திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இராமணர்) வீற்றிருக்கிறார். அவரை அணுகி, நாம் கரையேற வழிகாட்டுமாறு வேண்டுகிறோம். எவ்வுயிரையும் தன்னுயிர் போல கருதும் அப்பெருமான், நம் மீது இரக்கங் கொண்டு, நமதுண்மையை சுட்டிக்காட்டி, "நான் யார்?" என்ற தனது தன்னாட்டப் பயிற்சியை விளக்கியருளுகிறார். நாமும் இரவு பகலாக அந்த பயிற்சியில் ஈடுபட்டு, ஒரு சமயத்தில், பிறவிப் பெருங்கடலை விட்டு கரையேறுகிறோம்.
இப்போது, நம்மை கரையேற்றியது அருட்கடல் பெருமானா? அல்லது, அவரருளிய "நான் யார்?"-ஆ?
"நான் யார்?"-தான் நம்மை கரையேற்றியது என்று நீங்கள் கருதினால், அதாவது, பெருமானை விட, அவரிடமிருந்து வெளிப்பட்டது பெரிதென்று நீங்கள் கருதினால், பின்வரும் போற்றிகளை சொல்லி, மூவடி பெருமாளை (அசுரத்தில், திரிவிக்கிரமன்) வணங்கலாம்! 🤭:
ஓம் நான் யார்? நமக
ஓம் நீ யார்? நமக
ஓம் நாலுந் தெரிந்தவர் யார் யார்? நமக
ஓம் தாய் யார்? நமக
ஓம் மகன் யார்? நமக
ஓம் தந்தையென்பார் அவர் யார்? நமக
😆😝😂😂🤣
இவ்விடுகையை ஒரு நாமாசுரன் படிக்க நேர்ந்தால், என் மீது சினங்கொள்வானா? அல்லது, என் எழுத்தின் மீது சினங்கொள்வானா? 😏
oOo
(அன்பு கூர்ந்து, குறளன் பெருமாள் (அசுரத்தில், வாமன அவதாரம்) கதையை நினைவு படுத்திக் கொள்ளவும்.)
🌷 இந்திரன் - திரு அருட்கடல் பெருமான் போன்றொரு மாமுனிவர்.
🌷 உபேந்திரன் (குறளன் / குள்ளன்) - பெருமானிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற அறிவுரை.
🌷 பலி மன்னர் - செருக்கு நிறைந்த நாம்.
🌷 அசுரகுரு சுக்கிராச்சாரியார் - நமது மனம்.
🌷 அசுவமேத வேள்வி - நாம் வாழும் வாழ்க்கை.
🌷 வேள்வியின் இறுதியில் கொடுக்கப்படும் நன்கொடை - வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, முதிர்ச்சிய டைந்து, நாம் சேர்த்து வைத்திருக்கும் பற்றுகளை விட்டுவிடுதல்.
🌷 குறளன் பெருமாளின் வருகை - தக்க சமயம் வந்ததும், "நான் யார்?" போன்ற அறிவுரையை பற்றி அறிந்து கொள்ளுதல்.
🌷 அசுரகுரு பலி மன்னரை தடுத்தல் - இத்தனை ஆண்டுகளும் திராவிசம், சமூக அநீதி, இந்து மதச்சார்பின்மை என்று ஏமாற்றித் திரிந்த கொல்டியாள் கூட்டம், இன்று உண்மை வெளிவரத் தொடங்கியதும், எவ்வாறு தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறதோ, அவ்வாறே நமது மனமும் போராடும். "நான் யார்?" பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட விடாமல் ஐயங்களை எழுப்பும்.
🌷 குறளன் வானளாவ பெருகுதல் - தொடக்கத்தில், அவ்வப்போது "நான் யார்?" பற்றி சிந்திப்போம். போகப் போக நனவு, கனவு & தூக்கம் என எல்லா நிலைகளிலும் அது பற்றிய சிந்தனை நடந்து கொண்டேயிருக்கும். இதுவே குறளன் வானளாவ வளர்ந்து, எடுத்து வைத்த 3 அடிகளாகும்!
🌷 பலி மன்னர் தனது தலையை கொடுத்தல் - இறுதியில், நம்மை பற்றிய தெளிவு பிறந்ததும், "நான் இன்னார்" என்ற நமது செருக்கை விட்டுவிடுதல்.
(இது நுட்பமான, தலையாய படியாகும். எவ்வளவு தெளிவு கிடைத்தாலும், வெள்ளோட்டமே (டெமோ) கிடைத்திருந்தாலும், அவ்வளவு எளிதில் செருக்கை விட்டுவிடமுடியாது.)
oOo
அற நூல்களை கசடறக் கற்றுத் தெளிந்து, வடக்கிருந்து (அசுரத்தில், தவமிருந்து), அரும்பாடுபட்டு பேருண்மையை உணர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டிருந்தால், நாம மதம் வேறு வகையாக இருந்திருக்கும். ஆனால், திரு சீர்காழிப் பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) விட்ட ✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽-களால் "வடை போச்சே!" என்ற வயிற்றெரிச்சலில் இருந்த வடக்கத்திய பௌத்தரில் ஒரு பிரிவினர், தமிழரையும், அவர்தம் திருநெறியையும் வீழ்த்த வேண்டுமென்ற மட்டமான குறிக்கோள்களுடன், பாலைவன மதங்களிலிருந்து குறியீடுகளை திருடிக் கொண்டுவந்து, அவர்களுக்கு ஏற்றவாறு டிங்கரிங் செய்ததின் விளைவு...
அதே கண்கள் (1967) திரைப்படத்தில், டைப்பிஸ்ட் கோபு, "இடுப்ப ஆட்டு", "கழுத்த வெட்டு" என்று சொல்லச் சொல்ல, சிங்கப்பூர் மாதவி ஆடுவது போன்று மூவடி பெருமாளின் வடிவம் அமைந்துவிட்டது! 🤣
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻






