Friday, May 26, 2017

சுத்த விவரங்கெட்ட பரங்கிகள்!! 😣

https://twitter.com/bbctamil/status/868100688689209344

தீ மிதித்தலை இப்படியா தமிழர்களைப் போல் இலவசமாக நடத்துவார்கள்? சுத்த விவரங்கெட்ட பரங்கிகள்!! 😣

அவர்களுக்கே உரிய பாணியில், #தீ #மிதித்தல் Retreat, தீ மிதித்தல் Workshop, Advanced தீ மிதித்தல், தீ மிதித்தல் For Dummies, தீ மிதித்தல் DIY Kit, தீ மிதித்தல் with Dr. உடான்ஸ், One day seminar on Globalization & தீ மிதித்தல் என பல்வேறு வழிகளிலும், நிலைகளாகவும் பரப்பி அனைவரையும் சென்றடைய செய்து, பொருளாதாரத்தையும் வளர்த்து விட்டு, பின்னர், பன்றி டோனிகர் போன்ற "அறிவுஜீவிகள்" வழியாக "தீ மிதித்தல் பரங்கியரிடமிருந்து தமிழகத்திற்கு வந்தது" என்ற உண்மையை உலகத்திற்கு எடுத்துரைத்து,  இறுதியில் "தீ மிதித்தல் எவ்வாறு தமிழகத்திற்குள் நுழைந்தது?" என்ற 2 மதிப்பெண் கேள்வியாக்கி, அடிமை மனப்பான்மையை தக்க வைப்பதை விட்டுவிட்டு இப்படியா போட்டுடைப்பார்கள்!! 😤

பரங்கிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ள வெட்கப்பட வேண்டும் இவர்கள்!! 😠 இச்செய்தியைக் கேட்டால் "இந்தியாவைக் கண்டு பிடித்தது வாஸ்கோடகாமா" என்ற பிட்டின் மூலம் அடிமை மனப்பான்மைக்கு வித்திட்ட அந்த முகம் தெரியாத பரங்கியனின் மனம் எவ்வளவு புண்படும்? 😱😰

😂😂😂

மாறுவேடத்திலிருந்த ஸ்ரீ ராமரை கண்டுபிடித்த ஸ்ரீசீதை -- பின்னணியில் உள்ள பேருண்மையை விளக்குகிறார் பகவான் ஸ்ரீரமணர்...

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வந்திருந்த லக்ஷ்மண பிரஹ்மசாரி “*நான் யாரென்னும் விசாரணையும் மனத்தின் ஓர் எழுச்சிதானே; அதனால் மனோநாசம் எப்படிக் கைகூடும்?*” என்று வினவினார்.

#பகவான் #ஶ்ரீரமணர்: ஸீதையின் நிகரற்ற கற்புச் சிறப்பை ரிஷிபத்னிகள் சோதித்துப் பார்த்ததாக ஒரு கதை சொல்லப்படும். ரிஷிகள் பலரிடையே ஸ்ரீராமனும் தன் வடிவை மறைத்து ஒரு ரிஷி வேஷத்தோடு நிற்க, ரிஷிபத்னிகள், அவர்களுக்குள் தன் பதி யாரென்று கண்டு பிடிக்கும்படி ஸீதையைக் கேட்டுக்கொண்டனர்.

ஸீதை ரிஷிகள் ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து ‘இல்லை இல்லை’ என்று சொல்லிக்கொண்டே வந்து ரிஷி வேஷத்தில் நின்ற தன் பதியைக் கண்டதும் மௌனமாய்த் தலை குனிந்து நின்றாள். ஸீதையின் மௌனம் உண்மையைச் சிறப்புற உரைத்தது.

அவ்வாறே  வேதங்கள், தத்துவங்களை ஆய்ந்தாய்ந்து “அல்ல, அல்ல” என்று (நேதி – ந, இதி) புறக்கணித்துக் கொண்டே சென்று, ஓரிடத்தில் மேலேயொன்றும் சொல்வதற்கின்றி மௌனமாய் நிற்கின்றன. அதுவே உண்மை நிலை. *மௌனத்தால் உண்மையை விளக்குவதன் தாற்பரியம் இதுவே!* விசாரணை விருத்தியால், பிறவிருத்திகள் யாவும் விலக்கப்பட்டு, விலக்குவதற்கு மேலேயொன்றுமில்லா நிலையில் அவ்விருத்தி தன் மூலமாம் ஸ்வரூபத்தி லொடுங்க, ஸ்வரூபமே மிஞ்சி நிற்கிறது. என்றுமுள்ள ஏக பரிபூரண அஹம் ஸ்வரூபம் அதுவே. பாவனாதீதமாம் பரம்பொருள் அதுவே. உரை கடந்ததோர்  அனுபவ  ஸ்வரூபம்.

