிரிவுத் துயர் இவரை வாட்டிய போது அதை மறப்பதற்காக திருவாசகத்தை ஒரு வருடமாக இரவு பகலாகப் படித்தார். இதனால் திருவாசகம் இவருக்கு மிகுந்த பரீட்சயமாகிற்று.

*"பேசப்படும் பேச்சின் பொருளை ஒழுங்குபடுத்தி கால நேரத்தை உணர்ந்து கட்டுப்பட்டு, யாழ்ப்பாணத் தமிழில் ஓரெழுத்தையும் சிதைக்காது, விழுங்காது பேசும் திறமை சிவத்தமிழ்ச் செல்விக்கு உண்டு" என பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை பாராட்டினார்.*

சிவத்தமிழ்ச் செல்வியின் சிறப்பை வானொலி மூலம் கேட்டறிந்த தமிழ் நாடு ஆதீனங்களும் தமிழ் மன்றங்களும் சொற்பொழிவு ஆற்ற அங்கு அழைத்தனர்.

1965 ஆம் ஆண்டு முதல் சிவத்தமிழ் செல்வியின் தமிழ்தூதுப் பயணம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளுக்குப் பயணிக்கத் தொடங்கியது.

1973 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற மங்கையர் மாநாட்டில் தங்கம்மா அப்பாக்குட்டி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆதீனத்தின் மாநாடு ஒன்றில் ஈழத்துப் பெண் ஒருவர் தலைமை தாங்கிய பெருமை இவரையே சாரும்.

இவரின் தமிழ்த் தொண்டையும், தழிழ்ப்பணியையும் பாராட்டி தமிழ்நாடு ஆதீனம் 'பொற்கிழி' வழங்கிக் கௌரவித்தது.

1971 ஆம் ஆண்டு சிலாங்கூர் இலங்கைச் சைவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று மலேசியா சென்ற அம்மையாருக்கு, அவர்கள் இவரின் நிகழ்ச்சிக்கான கால அட்டவணையை ஒழுங்கமைத்த விதம் வெகுவாக ஆச்சரியப்பட வைத்தது.

செல்லுமிடம் எல்லாம் பாராட்டுக்களையும், பட்டங்களையும், பொன்னாடைக் கௌரவங்களையும் பெற்றுக் கொண்டார்.

1970 ஆம் ஆண்டு 'ஈழத்து சிதம்பரம்' என்று இந்தியர்களால் அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் ஆதீனம் இவருக்கு 'சிவத்தமிழ் செல்வி' என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. இப்பட்டமே இவரின் பெயருடன் ஐக்கியமாகி விட்டது. மதுரை ஆதீனத்தால் 'செஞ்சொற் செம்மணி' (1966), காஞ்சிபுர ஆதீனத்தால் 'சித்தாந்த ஞானாகரம்' (1971), மலேசியா இலங்கை சைவர் சங்கத்தால் 'திருவாசகக் கொண்டல்' (1972), தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தானாத்தால் 'துர்க்காதுரந்தரி' (1974) வண்ணை வைத்தீஸ்வரன் ஆதீனத்தால் 'திருமுறைச் செல்வி' (1973), திருக்கேதீஸ்வர ஆதீனத்தால் 'சிவமயச்செல்வி' (1974), இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் ஆதீனத்தால் 'திருமொழி அரசி' (1983) போன்ற பட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அம்மையாருக்கு 1982 ஆம் ஆண்டு காசிக்குப் போகும் வாய்ப்புக் கிட்டியது. காசிக்குச் செல்பவர்கள் இந்து சமயக்கோட்பாட்டின் படி தாம் பெறும் பற்றுக்களில் ஒன்றைத் துறக்க வேண்டும். அதற்கிணங்க இவரும் தனக்கு கிடைத்து வந்த பொன்னாடை போர்த்துக் கௌரவிக்கும் பற்றை இதன் பின் ஏற்க மாட்டேன் எனத் துறந்தார். ☺

இவர் ஆற்றி வந்த தமிழ்மொழிப் பணிக்காகவும், சமயத் தொண்டுக்காகவும் 1998 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

மக்களின் பொதுப்பணிக்காக நிலையங்களையும் கல்யாண மண்டபங்களையும் கட்டி சமூகத்தொண்டாற்றினார். தனது ஒவ்வொரு பிறந்த தினத்திலும் வைத்தியசாலைக்கும், கல்விக்கூடங்களுக்கும் நிதிக்கொடைகளைச் செய்து வந்தார்.

*சங்க காலத்தில் தமிழ் வளர்க்க, சமயம் வளர்க்க ஒளவைப்பாட்டி தமிழுக்குக் கிடைத்தது போல் ஈழத்தில் தமிழ் வளர்க்கவும், சமயம் வளர்க்கவும் கிடைத்த தங்கம்மா அப்பாக்குட்டி 2008 ஆம் ஆண்டு யூன் மாதம் 15 ஆம் திகதி தனது 83 ஆவது வயதில் இவ்வுலகை விட்டுச் சென்றார்.* 🙏

(மூலம்: http://panippulam.com/index.php?Itemid=403&catid=44:homes-gardens&id=1102:2011-01-08-16-51-52&option=com_content&view=article)

🌸🏵🌹💮🌺🌷🌼

இவ்விடுகையின் வாயிலாக இங்கிருந்த ஆதீனங்கள் சிலவற்றின் பெயர்களையும், இலங்கையிலிருக்கும் சில சைவத் தலங்களின் பெயர்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

ஆரியர்களையும், முகம்மதியர்களையும், வெள்ளையர்களையும் தாக்குப் பிடித்த இந்த ஆதீனங்கள் உலகமயமாக்கல், மேற்கத்தியமயமாக்கல், கான்-கிரஸ் மற்றும் போலித் திராவிடம் ஆகிய தேச, இன, சமுதாயக் கொல்லிகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது வருந்த தக்கதே. 😔

Saturday, January 7, 2017

​English language hindering scientific advances!! 👊👊👊

http://indianexpress.com/article/technology/science/english-language-hindering-scientific-advances-study-4457186/

Nonsense!!

👊 How can they say such things about a Deva Baashaa?

👊 Don't they know knowledge of high echelon can only be communicated through a Deva Baashaa?

👊 Do they know about the amount of efforts & money that went into transforming a language to a Deva Baashaa level which is otherwise known as "Bitch among languages"?

👊 What will happen to the multi billion dollar English training industry in India and other countries?

👊 What will happen to the equation English=Brainy, Educated, Cultured, etc.? How will a lay-person identify an intelligent, educated, cultured person?

👊 Do they suppose a cheap language like Thamizh can deliver a noun like Catamaran into all the languages without a great delivery virus like English?

😛😜😝
😂😂😂

யாருக்கு வேண்டும் இந்தி? 😛😜😝

👏👏👍👍👌👌✊👊👊💪💪😘😎