Monday, September 30, 2019
🐢 ஆமை திருவிறக்கம் (கூர்ம அவதாரம்)
Sunday, September 29, 2019
It’s easy to joke about a Sardar, but it’s too difficult to be a Sardar!!
Wednesday, September 25, 2019
இந்த வார ஞானானந்தம் = ஒரு ஆரம்பநிலை பைத்தியம் + 23ஆம் புலிகேசிக்கு சமமான ஒரு அரசர் + ஒரு முக்கால் வேக்காடு!! 😝
Monday, September 23, 2019
நவராத்திரி சிறப்பு பிட்டுகள்!! 🥴
Saturday, September 21, 2019
இவ்வுலகில் வாழ்வது எங்ஙனம்?
Wednesday, September 18, 2019
தோடுடைய செவியன் மலைமகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சினாராம்! 😏
Tuesday, September 17, 2019
தேங்காய் உடைத்தால் #திருவரங்கம் பெருமாளின் உறக்கம் பாதிக்குமாம்! 😛 ஆகையால் #தேங்காய் #துருவல் படைக்கிறார்களாம்!! 😝
இப்படி படங்காட்டி படங்காட்டியே, கோபுரத்தில் இருக்கவேண்டிய பேருண்மைகளையெல்லாம் வீதிக்கு இறக்கி வந்து, சாக்கடை உயிரிகள் கூட கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். 🤬 இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படி படம் காட்டுவார்களோ?
இவர்களது விளக்கத்தை எடுத்துக் கொண்டால்கூட பெருமாள் அறி-துயிலில் இருப்பவர். எப்படி அவரது உறக்கம் கெடும்?
பாம்பணை ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். அழிவதை, மாறுவதை, நிலையில்லாததை, இருப்பற்றதைக் குறிக்கும். பெருமாள் இவ்வுடலில் என்றும் அழியாமல், மாறாமல், நிலையாகவுள்ள இருப்பை - உள்ளபொருளை - பரம்பொருளைக் குறிக்கும். மொத்தத்தில், இவ்வுருவம் அரவு அணிகலனுடன் கூடிய சிவலிங்கத்துக்கு சமமானதாகும். 🌺🙏🏼 பரம்பொருளுக்கு அந்நியமாக ஏதும் இருக்கிறதா? பரம்பொருளுக்குத் தெரியாமல் ஏதும் நிகழ்ந்துவிடுமா? ஏதும் நிகழ்ந்தாலும் பரம்பொருள் தான் பாதிக்கப்படுமா? அப்படி பாதிக்கப்படுவதற்கு பரம்பொருள் என்ன "உலகை முதலில் தவறாக படைத்து விட்டு, பின்னர் அதை சீர் செய்ய தனது மகனை அனுப்பும்" கூமுட்டை 🥴 வகையறாவா?
தேங்காய் உடைப்பது என்பது அகந்தை அழிவதைக் குறிக்கும். ஓடு உடைந்து வெளிப்படும் தேங்காய், அகந்தை அழிந்து வெளிப்படும் மெய்யறிவைக் குறிக்கும். உடைத்த தேங்காய் அப்படியே அனைவருக்கும் பயன்படாது. முனிவர்கள் வெளிப்படுத்திய மெய்யறிவை அப்படியே பெறும் பக்குவம் அனைவரிடமும் இருக்காது. துருவிய தேங்காய் அனைவருக்கும் பயன்படும். இவ்வாறே மெய்யறிவையும் அனைவருக்கும் பயன்படும் படி எளிமையாக்கி கொடுக்க வேண்டும்.
இது தான், தேங்காயை படைக்காமல், துருவலை படைக்கும் சடங்கு உணர்த்தும் பொருள். திருவரங்க மூலவர் திரு அரங்கநாதப் பெருமாளின் கீழ் சமாதியாகி இருக்கும் சட்டைமுனி சித்தர் 🌺🙏🏼 இவ்வாறு அறிவுருத்தினாரா? அல்லது, அவர் வழித்தோன்றல்கள், திருராமானுஜர் போன்ற வைணவப் பெரியோர்கள் யாரேனும் அறிவுருத்தினரா என்று தெரியவில்லை.