- #ஸ்ரீபகவத் #வசனாம்ருதம் நூலிலிருந்து

🌸🙏

(மூலம்: ஸ்ரீரமணாச்ரம முகநூல் பக்கம்)

​*நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்*

இது ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. *அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்!*

தற்போது #அனில் #சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து #நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம் பேசினோம். 

▶ *ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...?*

நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், *நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது!*

▶ *எப்படிச் சொல்கிறீர்கள்...?*

அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. *இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம்.* 👏👏  எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவான். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா? அது மட்டுமல்ல, *புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.* (மக்கள் மன்றத்தை தவிர்த்தல் என்ற யுக்தியை மிக கச்சிதமாக உபயோகித்துக் கொண்டிருப்பது இப்போதிருக்கும் குஜ்ஜு ஓநாய்களின் அரசாங்கம்! 😠)

▶ *சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...?*

*கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும்.* 👏👍 ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. *உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.* 👊👊👊

▶ *புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?*

உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.

(போன வருஷம் நடந்த WTO மாநாட்டுல தான், மஸ்தானோட அனுக்கிரகம் வாங்குன நம்ம மாமி, பூட்ஸ் போட்ட அமெரிக்காகாரனோட கால நக்கிட்டு, அவா சொன்ன இடத்தில எல்லாம் கையெழுத்துப் போட்டுண்டு வந்துட்டா. தெரியாதோண்ணோ நேக்கு? பொது வினியோகத்தயும், விவசாயத்தயும் அழிக்கத்தான் ஒத்துண்டு வந்தான்னு நெனச்சேன். பொது சுகாதாரமும் அவுட்டு போலிருக்கே! சும்மா சொல்லப்படாது. மாமி படு ஸ்மார்ட்! மஸ்தானோட செலக்ஷன்னா சும்மாவா!! என் கண்ணே பட்டுடும் போலிருக்கே. அவங்க ஆத்துப் பெரியவா கிட்ட சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்கோ! 😛😜😝)

▶ *இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...?*

இப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.

▶ *தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்?*

தகுதி எதைவைத்து நிர்ணயிக்கப்படுகிறது? தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா...? ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா? நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்...? ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....?'' 

▶ *சரி, இதற்கு என்னதான் தீர்வு...?*

 கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். (ஆனால், ஒப்புதல் கிடைக்காமல் குஜ்ஜு ஓநாய்களும், ஒப்புதல் பெற முயலாமல் நம் பன்னாடைகளும் "மக்களாட்சி" செய்து கொண்டிருக்கின்றன. 😡)

கல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.

▶ *ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது?*
 
ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும். இது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். 💪💪💪 மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். *இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு!!* 👌👏👍

(மூலம்: http://www.vikatan.com/news/coverstory/90047-this-is-the-connection-between-neet-exam-and-wto-imf-speaks-professor-anil-sadgopal.html)

Tuesday, May 23, 2017

Talk #46 from "#Talks #with #Maharshi"

... #Bhagavaan said that *the mind is only identity of the Self with the body.* It is a false ego that is created; it creates false phenomena in its turn, and appears to move in them; all these are false. *The Self is the only Reality.* If the false identity vanishes the persistence of the Reality becomes apparent. It does not mean that Reality is not here and now. It is always there and eternally the same. It is also in everyone’s experience. For everyone knows that he is. “Who is he?”. Subjectively, “Who am I?” The false ego is associated with objects; this ego itself is its own object. *Objectivity is the falsity. Subject is alone the Reality.* Do not confound yourself with the object, namely the body. This gives rise to the false ego, consequently of the world and your movements therein with the resulting misery. *Do not think yourself to be this, that or anything; to be so and so, or to be such and such. Only leave off the falsity. The Reality will reveal itself.* The scriptures say that the *Self is nityasiddha, ever present,* and yet speak of the removal of ajnana. If Self is (nitya) always and (siddha) present, how can there be ajnana? For whom is the ajnana? These are contradictory. But such statements are for guiding the earnest seeker in the right way. He does not readily understand the only Truth if mentioned in plain words as in "natwam naham neme janadhipah" (not thou, nor I, nor these kings ...). Sri Krishna declared the Truth, but Arjuna could not grasp it. Later Krishna plainly says that people confound Him with the body, whereas in reality He was not born nor will He die. Still Arjuna requires the whole Gita for the Truth to be made clear to him.

