(# - ஆரியர்கள், குறிப்பாக, வைணவர்கள், தங்களது புருடாக்களில் திருநெறியத் தமிழர்களை அசுரர்களாக காண்பித்துள்ளதால், நான் அவர்களை அசுரர்கள் என்றழைக்கிறேன்.)
இன்று நாமம் போடும் தொழில் (வைணவம்) செய்து கொண்டிருக்கும் நாமாசுரர்கள், நேற்று மொட்டை போடும் தொழில் (பெளத்தம்) செய்து கொண்டிருந்தார்கள். திரு சீர்காழி பிள்ளையாரின் 🌺🙏🏽🙇🏽♂️ (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணியினால் மொட்டை, அம்மணம் போன்ற வடக்கிலிருந்து வந்த தொழில்கள் போணியாகாமல் போனதால், மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர், இங்கிருந்த மாயோன் வழிபாட்டினருடன் கூட்டு சேர்ந்து (அல்லது, அதை விலைக்கு வாங்கி), நாமத்தொழிலாக மாற்றிக்கொண்டனர். அதற்காக அவர்களிடமிருந்த ஒரு தங்க புத்தர் சிலையை விற்று, அப்பணத்தை முதலீடாக பயன்படுத்தியுள்ளனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இன்று நாம விகாரையாக இருக்கும் திருவரங்கம், நேற்று, பௌத்த விகாரையாக இருந்திருக்கலாம். ஆனால், "அதற்கும் முன்னர் என்னவாக இருந்தது?" என்பதுதான் இன்னும் முகமையான கேள்வியாகும்!
oOo
இதற்கு விடையாக, திருச்சி மக்களிடையே நிலவும் ஒரு செய்தியை ஆராயலாம்: சமயபுரம் மாரியம்மன் சிலையும், திருவரங்கம் பெருமாள் சிலையும் [பானைகள் செய்யப் பயன்படும்] ஒரே வகை மண்ணாலானது.
இதைக் கேட்டவுடன் நாம், "அக்காலத்தில், இரு சிலைகளையும், ஒரே சிற்பி ஒரே இடத்து மண்ணைக் கொண்டு வடிவமைத்திருப்பார் போலிருக்கிறது" என்று நினைத்துக் கொள்வோம். இது தவறாகும்!
திருவரங்கம் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திரு சட்டைமுனி பெருமானாவார் (அசுரத்தில், சித்தர்). சமயபுரம் மாரியம்மன் சிலைக்கு கீழேயிருக்கும் பெருமானின் பெயர் தெரியவில்லை. ஆனால், எது மேன்மையான பொருள் என்பது பற்றிய இருவரது கண்ணோட்டமும் ஒன்றாக இருந்துள்ளது. இதனால்தான், "... ஒரே வகை மண்ணாலானது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
வையகத்திலுள்ள யாவற்றையும் இரண்டாக பிரிக்கலாம்:
> காண்பவன்-காணப்படுவது
> உணருபவன்-உணரப்படுவது
> மாறாதது-மாறுவது
> அழியாதது-அழிவது
> அசையாதது-அசைவது
மேற்கண்ட இரு பெருமான்களும், மாறிக்கொண்டேயிருக்கும் மனதையும், உடலையும், வையகத்தையும் பெரிதாக கருதியுள்ளனர்.
மாறாததை போற்றினால் ஐயன் (சிவன்) வழிபாடு. மாறுவதை போற்றினால் அன்னை வழிபாடு. மாறுவதை ஆணாகக் கண்டால்... மாயோன் வழிபாடு! இவ்வழிபாடே சட்டைமுனி பெருமானின் திருவிடத்தில் (அசுரத்தில், சமாதியில்) நடந்திருக்கலாம். பின்னர், வடக்கிலிருந்து வந்த மொட்டாசுரர்களின் கைகளுக்கு சென்று, இன்று, நாமத்தொழிலின் தலைமையகமாக மாறியுள்ளது.
oOo
சீர்காழிப் பிள்ளையாரால் புவாவுக்கு லாட்டரி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மொட்டாசுரர்களுக்கு அப்போதிருந்த தெரிவுகள் 2:
🥂 மீண்டும் தேவலோகத்திற்கு திரும்பி, அன்றைய அசோகன் முதல் இன்றைய தெய்வப்பிறவி வரை, தெற்கை கொள்ளையடித்துக் கொடுக்கும் தட்சிணையில் சோமபானம் குடித்துக் கொண்டு, ஊர்வசி, அரம்பை போன்ற ஐயிட்டங்களின் குத்தாட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருத்தல். அல்லது,
🤑 இங்கேயிருக்கும் ஏதாவதொரு பிரிவினரோடு இணைந்து, தொழிலை தொடருதல்.
மொட்டாசுரர்களில் ஒரு பிரிவினர் 2வது தெரிவை தேர்ந்தெடுத்தனர். அவர்களே, இன்று, நாமாசுரர்களென்று (நாம மதத்தை வழிநடத்துபவர்கள்) அறியப்படுகின்றனர்.
(ஏன் பரந்து, விரிந்து, வலுவுடன் திகழ்ந்த அன்னை வழிபாட்டினருடன் இணையாமல், சிறிய அளவிலிருந்த மாயோன் வழிபாட்டை விலைக்கு வாங்கினர்? இதற்கான "கைங்கரியத்தை" வேறொரு நாள் வைத்துக் கொள்வோம்! ☺️)
oOo
இன்று,
💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 பட்டை நாமம் சாத்திவிட்டார்களா? = நன்றாக ஏமாற்றிவிட்டார்களா?
நேற்று,
💥 மொட்டை போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?
💥 மொட்டை போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?
இவ்வளவுதான் வைணவ & பௌத்த தொழில்களின் வரலாறு!! 👊🏽👊🏽
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
அருள் நிறைவான அன்புக்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