Monday, November 29, 2021

விளக்கேற்றுதலின் உட்பொருள்

சில நாட்களுக்கு முன்பு, திருவரங்கத்திலுள்ள திரு ரெங்கநாயகித் தாயார் கோயிலில் இலட்சம் விளக்குகள் ஸ்ரீ, சங்கு & சக்கிர வடிவமைப்பில் ஏற்றப்பட்டன. அந்த வடிவங்களைப் பற்றியும், விளக்கேற்றுதலைப் பற்றியும் சற்று காண்போம்.


🌷 ஸ்ரீ எனில் அசையாதிருத்தல் / நிலைபேறு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இதற்கு சமமான தமிழ் சொல் "திரு" ஆகும்.

🌷 ஸ்ரீ எனில் மேன்மையான செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆரியத்திலும் வைணவத்திலும் "ஸ்ரீயை உடையவர்" எனில் நிலைபேறு அடைந்தவர் என்று பொருள். இந்த ஸ்ரீ சைவத்தில் திருநீறு (விபூதி) ஆகிறது. திருநீறு தரித்தவர் எனில் நிலைபேறு அடைந்தவர் (சிவமானவர்) என்று பொருள்.


🌷 கூத்தப்பெருமானின் மேலிரு கைகளிலுள்ள டமருவும், நெருப்பும் பெருமாளின் சங்கு சக்கிரமாகியிருக்கும். கூத்தப்பெருமானின் கண்ணாடி பிரதிபலிப்பு பெருமாளாவார்.

டமரு / சங்கு - ஒலி
நெருப்பு / சக்கிரம் - ஒளி

இவ்வுலகம் ஒலி & ஒளியால் ஆனது.


🌷 சக்கிரத்தின் பின்புறத்தில் மடங்கல் (சிங்கம்) பெருமாளை வைத்தால் இரு பொருள்கள் கிடைக்கும்:

🔸 தோன்றும் / அசையும் காட்சிகளுக்கு (சக்கிரம்) பற்றுக்கோடு அசைவற்ற பரம்பொருளாகும் (மடங்கல் பெருமாள்).
🔸 அசையும் மனம், உடல் முதலியவற்றிற்கு அசைவற்ற ஆன்மா பற்றுக்கோடாகும்.

🌷 நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்று எத்தனை விளக்குகளை ஏற்றினாலும், வகை வகையாக ஏற்றினாலும் விளக்கு உணர்த்தும் உட்பொருளை உணராமல், உணர்ந்ததன்படி வாழாமல் ஒரு பயனுமில்லை.

விளக்கு (அகல், மாவு, எலுமிச்சை, தேங்காய் ... ) என்பது நம் உடலுக்கு சமம். அதில் எரியும் நெருப்பு என்பது நம் உயிருக்கு சமம். ஒரு விளக்கு எரிவதால் அதற்கு எந்த பயனும் கிடையாது. ஆனால், அதிலிருந்து வெளிப்படும் வெளிச்சம், வெப்பம், நற்புகை மற்றவர்களுக்கு பயனளிக்கிறது. அதாவது, எரியும் விளக்கு என்பது தன்னலமற்று வாழ்வதைக் குறிக்கிறது.

🌷 "சாயங்காலம் வீட்டுல விளக்கேத்துமா" என்று பெண்களுக்கு பெரியவர்கள் அறிவுரை செய்வதைக் கேட்டிருப்போம்.

சாயங்காலம் - இரவுக்கு முந்தைய - இருள் சூழ்வதற்கு முந்தைய - காலம். குடும்பத்திற்கு கடின காலம் வருவதற்கு முன், தன்னலமற்று வாழும் மனப்பான்மையை குடும்பத்தலைவி வளர்த்துக் கொள்ளவேண்டும்.

ஓர் இல்லத்தில் கணவன்-மனைவி இடையே முறையான காதலும், பெற்றோர்-பிள்ளைகள் இடையே முறையான பாசமும் இருந்து, இல்லத்தரசி தன்னலமற்று, குடும்பத்தின் நலனுக்காக பாடுபடுபவராக அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மனநிறைவுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்குமா?

