Monday, July 31, 2017

புத்தகம்: அவன் தாள் வணங்கி

"போற்றச் சிவனிருக்க
போதாத காலமென
அக்காள் பொருமினாள்
நெஞ்சம் மருகினாள்!
விரல் பத்தும் வேறொன்றும்
செய்வதில்லை
அருள்பற்றும் அவர்திருக்கை
ஆண்டவனை தொழுதது
விழியிரண்டும் தம்பியை
மீட்டுத்தாவென அழுதது!"

அருமையான வரிகள்!! 👏👌👍🙏

வேண்டுதல் வேண்டாமை இல்லா திருவதிகைப் பெருமானை வேண்டியே அப்பர் பெருமானை இருள் சமணத்திலிருந்து மீட்டார் திலகவதியம்மையார். அங்ஙனமே அப்பெருமானை நாமும் வேண்டுவோம், கொள்ளைக்காரர்களிடமிருந்தும், நயவஞ்சகர்களிடமிருந்தும், மூடர்களிடமிருந்தும், இருள் பர மதங்களிடமிருந்தும் நம் தெய்வ சமயத்தையும், நிறை மொழியையும், மண்ணையும், மக்களையும் மீட்டுத்தாவென்று!! 🌸🙏🌸

(இணைப்பு: தினமலர் - சென்னை - 30/06/2017)

Friday, July 28, 2017

கூகுளின் அருமையான தமிழ் உள்ளீட்டுக் கருவிகள்

🌼 GBoard - இப்போது தமிழ் ஸ்வைப்பிங்குடன் (உ-ம்: த-ம-இ-ழ = தமிழ்)

🌼 Google கையெழுத்து உள்ளீடு - கூகுள் தமிழன்னைக்கு செய்து கொண்டிருக்கும் சேவைகளில் அருமையானதாக நான் கருதுவது இந்த உள்ளீட்டு முறையை தான். 👏 இதற்காக எவ்வளவு உழைத்தார்களோ / செலவிட்டார்களோ தெரியவில்லை. 🙏 ஒரு முறை உபயோகித்துப் பார்த்த பின் வேறெதற்கும் மாறமாட்டோம். 👌

இவ்விரு பலகைகளைப் பற்றி தமிழர்கள் தெரிந்து கொண்டால் போதும். இணையத்தில் தமிழ் இன்னமும் வேகமாகப் பரவும்! 💪👍

தயவு செய்து உபயோகித்துப் பார்க்கவும். பின்னர், தங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் தெரிவிக்கவும்.

நன்றி! 🙏

Wednesday, July 19, 2017

1751ஐ விட 1857 தான் பெரிதாம்!! 😜

#மங்கள் #பாண்டே பணி புரிந்த படைப்பிரிவு தான் இந்திய விடுதலை போரை துவக்கி வைத்தாம்!! 😏

இது நடந்தது 1857-ல். இதற்கு 100 வருடங்களுக்கு முன்னரே மாமன்னர் *#புலித்தேவன்* வெள்ளையனே வெளியேறு என்று முழங்கினாரே? அவரைத் தொடர்ந்து *இராணி #வேலு #நாச்சியார், வீர #மருது #சகோதரர்கள், வீரபாண்டிய #கட்டபொம்மன்* என பலரும் வெள்ளையனை எதிர்த்து போரிட்டனரே?

வாந்தியர்கள் தான் நமது வரலாற்றை மறைப்பர், ஒதுக்குவர். இங்கேயே குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் தினமலருக்கு ஏன் இந்த வேலை? கவனக்குறைவா? தற்போதைய "வாந்தி நல்லதே" / "வாந்தியால் இணைவோம்" நிலைப்பாடா? 🤔

(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/07/2017)

ஜூலை 18 - மதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய நாள்

சொந்த மக்கள் விரும்பும் பெயரைக் கொண்டு வர எத்தனை போராட்டங்கள், தியாகங்கள்! இது அன்றைய நிலை. இன்றும் ஒன்றும் மாறிவிடவில்லை. அதே மக்கள் அவர்களது வீர விளையாட்டை விளையாட உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

அன்று கான்-கிரஸ். இன்று பகல் கொள்ளையர்கள். பெயர்கள் தாம் வேறேயன்றி வாந்தி திணிப்பு முதலான அடிப்படை கொள்கைகளில் இருவரும் ஒருவரே.

எவரிடம் ஆட்சி, பலம் இருக்கிறதோ அவர் அவருடைய மொழி, கலாச்சாரம், மதம், வரலாற்றை ஆள்பவரின் மேல் திணிப்பர் என்பது இயற்கை விதி. அன்று வெள்ளையன். இன்று வாந்தியன்.

அண்மையில் இலண்டனில் நடந்த நிகழ்வு ஒரு உதாரணம்.