அன்று பாமரரும் பேருண்மைகளை எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்தகைய சடங்குகளை, இன்று கற்றவரும் புரிந்து கொள்ள முடியாதபடி செய்துவிட்டனர். 😔
🏵️🌼🌻
எனக்கு பிடித்த தேங்காய் துருவல்களில் 😀 ஒன்று:
தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற
-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏼, உபதேச உந்தியார்
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼
Saturday, September 14, 2019
21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்த்த வீரர் உத்தம்சிங்!! 🙏🏼
#ஜாலியன்வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய மனிதமிருகத்தை 21 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக்கொன்ற வீரர் #உத்தம்சிங் -கின் செயலை "பைத்தியக்காரத்தனமான செயல்" என்று கண்டித்திருக்கிறான் மோகன்தாஸ்!! 😠 - பின்னே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சாதிக்கும் பைத்தியத்துக்கு பைத்தியக்கார செயல் நல்ல செயலாகவும், நல்ல செயல் பைத்தியக்கார செயலாகவும் தான் தோன்றும்!! 🥴
"மாமாப்பயலின் சதியால், கான்-கிரஸ்ஸிலிருந்து திட்டமிட்டு, மோகன்தாஸால் இழிவுபடுத்தப்பட்டார் நேதாஜி" - பின்னே, #நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மாமாப்பயலுக்கு சாணி வெளியேறிவிடும்! 🤭 போதாகுறைக்கு இவன் கூழைக்கும்பிடு போடும் பரங்கி இனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரர் உத்தம்சிங்கை புகழ்ந்துள்ளார் நேதாஜி. இதை வாய்ப்பாகக் கொண்டு, மோகன்தாஸ் வழியாக நேதாஜியை இழிவுபடுத்தியிருக்கிறான். 😡
வீரர் உத்தம்சிங்கைப் பற்றி பள்ளிப்பாடங்களில் நாம் படிக்காமல் போனற்கு காரணம் பான்பராக் சட்டைகளின் 👺 ஊழியம்!!
(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 15-09-2019)
தமிழ் #விக்கிப்பீடியா இந்து சமய, சமூக, தேசவிரோத சக்திகளின் கூடாரமாக மாறிவிட்டதா?
Wednesday, September 11, 2019
எப்பேர்பட்ட உண்மையை மறைத்திருக்கிறார்கள்!!
Tuesday, September 10, 2019
பசுத்தோல் போர்த்திய கழுதைப் புலிகள்!! 😠
Monday, September 9, 2019
சாலை வரைபடத்திலும் ஊழியம்!! 😏
Friday, September 6, 2019
கீழடியில் விநாயகர் கிடைக்கவில்லையாம்!! 😒
சில வருடங்களாகவே இந்து சமய விழாக்களின் போது ஊளை, குரைப்பு போன்ற ஒலிகள் கேட்கும். சமீப காலமாக ஒரு புது குரைப்பு ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது:
🐩 கீழடியில் விநாயகர் கிடைக்கவில்லை
🐩 அரிக்கமேட்டில் அம்மன் கிடைக்கவில்லை
இந்த குரைப்பு ஒலி பாவாடை, காட்டுமிராண்டி விழாக்களின் போது கேட்பதில்லை ("கீழடியில் பிணக்குறியீடோ, பாவாடையோ கிடைக்கவில்லை", "அரிக்கமேட்டில் குட்டிச்சுவர் கிடைக்கவில்லை"). ஏனெனில், பொரை வீசும் எசமானார்களைப் பார்த்து நாய்கள் குரைப்பதில்லை!! 👊🏽👊🏽