Look, *the Self is only Be-ing, not being this or that. It is simple Being. Be - and there is an end of the ignorance.* Enquire for whom is the ignorance. The ego arises when you wake up from sleep. *In deep sleep you do not say that you are sleeping and that you are going to wake up or that you have been sleeping so long. But still you are there.* Only when you are awake you say that you have slept. Your wakefulness comprises sleep also in it. Realise your pure Be-ing. Let there be no confusion with the body. *The body is the result of thoughts. The thoughts will play as usual, but you will not be affected. You were not concerned with the body when asleep; so you can always remain.*

Mr. Ekanatha Rao: How can anyone reconcile such activity with the wage-earning which is a necessity for worldly people?

B.: *Actions form no bondage. Bondage is only the false notion, “I am the doer.”* Leave off such thoughts and let the body and senses play their role, unimpeded by your interference.

🔥 Om Namo Bhagavathe Shree Arunaachala Ramanaaya 🔥

🌸🙏🌸

Thursday, May 18, 2017

🌼 *Few gems from #Yoga #Vasishta #Saaram (#)* 🌼

🔥 The knowledge of the Self is the fire that burns up the dry grass of desire. This indeed is what is called samadhi, not mere abstention from speech.

🔥 The mind is the creator of the world, the mind is the individual (purusha); only that which is done by the mind is regarded as done, not that which is done by the body. The arm with which one embraces the wife is the very arm with which one embraces the daughter.

🔥 To be unperturbed is the foundation of
blessedness (Sri).

🌸 🙏 🌸 🙏 🌸 🙏 🌸

# - One of the 6 books frequently referred to by Shree #Bhagavaan

Wednesday, May 17, 2017

வா(இ)ந்தியைப் பற்றி திரு. காயிதே மில்லத்...

இந்தி மொழி பற்றி *காயிதே மில்லத்* அவர்கள்...

அன்று நாடாளுமன்றத்தில் கேள்விகளைக்
கணைகள் போல் தொடுத்தார்.

#காயிதே #மில்லத்: இந்தியாவின் தேசிய மொழி எது?

பதில்: #இந்தி

காயிதே மில்லத்: ஏன் இந்தி மொழியை,
தேசிய மொழியாக  வைத்தார்கள்?

பதில்: இந்தி மொழியே இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்பதால்.

காயிதே மில்லத்: இந்தியாவின் தேசியப் பறவை எது?

பதில்: #மயில்.

காயிதே மில்லத்: *மயில் இனம் இந்தியாவில் மிகக் குறைவு, இந்தியாவில் அதிகம் இருக்கும் பறவை காக்கை. ஆகையால் காக்கையைத் தேசியப் பறவையாக வைக்க வேண்டியது தானே?* 👌👏✊👊 😛😜😝

யாரும் வாய் திறக்கவில்லை. 😀

காயிதே மில்லத்: எது வேண்டும், வேண்டாம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இந்தி தெரிந்தால் தான் நாடு முன்னேறும் என்றால்,  *இந்தி பேசத் தெரிந்த, பீகார், ஒடிசா மக்களின் வாழ்க்கைத் தரம் ஏன் முன்னேற்றம் காணவில்லை?* 👊👊👊👊

இதற்கும் யாரும் வாய் திறக்கவில்லை. 😁

காயிதே மில்லத்: கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தியை உங்களால் திணிக்க முடியாது! சவாலாகச் சொல்கிறேன்!! *தமிழன் என்று மார்தட்டிச் சொல்லுகிறேன்.*

#ஜவஹர்லால் #காஜி (#நேரு): நீங்கள் முஸ்லீம். ஏன் தமிழ் மீது பற்று?

காயிதே மில்லத்: இசுலாம் எனது வழியாகும். *இன்பத் தமிழே எனது மொழியாகும்!!* 👏👏👏

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

இப்படி முகத்திலேயே கும்மாங்குத்து வாங்கியும் திருந்தவில்லை.