🌷 சிலருக்கு முயற்சி செய்யாமலேயே அல்லது சிறு முயற்சி செய்தவுடனேயே எல்லாம் கிட்டிவிடும். சிலருக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் எதுவும் கிட்டாது. எதிர்மறை பலன்கள்கூட கிட்டும். எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கும். தனக்கு கிட்டாது என்பதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி அனைவரிடமும் இருக்காது. முயற்சியற்று அமைதியாக இருக்கவும் முடியாது. இப்படிப்பட்டவர்களுக்கு நம் பெரியவர்கள் காட்டிய வழி: கோயில்களில் விளக்கேற்று!

இதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன:

🔸 இறைபணியில் தன்னலமற்று ஈடுபடு
🔸 தன்னலமற்று ஊருக்காக உழை (அக்காலத்தில் கல்விச்சாலை, நீதிமன்றம், நெற்களஞ்சியம் என ஊரே திருக்கோயிலிலிருந்து இயங்கியது. எனவே, ஊருக்காக உழை என்று சொல்லாமல் கோயிலில் உழை (விளக்கேற்று) என்று சொல்லியிருக்கிறார்கள்.)

பலன் கருதி எதையும் செய்தால்தான் பின்விளைவுகள் நம்மை பாதிக்கும். பலனை எதிர்பார்க்காவிட்டால் (தன்னலமற்று பணி செய்தால்) எதுவும் நம்மை பாதிக்காது.

கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே. -- திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️

விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்.

(ராகு வேளையில் கொற்றவைக்கும், தேய்பிறை எண்மையில் பைரவருக்கும் விளக்கேற்றுவது என்பது மேற்கண்ட தன்னலமற்ற பணிகள் கணக்கில் வராது. முனைப்பற்று இருப்போருக்கும், ஆணவம், தற்பெருமை, அச்சம் போன்ற குணங்கள் மிகுதியாக உள்ளவர்களுக்கானவை.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, November 21, 2021

இராமநாதபுரத்தில் பெளத்த விகாரமாம்! அடிக்கல் நாட்டுவிழாவில் "மதச்சார்பற்ற" அண்ணன் திருமா கலந்துகொண்டாராம்!!


💥 இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது பௌத்தர்கள் என்பதை அண்ணன் மறந்துவிட்டார் போலிருக்கிறது.

💥 தமிழ்நாட்டிற்குள் ஆரியத்தை கொண்டுவந்ததில் பெளத்தர்களுக்கு பெரும் பங்குள்ளது என்பது அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 இறுதிவரை தமிழுக்கு மாறாமல் ஆரியத்தை பிடித்துக் கொண்டிருந்ததால்தான் சமணத்தின் அளவிற்கு பெளத்தத்தால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் அண்ணனுக்கு தெரியாது போலிருக்கிறது.

💥 பெளத்தர்களின் அடையாளங்களில் ஒன்று மொட்டைத் தலை.

இன்றுவரை ஒருவர் தன்னிடமிருக்கும் அனைத்தையும் ஏமாந்துபோய் பறிகொடுத்தால் என்ன சொல்கிறோம்: உன்ன நல்லா மொட்ட போட்டுட்டாங்க பாேல? 

இதே போன்று, ஒருவர் மற்றொருவரை ஏமாற்றி, அவரிடமிருப்பதை கறந்துவிட்டு வந்தால் என்ன சொல்கிறோம்: அவன நல்லா மொட்ட போட்டுட்ட போலிருக்கு?

வடக்கிலிருந்து வந்த பெளத்தர்கள் நயவஞ்சகர்களாக இருந்து, மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருப்பதை பறித்துக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களது அடையாளங்களுள் ஒன்றான மொட்டைத் தலைக்கு "ஏமாற்றுதல்" மற்றும் "முழுவதையும் பறிகொடுத்தல்" ஆகிய பொருட்களை கொடுத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

(ஏற்கனவே அண்ணனின் முதலாளிகளில் ஒருவருக்கு "நயவஞ்சகமாகக் கறக்கும்" குணம் இருப்பதினால், பெளத்த மொட்டைகளையும் முதலாளிகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது! 😏)