நம்மவர்கள் நம் மொழியில் தலைப்பிட்டு நடத்திய நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு வாந்திப் பாடல்கள் பாடவில்லை என்று வீராப்பு காட்டியது ஏன்? ஆட்சி, பலம், எண்ணிக்கை அவர்கள் கையில் இருப்பதால். அவை கொடுக்கும் திமிரால்.

இலங்கையில் இலட்சக்கணக்கில் நம்மவர்கள் கொல்லப்பட்ட போது, பெரும்பாலான வாந்தியர்களின் கருத்து என்னவாக இருந்திருக்கும்? "ஏதோ அடித்துக் கொள்கிறார்கள்" என்பதாகத் தான் இருந்திருக்கும்.

தமிழனின் வளம் வேண்டும். அவனின் வரி வேண்டும். பதிலுக்கு அவனது அடையாளங்களை அழிக்க வேண்டும். எதிர்த்தால், "குறுகிய சிந்தனையுடையவன்", "இறையாண்மைக்கு எதிரானவன்" என்று பட்டங்கள் கட்டவேண்டும்.

கூட்டுக் குடும்பத்தில் நியாயமில்லை எனில் தனிக்குடித்தனம் தான் தீர்வு என்பதை அறியாதவனல்ல தமிழன்.

Tuesday, July 18, 2017

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்!

பலரும் அறிந்த #பழமொழி இது.

ஆனால், இது தவறு!! 👎

சரியான பழமொழி: *ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால், பூநெய்க்கு ஒரு காலம் வரும்!* 👍

ஆநெய் ஆனை ஆகியிருந்தால் கூட பரவாயில்லை. யானை ஆகிவிட்டது. இதையொட்டி, பூநெய் பூனை ஆகிவிட்டது. 😁 (ஒரு படத்தில், கவுண்டமணியின் மகனாக சார்லி வருவார். இவர் குடிகாரர். கீழ்நிலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது கவுண்டமணி உள்ளே விழுந்துவிடுவார். அருகில் யாரும் இருக்கமாட்டார்கள். அவ்வழியே வரும் குடிகார சார்லி, நல்லது செய்வதாக நினைத்து தொட்டியின் வாயை மூடிவிடுவார். இது போல், ஆநெய் பேச்சு வழக்கில் ஆனை ஆகியிருக்கலாம். இது தவறு என்று நினைத்த தமிழ் விரும்பி யாரேனும் ஆனையை யானையாக மாற்றியிருப்பார்!! 😂)

*இப்பழமொழி ஒரு மருத்துவக் குறிப்பு!*

#ஆநெய் = ஆ + நெய் = பசுவின் நெய்
#பூநெய் = பூ + நெய் = பூவிலிருந்து உருவாகும் தேன்

"ஓடியாடி நன்றாக உடல் உழைப்பு உள்ள காலம் வரையில் நெய்யை அதிகமாகவும், பின்னர் நெய்யை குறைத்தும், எளிதில் செரிமானமாகக் கூடியதும் மருத்துவ குணம் நிறைந்ததுமாகிய தேனை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ளவேண்டும்" என்பது இப்பழமொழியின் பொருள்!! 👏👏👏

(மூலம்: வாட்ஸ்அப்)

Saturday, July 15, 2017

Talk #121: Talks between Bhagavaan Shree Ramana Maharshi and two Moslems

Devotee: Has God a form?

Maharshi: Who says so?

D.: Well, if God has no form is it proper to worship idols?

M.: Leave God alone because He is unknown. What about you? Have you a form?

D.: Yes. I am this and so and so.

M.: So then, you are a man with limbs, about three and a half cubits high, with beard, etc. Is it so?

D.: Certainly.

M.: Then do you find yourself so in deep sleep?

D.: After waking I perceive that I was asleep. Therefore by inference I remained thus in deep sleep also.

M.: If you are the body why do they bury the corpse after death? The body must refuse to be buried.

D.: No, I am the subtle jiva within the gross body.

M.: So you see that you are really formless; but you are at present identifying yourself with the body. So long as you are formful why should you not worship the formless God as being formful?

The questioner was baffled and perplexed.

😁😁😁

Likewise throughout "Talks..." you can find numerous occasions where people came to examine Bhagavaan or to prove their -ism was better than Advaitham (Bhagavaan never identified Himself with any religion or group. His teachings were completely based on His experience and not based on any scriptures). Sometimes Bhagavaan brought such people to the right path. Sometimes He would say what they wanted to hear and got rid of them. Sometimes He kept quiet. Sometimes He paid them back in their own coin. When He did pay them back, it was always in a spectacular way!! With just one simple question, He would bring down their entire defensive structures.