ஆரியர் முதல் சமீபத்திய உலகமயமாக்கல் வரை பல அரசியல், சமய, பொருளாதார படையெடுப்புக்களை நாம் சந்தித்துள்ளோம். கடந்த சுமார் 960 ஆண்டுகளாக நம்மை நேரடித் தமிழ் மன்னர்கள் ஆளவில்லை. வெள்ளை ஓநாய் மெக்காலேவின் திட்டம் செயலுக்கு வந்து, நமக்கும் வெள்ளை ஓநாய்களுக்கும் இடையில் ஆரியர்கள் நிலைபெற்ற பின், 200 ஆண்டுகள் சபைகளில் தமிழ் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் எல்லா அடையாளங்களையும் எப்படி அழியாமல் காப்பாற்றியிருக்கமுடியும்? இயந்திர பயன்பாடு அதிகரித்து, மக்களாட்சி என்ற பெயரில் சாக்கடைகள் ஊருக்குள் புகுந்து இருந்த மதியையும், நிம்மதியையும் மக்கள் தொலைப்பதற்கு முன்னர் உ.வே.சா. போன்ற பெரியோர்கள், தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றி அன்னைத் தமிழை காப்பாற்றிவிட்டார்கள், தமிழின் தொன்மையை நிலைநாட்டிவிட்டார்கள். இல்லையெனில்...
கால வெள்ளத்தில் தப்பித்த சில இடங்களை, நூல்களை மட்டும் வைத்து தமிழின், தமிழரின் தொன்மையை வேண்டுமானால் நிருபிக்கலாம். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருப்பர் என்று சற்று ஊகிக்கலாம். ஆனால், இப்படி மட்டும் தான் வாழ்ந்தனர் என்று எப்படி அறுதியிட்டுக் கூறமுடியும்?
இந்து சமயம் ஆரியர்கள் கையில் இருக்கிறது என்பதற்காகவே எதிர்க்கத் தேவையில்லை. சைபீரியா போன்ற பகுதிகளிலிருந்து இங்கு வந்து சேர்ந்த போது, அவர்கள் வெறும் காட்டுமிராண்டிகளே. நம்முடைய சமயம், அறிவியல், வாழ்க்கை முறை, மருத்துவம், குடும்ப அமைப்பு, உறவு முறைகள் போன்றவற்றை தம்முடையதாக்கிக் கொண்டனர். எல்லாவற்றிற்கும் மேல் ஆரியப்படலத்தை போர்த்தி வைத்திருந்தாலும், உள்ளிருப்பவை, அடிப்படைகள் நம்முடையவை தாம். ஒரு விதத்தில் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். இவர்களும் காப்பாற்றி இருக்காவிட்டால், இந்நேரம் பாவாடைகளாகவும் 👻, காட்டுமிராண்டிகளாகவும் 👹 மாறி, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, அந்நாட்டு கலாச்சாரங்களை சீரழித்துக் கொண்டிருப்போம்!!
உச்சிஷ்ட கணபதி
இப்புருடாவிற்கு (தினமலர் - வாரமலர் - 01/09/2019) 'U' சான்றிதழும் தரமுடியாது. 'A' சான்றிதழும் தரமுடியாது. "உவே" 🤮 சான்றிதழ் வேண்டுமானால் கொடுக்கலாம்!! 😄 பெரிய கோயில், ஒரு தலைக் காதல், சாபம், மாயாஜாலம், வித்தியாசம் என்ற பெயரில் பைத்தியக்காரத்தனம், ... இவையெல்லாம் தான் ஆன்மிக / பக்திக்கதைகளின் மூலப்பொருட்கள் போலிருக்கிறது! 😏
#காணபத்யம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம். இம்மதத்திற்காக உருவாக்கப்பட்ட தனி அடையாளங்களில் ஒன்று தான் #உச்சிஷ்ட #கணபதி. எப்போது சைவத்தோடு காணபத்யம் இணைக்கப்பட்டதோ, அப்போதே அன்றிருந்த சீர்திருத்தவாதிகள் இவற்றையெல்லாம் அழித்திருக்கவேண்டும். சரியாக போடப்படாத மாவுக் கட்டினால் தவறாக இணைந்து விடும் எலும்புகளைப் போல இவை சைவத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன!!