💥 மொட்டை மதத்தை தமிழ்நாட்டிற்குள் மீண்டும் கொண்டு வருதல் என்பது "இந்து சமயத்திற்கு பல வகைகளில தொல்லைக் கொடுத்தல்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான். இதற்கு பெரும் பொருட்செலவும், காலமும் தேவைப்படும். இதற்கு மாற்றாக, மொட்டை மதத்திலிருந்து தோன்றிய நாம மதத்தை ஊக்குவிக்கலாம். நாம மதம் ஏற்கனவே இங்கு நன்கு நிலை பெற்றுள்ளது. உடனடி பலன் கிடைக்கும். 😁

பல வைணவத் தலங்கள் பெளத்த விகாரங்களாக இருந்தவைதாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலாகும். அவற்றை மீண்டும் விகாரங்களாக மாற்றிவிட்டால் உடனடியாக உள்கட்டமைப்பு கிடைத்துவிடும். 

> நாமம் போட்டுட்டியா? - ஏமாற்றிவிட்டாயா?
> நாமம் போட்டுட்டாங்களா? - ஏமாற்றிவிட்டார்களா?
> நாமம் -> வைணவம் -> ஏமாற்றுவேலை. 

மொட்டைகளானாலும் நாமப்பேர்வழிகளானாலும் தொழில் ஒன்றுதான்.

💥 ஒரு கட்டமைப்பும் இல்லாத பௌத்தர்களை ஊக்குவிப்பதை விட, ஓரளவு கட்டமைப்பும் எண்ணிக்கையும் கொண்ட சமணர்களை ஊக்குவிக்கலாம். ஆனால், அன்று சமணர்களுக்கு பெரும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த 

> பிறந்தமேனியாக வலம் வருதல் 
> மயிற்பீலியால் பாதையை தூய்மை செய்து கொண்டு செல்லுதல் 

போன்ற விற்பனை உத்திகள் இன்று உதவாது. பொருளை அடிப்படையாகக் கொண்ட தற்காலத்திற்கு ஏற்றவாறு புதிய உத்திகளை உருவாக்கவேண்டும்.

oOOo

தாேன்றிய யாவும் மறைந்தே தீரும். இறுதியாக நம் மண்ணிற்கு வந்துசேர்ந்த கிறித்தவம் முதல், முகம்மதியம், வைணவம், பௌத்தம், சமணம், வைதீகம் என யாவும் தோன்றியவைதாம். ஒரு நாள் இவை மறையும். ஆனால், சமயம் என்ற சொல்லுக்கு தகுதி பெற்ற ஒரே நெறியான சைவம், இன்னாரால் இன்ன நாளன்று தோற்றுவிக்கப்பட்டதன்று. மனிதன், தான் யாரென்று தன்னைப் பற்றி சிந்திக்க தொடங்கிய நாளிலிருந்து அது தொடங்குகிறது. மனிதர்கள் தோன்றிக் கொண்டிருக்கும் வரை அந்த சிந்தனையும் தொடரும். சைவமும் நிலைத்திருக்கும். 

பண்டைய நாகரிகங்கள் செழித்திருந்த பகுதிகளில் தற்போது அகழ்வாராய்ச்சி செய்யும் போது வெளிப்படுவது பெருமாள், புத்தர், தீர்த்தங்கரர் சிலைகளோ, குறுக்கைகளோ, வெள்ளை சுவர்களோ அல்ல. சிவலிங்கங்கள்!! ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சிவ வழிபாடே செழித்திருந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். மேன்மை கொள் சைவநீதி உலகெங்கும் மீண்டும் சிறந்து விளங்கும் காலம் வரும்.