🌼🙏🌺

Thursday, July 13, 2017

இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட செப்புத் தகட்டில் ஒன்று சேரமான் பெருமாள் நாயனார் வழங்கியது!! 😍🌸🙏

(http://www.vikatan.com/news/spirituality/95224-history-behind-pm-modis-gifts-to-israels-benjamin-netanyahu.html)

தமிழ் & தமிழரின் தொன்மை, சைவம், சேரமான் பெருமாள் நாயனார், உலகளாவிய வர்த்தகம், இவர் தம் சிறப்பால் ஈர்க்கப்பட்டு வந்து சேர்ந்தோர், அவர் மூலம் உலகம் முழுதும் பரவிய எம் மொழி, சமயம், வாழ்க்கை முறை...

அந்தக் காலம் திரும்ப வராதா?
மீண்டும் சம்பந்த பெருமான் தோன்றமாட்டாரா?,
"பரந்தெழுந்த ... பர சமய இருள் நீங்க" என மீண்டும் உமாபதி சிவம் பாடமாட்டாரா?
...

என ஏங்க வைக்கும் கட்டுரை இது. 👌🏼😍

🌸🌼🌺

ஆனால், எதற்கோ தெரியாதாம் கற்பூர வாசனை என்பது போல், ரூ. 10ல உடை, தனது ஓட்டை தேநீர்க் கடையை ரூ. 100 கோடியில் சுற்றுலா தலமாக்குதல் போன்ற அற்ப ஆசைகளைக் கொண்டவருக்கு, வாந்திபிரியருக்கு, மனிதனைக் கண்டாலே "இவனிடம் எப்படிக் கொள்ளையடிக்கலாம்?" என்று யோசிப்பவருக்கு ஏங்கே தெரியப்போகிறது இவ்வருமை பெருமைகள்? 😏 செப்புத் தகடுகளை பரிசளித்ததை டிவீட் செய்தவருக்கு, அதிலுள்ள செய்திகள் தமிழிலுள்ளது என்று டிவீட் செய்ய முடியவில்லை. ஒரு வேளை வாந்தியில் இருந்திருந்தால்? 🤔

Tuesday, July 4, 2017

Talk 92: Part of #Bhagavaan #Shree #Ramana #Maharshi's reply to a question asked by a visitor

Unbroken ‘I-I’ is the ocean infinite, the ego, ‘I’ thought, remains only a bubble on it and is called jiva, i.e., individual soul. The bubble too is water; when it bursts it only mixes in the ocean. When it remains a bubble it is still a part of the ocean. Ignorant of this simple truth, innumerable methods under different denominations, such as yoga, bhakti, karma....... each again with many modifications, are being taught with great skill and in intricate detail only to entice the seekers and confuse their minds. So also are the religions and sects and dogmas. What are they all for? Only for knowing the Self. They are aids and practices required for knowing the Self.

Objects perceived by the senses are spoken of as immediate knowledge (pratyaksha). Can anything be as direct as the Self - always experienced without the aid of the senses? Sense perceptions can only be indirect knowledge, and not direct knowledge. Only one’s own awareness is direct knowledge, as is the common experience of one and all. *No aids are needed to know one’s own Self, i.e., to be aware.*

The one Infinite Unbroken Whole (plenum) becomes aware of itself as ‘I’. This is its original name. All other names, e.g., OM, are later growths. *Liberation is only to remain aware of the Self.* The mahavakya “I am Brahman” is its authority. Though the ‘I’ is always experienced, yet one’s attention has to be drawn to it. Only then does knowledge dawn. Thus the need for the instruction of the Upanishads and of wise sages.

🌸🙏🌼🙏🌸

Monday, July 3, 2017

தமிழகத்தை துண்டாக்கியாவது ஆள துடிக்கும் மஸ்தான்!! 😡😡

http://tamil.oneindia.com/news/tamilnadu/delhi-conisder-demand-tn-bifurcation-288265.html

புராணங்களில் அசுரர் பிறப்பு பற்றிய ஒரு கதை உண்டு...

ஒரு அந்திப் பொழுதில் ஒரு முனிவரின் மனைவிக்கு கலவி கொள்ளும் இச்சை தோன்றுகிறது. தன் கணவரான முனிவரிடம் இதை தெரிவிக்கிறார். முனிவர் பொழுது சரியில்லை என்று எடுத்துச் சொல்லியும் மனைவி கேட்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தவே, முனிவர் இணங்குகிறார். மனைவியின் இச்சையைத் தீர்க்க, மூர்க்கமாக செயல்படுகிறார். இத்தகைய சேர்க்கையினால் அசுர குலம் தோன்றுகிறது.