அது சரி. அன்று குத்து வாங்கியது, மோகன்தாஸின் இறப்பை வைத்து மேலே வந்த காஜிக்கள் காலம். இன்று, ஜெயலலிதாவின் இறப்பை வைத்து தமிழகத்தில் நுழைய முயலும் மஸ்தான்கள் காலம். செல்ஃபி, டீ ஆற்றுதல், நெல் வயலுக்கு நெருப்பு, பேஜார், ரூ. 10ல உடை என பல மாற்றங்கள், முன்னேற்றங்கள், மைல் கல்கள் கண்டவர்கள். 😛😜😝 மீண்டும் வாலை நுழைத்துப் பார்க்கிறார்கள். இழுத்து வைத்து ஒட்ட வெட்டுவோம்!!

(இணைப்பு: 1920களில் கூட பணத்தாளில் இடம் பெற வக்கில்லாத ஒரு குப்பை மொழி தான் வா(இ)ந்தி என்பதற்கு ஆதாரம். முகநூலில் கிடைத்தது.)

பா.ஜ.க.வின் வா(இ)ந்தி திணிப்பிற்கு மமதாவின் பதிலடி!! 👍

நேற்று நள்ளிரவில் வங்கத்திலிருந்து வந்த அந்த நல்ல செய்தி இதுதான்.

மேற்கு வங்க அரசு அந்த மாநிலத்திலுள்ள எல்லா பள்ளிகளிலும் வங்காள மொழியை கட்டாயமொழியாக அறிவித்திருக்கிறது. சிபிஎஸ்இ உள்பட அனைத்துப் பள்ளிகளிலும் இது அமல்படுத்தப்படும். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இதை அறிவித்தார்.

வாழ்த்துகள் சகோதரி மமதா அவர்களே!

என்ன காரணம்? தேசபக்தி மிக்க டைம்ஸ் ஆப் இந்தியாவே சொல்கிறது, கேளுங்கள்:

The move by the Mamata Banerjee-led government follows the Centre's move to make Hindi compulsory for all CBSE and ICSE students from Class I to X. "India is a large nation and our strength is unity in diversity," Partha said. "We have received complaints that Bengali is not provided as an option in several schools," he added.

(கமென்ட்டில் முழு செய்தி)

இதே காரணங்களுக்காக அண்மையில் இது போன்ற சட்டத்தை கேரளமும் நிறைவேற்றியது - அதுவும் அவசரச் சட்டமாக - என்பதை நாம் அறிவோம்.

தமது மாநிலத்தின் ஆட்சிமொழியை தமது மாநில எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் கற்றுத்தரப்படுவதை உறுதிசெய்வதற்காகவே பல போராட்டங்களை மாநிலங்கள் நடத்தவேண்டியிருக்கின்றன. தமிழ்நாட்டில் பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு, 2006 இல் கலைஞர் அரசு இதற்காக தமிழ் கற்றல் சட்டம் ஒன்றை இயற்றியது. ஆனால் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியவில்லை.  மீண்டும் சற்று வேருக்குத் திரும்பியிருக்கும் திமுக இப்போது இது குறித்து பேசத்தொடங்கவேண்டும்.

தொடக்கத்தில் மொழி விவகாரத்தில் சுணக்கம் காட்டிய மற்ற மாநிலங்கள் இப்போது விழித்துக்கொண்டன. தொடக்கத்தில் வீரம் காட்டிய தமிழகம் வழிவகை இல்லாமல் திகைத்துக்கொண்டிருக்கிறது!

இந்தக் குரல், மலையாளத்தையே வங்கமொழியையோ கன்னடமொழியையோ தத்தம் மாநிலங்களில் உறுதிப்படுத்துவதற்கான குரல், அடிப்படையில் தேசிய இனங்களின் உரிமைக் குரல். அவரவர் நிலத்தில் அவரவர் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சி. இது ஒரு ஜனநாயகக் கோரிக்கை.

இந்தி பேசாத மாநிலங்களில் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் போல ஆட்டம்போடும் பாஜகவின் மொழித்திணிப்புக்கு நான்கு புறங்களிலிருந்தும் இப்போது கடும் எதிர்ப்பு எழுந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் மொழியுரிமைக்காக போராடும் பலருடைய கூட்டுமுயற்சியும் இவற்றுக்கு பின்னால் இருக்கிறது என்பதை கடந்த ஆண்டில் மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் நடந்த மொழியுரிமையாளர்களின் தீவிரமான முயற்சிகளை நன்கு அறிந்தவனாக, அவற்றில் ஏதோ ஒரு விதத்தில் பங்கேற்றவனாக. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