சைவம் என்ற சொல்லின் பொருள் அசைவற்றது / உள்ளும் புறமும் இணைந்தது. எது அசைவற்றது? பரம்பொருள்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, November 14, 2021

இஸ்ரவேலர் இயேசுதான் கபாலீசுவரர் - திருமா!! 😆😂😂🤣🤣

திருமாவளவன் பேசிய காணொளி: https://youtube.com/shorts/VaVoMfCHNP8?feature=share

ஒரு திரைப்படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி சொல்வார், "ஃப்ரீயா கெடச்சா பினாயில கூட குடிப்படா நீ"!! 😄 இது போன்று, "பொர கிடைக்குதுன்னா என்ன வேணும்ன்னாலும் பேசுவடா நீ" என்று யாராவது இவரை பார்த்துச் சொன்னால்தான் அடங்குவார் போலிருக்கிறது. 👊🏽👊🏽

நேற்று அயோத்தியை மீட்டுவிட்டோம். நாளை கபாலீச்சரத்தை நாம் மீட்க முயற்சி செய்தால் என்ன செய்வதென்று யோசித்து இந்த ஊழியத்தில் இறங்கியுள்ளனர்.

இன்று நாம் கபாலீச்சரம் என்று வணங்கும் திருத்தலம் உண்மையான கபாலீச்சரமன்று! தற்போது சாந்தோம் என்றழைக்கப்படும் தசமபாக மதத்தின் தொழிற்கூடம் இருக்குமிடத்தில்தான் அன்று உண்மையான கபாலீச்சரம் ஓங்கி உயர்ந்திருந்தது. அத்திருத்தலத்தை அழித்து, அங்கிருந்த மூலவரை உடைத்தெறிந்தான் பரங்கி கொடூரனான வாஸ்கோட காமா! உடைத்தெறியப்பட்ட அம்மூலவரைக் கொண்டுவந்து இப்போதிருக்குமிடத்தில் வைத்துவிட்டனர் நம் முன்னோர்கள்.

புதையல் வைக்கப்பட்ட இடத்தின் அடையாளத்தை அழித்துவிட்டால் புதையல் அழிந்துபோகுமா? அடையாளத்தை இடமாற்றி வைத்துவிட்டால் புதையல்தான் தானாக இடம் பெயர்ந்துவிடுமா? மூலவரை இடமாற்றிவிட்டால் அதற்கடியில் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ இடம்பெயரமாட்டார். அவ்விடத்து மண்ணை முற்றிலுமாக அகற்றினாலும் அவர் வேறெங்கும் போகமாட்டார். அவரது சமாதியின் மீது இன்று நிற்கும் தொழிற்கூடம் ஒரு நாள் அகற்றப்படும். காழியூர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தாெடங்கும் பதிகம் பாடி பூம்பாவை அம்மையாரை உயிர்பித்த அந்த திருத்தலம் மீண்டும் நம் வசமாகும். கபாலீசரை மீண்டும் தொழும் பேறு நமக்கு கிட்டும்.

oOOo

இந்த காணொளியில் சொல்வதுபோல் இஸ்ரவேலர் ஈசன் என்றழைக்கப்படும் தகுதி பெற்றவரா?

தன்னை விட்டு உலகை வேறொன்றாக காணாத நிலையே சிவநிலை. எனில், பரங்கியரின் திரைக்கதையின் படி, இஸ்ரவேலர் குறுக்கையில் அறையப்பட்டிருக்கும் போது, உள்ளபொருளை தந்தை எனவும், அவரிடம் மக்களை மன்னிக்கும்படியும் கோரிக்கை வைக்கிறார். இந்த திரைக்கதை உண்மையெனில் தான், மக்கள், இறைவன் என நம்மைப் போன்று உலகைக் காண்பவரை எவ்வாறு ஈசனென்று ஏற்றக் கொள்ளமுடியும்?

அவருடைய இனம் மேம்பட வேண்டுமென அவர் உழைத்திருக்கலாம். போராடியிருக்கலாம். செயற்கரிய சில செயல்களை புரிந்திருக்கலாம். ஆனால், சிவநிலையை அடையவில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, November 9, 2021

டியூன் (Dune) திரைப்படத்தில் இடம் பெறும் மெய்யியல் காட்சிகள்



பின்வரும் உரைகள் அண்மையில் வெளிவந்த டியூன் (Dune) என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் இடம் பெறுகின்றன.