இந்தக் கதையில் ஓட்டைகள் பல இருந்தாலும், பெரியவர்கள் சொல்லி வைத்த செய்தி என்னவெனில், பிள்ளைப்பேறுக்காக இணைபவர்கள், காலம் பார்த்து, நல்ல எண்ணங்களுடன், சாந்தமாக இணையவேண்டும் என்பது தான். ஒரு விதத்தில் இது சமைத்தலுக்குச் சமம். எவ்வாறு நல்ல எண்ணங்களுடன் சமைப்பது, அதை உண்பவர்களுக்கு நன்மையைத் தருமோ, அவ்வாறே கலவி முதல் பேறு வரை நல்ல குணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் நல்ல மகவைப் பெற்றிட உதவும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இதனால் தான் பேச்சு வழக்கில், சரியில்லாத நபரை குறித்து சிலர், "என்ன நெனச்சு இவன பெத்தாங்களோ தெரியல" என்று அங்கலாயிப்பர்.

இப்போது மஸ்தானுக்கு வருவோம்...

தினம் தினம் குட்டையைக் குழப்புதல், சதா தேசத்தை கொள்ளையடிப்பதைப் பற்றிய சிந்தனை, ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் உலகம் சுற்றுதல், எதற்கெடுத்தாலும் ஆள்காட்டி விரலை காண்பித்து "கொன்னுபுடுவேன்" என்று மிரட்டுதல், சில்லரை ஆசைகள் (ரூ. 10ல உடை, அமெரிக்க அதிபருக்கு - உலக மகா கொள்ளைக்காரனுக்கு - தேநீர் தயாரித்து வழங்கியது, மார்க் ஜுகர்பெர்க்கை பின்னுக்குத் தள்ளியது), மொழி வெறி (வாந்தி திணிப்பு), இன வெறி (துண்டாக்கியாவது தமிழகத்தை ஆள முயற்சிப்பது), துரோகத்தனம் (ஆட்சியைப் பெற பேஜார், மரபணு மாற்றிய விதைகள், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற பல மக்கள் விரோதத் திட்டங்களை நிறுத்துவேன் என்று பீலா தள்ளிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை விரிவுபடுத்தியது) என இவரது "தங்கமான" நடவடிக்கைகளைப் பார்க்கும் போது நம் மனதில் நிச்சயமாகத் தோன்றும் கேள்வி: என்ன நெனச்சுயா பெத்தாங்க இவன?

😛😜😝 😁😂😂

Saturday, July 1, 2017

*ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள்...*

பெருசா ஒன்னுமில்லைங்க... நம்ம தாத்தா காலத்து வழிமுறைதான்!

1. வெளியில் செல்லும்போது குடிதண்ணீர பாட்டிலில் எடுத்துட்டுப் போங்க

2. பயணத்தின் போது புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் வீட்டில் செய்து கட்டிகிட்டுப் போங்க (டப்பால கட்டுங்க கவர்ல கட்டின ஜி எஸ் டி வரும் 😜)

3. அண்ணாச்சி கடைக்கே போங்க. ஒயர்கூடை இல்லேன்னா மஞ்ச பை எடுத்திட்டு பொய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமான்கள் வாங்குங்க.

4. வார இறுதி நாட்களில் வீட்லயே குடும்பத்தோட ஏதாவது சிறப்பு உணவு தயார் செய்து சாப்பிடுங்க

5. திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்க

6. விடுமுறை நாட்களில் மால், ஷாப்பிங்ன்னு போகாம பாட்டி தாத்தா ஊருக்கோ, சொந்த ஊருக்கோ போங்க

7. காலைல நடைப்பயிற்சி சென்றுவிட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்து பழகுங்க

9. பழைய பழக்கங்கள் போல, வெளியூர் போனால், நண்பர்கள், சொந்தக்காரர்கள் வீட்டில் தங்குங்க

10. சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து சொந்தமாக வாழ (சுயசார்பு வாழ்கை) முயற்சி பண்ணுங்க

இப்படி செய்தால்
உடல் ஆரோக்கியமாகும்.
மிகப்பெரும் பணம் மிச்சமாகும்.
சொந்தம் பெருகும்.
மனைவி கணவன் பாசம், அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும்.
நட்பு வட்டங்கள் உண்மையாகும்.

*உண்மையான பழைய  பாரதம் மீண்டும் பிறக்கும்!!* 💪🏼💪🏼💪🏼

வணக்கமுங்க... 😉

(மூலம்: வாட்ஸ்அப்)

(இணைப்பு: இப்படியேப் போனா இன்னும் கொஞ்சம் நாள்ல அழைப்பிதழ் இப்படித் தான் இருக்குமுங்க. ஏற்கனவே அரசியல்(வி)யாதிங்க இப்படித் தான் நம்மல பார்க்குறாங்க. *மேட்ரிக்ஸ் படத்துல மார்ஃபியஸ் நியோவுக்கு காட்டுற பேட்டரி தான் நாம.*)