ஒற்றை மனிதனாக  என் இனிய நண்பர் கோர்கோ சாட்டக்ஜி  Garga Chatterjee தொடர்ச்சியாக ஆங்கிலத்திலும் வங்க மொழியும் இதற்காக தொடர்ந்து எழுதிவந்தவர். இன்றைய வங்காள அரசியலை, வங்க மாநில உரிமை அரசியலை, தில்லியின் ஏகாதிப்பத்தியத்துக்கு எதிரான கொல்கத்தாவின் குமுறலை மிகச்சிறப்பாக வெளியுலகத்துக்கு அறிவித்துவருபவர் அவர். அவரது எழுத்துக்களும் முயற்சிகளும் வங்க அரசியலின் மீது தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

2015 சென்னை மொழியுரிமை மாநாட்டில் பங்குபெற்றவர் கோர்கோ. அவர் தொடர்ந்து மமதாவின் மாநில உரிமைக்குரல் குறித்து பேசியும் எழுதியும் வருகிறார். அவரைப் போன்றவர்கள் தான் இந்த முயற்சிகளுக்கெல்லாம் வித்தாக அமைந்தவர்கள். அவரைப் போல பலரும் கிளியர் அமைப்பின் செயல்பாடுகளில் பங்குகொண்டு வங்கமொழிக்காகவும் நம் அனைவரின் மொழிக்காகவும் குரல் கொடுத்துவருகிறார்கள்.

வங்காள மொழித்தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள், நன்றிகள்.

Courtesy

Aazhi Senthil Nathan

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1523104141053804&id=100000626997769)

Friday, May 5, 2017

போலியே இல்லாத பேஜார்... 😝

*நல்லாக் கேட்டுக்குங்க,*

முதல்ல ஆதார் கார்டையும் வோட்டர் ஐடி கார்டையும் தாசில்தார் ஆஃபிஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*அப்புறம்?*

ஒட்டர் ஐடி கார்டையும் ரேஷன் கார்டையும் சிவில் சப்ளை ஆஃபீசுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*சரி, அப்புறம்?*

ரேஷன் கார்டையும் பான் கார்டையும் இன்கம் டாக்ஸ் ஆஃபீஸ்ல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ஓ அப்புறம்?*

ஆதார் கார்டையும் பாஸ்புக்கையும் பேங்குல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*அதுவும் சரிதான், அப்புறம்?*

பாங்க் பாஸ்புக்கையும் கேஸ் புக்கையும் கேஸ் ஆஃபீஸுல குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ம்ம்ம்ம்ம்ம், அப்ப்ப்புறம்?*

மேப் இன் கார்டையும் பான் கார்டையும் ஆதார் கார்டையும் ஸ்டாக் புரோக்கர்ட்ட குடுத்து லிங்க் பண்ணிக்குங்க!

*ஓஓஓஓஓ அப்புறம்?*

மேப் இன் கார்டு, பான் கார்டு, கிரிடிட் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐடி கார்டு, பேங்க் பாஸ் புக்கு, கேஸ் புக்கு எல்லாத்தையும் பாஸ்ப்போர்ட் ஆஃபீஸுக்கு எடுத்துட்டு போயி லிங்க் பண்ணிக்குங்க!

*ஐயையோ அப்புறம்?*

இதெல்லாம் லிங்க் பண்ணியாச்சுண்ணு கலெக்டர்கிட்ட லெட்டர் வாங்கிட்டு வந்து மாநகராட்சி ஆஃபீஸுல குடுத்தா அவங்க ஒரு கார்டு இஷ்யு பண்ணுவாங்க!

*ஐயையோ இன்னொரு கார்டா, அப்புறம்?*

அந்த கார்டை எடுத்துகிட்டு பத்துக் கிலோமீட்டர் தள்ளி இருக்கிற *பெருமாள் கோவில்ல டெய்லி காமிச்சியினாக்க ஒரு உண்ட கட்டி தருவானுங்க,* அதை வாங்கி உங்க குடும்பம் முழுவதும் பங்கு போட்டு சாப்பிட்டுட்டு *சந்தோஷமா* வாழ்க்கையை அனுபவிங்க.