1. படத்தின் தொடக்கத்திலும், 3/4 பங்கு முடியும் போதும் பின்வரும் உரை இடம் பெறுகிறது:

நான் அச்சமடையக் கூடாது. அச்சமடையக் கூடாது.
அச்சத்தைக் கொண்டு மனதைக் கொல்லலாம்.
அச்சமென்னும் சிறிய இறப்பு பிறவியெனும் பெரிய இறப்பிற்குள் தள்ளிவிடும்.
அச்சத்தை எதிர்கொள்வேன். அது என்னை கடந்து போகும்.
அச்சம் என்னை கடந்து சென்ற பின்னர் என்ன மிச்சமிருக்கும்?
நான் மட்டும் இருப்பேன். நானாக இருப்பேன்.

தமிழுக்கேற்றவாறு சற்று மாற்றியிருக்கிறேன். இதன் மூல ஆங்கில உரை பின்வருமாறு:

I must not fear. I must not fear.
Fear is the mind-killer.
Fear is the little death that brings obliteration.
I will face my fear and I will permit it to pass over me and through me.
And when it has gone past…
I will turn the inner eye to see its path.
Where the fear has gone there will be nothing.
Only I will remain.

இந்த அருமையான உரையை "மனனஞ் செய்ததை ஒப்பித்தல்" போன்று காட்சிப்படுத்தியுள்ளனர்! இதை விட, 2013ல் வெளிவந்த After Earth என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். சாவைப் பற்றிய அச்சத்தை Ursa என்ற விலங்காக சித்தரித்து, அதை வென்று மெய்யறிவு பெறுவதை Ghosting என்ற உத்தியாக சித்தரித்திருப்பார்கள்.

இவ்விரு திரைப்படங்களின் உரைகளை எழுதியவர்களை நன்கு ஆராய்ந்தால் பின்னணியில் பகவான் திரு ரமண மாமுனிவர்தான் 🌺🙏🏽🙇🏽‍♂️ இருப்பார். குறிப்பாக, மதுரையில் 1896-ல் அவருக்கு ஏற்பட்ட முதல் இறப்புத் துய்ப்புதான் அடிப்படையாகவிருக்கும். பின்னொரு நாளில், அந்த துய்ப்பை பற்றி அன்பரொருவர், "மெய்யறிவு கிடைத்தவுடன் தங்களுக்குள் என்ன நடந்தது?" என்று கேட்டதற்கு பகவான், "அத்தோடு எனது சாவச்சம் நீங்கிற்று" என்று பதிலளித்தார்.

திரு மார்க்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ சமாதித் தலமான திருக்கடவூர் தலவரலாறும் சாவச்சத்தைப் பற்றியதுதான். இந்த தலவரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் மடங்கல் பெருமாள் திருவிறக்க கதை (நரசிம்ம அவதாரம்).

2. திரைப்படத்தின் இறுதி கால் பங்கில் பின்வரும் உரை இடம் பெறுகிறது:

கண் முன்னே விரியும் காட்சி என்பது விடுவிக்கப்படவேண்டிய புதிரன்று.
துய்க்கப்படவேண்டிய ஒன்று.
விரியும் காட்சியை நிறுத்தமுடியாது. விட்டு விலகவும் முடியாது.
கடல் அலைகளை எதிர்க்காமல், அவற்றோடு சருக்கி விளையாடுபவர்கள் போன்று காட்சிகளை கண்டுகளித்திருக்கவேண்டும்.

இதையும் தமிழுக்கேற்றவாறு நிறையவே மாற்றியிருக்கிறேன். இதன் மூல ஆங்கில உரை பின்வருமாறு:

The mystery of life isn't a problem to solve.
But a reality to experience.
A process that cannot be understood by stopping it.
We must move with the flow of the process.
We must join it. We must float with it.

இந்த உரையை விட, இது திரையில் பேசப்படும் போது பின்புறம் ஓடும் காட்சி அருமையாகவிருக்கும். மணல் துகள்கள் நிலையற்று, வேகமாக, ஒரு வடிவமைப்பில் இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பது போன்ற காட்சி பின்புறத்தில் ஓடிக் கொண்டிருக்கும். அணு நிலையில் உலகிலுள்ள யாவும் நிலையில்லாமல், ஓர் ஒழுங்கில் அசைந்து கொண்டிருப்பதை இப்படி சித்தரித்திருக்கிறார்கள்.