இணைப்புப் படத்தில் கட்டமிட்டுக் காட்டிய பகுதியில், "இதனாலேயே இப்படி ஒரு அமைப்பில் சிலை வடித்துள்ளனர்" என்ற வரி வருகிறது. அது என்ன அமைப்பு?
*விநாயகரின் துதிக்கை, பிறந்த மேனியாக உடனிருக்கும் அம்மனின் (விக்னேஷ்வரி) பெண்குறியை தொட்டுக் கொண்டிருப்பது அல்லது பெண் குறிக்குள் நுழைந்திருப்பது போன்ற அமைப்பு.*
எதற்கு இப்படியொரு அமைப்பு?
*உச்சிஷ்டம் என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. இங்கு இதன் பொருள் எஞ்சியது.* என்ன எஞ்சியது?
*உடலுறவு முடியும் தருவாயில், ஆணிடமிருந்து விந்து நீர் வெளியேறும் அந்த கணப்பொழுதிற்கு அவன் தன் உடலுணர்வை இழக்கிறான். அச்சமயம் மனம், உலகம் என எல்லாம் தானாக விலகிவிடும். எல்லாம் விலக ஒன்று மட்டும் எஞ்சியிருக்கும். உச்சிஷ்டம். அந்த ஒன்று தான் உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள்!! 🌺🙏🏼*
*எல்லாம் விலகியதைத் தான் பிறந்த மேனியாக உள்ள அம்மன் உணர்த்துகிறது. எல்லாம் விலகிய நிலையில் பரம்பொருள் தானே புலப்படும் என்பதை பெண்குறியைத் தொட்டுக் கொண்டிருக்கும் துதிக்கை உணர்த்துகிறது.* (இதை இப்படியே புரிந்து கொள்ள முயலவேண்டுமேயன்றி, இத்தோடு அத்வைதம், சைவம் என மற்றவற்றை ஒப்பிட்டால் குழப்பமே மிஞ்சும்.)
உள்ள பொருளை உணர்த்த / உணர எத்தனையோ வழிகள் இருக்க, உடலுறவை ஏன் தூக்கிப்பிடித்தார்கள்?
நம் நாட்டில் எதற்கு இத்தனை கட்சிகள், சங்கங்கள், "பொது நல" அமைப்புகள்? இதற்கான பதில் தான் மேலுள்ள கேள்விக்கும். தனக்கு 4 பேர் வேண்டும். நோகாமல் சம்பாதிக்கவேண்டும். எல்லோரும் தன்னைத் தேடி வரவேண்டும், சபையில் முன்னிலையில் இருக்கவேண்டும். இதற்கு அன்று சுலபமான வழி ஆன்மிகம். இன்று சமூக அநீதி, இந்து மதச்சார்பின்மை, பெண்ணியம், திராவிஷம், தேசத் துரோகம், பான்பராக்கிஸம்...
தனக்கு பெயர், புகழ், பணம், தனித்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காக, சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல், ஒரு வீட்டு இளம்பெண், எதிர் வீட்டிலிருக்கும் தந்தையை ஒத்த கிழவரை விரும்புவது போன்றும், ஒரு வீட்டு மணமான நடுத்தர வயதுப்பெண் எதிர்வீட்டு மணமாகாத இளைஞனை விரும்புவது போன்றும் சித்தரிக்கும் படைப்பாளிகளைப் (?) போன்றவர்கள் தாம் இது போன்ற வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள். எதையாவது செய்து மன்னரிடம் பொன்முடிப்பை பெற்றுக் கொண்டு காலத்தை ஓட்டிவிட வேண்டும்.