படித்ததில் பிடித்தது...😜

(மூலம்: வாட்ஸ்அப்)

🌸🏵🌹💮🌺🌷🌼

ஏனுங்க, "நீதிபதிங்கறவர் 30 வருசம் பொய் சொன்னவருன்னு" நடிகவேள் ஐயா சொல்லிக் கொடுத்துட்டுப் போனாருங்க. இந்த அட்வகேட் ஜெனரல்ன்றவர் எவ்வளோ வருசம் பொய் சொல்லியிருப்பாருங்க? மனுசன் என்னம்மா பொளக்குறாரு! 😯 நம்ம உசிரு, ஒடம்பு, ஒடம எல்லாம் அரசுக்கு சொந்தங்களாம்!! 😱 அரசுக்கு ஒளிவு மறவு இல்லாம எல்லாம் தெரியணுங்களாம். நான் கேக்கிறேன், நமக்காக அரசுங்குளா? இல்ல அரசாங்கத்துக்காக நாமங்களா? நாம தானே ஓட்டுப் போட்டு இந்த கருமாந்தரங்கள அனுப்பிவச்சோம். நம்ம வரிப் பணத்துல தானே இவங்க டீ ஆத்துறாங்க. நாம எஜமானருங்களா? இல்ல, இந்த எச்சக்கலங்க எஜமானருங்களா? 😠

கொஞ்ச நாளக்கு முன்னாலே டீ ஆத்துறவரு வெளிநாடா சுத்திகிட்டிருந்தாருல்ல. மனுசன் நாட்டுக்காக சுத்தறாரா இல்ல, தனக்காக சுத்தறாரா, யாருக்காவது டீ ஆத்திக் கொடுக்கப் போனரான்னு தெரிஞ்சுக்க ஒருத்தரு தகவல் அறியும் உரிமை சட்டம் வழியா மனு கொடுத்தாருங்க. இந்த ஒட்டுண்ணி ஜென்மங்க, அதெல்லாம் தேவ ரகசியம், நாட்டுப் பாதுகாப்புன்னு சொல்லி எந்தத் தகவலும் கொடுக்க மறுத்துட்டாங்க. நம்ம வரிப் பணத்துல அதிகபட்சம் 5 வருசம் டீ ஆத்துற இந்த ஒட்டுண்ணிகளுக்கே தங்களோட சமாச்சாரங்கள காப்பாத்திக்கனும்ன்னு அக்கறை இருக்கும் போது, இவங்களுக்குப் படி அளக்கற எஜமானருங்க நமக்கு எவ்வளோ இருக்கும்? 😎 இவுங்க மறச்சு வெச்சுப்பாங்களாம். நாம ஓபனா இருக்கனுமாம். தனக்கு கல்யாணம் ஆனதையே மறச்சவருக்கு, யாரும் எதையும் மறைக்கக் கூடாதாம். "யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ள வை."-ங்கற பழமொழிக்கு இனிமே சரியான உதாரணம் இவனுங்க தான். நம்ம ஊர் அரசியல்வியாதிங்க தோத்துட்டாங்க, போங்க. 😜

இருக்கறுதுலேயே பாதுகாப்பானதுன்னு நெனக்கிற பான் கார்டுலயும் டூப்ளிகேட் இருக்குதாம். தனியார வெச்சு "தயார்" பண்ணுற ஆதாரு ரொம்ப பர்ஃபெக்ட்டாம். வின்னர் பட காமெடி தோத்தது போங்க! 😁 ஸ்ரீராமருக்கும், கொரங்குக்கும் ஆதார் கொடுக்கறப்போ கண்டீப்பா அது பர்ஃபெக்ட்டு தான்! 😂

*ஆமா, AG ஐயா, நீங்க கோர்ட்டுல உடான்ஸ் உடறுதுக்கு கொஞ்சம் முன்னாடி ஒங்க டீ ஆத்துறவரு ஊருலேயே நிலேஷ் மிஸ்திரின்னு ஒருத்தர கைது செஞ்சீங்களே. அவரு சுமார் 100 பேருக்கு மேல போலி ஆதார் அட்டய தயார் பண்ணியிருக்காராமே? ஒங்களுக்குத் தெரியாதுங்களா?* 😛😜😝 டிஜிட்டல் இந்தியாவுல இது மாதிரி தகவல் கொஞ்சம் மெதுவாத்தான் ஒங்கள மாதிரி பெரியவங்களுக்கு வந்து சேரும்ன்னு நெனக்கிறேன்.

🌸🏵🌹💮🌺🌷🌼

அடுத்த சுதந்திரப் போராட்டம் இந்த கிராதக அரசாங்கத்தை எதிர்த்து தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 03/05/2017)