மேற்கண்ட உரை மற்றும் பின்புறக் காட்சியை ஓவியமாக்கினால்... அம்மையப்பரின் திருநடனம் கிடைக்கும்!! 😍

oOOo

இந்த டியூன் படம் போன்று பல ஹாலிவுட் திரைப்படங்களில் உள்ளபொருளைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

ஆனால், நமது திரைப்படங்களில்...

பிணக்குறியீடுகள், தசமபாகம் பெறும் தொழில் நிறுவனக் கட்டிடங்கள், காட்டுமிராண்டிப் பெயருடைய நல்லவர்கள், திருநீறு பூசிய அல்லது இந்துப் பெயருடைய கொடூரர்கள், "திருமணத்திற்கு முன் கலப்பதில் தவறென்ன இருக்கிறது?" என்ற பகுத்தறிவு கேள்விகள் ... 😔😡

இந்த அவல நிலை ஒரு நாள் முடிவுக்கு வரும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, November 3, 2021

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽✨🎁🍥🍡🎊🎉


☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ நரகாசுரனை கொன்ற நாள். அதாவது, கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்.

☀️ நரகாசுரன் - "நான் இந்த உடல்" என்ற தவறான எண்ணம். இந்த தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டுமெனில் நம்மைப் பற்றிய சரியான அறிவு துய்ப்பாக மலரவேண்டும். இது கண்ணபிரானுக்கு நடந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

☀️ கங்கை குளியல் - தீபாவளியன்று சந்திக்கும் நபர்களிடம் கேட்கப்படும் கேள்வி: கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) இதன் பொருள்: மெய்யறிவு கிடைத்ததா?

மெய்யறிவில் திளைக்கும்போது நம் தலையிலுள்ள பிட்டியூட்டரி சுரப்பி சிறப்பாக வேலை செய்யும். இதனால் உடலிலுள்ள மற்ற சுரப்பிகள் தூண்டப்பட்டு, அவையும் சிறப்பாக வேலை செய்யும். இதையே குளியல் என்று குறிப்பிட்டுள்ளனர். பிட்டியூட்டரி சுரப்பியிலிருந்து வெளிப்படும் நீர் வெள்ளை (கங்கை) நிறத்தில் இருப்பதால் "கங்கை குளியல்" என்று பெயரிட்டுள்ளனர். இதையே "சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவதாக" உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ தமிழகத்தில் தீபாவளியை அறிமுகப்படுத்தியது தெலுங்கு வைணவ மன்னரான திருமலை நாயக்கராவார். வைணவம் பரவுவதற்காகவும், அடைமழை காலத்தில் அடங்கிப் போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும் அறிமுகப்படுத்தினார். இன்றும் கூட, பெரும்பாலான கிராமப்புற தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. பொங்கலே தமிழர் திருநாளாகும்.

☀️ கண்ணபிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை மெய்யறிவைப் பற்றியது. ஆனால், தீபாவளி என்ற சொல் உணர்த்தும் பேருண்மை வேறு: விளக்குகள் பலவானாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இது போன்று, உயிரிகள் பலவானாலும் எல்லோருள்ளும் உள்ள தன்மையுணர்வு ஒன்றுதான்.

இந்த உண்மை உணரப்பட்ட திருத்தலம் நமது திருவண்ணாமலை (உணரப்பட்ட திருநாள் - திருக்கார்த்திகை). சில சமயம், ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வடக்கிற்கு சென்று, மீண்டும் வடக்கிலிருந்து தமிழுக்கு வரும். இது போன்று, திருக்கார்த்திகை வடக்கிற்கு சென்று கண்ணபிரானின் திருநாளோடு இணைந்து தீபாவளியாகி, பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும், நம்மவர்கள் விளக்கிடுதலை மட்டும் திருக்கார்த்திகையன்றே தொடர்ந்துள்ளனர்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நாம் "தொல் கார்த்திகை நாளன்று" (காழியூர் பிள்ளையாரின் சொற்கள் 🌺🙏🏽🙇🏽‍♂️) விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