இது போன்ற கோணல் புத்தி இங்கு மட்டுமில்லை. உலகெங்கும் இருந்துள்ளது. *எகிப்தில், ஆன்மிகத் தலங்களில் இறையுணர்வு பெறும் வழிமுறைகளில் ஒன்றாக உடலுறவு கொள்ளுதல் இருந்துள்ளது.* அங்கிருக்கும் தேவதாசிப் பெண்களை அனுபவிக்க மேல்தட்டு மக்கள் வரிசை கட்டி நின்றுள்ளனர். இதுவே, "இறையுணர்வு தானே? பின்னாடி போ. நம்ம கருவாயன் இருப்பான். அவன் கிட்ட போய் தலைய குனிஞ்சு ஒக்காரு. உன் தலையில ஒரு தேங்காய ஒடைப்பான். சில வாரத்துக்கு இறையுணர்வு நிக்கும்." என்று சொல்லியிருந்தால்... துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எல்லாம் ஓடியிருக்கும். 😝
*சைவத்துக்குள் வந்த பின் விநாயகரின் பொருள் அறிவு மட்டுமே!!*
🌸🏵️🌼🌻💮
உள்ளது அலது உள்ள உணர்வு உள்ளதோ?
#உள்ளபொருள் உள்ளல் அற உள்ளத்தே
உள்ளதால், உள்ளம் எனும் உள்ளபொருள்
உள்ளல் எவன்? உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல். உணர்.
*-- பகவான் ஸ்ரீரமணர், உள்ளது நாற்பது*
பரம்பொருளுக்கு "உள்ளபொருள்" என்று அழகிய தமிழ் பெயரிட்டு, அதை நிரூபித்து, அதை அடையும் வழியை இரத்தினச் சுருக்கமாக, வெகு அழகாக இப்பாடலில் வெளியிட்டிருக்கிறார் பகவான்!! 🌺🙏🏼
🌸🏵️🌼🌻💮
இறையுணர்வு பெற நமது முன்னோர்கள் உருவாக்கிய உத்திகளில் சிலவற்றைப் பற்றி இந்த இடுகையில் பதிவு செய்துள்ளேன்:
https://samicheenan.blogspot.com/2018/09/blog-post_20.html?m=1
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼
Wednesday, September 4, 2019
ஏன் ஒரு பக்கத்தோடு தெரசாவின் திரைக்கதையை நிறுத்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை!! 🤔
#தெரசா ஒரு மதவாதி, தீவிர சர்ச்சிய வெறியர், நிற வெறியர், ஏமாற்றுக்காரர் என்றெல்லாம் புகழ்ந்து ஆங்கிலேய, அமெரிக்க வெள்ளையர்களே புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். அவற்றிலிருந்து சிலவற்றை சேர்த்திருக்கலாமே? 😏
தான் நடத்திய மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுத்தம், சுகாதாரம் என எதையும் கவனிக்காமல், சேர்ந்த பணத்தை இத்தாலிய தலைமையகத்துக்கு அனுப்பிய மார்க்கப் பற்றாளர் என்று புகழ்ந்திருக்கலாமே? 😛
இவர் காலத்திலிருந்தே காப்பகங்களிலிருந்து குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருந்தனர் என்ற வரியையாவது சேர்த்து திரைக்கதையை ருசிகரமாக்கியிருக்கலாமே? 😁
இத்தாலிய பாஸுக்கு பிடித்தமானவர் என்ற ஒரு "சிறப்பான" காரணத்துக்காக புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டவர் என்பதையாவது எழுதி தேவகிருபையை பெற்றிருக்கலாமே? 🥴
"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." -- யோவான் 12:24
இதன் படி, அம்மையார் "செத்தேயாகி" 🤪 இன்றும் பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
😆😆😂😂🤣🤣🤣
(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 01/09/2019)